PDA

View Full Version : ஒரே ஒரு பெண்ணிற்கு நடந்த போலீஸ் தேர்வு



muthuvel
24-03-2010, 11:51 AM
மதுரை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் கான்ஸ்டபிளுக்கான எழுத்துத் தேர்வு, கடந்தாண்டு அக்., 25ல் நடந்தது.மதுரை நகர், புறநகரைச் சேர்ந்த 455 பெண்கள் உட்பட 2,296 பேருக்கு, டிச., 10ல் உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் சரவணகுமாரி என்பவர், உயரம் குறைவாக இருப்பதாக கூறி, தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், உயரம் அளந்து பார்த்தபோது, அரசு நிர்ணயித்திருந்த 155 செ.மீ., இருந்தது. இதை தொடர்ந்து, சரவணகுமாரிக்கு மீண்டும் உடற்தகுதி தேர்வு நடத்த, கோர்ட் உத்தரவிட்டிருந்தது.நேற்று ஆயுதப்படை மைதானத்தில், டி.ஐ.ஜி., சந்தீப் மித்தல், எஸ்.பி., மனோகர் முன்னிலையில், சரவணகுமாரிக்கு ஓட்டத் தேர்வு, பந்து எறிதல் போன்ற உடற்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகளை சீருடை பணியாளர் குழுமத்திற்கு போலீஸ் அதிகாரிகள் அனுப்பினர்.
நன்றி: தினமலர்

குணமதி
25-03-2010, 02:56 AM
தகுதி இருந்தாலும் உரிமைகளைச் சிலபோது போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது.

இத்தகைய செய்திகள் சோர்வைப் போக்கி உரிமைகளை நிலை நிறுத்த உதவும்.

பாராட்டுகிறேன்.

அக்னி
25-03-2010, 07:30 AM
குணமதியின் கருத்தை வழிமொழிகின்றேன்.

செய்திப் பகிர்வுக்கு நன்றி...

muthuvel
31-03-2010, 08:06 AM
குணமதியின் கருத்தை வழிமொழிகின்றேன்.

sures
02-04-2010, 12:31 PM
என்ன தான் எப்படி இருந்தாலும், சில வேலைகளுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் தேர்வு நடத்திதானே தீரவேண்டும்.