PDA

View Full Version : எல்லாமே நீயானாய்



Hega
27-03-2010, 08:13 PM
எல்லாமே நீயானாய்

கரைதெரியாத என் வாழ்வில்
படகோடு நீ வந்தாய்...

இருளான என் வாழ்வில்
ஒளியாக நீ வந்தாய்...

என்னை அமிழ்த்தும் பாரத்தை
தாங்கும் சுமையாக நீ வந்தாய்...

பசியாக நான் இருந்தேன்
பசி போக்கும் தாயானாய்

நோயாலே தவித்திருந்தேன்
நோய் போக்கும் மருந்தானாய்..

தூற்றும் மாந்தர் நடுவினிலே
துயர் துடைக்கும் துணையானாய்

என் சிந்தை சொல் அனைத்தும்
நித்தம் நித்தம் நீயானாய்...

இன்பம் தரும் இறையானாய்
தாங்கிடும் தாயானாய் ,

சுமந்திடும் தந்தையானாய்
தேற்றிடும் உறவானாய்

என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்

அமரன்
27-03-2010, 09:55 PM
என்ன வகைக் கவிதை இது..

எதுவாக நினைத்தேனோ அதுவாக உருவான மாய மோகினிக் கவிதை..

மனசை மையமாக வைக்கவே எனக்குப் பிடிக்கிறது.

மெச்சினேன் நிஷா!

எதிரும் புதிருமாய் வந்து
எதிலும் நீயானாய்..

நெருப்பை நீர் அணைப்பதுண்டு.

வீடெரிக்கும் நெருப்பை நீரணைப்பது..

வெற்றிதரும் நெருப்பை நீரணைப்பது..

இரண்டுக்கும் எந்தளவு வேறுபாடு!!!!!!

கவிதை காவுவது முதல் நிலைப்பாடு.

கீதம்
27-03-2010, 10:57 PM
எல்லாமே நீயானபின்
எனக்கென்ன மனக்கவலை?
எனக்கான தேவைகள் யாவும்
உன்னாலே நிறைவேறிடின்
எனகென்ன தேவையினி
எனக்கான உன்னைத்தவிர?


வாழ்த்துகள் நிஷா.

குணமதி
28-03-2010, 01:36 AM
நன்று.

Akila.R.D
29-03-2010, 08:48 AM
//என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்//

இறுதிவரை கூடவே இருந்தால் நலம்...
இல்லாவிட்டால் "எல்லாமே நீயானாய்" மாறி "எல்லாமே போனது" என்றாகிவிடும்...

கவிதை நன்றாக உள்ளது...

வாழ்த்துக்கள் நிஷா..

சிவா.ஜி
29-03-2010, 11:49 AM
கருத்தொருமித்தக் கணவனோ, மனைவியோ அமையப்பெற்ற*வர்களின் உள்ளம் பாடும் சுக ராகம். எல்லாமும் நீயானாய் எனச் சொல்லும்போதே...அளவிடமுடியாத காதலும், புரிதலும் உணரமுடிகிறது.

வாழ்த்துக்கள் நிஷா.

இளசு
12-04-2010, 08:57 PM
சரணாகதியின் சுகம் அலாதி..
ஆத்ம எடையும் அற்ற நிலை..


வாய்த்தவர் வாழ்க!


பாராட்டுகள் நிஷா அவர்களே..

சூறாவளி
27-11-2010, 01:59 PM
இருவரி கவி வரிகளை
ஒட்டுமொத்தமாய் குத்தைகைக்கு எடுத்திட்டிங்களோ:)

கவிதையினை படிக்கும் போது
கனவு காண தோணும்.. எப்படியெனில்...

காதலனின் காந்தம் போன்று இழுக்கும்
அன்பினை பாசத்தினை
கண்ணின் இமையாய் இருக்கும்
காதலி காற்றில் உலாவும் தென்றலாய் வருடிசொல்கிறாள்...

கணவனின் எல்லையற்ற அன்பினை
உணர்ந்து அதை அனுபவித்து கொண்டிருக்கும்
மனையாளின் மன நிதர்சனம் தென்றலாய் வருடிசொல்கிறாள்...

ம்ம்ம்... பாராட்டுக்கள்.. இன்னும் எழுதுங்கள்.. நீண்ட இடைவெளி இனி விடாதீர்கள்.. விரைவிரைவாய் தெளித்து விட்டு செல்லுங்கள் இம்மன்றத்தில் உங்கள் கவிகளை..:icon_b:

Hega
27-11-2010, 03:40 PM
அடேங்கப்பா

எப்போதோ என்னமோ எங்கேயோ எழுதியது.

இப்பவே இங்கேயா நினைவு படுத்தப்படணும்.

ஆனாலும் இப்ப இதே கவிதை அப்படியே உல்டாவா வருமாக்கும்.

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.

நேரம் கிடைக்கும் போது தனித்தனியாக நன்றி நவில்கிறேன் உறவுகளே...

ஆன்டனி ஜானி
27-11-2010, 04:06 PM
அவள் ஒரு கண்ணாடி
ஆனால் அவளை நேசிக்கும்
கற்கள் ,அவளை வெறுக்கும்
கற்கள் அவளை முன் பின்
அறிந்திராத கற்கள்


உறவுகளை வைத்து ரெம்ப அழகாக வர்ணித்து
உறவே எல்லாம் நீயானால் என்று அழகாக கவிதைகள் படைத்து இருக்கிரீர்கள்
ரெம்ப நல்லா ஒரு முயற்ச்சி ..தொடருங்கள்