PDA

View Full Version : அம்மா



சரோசா
26-03-2010, 05:04 PM
:icon_b::icon_b:மழையில் நனைந்துகொண்டே, வீட்டுக்கு வந்தேன்
குடை எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதானே "என்றான் அண்ணன் .
எங்கேயாவது ஒதுங்க வேண்டியதுதானே
என்றாள் அக்கா,
சளி பிடிச்சு செலவு என்றார் அப்பா,
தன் முந்தானையால் என் தலையைத்
துவைட்டிக் கொண்டே திட்டினாள் அம்மா.
எனையல்ல,....மழையை"

ஜனகன்
26-03-2010, 05:44 PM
அதுதான் அம்மாவின் பாசம் என்பது. அருமையாய் எழுதியுள்ளீர்கள் சரோசா.........வாழ்த்துக்கள்.

குணமதி
26-03-2010, 05:57 PM
அவள்தான் அம்மா!

நன்று.

govindh
26-03-2010, 06:18 PM
அம்மா....அற்புதம்...!

வாழ்த்துக்கள்.

சரோசா
26-03-2010, 08:37 PM
அன்பான ஜனகன் ,கோவிந்த் .குணமதி,... மனமார்ந்த நன்றிகள் உங்கட்க்கு

அமரன்
26-03-2010, 10:16 PM
அவளில்
மிச்சமிருக்கும் மழை
துமிக்கிறது
அன்பும் அக்கறையுமாய்.

பாராட்டு சரோசா.

இனியவள்
27-03-2010, 09:23 AM
மழையில் நனைந்தது நீங்கள்
ஆனால் திட்டு வாங்குவதோ மழை

வாழ்த்துக்கள் சரோசா

சிவா.ஜி
27-03-2010, 10:00 AM
Mohamed Niyas எழுதியவை | நவம்பர் 24, 2009 ‘தாய்’ ???

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்!,

‘குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே’
என்றான் அண்ணன்,

‘எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே’
என்றாள் அக்கா,

‘சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு’
என்றார் அப்பா,

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!?”

கருத்துத் தெரிவிக்கவும்

Mother's Love இல் பதிவிடப்பட்டது
(http://mdniyas.wordpress.com/page/2/)

அடுத்து,

நினைவில் நிற்கும் கவிதைகள்

எத்தனையோ கவிதைகளைப் படிக்கிறோம், ரசிக்கிறோம். ஆனால் அவற்றுள் சில கவிதைகள் மட்டும் நினைவைவிட்டு அகலாமல் நிலைத்து நிற்கின்றன. இயற்றிய கவிஞர் பெயர் மறந்து போனாலும் கவிதை நெஞ்சில் நிற்கும். வரிகள் நினைவில் இல்லாவிட்டாலும் அதன் வாசம் மனதில் வீசும். அப்படி என் மனதில் இடம்பிடித்த கவிதைகள் சிலவற்றை இங்கே சுட்டிக் காட்டுவேன். இணையத்தில் கண்டெடுத்த ஒரு கவிதை. படைப்பாளியின் பெயர் தெரியவில்லை.

அம்மா

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்.
‘குடை எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே’
என்றான் அண்ணன்.
‘எங்கேயாச்சும் ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே’
என்றாள் அக்கா.
‘சளி பிடிச்சிட்டு செலவு வைக்கப்போற பாரு’
என்றார் அப்பா.
தன் முந்தனையால்
என் தலையைத் துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!

(http://www.sivalingam.in/literature/favorites/favoritesindex.htm)

(http://thatstamil.oneindia.in/cj/pon-sivasubramanian/2009/1002-poem-by-ponsivasubramanian-on-mother.html)

இது எல்லாவற்ரையும்விட, இந்தக் கவிதை பல மாதங்களுக்கு முன்பாகவே எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

சரோசா அவர்களே....இதை நீங்கள் படித்ததில் பிடித்தது பகுதியில் இட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.