PDA

View Full Version : ஹோமியோபதி மருத்துவம்ஆலோசனை தேவை



anna
29-03-2010, 08:21 AM
போன ஜனவரி மாதம் எனக்கு சிக்குன் குனியா வந்தது. இரண்டு நாள் காய்ச்சல் இருந்தது இன்று வரையில் கை மற்றும் கால் வலி உள்ளது. அதனுடனே இரத்த அழுத்தம் செக் அப் செய்தால் எனக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என டாக்டர் சொல்லி விட்டார். சரி அதுக்கு என்ன பண்ணுவது வைத்தியம் பண்ணித்தானே ஆகவேண்டும்.

இது பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் தேடியபோது இந்த உயர் இரத்த அழுத்ததிற்காக கொடுக்கப்படும் அல்லோபதி மருந்துகள் அனைத்தும் பக்க விளைவுகளை ஏற்படுத்துபவை என கணடபோது அதிர்ச்சி ஆயிற்று. எனவே ஒரு முடிவு எடுத்து அல்லோபதி தவிர்த்து
வேறு ஏதாவதில் டிரீட்மென்ட் எடுத்துக்கொள்ளலாம் என எண்ணிய போது ஹோமியோபதி நல்ல மருத்துவம். அதில் பக்க விளைவுகள் ஏதும் இல்லை என என் நண்பர் கூறினார்.

இந்த ஹோமியோபதி மருத்துவமுறை பற்றி எனக்கு தெரியாது. ஆகையால் நணபர்கள் தயவு கூர்ந்து ஹோமியோபதி மருத்துவமுறை பற்றி விளக்கி கூறினால் நன்றாக இருக்கும்.ஹோமியோபதி மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்தம் குணமாகுமா? அன்பர்ந்த நண்பர்களின் கருத்துக்கள் மற்றும் விளக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தங்கவேல்
09-04-2010, 04:59 AM
அலோபதியில் உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி தனி மருத்துவரும், மருந்தும் உண்டு. ஆனால் ஹோமியோபதி மருத்துவமென்பது அனைத்து நோய்களுக்கும் ஒரே மருத்துவர் என்ற முறையிலானது. முயற்சித்து பாருங்கள். நிச்சயம் பலன் இருக்கும்.