PDA

View Full Version : மிருகத்தைப் போன்று......

கீதம்
25-03-2010, 09:32 AM
'ஏன் இப்படி மிருகத்தைப் போன்று
கீழ்த்தரமாக நடந்துகொள்கிறாய்?' -கேட்கப்படுகிறது,
பெண்களைக் கண்டதும்
காமவயப்படும் ஆணை நோக்கி!

கேட்கப்படுகிறது-
இரக்கமின்றி பிறர்
இரத்தத்தைக் குடிக்கும் பாவியை நோக்கி!

கேட்கப்படுகிறது-
சுய சிந்தனையோடு
எதையும் அணுகாத
அறிவிலியை நோக்கி!

கேட்கப்படுகிறது-
மெத்தப் படித்தும்
நாகரிகமற்ற மேதாவியை நோக்கி!

மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிடுவதை
தயவுசெய்து நிறுத்துங்கள்!
அவற்றின் அருங்குணங்கள் அறியாமல்
அவற்றை அவமதிக்காதீர்கள்!

மிருகங்கள் எவையும்
நம்போல் நடந்து கொள்வதில்லை,
உண்மைதான்!

பாலியல் பலாத்காரங்கள்
அவற்றின் உலகில் அரங்கேறுவதில்லை;
பெட்டையின் ஒப்புதலின்றி,
கிட்ட நெருங்குவதில்லை எந்த ஆணும்!

அழகென்பது அவ்வுலகில்
ஆண்களுக்கே சொந்தம்;
ஆனபோதிலும் அங்கே உண்டு,
அன்பு வாழ்க்கைக்கான உத்திரவாதம்!

எனவே,
காமுறும் ஆணை மிருகமென்று கூறி,
காதற் பறவைகளையும், விலங்குகளையும்
கேவலப்படுத்தாதீர்கள்!

மிருகங்கள் முட்டி மோதும்
காரணம் அறிவீரோ?
தன் இனத்தை வழி நடத்த,
தலைவனாகும் தகுதி தனக்கிருப்பதையுணர்த்த,
சண்டையிட்டு வெல்லுதல் அவசியம்!

அங்கே,
தொண்டர்கள் எவரும் தீக்குளிப்பதில்லை;
வெடிகுண்டு, வெட்டரிவாள்களின் புழக்கமில்லை;
உட்கட்சிப் பூசல்களில்லை;
ஒன்றுபட்டு அத்தனையும்
உளமாற ஏற்கின்றன,
வென்றவனையே தலைவனாக!

எனவே,
கொடுங் குணம் கொண்டவனையெல்லாம்
மிருகமென்று கூறி,
வரையறுக்கப்பட்ட வாழ்க்கை வாழும்
விலங்குகளை இழிவுபடுத்தாதீர்கள்!

உதவாக்கரைகள் என்று
விலங்கினத்தில் எதுவுமில்லை;
எல்லா மிருகங்களும் வாழத் தெரிந்தவையே,
மனிதனைத் தவிர!

அனாதை இல்லங்களோ,
அபலைகள் மறுவாழ்வில்லங்களோ,
முதியோர் இல்லங்களோ
முற்றிலும் இல்லை மிருகங்களுக்கு!
நீதி மன்றமோ, காவல் நிலையமோ
நிச்சயமாய் இல்லை அவைகளுக்கு!

நாகரிகமற்றவைதான் மிருகங்கள்!-அவற்றின்
நற்குணத்தை மட்டும் கருத்தில் வையுங்கள்!

தெருவோரம் சிறுநீர் கழிப்பதில் அல்லாது,
நன்றியுணர்ச்சியில் நாயைப் பின்பற்றுங்கள்!
ஏய்த்துப் பிழைப்பதில் அல்லாது,
பகிர்ந்து உண்பதில் காக்கையைப் பின்பற்றுங்கள்!

தனித்த வாழ்வோ, கூட்டு வாழ்க்கையோ
தனக்கென்று, தன் இனத்திற்கென்று,
வரையறைகளைக் கொண்டு,
கட்டுப்பாடுடனும், கண்ணியத்துடனும் வாழ்ந்து,
தத்தம் கடமையைச் செய்யும்
மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிட்டு
அவற்றின் தரத்தைக் குறைக்காதீர்கள்!

யார் அறிவார்?
ஒருவேளை,
கீழ்த்தரமாக நடந்து கொள்ளும்
ஒரு மிருகத்தைப் பார்த்து மற்றொன்று,
'ஏன் இப்படி மனிதனைப் போன்று
நடந்துகொள்கிறாய்?' என்று
கேட்கக் கூடும் அங்கே!

(நிலாச்சாரலில் வெளிவந்த என் கவிதை)

சிவா.ஜி
25-03-2010, 09:48 AM
உண்மைதான்....மிருகங்கள் நிச்ச்யமாய் மனிதனைவிடக் கேவலமானவையல்ல....

"தங்கள் இனத்தை தாங்களே அழிக்காதவை"

"பொறாமையும், பொச்செரிப்புமில்லாதவை"

"கூட இருந்தே குழி பறிக்கும் குணமில்லாதவை"

நாய், காக்கை இவற்றின் நற்குணமேற்காத....மனிதர்களை...மிருகத்துடன் ஒப்பிடுவது மிகத் தவறுதான்.

