PDA

View Full Version : ஓசையில்லா மொழி



இன்பக்கவி
24-03-2010, 11:03 AM
உதடுகளை அசைத்தேன்
ஓசை இல்லை..
"ஊமை" புதுப் பெயர் சூடினேன்...
ஓசையில்லா மொழி என் மொழி

மொழி இல்லாததால்
உணர்வுகளும்
ஊமையாகியாதோ....

பலரின் சலிப்பும்
சிலரின் பரிதாப பார்வையும்
ஊனத்தையும் ஊமையாக்கியதே....
என் ஓசையில்லா மொழியை
உணருவர் எவரோ

ஒரு முறையேனும்
என் குரல் ஒலிக்காதா??
உன் மன ஏக்கத்தை
பார்வையால் உணர்த்த
மௌனமொழி பரிட்சயமானதால்
ஏக்கத்தை உணர்ந்து
"அம்மா" உன்னை எனக்கு பிடிக்கும்..
நீ இல்லாமல் நான் இல்லை"
என் கடைசிக் கதறல்....
ஓசையில்லா என் மொழியை
உணராமலே என்னை பிரிந்தாய்..

ஓசையில்லா என் மொழியை
உன் மரண படுக்கையில்
உணர்த்த முடியாத
ஊமையானேன்..

நிஜமாய் உன்னை பிரிந்த
அன்றுதான் ஊமையே ஆனேன்..
என் ஓசையில்லா மொழியை
உணருவர் எவரோ???

govindh
24-03-2010, 11:52 AM
"ஓசையில்லா மொழி"
வலி மிகுந்த வார்த்தைகள்...

மொழி தெரிந்தும்...
உணர்த்த இயலாமையால்..
ஊமையானேன்.

கவி நன்று...
வார்த்தைகளை மென்று..
வழங்குகிறேன் நன்றி..
பாராட்டுக்கள்.

ஆதி
24-03-2010, 04:13 PM
"ஓசையில்லா மொழி என் மொழி"

இந்த கவிதையில் கூர்மையான வார்த்தைகள் இவை..

இந்த வரிகளில் இருந்து கவிதையை ஆரம்பித்திருந்தால் கவிதை இன்னும் வலிமை மிக்கதாய் இருந்திருக்கும்..

//என் கடைசிக் கதறல்....
ஓசையில்லா என் மொழியை
உணராமலே என்னை பிரிந்தாய்..

ஓசையில்லா என் மொழியை
உன் மரண படுக்கையில்
உணர்த்த முடியாத
ஊமையானேன்..

நிஜமாய் உன்னை பிரிந்த
அன்றுதான் ஊமையே ஆனேன்..
என் ஓசையில்லா மொழியை
உணருவர் எவரோ???
//

மிக கனமான வரிகள்..

நேரடியாய் தாயின் இழப்பால் பிள்ளை உற்ற துயரை, கைவிட்ட பட்டநிலையை முதல் பத்தியிலேயே சொல்லி இருக்கலாம் நீங்கள் கவிதை கனமானதாய் இருந்திருக்கும்..

-----------

ஓசையில்லா மொழி என் மொழி

மனசுக்குள் பாடும் பாடலைப் போல
எவர் செவிகளுக்கு எட்டாதது
மனசின் வலிகளைப் போல
ரகசியமானது

ஒரு பறவையின் பாடலைப் போல
என் மொழி இனிமையானதல்ல
என்றாலும் பொருள் புரியாதது..

ஓசையில்லா என் மொழி
பிறந்த குழந்தையின் புன்னகைப் போல
தூய்மையானது,
ஏனெனில்
என் மொழிக்கு புறனி பேச தெரியாது
என் மொழிக்கு கனி இருப்ப காய் கவர தெரியாது
என் மொழிக்கு ஆபாசம் பேச தெரியாது
என் மொழிக்கு பகை விதைக்கத் தெரியாது
என் மொழிக்கு பாசாங்கு தெரியாது


மழலையினுடையதல்ல என் மொழி
தேவர்களுடையதல்ல என் மொழி
கைவிடப்பட்டவர்களுடையதுமல்ல என் மொழி
காற்றால் பேசுகிற
இயற்கையினுடையது என் மொழி

என் மொழிக்கு
யாருக்கும் ஆறுதல் சொல்ல
தெரியாதெனினும்
யாருக்கும் ஆறா ரணம் தராது..
ஆனாலும்
சாதி பேசி
மதம் பேசி
அரசியல் பேசி
அரட்டை பேசி
காலத்தை கரியாகும்
பேசத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் கூடி
சொல்லி வைத்தார்கள்
ஊமை ஊரை கெடுக்கும்..

-----------------------

பாராட்டுக்கள் இன்பக்கவி அவர்களே..***

பா.ராஜேஷ்
24-03-2010, 06:42 PM
வழக்கம் போல் மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் கவிதா. பாராட்டுக்கள்

இளசு
24-03-2010, 08:18 PM
ஊமையாய்ப் பிறந்ததால் ஊமையல்ல...
உய்த்தறிந்த அன்னை மரித்த அந்நாளில்தான் உண்மையில் ஊமை...

