PDA

View Full Version : முகம் மாறிய மன்னர்கள்



Ravee
25-03-2010, 02:35 PM
முகம் மாறிய மன்னர்கள்

http://farm4.static.flickr.com/3086/2458151335_e269160ce0.jpg


பிள்ளைக்கு பால் இல்லா பஞ்சம் நாட்டில்
வீட்டுக்கு ஒரு செம்பு பால் தரவேண்டும்
இல்லையேல் சிரச்சேதம் இது அரசகட்டளை
அரண்மனை வாசலில் ஆளுயர அண்டா

மறுநாள் காலை மன்னன் வந்தான்
ஆளுக்கொரு செம்பு பாலுடன் மக்கள்
துவங்கி வைத்தாள்......மகாராணி
ஒரு குடம் பசும் பால் ஊற்றி

குழந்தைகள் எல்லாம் ஆவலுடன்
கூடி வரிசையில் பசியுடனே
மக்கள் அனைவரும் ஊற்றி முடிக்க
மன்னன் வந்து பார்த்தான் அதிர்ச்சி

மக்கள் மனதில் ஒரு எண்ணம்
அத்தனை பேரும் பால் ஊற்றும் போது
தான் ஊற்றும் செம்புத் தண்ணீரா
தனியாய் வந்து தெரியப் போகிறது

வெட்கித் தலை குனிந்தான் மன்னன்
மக்களே பாருங்கள் உங்கள் எண்ணத்தை
இந்த மண்ணை விட பாறைகளாய் உங்கள் உள்ளம்
மழை வருமா இனி........ மண் செழிக்க

பச்சை குழந்தைகளை ஏமாற்றிய பரிதாபம்
பஞ்சமா பாதகங்களை விட கொடிதானது
முடிவாய் ......அரண்மனை சொத்தை பொதுவாக்கி
மனம் குமுறி மன்னன் போனான் துறவறம்


இன்று........... ஒரு செம்பு பால் கொடுத்து
மக்களின் பசுமாட்டை திருடும் மன்னர்கள்
மக்களே தயாராய் இருங்கள் துறவறம் போக
துறவிகளுக்குத்தான் இங்கே எல்லாம் கிடைக்கும்.

இன்பக்கவி
25-03-2010, 03:06 PM
ஆஹா ஹா...
இதுவும் நல்ல தந்திரம் தான்...
நல்லா இருக்கு...:icon_b:
"ஆ"சிரமம் :lachen001::lachen001::lachen001::lachen001:

சிவா.ஜி
25-03-2010, 03:18 PM
பழைய நீதிக்கதைகளில் ஒன்றின் கருவை வைத்து, நிகழ்காலத்தை இணைத்து, வார்த்தைகளில் வடித்து....அன்றையும் இன்றையும் பிரித்துக் காட்டிய கவிதை நன்று.

வாழ்த்துக்கள் ரவி.

Ravee
25-03-2010, 04:01 PM
ஆஹா ஹா...
இதுவும் நல்ல தந்திரம் தான்...
நல்லா இருக்கு...:icon_b:
"ஆ"சிரமம் :lachen001::lachen001::lachen001::lachen001:

ஆசிரமம் முதலில் ஆ என்று இருக்கும் ,பின்னர் தான் சிரமாமாக இருக்கும்

Ravee
25-03-2010, 04:03 PM
பழைய நீதிக்கதைகளில் ஒன்றின் கருவை வைத்து, நிகழ்காலத்தை இணைத்து, வார்த்தைகளில் வடித்து....அன்றையும் இன்றையும் பிரித்துக் காட்டிய கவிதை நன்று.

வாழ்த்துக்கள் ரவி.

கதைகள் எல்லாம் ஒன்றுதான் சிவா அண்ணா, கதாபாத்திரங்களும் காட்சியும்தான் மாறுகிறது .

அக்னி
30-03-2010, 06:54 AM
மக்களின் வாழ்வுக்காக ஆட்சி புரிந்தது அக்காலம்.
மக்களின் வாழ்வை உறிஞ்சி ஆள்வது இக்காலம்.

முடியாட்சியின் மகிமை
குடியாட்சியில் இல்லாமற்போனது
பெரும் புதிரானதுதான்...

ரவீ அவர்களுக்கு என் பாராட்டு...

*****
நல்லவேளை,
சுரக்கும் பருக்கும் பாத்திரமாய்த்
தாய்முலை...
இல்லாவிட்டால்,
குழந்தைப் பருவத்திலேயே
பருக்கப்பட்டிருக்கும்
கலப்படம்...

Ravee
02-04-2010, 01:01 AM
ரவீ அவர்களுக்கு என் பாராட்டு...

*****
நல்லவேளை,
சுரக்கும் பருக்கும் பாத்திரமாய்த்
தாய்முலை...
இல்லாவிட்டால்,
குழந்தைப் பருவத்திலேயே
பருக்கப்பட்டிருக்கும்
கலப்படம்...

நன்றி அக்னி , வாடகை தாய்தான் கேள்விப்பட்டேன், இப்போது தாய் பாலும் விற்ப்பனைக்கு என்று ஒரு சேதி பார்த்தேன். இது ஆதாரம் இல்லாத சேதியாக இருக்க வேண்டும் .

gankrish
05-04-2010, 12:47 PM
இன்றைய நிலமையை அழகாக எடுத்து காட்டும் கவிதை.. எல்லோரும் எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள்..

கலையரசி
05-04-2010, 02:08 PM
ஒரு வாக்குக்கு இவ்வளவு என்று பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மக்களின் அறியாமை நீடிக்கும் வரை ஆட்சியாளர்களின் சுரண்டல் நீடிக்கும். அதே போல் எத்தனை பிரேமானந்தா, நித்யானந்தாவைப் பார்த்தாலும் சாமியாரை நம்பும் மக்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
கவிதை நன்று ரவி. பாராட்டுக்கள்.

Ravee
16-04-2010, 04:38 AM
கோவிந்த் கலை ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள் , இது ஏமாற்றுபவர்கள் சொல்லும் முதுமொழி