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.

govindh
25-03-2010, 12:16 PM
நாகரிகமற்றவைதான் மிருகங்கள்!-அவற்றின்
நற்குணத்தை மட்டும் கருத்தில் வையுங்கள்!

மனிதா.., மிருகத்தைப் பார்த்துப் படி...திருந்து..
நல்ல போதனைப் புகட்டும் கவிதை...

வாழ்த்துக்கள்...கீதம் அவர்களே...

கீதம்
26-03-2010, 07:44 AM
உண்மைதான்....மிருகங்கள் நிச்ச்யமாய் மனிதனைவிடக் கேவலமானவையல்ல....

"தங்கள் இனத்தை தாங்களே அழிக்காதவை"

"பொறாமையும், பொச்செரிப்புமில்லாதவை"

"கூட இருந்தே குழி பறிக்கும் குணமில்லாதவை"

நாய், காக்கை இவற்றின் நற்குணமேற்காத....மனிதர்களை...மிருகத்துடன் ஒப்பிடுவது மிகத் தவறுதான்.

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.

நன்றி சிவா.ஜி அவர்களே.

கீதம்
26-03-2010, 07:46 AM
நாகரிகமற்றவைதான் மிருகங்கள்!-அவற்றின்
நற்குணத்தை மட்டும் கருத்தில் வையுங்கள்!

மனிதா.., மிருகத்தைப் பார்த்துப் படி...திருந்து..
நல்ல போதனைப் புகட்டும் கவிதை...

வாழ்த்துக்கள்...கீதம் அவர்களே...

நன்றி கோவிந்த் அவர்களே.

பா.சங்கீதா
27-03-2010, 09:46 AM
யார் அறிவார்?
ஒருவேளை,
கீழ்த்தரமாக நடந்து கொள்ளும்
ஒரு மிருகத்தைப் பார்த்து மற்றொன்று,
'ஏன் இப்படி மனிதனைப் போன்று
நடந்துகொள்கிறாய்?' என்று
கேட்கக் கூடும் அங்கே!

மிகவும் நன்றாக உள்ளது
யாருக்கு தெரியும் ஒரு வேலை மிருகங்கள்
அவ்வாறு கேட்டாலும் மனிதர்கள் திருந்த போவதில்லை என்பது மட்டும் உறுதி ;)
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்:):icon_b:

பா.ராஜேஷ்
27-03-2010, 12:14 PM
உண்மைதான் கீதம். நல்லதோர் கவிதைக்கு உளமார்ந்த பாராட்டு

அமரன்
27-03-2010, 08:55 PM
அதிகமான பற்றே தீவிரத்தை நம்மில் பற்ற வைக்குது.

அன்பு வெளிப்படுத்துகையில் வன்முறை தென்பட்டால் அதை மிருகத்தனம் என்கிறோம்.

மனிதர்கள் தமக்குள் அடித்துக் கொல்கிறார்கள்.

ஆதியன் அவ்வாறு நடந்து கொண்டதாக இதுவரை நான் அறிந்ததில்லை.

மிருகங்களுடன் அவன் வாழும் போது பிற இனத்தையே தாக்கினான்.

மிருகங்களை விட்டு வாழத் துவங்கிய போது இனத்துக்குள் கொலை வெறியைக் கக்கினான்.

காட்டுக்குள் போய் வேட்டையாடுவதால் மட்டும் பல விலங்கினங்கள் அருகிடவில்லை. அழிந்திடவில்லை.

மிருகங்களுக்குள் இனச்சண்டை இருக்கு.

சிங்கம் சிங்கத்தை கொல்வதில்லையே தவிர மானைக் கொல்வதில்லை என்றோ வேறு மிருக இனங்களைக் கொல்வதில்லை என்றோ எவராலும் சொல்லிட இயலுமா?

இதே போலத்தான் நமக்குள்ளும்.. இனச்சண்டை.. நாட்டுச் சண்டை.. சாதிச்சண்டை.. ஊர்ச்சண்டை.. தெருச்சண்டை என்று பல் பரிணாமப்பட்டுள்ளோம்.

இப்படியாக ஒவ்வொரு உயிரியிலும் உள்ள தீவிர உணர்வு வெளிப்பாட்டுக்கு எப்படி மிருகத்தனம் என்று பெயர்சூட்டலாம்? நியாயமாகத்தான் கேட்டிருக்கீங்க கீதம்.

பாராட்டுகிறேன்.

கீதம்
28-03-2010, 09:05 PM
மிகவும் நன்றாக உள்ளது
யாருக்கு தெரியும் ஒரு வேலை மிருகங்கள்
அவ்வாறு கேட்டாலும் மனிதர்கள் திருந்த போவதில்லை என்பது மட்டும் உறுதி ;)
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்:):icon_b:

பாராட்டுக்கு நன்றி சங்கீதா.

கீதம்
28-03-2010, 09:06 PM
உண்மைதான் கீதம். நல்லதோர் கவிதைக்கு உளமார்ந்த பாராட்டு

மிக்க நன்றி பா.ராஜேஷ் அவர்களே.

கீதம்
28-03-2010, 09:09 PM
எனக்குத் தோன்றியதை எழுதினேன். உங்கள் பின்னூட்டம் பார்த்தபிறகு சற்று குழப்பமும், வருத்தமும்.
எனினும் பாராட்டுக்கு நன்றி அமரன் அவர்களே.

