PDA

View Full Version : நாள் தோறும் தேடுகின்றேன்



Hega
26-03-2010, 09:46 PM
நாள் தோறும் தேடுகின்றேன்



தேவதைகள் வாழ்க்கையென்றும்
தேனாக இனிப்பதில்லை.
தினம் தோறும் தொடர்ந்து வரும்
கவலைகளும் அழிவதில்லை

விடையறியா தேடுதல்கள்
வலிபோக்கும் மருந்தானதில்லை
சோர்ந்து போன உள்ளமதில்
சுமையென்றும் அகல்வதில்லை.

நிலையில்லாத உலகினிலே
நிம்மதியும் நிலைப்பதில்லை
நினைத்தெல்லாம் நடக்குமென்னும்
நினைவுகளும் அழிவதில்லை.

அனைத்தையும் நேசிக்கிறேன்
அன்பை மட்டும் யாசிக்கிறேன்
வலியில்லாத வாழ்வு ஒன்றை
நாள் தோறும் தேடுகின்றேன்.
.

govindh
26-03-2010, 10:21 PM
நிலையில்லாத உலகினிலே
நிம்மதியும் நிலைப்பதில்லை
நிதர்சனமான உண்மை...

நாள் தோறும் தேடுகின்றேன்.
நல்லா இருக்கு கவிதை...
வாழ்த்துக்கள்...

இனியவள்
27-03-2010, 09:00 AM
வளையாத நதிகள் இல்லை
வலிக்காத வாழ்க்கை இல்லை

என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது இக் கவியை படிக்கையில்

தேடுதல்கள் என்றும் தோல்வியில் முடிவதில்லை கவலை வேண்டாம் தோழியே

வாழ்க்கை வாழ்ந்து பார்ப்பதற்கு

வாழ்ந்து பார்
வலிகளின் மருந்தாகிடும்
உன் நம்பிக்கை..

சிவா.ஜி
27-03-2010, 09:33 AM
தேவதைகளுக்கு ஏன் வாழ்க்கை தேனாக இனிப்பதில்லை....???

தேவைகள் இருப்போருக்குத்தான் வாழ்க்கை எப்போதும் இனிப்பதில்லை.

வலியின்றி வாழ்க்கையேது.....வலிதான் வெற்றியின் ரகசியமே....
உளிதாங்கும் கற்கள்தானே சிலையாகும்....
வலி தாங்கும் உள்ள*ம்தானே வலிமையாகும்....வாழ்க்கை வளமையாகும்....!!!

வலியில்லா வாழ்க்கையைத் தேடுவதினும், வலிதாங்கும் வலிமை தேடும் வாழ்க்கை நிறைவாகும்.

நிறைவான வாழ்க்கை உங்களுக்குக் கிட்டட்டும் தங்கையே.

பா.சங்கீதா
27-03-2010, 09:40 AM
நீங்கள் தேடுவது உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள் தோழியே!..

அமரன்
27-03-2010, 11:51 AM
நம்ம தென்றலின் கையெழுத்து நினைவுக்கு வருகிறது..

எங்கே தேடுகிறாய்
உன்னருகில் நானிருக்க..

இதை ஒட்டிப் பிறந்தது..

எங்கே தேடுகிறாய்
உனக்குள் நானிருக்க..

எல்லாமே எமக்குள் அடக்கம் நிஷா.

தேடல் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை.

தேடுங்க... தேடுங்க.... தேடிட்டே இருங்க..

பாராட்டு.

Hega
27-03-2010, 07:53 PM
தங்களின் ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்காக நன்றி கோவிந் அவர்களே....

Hega
27-03-2010, 07:56 PM
வாழ்ந்து பார்
வலிகளின் மருந்தாகிடும்
உன் நம்பிக்கை..


இது என் வலி உணர்த்தும் வரிகள் அல்ல. என் தோழி ஒருவரின் மனவலி கேட்டு நான் கலங்கி நின்ற போது எனக்குள் உதித்த வரிகள்.


தங்களின் தன்னம்பிகை தரும் பின்னூட்டத்திற்காக நன்றி இனியவள்.

Hega
27-03-2010, 07:59 PM
தேவதைகளுக்கு ஏன் வாழ்க்கை தேனாக இனிப்பதில்லை....???