வலி மிகுந்த வரிகள்..
வலிமையான வரிகள்..

பாராட்டுகிறேன் கவிதா.


ஆதனின் அலசல், பின் கவிதை, மௌனமொழியின் சிலாகிப்பு - அருமை!


இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை.......!!!!

இன்பக்கவி
27-03-2010, 08:54 PM
ஓசையில்லா மொழி என் மொழி

மனசுக்குள் பாடும் பாடலைப் போல
எவர் செவிகளுக்கு எட்டாதது
மனசின் வலிகளைப் போல
ரகசியமானது

ஒரு பறவையின் பாடலைப் போல
என் மொழி இனிமையானதல்ல
என்றாலும் பொருள் புரியாதது..

ஓசையில்லா என் மொழி
பிறந்த குழந்தையின் புன்னகைப் போல
தூய்மையானது,
ஏனெனில்
என் மொழிக்கு புறனி பேச தெரியாது
என் மொழிக்கு கனி இருப்ப காய் கவர தெரியாது
என் மொழிக்கு ஆபாசம் பேச தெரியாது
என் மொழிக்கு பகை விதைக்கத் தெரியாது
என் மொழிக்கு பாசாங்கு தெரியாது


மழலையினுடையதல்ல என் மொழி
தேவர்களுடையதல்ல என் மொழி
கைவிடப்பட்டவர்களுடையதுமல்ல என் மொழி
காற்றால் பேசுகிற
இயற்கையினுடையது என் மொழி

என் மொழிக்கு
யாருக்கும் ஆறுதல் சொல்ல
தெரியாதெனினும்
யாருக்கும் ஆறா ரணம் தராது..
ஆனாலும்
சாதி பேசி
மதம் பேசி
அரசியல் பேசி
அரட்டை பேசி
காலத்தை கரியாகும்
பேசத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் கூடி
சொல்லி வைத்தார்கள்
ஊமை ஊரை கெடுக்கும்..

-----------------------

பாராட்டுக்கள் இன்பக்கவி அவர்களே..***

உங்கள் கவிதை அருமை நன்றிகள்



வழக்கம் போல் மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் கவிதா. பாராட்டுக்கள்

நன்றிகள் ராஜேஷ்


ஊமையாய்ப் பிறந்ததால் ஊமையல்ல...
உய்த்தறிந்த அன்னை மரித்த அந்நாளில்தான் உண்மையில் ஊமை...

வலி மிகுந்த வரிகள்..
வலிமையான வரிகள்..

பாராட்டுகிறேன் கவிதா.


ஆதனின் அலசல், பின் கவிதை, மௌனமொழியின் சிலாகிப்பு - அருமை!


இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை.......!!!!

நன்றிகள் இளசு அவர்களே

அமரன்
27-03-2010, 10:05 PM
கவிதைக்குள்ளிருந்து நான் பேச நினைத்தது பேசப்பட்டு விட்டதால் சத்தம் போடாது செல்கிறேன் ஊமை எனும் மைதாங்கி..

அசத்தீட்டீங்க மக்களே!

இன்பக்கவி
28-03-2010, 05:47 AM
கவிதைக்குள்ளிருந்து நான் பேச நினைத்தது பேசப்பட்டு விட்டதால் சத்தம் போடாது செல்கிறேன் ஊமை எனும் மைதாங்கி..

அசத்தீட்டீங்க மக்களே! :confused::confused::confused::confused:

எனக்கு என்ன சொல்லவரீங்கள் :confused::confused::confused:

அமரன்
28-03-2010, 06:44 AM
இந்தக் கவிதைப் பற்றி நான் சொல்ல நினைத்ததை ஆதனும் அண்ணனும் சொன்ன பின் நான் சொல்ல என்ன இருக்கு என்றேன்.

என்ன சேதி ஆரை அடையவேணுமோ அந்தச் சேதி அவரை அடைந்த பிறகு ஊமையாகவே இருந்திடுகிறேன் என்றும் சொன்னேன் கவிதைக்குள் நுழைந்து. வார்த்தைகள் வெறும் பாத்திரங்கள்தான். அது தூக்கிச்செல்லும் கருத்துகள்தான் பண்டங்கள். மௌனமாகப் பேசுவோரும் கருத்துப் பரிமாற்றம் செய்யும்போது அவர்கள் மீதி ஏன் வித்தியாசப் பார்வை எறிய வேண்டும் என்கிறேன்.

சரிதானுங்களா இன்பக்கவி.

கலையரசி
28-03-2010, 09:35 AM
உணர்வுகள் ஊமையான பிறகு மொழி இருந்து தான் என்ன பயன்?

'ஓசையில்லா என் மொழியை
உன் மரண படுக்கையில்
உணர்த்த முடியாத
ஊமையானேன்.."
மனத்தைப் பாதித்த வரிகள். மிகவும் நன்று இன்பக்கவி.