Akila.R.D
29-03-2010, 04:30 AM
கவிதை நன்றாக உள்ளது கீதம் அவர்களே...

பாராட்டுக்கள்...

அமரன்
29-03-2010, 09:20 PM
எனக்குத் தோன்றியதை எழுதினேன். உங்கள் பின்னூட்டம் பார்த்தபிறகு சற்று குழப்பமும், வருத்தமும்.
எனினும் பாராட்டுக்கு நன்றி அமரன் அவர்களே.

கவிதை கருவாவதும் உருவாவதும் எந்தளவு கஷ்டங்களை தரும் என அறிவேன் கீதம். அறிந்தும் உங்கள் மனம் நோகும்படி கருத்துரைத்தேனோ என்று கவலை கொள்கிறேன். மன்னிக்க..

கீதம்
30-03-2010, 05:49 AM
கவிதை கருவாவதும் உருவாவதும் எந்தளவு கஷ்டங்களை தரும் என அறிவேன் கீதம். அறிந்தும் உங்கள் மனம் நோகும்படி கருத்துரைத்தேனோ என்று கவலை கொள்கிறேன். மன்னிக்க..

இதில் மன்னிக்க என்ன உள்ளது, அமரன் அவர்களே? அவரவர்க்குத் தோன்றிய கருத்துகளையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்கிறோம். அவ்வளவே.

இதுபோல் மாறுபட்ட கோணங்களிலிருந்து வரும் பின்னூட்டங்களை வரவேற்கிறேன். இது என் சிந்தனையை மேலும் தூண்டுமே தவிர தொய்வடையச்செய்யாது. புரிதலுக்கு நன்றிகள் பல.

இளசு
05-04-2010, 09:27 PM
கவிஞர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது..

மனிதன் மாறிவிட்டான்... என்றும் எழுதி நியாயப்படுத்துவார்கள்.
மனிதன் மாறவில்லை என்றும் எழுதி சம்மதிக்க வைப்பார்கள்..

மிருகம் போல் இரு என கண்ணதாசன் எழுதுவார் :

கொள்ளும் கொள்கையில் குரங்காக
கொடுமையைக் கண்டால் புலியாக
குறிவைத்துப் பார்ப்பதில் கொக்காக
குணத்தில் யானையின் வடிவாக..

வேறொரு இடத்தில்

மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா என்பார்.

-----------------------------

கீதமும் தம் கவிதைக்கேற்ற பார்வையில் மனிதனையும் மிருகத்தையும் ஒப்பிட்டு

சொல்லவந்த கருத்தை நிலைநாட்டுகிறார்.
அறிவியலை ஒதுக்கி
அழகியலோடு அணுகவேண்டிய இடங்கள் பல..

இக்கவிதை அவற்றில் ஒன்று..

பாராட்டுகள் கீதம்.

நிலாச்சாரல் வெளியீட்டுக்குக் கூடுதலாய் வாழ்த்து!

கீதம்
05-04-2010, 10:23 PM
புரிதலுடன் கூடிய அழகிய பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி இளசு அவர்களே.

ஆதி
06-04-2010, 04:17 AM
மனிதனை மிருகத்தோடு ஒப்பிடுகிறோம், அவர் இழி செயல்கள் செய்யும் போது..

ஆனால் மிருகங்கள் மனிதனைவிட மேன்மையானதாய் இருக்கின்றன என்பதை உணர்த்தி.. மனிதனை மிருக்கத்தோடு ஒப்பிட மனிதனுக்கு அருகதை இல்லை என்று சொல்லிருக்கீங்க..

அமர் மற்றும் இளசண்ணா அலசல் அசத்தல்..

//சிங்கம் சிங்கத்தை கொல்வதில்லையே தவிர மானைக் கொல்வதில்லை என்றோ வேறு மிருக இனங்களைக் கொல்வதில்லை என்றோ எவராலும் சொல்லிட இயலுமா?//

நல்ல கேள்வி அமர், பசிக்கும் போது தவிர மற்ற சமயங்கள் விலங்குகள் வேட்டையாடுவதில்லை அமர்.. பேராசைக்காய் வேட்டையாடுபவன் தானே மனிதன்..

நீங்க பாத்திருப்பீங்க அமர், சிங்கமோ, சிறுத்தையோ, புலியோ வேட்டையாட மானையோ மற்ற விலங்கையோ விரட்டும் போது, தன்னை காப்பாற்றிக் கொள்ள எல்லா விலங்கும் ஓடும், ஏதாவது ஒன்று பிடிப்பட்ட உடன் மற்றவை எல்லாம் ஓட்டத்தை நிறுத்திவிடும்.. ஏனென்றால் தன் தேவைக்கு அதிகமானதை அவைகள் வேட்டையாடுவதில்லை, இது மற்ற விலங்குக்கும் தெரியும், உருவமில்லா ஒரு உடன்படிக்கை போன்றதும் கூட, பசிக்காக அவை வேட்டையாடுகின்றனவே தவிர பேராசைக்காக, சேமிப்புக்காக அவை வேட்டையாடுவதில்லை..

பாராட்டுக்கள் கீதம்..