தேவைகள் இருப்போருக்குத்தான் வாழ்க்கை எப்போதும் இனிப்பதில்லை.

வலியின்றி வாழ்க்கையேது.....வலிதான் வெற்றியின் ரகசியமே....
உளிதாங்கும் கற்கள்தானே சிலையாகும்....
வலி தாங்கும் உள்ள*ம்தானே வலிமையாகும்....வாழ்க்கை வளமையாகும்....!!!

வலியில்லா வாழ்க்கையைத் தேடுவதினும், வலிதாங்கும் வலிமை தேடும் வாழ்க்கை நிறைவாகும்.

நிறைவான வாழ்க்கை உங்களுக்குக் கிட்டட்டும் தங்கையே.



தேவதைகள் வாழ்த்து எப்போதும் இனிப்பாகத்தான் இருக்கும் என நாம் நினைக்கிறோம் தானே சிவா அண்ணா.

நாம் அறிய சிரித்து பேசும் அவர்கள் வாழ்விலும் வலி இருக்கும் என்பதை என் தோழியின் வார்த்தையில் உணர்ந்தபோது எனக்குள் உதித்த சிந்தனை இது .

தங்களின் ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்காக மிக்க நன்றி அண்ணா.

Hega
27-03-2010, 08:00 PM
வாழ்த்துக்களுக்காக நன்றி சங்கீதா...

Hega
27-03-2010, 08:02 PM
எங்கே தேடுகிறாய்
உனக்குள் நானிருக்க..

எல்லாமே எமக்குள் அடக்கம் நிஷா.

தேடல் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை.

தேடுங்க... தேடுங்க.... தேடிட்டே இருங்க..

பாராட்டு.



தங்கள் வாழ்த்துக்களுடன் கூடிய தன்னம்பிக்கை தரும் பின்னூட்டத்திற்காக நன்றி அமரன் அவர்களே....

Akila.R.D
29-03-2010, 08:54 AM
//வலியில்லாத வாழ்வு ஒன்றை
நாள் தோறும் தேடுகின்றேன்.//

வலியில்லாத வாழ்வு யாருக்கும் கிடைப்பதில்லை...

வலி மாறலாமே தவிர அனைவரும் அதனை உணர்ந்தே ஆக வேண்டும்...

தொடர்ந்து உங்கள் படைப்புக்களைத் தாருங்கள் நிஷா...

அக்னி
30-03-2010, 07:41 AM
தேடுவதைப் பொறுத்தே
வாழ்வு
வதையாவதும், தேன்வதையாவதும்...

இதற்குத் தேவதை மட்டும்
விலக்காகிடுமா...

இச்சைப்பட்டும், கொச்சைப்படுத்தியும்
சாபம் தேடிக்கொண்ட தேவதைகள்
இருக்கத்தானே செய்கின்றனர்.

வலியற்ற வாழ்வு தேடியே
வாழ்வை முடிப்பதிலும்,
வலிநிவாரணி தேடி,
வாழ்வில் சுகம் பெறுவது
சாத்தியம் மிகக் கூடியதே...

நாம்
வலிகளைச் சந்ததிக்குக் கடத்தும் வழியாக
இருப்பதிலும்,
வலிகளைப் புதைத்துக் கொண்ட சமாதியாக
எழுவது,
நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்.

நிஷா அவர்களுக்கு என் பாராட்டு.

உதயா
21-12-2010, 10:05 AM
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்...
ஆடல் போல தேடல் கூட ஒரு சுகம் தான்...

ஒரு பாடலின் வரி. எவ்வளவு சரியாக சொல்லி இருக்கிறார்கள்.

உங்கள் தோழிக்கு தேடும் வாழ்க்கை கிடைக்கும்.

நாகரா
24-12-2010, 12:07 PM
யாசியாமல் ஆவியாய்
நாசியூடே பாயுதே
நேசமான ஏகமே
வாசியாமல் ஓடுவாயோ
தேடுவாயோ வாலைப் பெண்ணே!

வலியின் கண்ணில்
வலிமை சுரக்கும்
வல்லப அன்பை
நெஞ்சகத் துள்ளே
உற்றுணர்வாயே வாலைப் பெண்ணே!

சிந்திக்க வைத்த அருமையான கவிக்கு வாழ்த்துக்கள் ஏகா!

