PDA

View Full Version : பூவின் அமைதி...



பா.சங்கீதா
26-03-2010, 06:50 AM
நீ என்னை அடித்து சென்றாலும்
உன்மேல் எனக்கு கோபமில்லை
நீ என்னை விட்டு விலகி சென்றாலும்
நான் அழுவதும் இல்லை
ஏனெனில் காற்றே உன்பிரிவால்
நான் வருத்த படமாட்டேன்
ஏனென்றால் நீ திரும்புவாய் என்று
பூவாகிய எனக்கு நம்பிக்கை உண்டு

Greesh Kumar
26-03-2010, 06:55 AM
பூ போன்ற மென்மையான கவிதை

சிவா.ஜி
26-03-2010, 06:56 AM
மலருக்குத் தென்றல் பகையாக முடியுமா....? பூவின் நம்பிக்கை பொய்க்காது...போனக் காற்று திரும்பி வரும்....பூங்காற்றாய்....!!

வாழ்த்துக்கள் சங்கீதா.

govindh
26-03-2010, 08:22 AM
மலரின் நம்பிக்கை மாறவில்லை...
மலரும்...வளரும்...
வாழ்த்துக்கள்...

பா.ராஜேஷ்
26-03-2010, 08:47 AM
அட! பரவாயில்லையே! நல்லதோர் முயற்சி. மேலும் தொடர்க! பாராட்டுக்கள் ..

பா.சங்கீதா
26-03-2010, 02:26 PM
பூ போன்ற மென்மையான கவிதை

நன்றி.. :)

பா.சங்கீதா
26-03-2010, 02:35 PM
நன்றி சிவா அண்ணா:)

பா.சங்கீதா
26-03-2010, 02:37 PM
நன்றி கோவிந்த் அண்ணா!:)

பா.சங்கீதா
26-03-2010, 02:37 PM
நன்றி ராஜேஷ் அண்ணா!;)

ஜனகன்
26-03-2010, 05:09 PM
கவிதை புதுமை............. சங்கீதாவின் விமர்சனம் வரிகள் அழகு வாழ்த்துக்கள்.

குணமதி
26-03-2010, 05:55 PM
///நீ திரும்புவாய் என்று
பூவாகிய எனக்கு நம்பிக்கை உண்டு///

நம்பிக்கையே வாழ்விற்கு அடிப்படைத் துணை.

இனியவள்
27-03-2010, 09:29 AM
சென்ற காற்று
திரும்பிடும் உங்கள்
திசை நோக்கி
தென்றலாய் இதயம் வருடிட

வாழ்த்துக்கள் தோழியே அழகிய கவி

பா.சங்கீதா
27-03-2010, 09:34 AM
நன்றி ஜனகன் அண்ணா:)

பா.சங்கீதா
27-03-2010, 09:35 AM
நன்றி குணமதி மற்றும் இனியவள் அவர்களே:)

கீதம்
27-03-2010, 11:04 PM
உன் சிங்காரச்சிணுங்கல் காணவே
உன்னைச் செல்லமாய்த் தட்டுகிறேன்;
உன் ஊடல் கண்டு ரசிக்கவே
ஓடி ஒளிந்து நடிக்கிறேன்;
என் அன்புனக்குப் புரியவில்லையா?
புரியாததுபோல் வேடமிடுகிறாயா?
சொல்லடி, என் சின்னப்பெண்ணே!

வாழ்த்துகள் சங்கீதா.

muthuvel
28-03-2010, 02:56 AM
நீ என்னை அடித்து சென்றாலும்
உன்மேல் எனக்கு கோபமில்லை
நீ என்னை விட்டு விலகி சென்றாலும்
நான் அழுவதும் இல்லை
ஏனெனில் காற்றே உன்பிரிவால்
நான் வருத்த படமாட்டேன்
ஏனென்றால் நீ திரும்புவாய் என்று
பூவாகிய எனக்கு நம்பிக்கை உண்டு

கவிதை அருமை ,
காதலை மிக அருமையாக சொல்லிருகிரிர்கள்

பா.சங்கீதா
28-03-2010, 09:07 AM
உன் சிங்காரச்சிணுங்கல் காணவே
உன்னைச் செல்லமாய்த் தட்டுகிறேன்;
உன் ஊடல் கண்டு ரசிக்கவே
ஓடி ஒளிந்து நடிக்கிறேன்;
என் அன்புனக்குப் புரியவில்லையா?
புரியாததுபோல் வேடமிடுகிறாயா?
சொல்லடி, என் சின்னப்பெண்ணே!

வாழ்த்துகள் சங்கீதா.

மிக்க நன்றி.....

பா.சங்கீதா
28-03-2010, 09:09 AM
நன்றி முத்துவேல் அண்ணா!

கலையரசி
28-03-2010, 09:15 AM
நம்பிக்கை தான் வாழ்க்கை. இனியவள் சொன்னது போல் அடித்து விட்டுச் சென்ற பேய்க்காற்று பூந்தென்றலாய் திரும்பி வரும் இதயம் வருட!
நல்ல முயற்சி சங்கீதா! வாழ்த்தி மகிழ்கிறேன்.

பா.சங்கீதா
28-03-2010, 09:20 AM
நன்றி கலையரசி அவர்களே.....
:)

Akila.R.D
29-03-2010, 08:42 AM
பூவைப்போல் நாமும் எல்லாவற்றுக்கும் பொறுமையாய் காத்திருந்தால் அனைத்தும் நம்மை வந்து சேரும்..

வாழ்த்துக்கள் சங்கீதா...

பா.சங்கீதா
30-03-2010, 05:46 AM
நன்றி அகிலா அவர்களே!:)

செல்வா
30-03-2010, 08:16 AM
பூவிதழ் தொட்டுச் சென்ற
பூங்காற்று...
புதிதாய் திரும்புமோ?
பழையது தானோ...?

நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்கள்...

பா.சங்கீதா
31-03-2010, 01:13 PM
நன்றி செல்வா அவர்களே!

சரோசா
31-03-2010, 02:59 PM
வாழ்த்துக்கள் சங்கீதா

பா.சங்கீதா
03-04-2010, 08:22 AM
நன்றி சரோசா அவர்களே!:)