அக்னி
06-04-2010, 06:21 AM
ஓரறிவு கூடியதால்,
மிருகங்களிலும் உயர்ந்தவனாய்
மனிதன்...

இந்த வித்தியாசம் மட்டும்
நிகழவில்லை என்றால்...

மிருகங்களின் வாழ்க்கை முறை, திட்டமிடல்
தன் இனம் சார்ந்து மட்டுமே...

மனிதனின் கூடிய அறிவு,
அனைத்து மிருகங்களையும் அவதானித்து,
உள்வாங்கி கொண்டதனால்,
மனித குணங்கள்,
மிருக குணங்களின் மொத்தம்..,
எனலாமோ...

தேவைக்கேற்ப,
பிரயோகிக்கப்படும் இக்குணங்கள்,
மனிதனின் பிரத்தியோகத் தனித்துவ
இயல்புகளைப் பின்னகர்த்திவிடுவதால்,
மனித இயல்புகளைத் தேடவேண்டிய
நிலையில் மனிதன்...

கீதம் அவர்களின் சிந்தனைக் கவிதைக்கும்,
அமர், அண்ணல் இளசு, ஆதன் அவர்களனைவரதும் சிறப்புப் பின்னூட்டங்களுக்கும்,
எனது பாராட்டுக்கள்...

செல்வா
07-04-2010, 07:38 PM
இரசிக்கவைத்த கவிதை மற்றும்
பின்னூட்டங்கள்....

அமரன் ... இளசு அண்ணா மற்றும் ஆதன் அருமை.

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்..

கீதம்
08-04-2010, 10:47 PM
மனிதனை மிருகத்தோடு ஒப்பிடுகிறோம், அவர் இழி செயல்கள் செய்யும் போது..

ஆனால் மிருகங்கள் மனிதனைவிட மேன்மையானதாய் இருக்கின்றன என்பதை உணர்த்தி.. மனிதனை மிருக்கத்தோடு ஒப்பிட மனிதனுக்கு அருகதை இல்லை என்று சொல்லிருக்கீங்க..

அமர் மற்றும் இளசண்ணா அலசல் அசத்தல்..

பாராட்டுக்கள் கீதம்..

மிக்க நன்றி ஆதன் அவர்களே.

கீதம்
08-04-2010, 10:50 PM
மனித இயல்புகளைத் தேடவேண்டிய
நிலையில் மனிதன்...

ஆம், இந்த எண்ணம்தான் இப்படி ஒரு சிந்தனையை என்னுள் தூண்டியது. மிக்க நன்றி அக்னி அவர்களே.

கீதம்
08-04-2010, 10:53 PM
இரசிக்கவைத்த கவிதை மற்றும்
பின்னூட்டங்கள்....

அமரன் ... இளசு அண்ணா மற்றும் ஆதன் அருமை.

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்..

இரசித்துப் பின்னூட்டமிட்டதற்கும் பாராட்டுக்கும் நன்றி செல்வா அவர்களே.

sarcharan
15-04-2010, 09:10 AM
உண்மை கீதம்.

நல்லதோர் கவிதை

மனிதர்களை பார்க்கிலும் மிருகங்கள் எவ்வளவோ பெட்டெர் !!

உளமார்ந்த பாராட்டுகள்!!!

கீதம்
16-04-2010, 12:39 AM
உண்மை கீதம்.

நல்லதோர் கவிதை

மனிதர்களை பார்க்கிலும் மிருகங்கள் எவ்வளவோ பெட்டெர் !!

உளமார்ந்த பாராட்டுகள்!!!

மனமார்ந்த நன்றி சரவணன் அவர்களே.

selvaaa
06-05-2011, 01:26 AM
ஆறறிவு கொண்ட மனிதன் என்பது நாம் அறிந்ததே!

அதாவது மிருகத்தை விட கூடுதல் அறிவைக் கொண்ட New version. ஆகையால், மனிதன் மிருகம் போன்று நடக்கலாம், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஆனால், மிருகம் மனிதன் போன்று செயல்பட என்னும் ப்ரிணாம வளர்ச்சி வேண்டும்.

அதுவும் நடந்து கொண்டே தான் இருக்கிறது...

அதே நேரத்தில் நாம் மிருக குணத்தை நோக்கி சற்று பின்னோக்கி இறங்க வேண்டிய காலம் இது, என்பதையும் இக்கவிதை குறிக்குமா?

கூடுதல் தகவல்:

என் கருத்தை அக்னி முன்பே கூறியுள்ளார்.

Ravee
06-05-2011, 12:31 PM
கீதம் ....... மிக சமீப காலமாக பெண்கள் மேலான இந்த கொடுமைகள் பெருகி வருகிறது என்பது உண்மை என்றாலும் ..... பெண்களும் அளவுக்கு அதிகமான அசட்டு தைரியத்துடன் செயல்படுவதாகவே தெரிகிறது ... அதே போல பல குடும்பங்களில் பெண்கள் முப்பது வயதுக்கு மேல் பொறுப்பில்லாமல் செயல்பட பலர் வீட்டிலே ராமனாகவும் வெளியில் ............. ராவணாகவும் இருக்கிறார்கள் .... என்ன செய்வது .