கௌதமன்
24-12-2010, 12:36 PM
வலியில்லாத வாழ்வு ஒன்றை
நாள் தோறும் தேடுகின்றேன்.
.[/I]

வலியில்லாமல் வாழ்க்கையில்லை
வலியோடு வாழ்ந்து காட்டுவதுதான் வாழ்க்கை
உளி படுவதென்பது வலியென்றால்
சிலையொன்று ஆவது எப்போது?
ஆற்றின் போக்கில் போனால் கட்டை
அஞ்சாத எதிர்நீச்சலே வாழ்க்கை!
தடையில்லாத பயணமென்பது- மன்றத்தின்
பின்னூட்டமில்லாத பதிவு(?)

CEN Mark
31-12-2010, 04:38 PM
நாள் தோறும் தேடுகின்றேன்



தேவதைகள் வாழ்க்கையென்றும்
தேனாக இனிப்பதில்லை.
தினம் தோறும் தொடர்ந்து வரும்
கவலைகளும் அழிவதில்லை

விடையறியா தேடுதல்கள்
வலிபோக்கும் மருந்தானதில்லை
சோர்ந்து போன உள்ளமதில்
சுமையென்றும் அகல்வதில்லை.

நிலையில்லாத உலகினிலே
நிம்மதியும் நிலைப்பதில்லை
நினைத்ததெல்லாம் நடக்குமென்னும்
நினைவுகளும் அழிவதில்லை.

அனைத்தையும் நேசிக்கிறேன்
அன்பை மட்டும் யாசிக்கிறேன்
வலியில்லாத வாழ்வு ஒன்றை
நாள் தோறும் தேடுகின்றேன்.
.

கவி இயல்பாய் இருந்தது.
சோகம் மட்டுமே வந்தது.
சுய முன்னேற்ற குறிப்புகள்
பதில்களில் மட்டுமே இருந்தது .

நேசிக்க மட்டுமே நாம்.
வலி, சுமை, சோர்வு, நிம்மதி
இவையாவும்,
வாழ்வியலின் விதிகளே (law ).

Hega
01-01-2011, 08:59 PM
தேடுவதைப் பொறுத்தே
வாழ்வு
வதையாவதும், தேன்வதையாவதும்...

நிஷா அவர்களுக்கு என் பாராட்டு.

இது எனக்கு பிடித்தவார்த்தையாய் போனது அக்னி அவர்களே...
தேடுவது வலி கொடுக்கும் போதுதானே அது வதையென்றே புரிந்திட முடிகின்றது.

இருந்தாலும் தேடுவதைப் பொறுத்தேவாழ்வு
வதையாவதும், தேன்வதையாவதும் எனும் வார்த்தைக்காய் :icon_b:

Hega
01-01-2011, 09:00 PM
//வலியில்லாத வாழ்வு ஒன்றை
நாள் தோறும் தேடுகின்றேன்.//

வலியில்லாத வாழ்வு யாருக்கும் கிடைப்பதில்லை...

வலி மாறலாமே தவிர அனைவரும் அதனை உணர்ந்தே ஆக வேண்டும்...

தொடர்ந்து உங்கள் படைப்புக்களைத் தாருங்கள் நிஷா...


நன்றி அகிலா அவர்களே...

Hega
01-01-2011, 09:01 PM
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்...
ஆடல் போல தேடல் கூட ஒரு சுகம் தான்...

ஒரு பாடலின் வரி. எவ்வளவு சரியாக சொல்லி இருக்கிறார்கள்.

உங்கள் தோழிக்கு தேடும் வாழ்க்கை கிடைக்கும்.

நன்றி உதயா அவர்களே...

Hega
01-01-2011, 09:04 PM
யாசியாமல் ஆவியாய்
நாசியூடே பாயுதே
நேசமான ஏகமே
வாசியாமல் ஓடுவாயோ
தேடுவாயோ வாலைப் பெண்ணே!

வலியின் கண்ணில்
வலிமை சுரக்கும்
வல்லப அன்பை
நெஞ்சகத் துள்ளே
உற்றுணர்வாயே வாலைப் பெண்ணே!

சிந்திக்க வைத்த அருமையான கவிக்கு வாழ்த்துக்கள் ஏகா!


.நன்றி நாகரா...