PDA

View Full Version : வெளி நாட்டு வேலை



muthuvel
28-03-2010, 08:02 AM
பாலைவனத்தில் படுக்கை ,

மனைவி என்று நினைத்து ,கட்டி அணைத்தபடி தலையாணை உறக்கம்,

முத்தமிடும் செல்போன்,

மகனை முகம் வரைந்து பார்க்கும் கைகள்,

தகுதிக்கு மீறிய உழைப்பு ,சம்பளம்,



நாட்டில், மகனை பெருமையாக பேசும் தகப்பன்,

இப்பொழுது , தகப்பன் பெருமை அறிந்த மகன்,

நான் இல்லாமல், கோடி ரூபாய் அனுப்பினாலும் நிறையாத தாயின் வயுறு ,

என்னை எங்க வைக்கும காதலி ,

சட்டென வீட்டை நினைவு படுத்தும், பறக்கும் விமான சத்தம் ,

வித விதமாய் உணவு,

செத்து போன நாக்கு ,

பாஷை தெரியாத ,

பலதரப்பட்ட மக்கள்,



திரும்பி விடலாம் என்று நினைக்கும் மனம்,

வாங்கிய கடன், வயதுக்கு வந்த தங்கை,

என்னை நம்பி படிக்கும் தம்பி, நம்பி வந்த மனைவி ,
என் முகம் மறந்த மகன்,

மூன்றாம் காலாக உன்றி நடக்கும் என் பெற்றோர்,

இவை அனைத்தும் நினைவூட்டும் தினம் ,



தாயகம் செல்வோரிடம் கடிதத்தோடு முத்தமும்,
இனிபோடு என் இதயமும்,

வழி அனுப்பும் நண்பனிடம் வழிகின்ற கண்ணிற்,





கஷ்டத்தை மட்டும் , மக்களுக்கு பாகுபடுத்தி படைத்த இறைவன்,


உணவுக்கு இல்லாமல் இருந்தாலும் ,
இறக்கும் வரை இறைவன் உண்டு என்று நம்பும் ஏழையின் இதயம் ,



நம்பி செல்கிறார் வெளிநாடு ....
.
..
இன்றைய பிரியும் வலி,
நாளைய விடியலுகே ,

கலையரசி
28-03-2010, 09:24 AM
பிரிவுத்துயர் கொடுமை தான். அதன் வலி அனுபவிப்பவர்க்கே தெரியும். தன் குடும்பத்தின் நாளைய விடியலுக்காக இந்த வலியை அனுபவிப்போர் ஏராளம். பாராட்டு முத்துவேல்.

Akila.R.D
29-03-2010, 08:36 AM
வெளிநாடு மட்டும் இல்லை வெளியூரில் வேலை செய்பவருக்கும் இதுதான் நிலைமை...

ஏக்கத்தை சரியா சொல்லியிருக்கீங்க முத்துவேல்...

பாராட்டுக்கள்....

muthuvel
31-03-2010, 08:11 AM
வெளிநாடு மட்டும் இல்லை வெளியூரில் வேலை செய்பவருக்கும் இதுதான் நிலைமை...

ஏக்கத்தை சரியா சொல்லியிருக்கீங்க முத்துவேல்...

பாராட்டுக்கள்....

பாராட்டுக்கு நன்றி

ஓவியன்
31-03-2010, 08:28 AM
தகுதிக்கு மீறிய உழைப்பு ,சம்பளம்,

இந்த வரிகள் கொஞ்சம் உதைக்கிறதே...???,
அவை பலர் மனதைப் புண்படுத்தக் கூடும், என்னையும் கூட....!! :cool:

muthuvel
01-04-2010, 07:47 AM
வெம்பி அழத்தேவையில்லை, தோல்வி மட்டும் வாழ்க்கையில்லை...
நல்ல வாக்கியம்

Ravee
02-04-2010, 01:16 AM
நண்பர்கள் பலர் அனுபவித்ததுண்டு , நானும் அனுபவிக்கப்போகிறேன் விரைவில் .... இன்பமா துன்பமா விடை தெரியும் விரைவில் .

சரண்யா
02-04-2010, 07:29 AM
மகனை முகம் வரைந்து பார்க்கும் கைகள்,
சட்டென வீட்டை நினைவு படுத்தும், பறக்கும் விமான சத்தம் ,
நிதர்சனமான வரிகள்...முத்துவேல் அவர்களே....

muthuvel
30-04-2010, 03:34 AM
நண்பர்கள் பலர் அனுபவித்ததுண்டு , நானும் அனுபவிக்கப்போகிறேன் விரைவில் .... இன்பமா துன்பமா விடை தெரியும் விரைவில் .

எந்த நாட்டுக்கு செல்கிர்ரீர்கள் ?

செல்வா
30-04-2010, 06:24 AM
பிரிவும் துயரும் சேர்ந்தே இருப்பவை...
வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களுக்கு
நல்லாருக்குங்க... தொடர்ந்து எழுதுங்கள்..

muthuvel
02-05-2010, 04:07 AM
பிரிவும் துயரும் சேர்ந்தே இருப்பவை...
வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களுக்கு
நல்லாருக்குங்க... தொடர்ந்து எழுதுங்கள்..

உங்கள் கவிதையும் நான் படித்திருக்கிறேன்