Nivas.T
06-05-2011, 12:42 PM
மனிதனைக் காட்டிலும் மிருகம் மேன்மையானதே

நல்ல கவிதை
அழகானக் கருத்து
அருமையான எடுத்துக்காட்டுகள்

மிக மிக அற்புதக் கவிதைங்க

M.Jagadeesan
07-05-2011, 12:40 AM
சிரிப்பும், நாணமும் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது. ஆறாம் அறிவு பெற்றிருக்கின்ற காரணத்தால் மற்ற உயிரினங்களை அடக்கி ஆளும் திறன் பெற்றுள்ளான்.

கவிதையும், கருத்தும் நன்று.

கீதம்
07-05-2011, 01:31 AM
ஆறறிவு கொண்ட மனிதன் என்பது நாம் அறிந்ததே!

அதாவது மிருகத்தை விட கூடுதல் அறிவைக் கொண்ட New version. ஆகையால், மனிதன் மிருகம் போன்று நடக்கலாம், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஆனால், மிருகம் மனிதன் போன்று செயல்பட என்னும் ப்ரிணாம வளர்ச்சி வேண்டும்.

அதுவும் நடந்து கொண்டே தான் இருக்கிறது...

அதே நேரத்தில் நாம் மிருக குணத்தை நோக்கி சற்று பின்னோக்கி இறங்க வேண்டிய காலம் இது, என்பதையும் இக்கவிதை குறிக்குமா?

கூடுதல் தகவல்:

என் கருத்தை அக்னி முன்பே கூறியுள்ளார்.

அறிவியல் ஆராய்ச்சியோ.... உளவியல் ஆராய்ச்சியோ அறியவில்லை. வாழ்வியலை ஆராய்ந்தேன், வகையாய்ச் சிக்கின சில வதைகளும், வக்கிரங்களும். அவற்றைக் கவிதையென வகைப்படுத்தினேன். பின்னூட்டத்துக்கு நன்றி selvaaa.

கீதம்
07-05-2011, 01:34 AM
கீதம் ....... மிக சமீப காலமாக பெண்கள் மேலான இந்த கொடுமைகள் பெருகி வருகிறது என்பது உண்மை என்றாலும் ..... பெண்களும் அளவுக்கு அதிகமான அசட்டு தைரியத்துடன் செயல்படுவதாகவே தெரிகிறது ... அதே போல பல குடும்பங்களில் பெண்கள் முப்பது வயதுக்கு மேல் பொறுப்பில்லாமல் செயல்பட பலர் வீட்டிலே ராமனாகவும் வெளியில் ............. ராவணாகவும் இருக்கிறார்கள் .... என்ன செய்வது .

நீங்கள் சொல்லவந்த கருத்து புரிகிறது, ரவி. ஆனால் எந்தக் கருத்தினை மறுக்கவோ வலியுறுத்தவோ இவற்றை முன்வைத்துள்ளீர்கள் என்ற விவரம் புரியவில்லை. விளக்குங்களேன். :confused:

கீதம்
07-05-2011, 01:37 AM
மனிதனைக் காட்டிலும் மிருகம் மேன்மையானதே

நல்ல கவிதை
அழகானக் கருத்து
அருமையான எடுத்துக்காட்டுகள்

மிக மிக அற்புதக் கவிதைங்க

பாராட்டுக்கு நன்றி நிவாஸ்.

சிரிப்பும், நாணமும் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது. ஆறாம் அறிவு பெற்றிருக்கின்ற காரணத்தால் மற்ற உயிரினங்களை அடக்கி ஆளும் திறன் பெற்றுள்ளான்.

கவிதையும், கருத்தும் நன்று.

பின்னூட்டமிட்டுக் கருத்துரைத்ததற்கு நன்றி ஐயா.

lolluvathiyar
07-05-2011, 12:32 PM
மிக அருமையான கவிதை, நான் ஒரு அனிமல் லவ்வர் அதனால் என்னை இக்கவிதை மிகவும் கவர்ந்து விட்டது. தீய விசயங்களுக்கு மனிதனை மிருகத்துடன் ஒப்பிடுவது தவறு மற்றும் முட்டாள்தனம் என்று சொல்ல வருகிறார்.
உன்மைதான் இப்படி அவைகளின் சட்டதிட்டங்களை அவைகள் மீருவதில்லை. அங்கு குற்றங்கள் நடப்பது இல்லை.

கீழ்த்தரமாக நடந்து கொள்ளும்
ஒரு மிருகத்தைப் பார்த்து மற்றொன்று,
'ஏன் இப்படி மனிதனைப் போன்று
நடந்துகொள்கிறாய்?' என்று
கேட்கக் கூடும் அங்கே!
இதை படிக்கும் போது படித்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. பத்திரிக்கையாளர் ஒருவர் அரசியல்வாதிகளை கழுதை என்று சொல்லி எழுதி விட்டார். அவர் மீது நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு போட பட்டது. அதற்க்கு கொடுத்த பதில் மனுவில் அவர் " அப்பாவியான நல்ல விலங்கான கழுதையை அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு கழுதையை அவமரியாதை செய்து விட்டேன் அதற்க்காக இந்த நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்". இது எனக்கு பிடிச்ச பதில்.

முரடனை விலங்கு என்று சொல்வ்தற்கான காரனம்
வரையறுக்கப்பட்ட வாழ்க்கை வாழும்
விலங்குகளை இழிவுபடுத்தாதீர்கள்!
விலங்குகளின் சட்டதிட்டங்களை வகுப்பது முற்றிலும் இயற்கையே. அவைகளுக்கு தேவை +பிரச்சனை களை பொருத்து சட்டதிட்டங்கள் அமைகின்றன. பிட்டஸ்ட் வில் சர்வைவ் மற்றும் பைட் ஆர் ப்ளைட் தத்துவத்தில் மட்டுமே அவைகளின் சட்டங்கள் இயங்குகிறது. ஆனால் மனிதனுக்கு சட்டம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு விட்டது. அதனால் மனித சட்டங்களை மதிக்காமல் நினைச்சபடி நடப்பவனை (இயற்கை சட்டபடி) மிருகம் என்று ஒப்பிடுகிறார்கள்

எல்லா மிருகங்களும் வாழத் தெரிந்தவையே,
மனிதனைத் தவிர!
அனாதை இல்லங்களோ,
முதியோர் இல்லங்களோ
நீதி மன்றமோ, காவல் நிலையமோ
நிச்சயமாய் இல்லை அவைகளுக்கு!

இந்த வரிகள் என்னை வெகுவாக கவர்ந்தது

சிங்கம் சிங்கத்தை கொல்வதில்லையே தவிர
சிங்கம் சிங்கத்தை கொல்லும் வகையை சார்ந்தவையே (அதுவும் அவைகளுக்கு வரையரைக்க பட்ட ஒரு சட்டம்தான்

நல்ல கேள்வி அமர், பசிக்கும் போது தவிர மற்ற சமயங்கள் விலங்குகள் வேட்டையாடுவதில்லை
உன்மை, இதில் ஒரே விதிவிலக்கு உண்டு அது பூனை, பூனை மட்டுமே போர் அடிச்சா ஜாலிக்காக வேட்டை ஆடி சின்ன விலங்கினங்களை கொன்று அப்படி போட்டுட்டு போயிரும். அதனால் தான் கானகங்களில் பூனை ஆகாது என்று அறிவியல் வல்லுனர்கள் சொல்வார்கள். நிறைய மத சாஸ்திரங்களில் பூனை ஒரு அபசகுன மிருகமாக நம்பபட்டத்துக்கு இ ந்த அறிவியலும் ஒரு காரனம்.

ஓரறிவு கூடியதால்,

ஆறறிவு கொண்ட மனிதன் என்பது நாம் அறிந்ததே!
உன்மையிலேயே இந்த ஆறாவது அறிவுதான் இயற்கைக்கு புறம்பான தீய அறிவு என்று சொல்பவகளும் இருக்காங்க.

நாம் மிருக குணத்தை நோக்கி சற்று பின்னோக்கி இறங்க வேண்டிய காலம் இது, என்பதையும் இக்கவிதை குறிக்குமா?
ஆன்மீகத்தின் ஒரு முக்கிய கோட்பாடே அதுதான் இயற்கையோடு ஒன்றி போனால் தான் மோட்சம் என்று சொல்வதுன்டு, இது எல்லா மதங்களிலும் சொல்லபட்டவை ஆனால் அதை பின்பற்றுபவர்களுக்கு புரியவில்லை. காரன அறிவே மனிதனை கடவுளை விட்டு தள்ளி வைக்கிறது என்று ஹிந்து மதம் சொல்லுது. அறிவு என்ற பழத்தை சாத்தான் சொன்னதால் ஆதமும் ஏவாலும் சாப்பிட்டார்கள். அதை மனிதனின் முதல் பாவம் என்று கிருஸ்த்துவம் சொல்கிறது.

சிரிப்பும், நாணமும் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது.
மிக சரியானது. விலங்குகளுக்கு இவை இரன்டுமே அவசியமில்ல. அவைகள் எதிலும் ஸ்ட்ரெயிட் பார்வோர்ட் அப்ரோச்தானே.

இவ்வளவும் தூரம் எழுத வைக்க தூன்டிய அருமையான கவிதை எழுதிய கீதத்தை பாராட்டுகிறேன்.

கீதம்
09-05-2011, 02:29 AM
மிகவும் மகிழ்வாய் உணர்கிறேன், லொள்ளுவாத்தியார்.

கவிதையின் வரிகளை அலசிப் பின்னூட்டமிட்டதோடு, பின்னூட்டங்களுக்கும் பின்னூட்டமிட்டு பொறுமையாய்ப் பல கருத்துகளை முன்வைத்த உங்களுக்கு என் பணிவான நன்றி. உங்கள் கருத்துகளை நான் வழிமொழிகிறேன்.

meera
09-05-2011, 02:51 AM
கீதம் எனக்கு உங்களின் கவிதை படித்த பொழுது மு.மேத்தா அவர்களின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

அவர் ஒரு கவிதையில்.....
""எந்த பறவையும்
கூடு கட்டி வாடகைக்கு விடுவதில்லை."

என்று சொல்லியிருப்பார்

இந்த வரிகள் என்னுல் ஆழமாய் பதிந்தவை.

அழகாய் சொன்னீர்கள்.மனிதனை மிருகத்துடன் ஒப்பிட தகுதியற்றவன். கவிதை அருமை. பாராட்டுகள் கீதம்

கீதம்
09-05-2011, 02:55 AM

நன்றி மீரா.

மு.மேத்தாவின் வார்த்தைகள் என்னுள்ளும் தாக்கத்தை உண்டாக்குகின்றன. எத்தனை சத்தியமான வாக்கு. இங்கே பகிர்ந்துகொண்டதற்கு நன்றி மீரா.

கௌதமன்
09-07-2011, 07:11 PM
ஆம்! ஆனால் நான் எப்போதும் மிருகம் தான்!!
மாடாக இருக்கும்போது உழைப்பை சுரண்டினீர்கள்!
கழுதையாக இருக்கும்போது பொதி சுமக்க வைத்தீர்கள்!
யானையாக திமிறினால் சங்கிலியால் பிணைத்தீர்கள்!
நாயாக இருந்தால்தான் நன்றியுள்ளது என்றீர்கள்!

எதிர்ப்பு காட்டாத அப்போதெல்லாம்
நான் மிருகமாகப் படவில்லை! பரிதாபப் படவுமில்லை!
எப்போது நான் வஞ்சகமும், சூதும், வன்முறையும்
கொண்டு மனிதனாக நடக்க முயன்றேனோ
அப்போதுதான் மிருகம் என்கிறீர்கள்

இப்போதாவது சொல்லுங்கள்
நான் மனிதனா? மிருகமா?
மனித மிருகமா? மிருக மனிதனா?

innamburan
09-07-2011, 10:14 PM
இந்த இழையை முழுதுமே பாராட்டுகிறேன். எனக்கு வனவிலங்குகளோடு ஒரு அளவு பழகும் வாய்ப்பு கிட்டியது. புலியை போல் மென்மையான குணம் மனிதனுக்குக் கிடையாது. தன் வழி தனி வழி என்று கிடப்பது நாகம். வானரத்தை போன்ற புத்திசாலியை யான் கண்டதில்லை. யானையை போன்ற குழந்தை உள்ளம்? ஊஹூம்! எறும்பைப் போல் சுறுசுறுப்பு? தேனீயை போல் வள்ளல்?

கீதம்
11-07-2011, 03:09 AM
ஆம்! ஆனால் நான் எப்போதும் மிருகம் தான்!!
மாடாக இருக்கும்போது உழைப்பை சுரண்டினீர்கள்!
கழுதையாக இருக்கும்போது பொதி சுமக்க வைத்தீர்கள்!
யானையாக திமிறினால் சங்கிலியால் பிணைத்தீர்கள்!
நாயாக இருந்தால்தான் நன்றியுள்ளது என்றீர்கள்!

எதிர்ப்பு காட்டாத அப்போதெல்லாம்
நான் மிருகமாகப் படவில்லை! பரிதாபப் படவுமில்லை!
எப்போது நான் வஞ்சகமும், சூதும், வன்முறையும்
கொண்டு மனிதனாக நடக்க முயன்றேனோ
அப்போதுதான் மிருகம் என்கிறீர்கள்

இப்போதாவது சொல்லுங்கள்
நான் மனிதனா? மிருகமா?
மனித மிருகமா? மிருக மனிதனா?

பாராட்டுகள் கெளதமன்.

இயலாமையின் விளிம்பிலிருப்பவனிடமிருந்து எதிர்ப்படும் வினாக்களா அல்லது இயல்பு மாறா உயிரினங்களிடமிருந்து எழுந்த வாதங்களா என ஆயச்செய்யும் அற்புத வரிகள்!

மனமார்ந்த நன்றி.

கீதம்
11-07-2011, 03:19 AM
இந்த இழையை முழுதுமே பாராட்டுகிறேன். எனக்கு வனவிலங்குகளோடு ஒரு அளவு பழகும் வாய்ப்பு கிட்டியது. புலியை போல் மென்மையான குணம் மனிதனுக்குக் கிடையாது. தன் வழி தனி வழி என்று கிடப்பது நாகம். வானரத்தை போன்ற புத்திசாலியை யான் கண்டதில்லை. யானையை போன்ற குழந்தை உள்ளம்? ஊஹூம்! எறும்பைப் போல் சுறுசுறுப்பு? தேனீயை போல் வள்ளல்?

உங்கள் பாராட்டையும் கூற்றையும் ஒருசேர மனதார ஏற்கிறேன் ஐயா.

முன்பு எப்போதோ எழுதிய கவிதையொன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

அடுத்தவன் உழைப்பைத் திருடுவது
அநியாயம் அக்கிரமம் அதிபாவமென்றெல்லாம்
தோட்டத்து மலர் பறித்த சிறுமியிடம்
அரைமணிக்கும் மேலாய்
வியாக்கியானம் பேசியவனின்
கண்ணில் தென்பட்ட தேன்கூடு
நாவூறச் செய்ததோடு
தீயூறும் பந்தம் செய்து
தேனீக்களின் பந்தம் முறித்தது.

நாஞ்சில் த.க.ஜெய்
11-07-2011, 08:07 AM
ஆயிரம் நற்செயல்கள் பல செய்தவன், அவன் செய்த நற்செயல்கள் தவிர தவறி செய்யும் தீஞ்செயல் மட்டுமே மற்ற மனிதர்களின் கண்களுக்கு தெரியும் ...அது போல் ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் செய்யும் நற்செயல்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரிவதில்லை ..அவைகளின் செய்யும் கேடான செயல்கள் தான் தெரிகின்றன அன்றும் இன்றும் என்றும் ...இழை பழையதென்றாலும் நான் என்னை தொலைத்துவிட்டேன் ....உண்மை கூறும் இக்கவிதையில் ..

பென்ஸ்
12-07-2011, 07:54 AM
கானிபலிசம்.... எல்லா விலங்குகளிலும்...
கூட்டமாக வாழும் மிருகங்கள் எல்லாம் அவற்றிக்கேன ஒரு விதி முறையை வைத்திருக்கின்றன....
டால்பின்களும் சுகத்திற்க்காக உடலுறவு வைத்து கொள்ளும்...
மனிதனையும் மிருகத்தையும் எதற்க்காக வித்தியாச படுத்த வேண்டும் என்று தெரியவில்லை.... முதலில் இப்படி வித்தியாச படுத்திய அந்த மேதாவியை பார்த்து ஏன்னு கேக்கனும்....
ஒருவேளை குரங்குகள் கூட தன்னை தவிர மீதி உயிரினங்களை "மிருகம்" என்று தான் கூறுமோ என்ன..???
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதனின் செயல்களை சுட்டிகாட்டி சாடும் நல்ல கவிதை .. ஆனாலும் எனக்கு அடிப்படை கருவில் உடன்பாடில்லை.... மனிதன் மிருக குடும்பத்தில் ஒரு ஸ்பீசிஸ்...
காக்கை கூட்டில் முட்டையுஇடும் குயிலை போல...
உடலுறவுக்கு பின் தலை தின்னும் வெட்டுகிளி போல...
தன் குட்டியே தனக்கு எதிரியாக கூடாது என்று கொல்லும் சிங்கத்தை போல...
மனிதனும் இன்னொரு வகையான மிருகம்...

கீதம்
12-07-2011, 11:44 PM
ஆயிரம் நற்செயல்கள் பல செய்தவன், அவன் செய்த நற்செயல்கள் தவிர தவறி செய்யும் தீஞ்செயல் மட்டுமே மற்ற மனிதர்களின் கண்களுக்கு தெரியும் ...அது போல் ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் செய்யும் நற்செயல்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரிவதில்லை ..அவைகளின் செய்யும் கேடான செயல்கள் தான் தெரிகின்றன அன்றும் இன்றும் என்றும் ...இழை பழையதென்றாலும் நான் என்னை தொலைத்துவிட்டேன் ....உண்மை கூறும் இக்கவிதையில் ..

விமர்சனத்துக்கு நன்றி ஜெய்.

கீதம்
13-07-2011, 12:05 AM
கானிபலிசம்.... எல்லா விலங்குகளிலும்...
கூட்டமாக வாழும் மிருகங்கள் எல்லாம் அவற்றிக்கேன ஒரு விதி முறையை வைத்திருக்கின்றன....
டால்பின்களும் சுகத்திற்க்காக உடலுறவு வைத்து கொள்ளும்...
மனிதனையும் மிருகத்தையும் எதற்க்காக வித்தியாச படுத்த வேண்டும் என்று தெரியவில்லை.... முதலில் இப்படி வித்தியாச படுத்திய அந்த மேதாவியை பார்த்து ஏன்னு கேக்கனும்....
ஒருவேளை குரங்குகள் கூட தன்னை தவிர மீதி உயிரினங்களை "மிருகம்" என்று தான் கூறுமோ என்ன..???

ஒரு மேதாவி அல்ல... பலர்! மனிதன் முரண்படும்போதெல்லம் முன்வைக்கப்படுகிறது இதுபோலொரு ஒப்புமைக் கேள்வி! அது உண்டாக்கிய தாக்கமே இங்கு இக்கவிதையாய்!

மனிதனின் செயல்களை சுட்டிகாட்டி சாடும் நல்ல கவிதை .. ஆனாலும் எனக்கு அடிப்படை கருவில் உடன்பாடில்லை....

உடன்பாடில்லாதபோதும் பின்னூட்டமிட்டுக் கருத்துகளை முன்வைத்ததற்கு நன்றி பென்ஸ் அவர்களே.

மனிதன் மிருக குடும்பத்தில் ஒரு ஸ்பீசிஸ்...
காக்கை கூட்டில் முட்டையுஇடும் குயிலை போல...
உடலுறவுக்கு பின் தலை தின்னும் வெட்டுகிளி போல...
தன் குட்டியே தனக்கு எதிரியாக கூடாது என்று கொல்லும் சிங்கத்தை போல...
மனிதனும் இன்னொரு வகையான மிருகம்...

உங்கள் கருத்துகளோடு நான் ஒத்துப்போகிறேன். இயல்பு மாறா உயிரினங்களைப் பற்றி நாம் கவலைப்பட ஏதுமில்லை.

மனிதனை மிருகத்துடன் ஒப்புமைப்படுத்துவதில் அர்த்தமில்லை என்பதே என் கருத்து. மனிதனும் இன்னொரு வகையான மிருகம் எனில் ஆறாம் அறிவுக்கு அர்த்தம்தான் என்ன?