PDA

View Full Version : மீண்டும் என் பயணம்...



இன்பக்கவி
23-03-2010, 08:55 PM
"சந்தோசம்"
சேரா தோஷமோ..
என் ஜாதகத்தில்

தான் வாழ பிறரை கெடுத்து
வாழும் உலகம்
புரிய வைத்த அனுபவம்

"தோல்வி"யின் சோகம்
எதனை கொண்டு
அளவிட..
வெற்றின் மகிழ்வை
முழுதாய் உணர்ந்ததில்லை


தோல்விக் கூட
தோற்று போயின
என் கண்களில் கண்ணீரை
காணாமல்...

நினைத்து கிடைக்காத
எதையும்
நினைத்து துடிக்க
நினைக்கவில்லை..
கிடைக்காதவை
கணக்கில் இல்லை...
முதலாக
ஆசைபடுவதை
நிறுத்திக் கொண்டேன்...

பணத்தின் தேவை
இல்லாதபோது
பணத்தின் அருமை
உணரவில்லை
பணத்தின் அருமை
உணர்ந்தபோது
பணம் ??????


பிரிவுகளின் துயரால்
தனிமையை
பழகிக் கொண்டேன்

ஆர்ப்பாட்டத்தின்
ஆயுள் குறைவு
அமைதியை
பழகிக்கொண்டேன்

சுழல் என அறியாமல்
பலமுறை சிக்கி,
கவிழும் படகாய்
என் நிலை...
இதுவரை கரை சேர
இயலவில்லை..


பிரிவுகளாய்
எதையும் உணரவில்லை
எனக்காக எதுவுமே
"எனக்காக" இல்லை
வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
வழித்துணையாய் யாரும் இல்லை..

இருபது நாள்
சந்தோசம்
முற்று பெற
என் தன்னம்பிகையை
மட்டுமே
துணையாகக் கொண்டு
மீண்டும் என் பயணம்...:):):)

அமரன்
23-03-2010, 10:22 PM
"தோல்வி"யின் சோகம்
எதனை கொண்டு
அளவிட..
வெற்றின் மகிழ்வை
முழுதாய் உணர்ந்ததில்லை

தோல்விகளின் அளவீடு வெற்றி.

வெற்றியின் அளவீடு தோல்வி.

ஒன்றில்லாம் இன்னொறு இல்லை.

தோல்விச் சோகமும் வெற்றிச் சுகமும் இதுபோலவேதான்.


பிரிவுகளாய்
எதையும் உணரவில்லை
எனக்காக எதுவுமே
"எனக்காக" இல்லை
வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
வழித்துணையாய் யாரும் இல்லை

வாழ்க்கைத் துணை கூட வழித்துணையாய் வராது.
வாழ்க்கையில் துணையாக வழிகாட்டிகள் வருது.
வாழக் கையில் நம்பிக்கை உள்ளதே.
அதைத் தந்தவர்கள் நீங்கள் பட்டியலிட்ட அனைத்தையும் உங்களுக்குத் தந்தவர்கள்தான்.

மனதை எங்கெங்கோ அலைபாய வைத்து
மனநிலையின் நிர்வாணம் காட்டும் பாட்டு
கடைசியில் போடும் கொக்கி
வேலைக்கு என்னாச்சு இன்பக்கவி...?

aren
24-03-2010, 01:44 AM
தோல்விதான் வெற்றியின் முதல் படி. கவலைப்படவேண்டாம், இந்த வேலை போனாலும் இன்னொரு வேலை உங்களுக்காக காத்திருக்கும், இன்னும் ஓரிரு நாளில் அது உங்களைத் தேடி தானாகவே வரும். உங்களுடைய சீவியை மட்டும் மெருகேற்றாமல் உங்கள் தன்னம்பிக்கையையும் மெருகேற்றிக்கொள்ளுங்கள், உங்களுக்கு வெற்றி நிச்சயம். அதற்கு என் வாழ்த்துக்கள்.

இன்பக்கவி
24-03-2010, 05:42 AM
மனதை எங்கெங்கோ அலைபாய வைத்து
மனநிலையின் நிர்வாணம் காட்டும் பாட்டு
கடைசியில் போடும் கொக்கி
வேலைக்கு என்னாச்சு இன்பக்கவி...?

என்னை ஏமாற்றும் வேலை எனக்கு வேண்டாம் என்று ஒதுங்கி கொண்டேன்...:):):)
வேறு வேலை போக போகிறேன்..
ஆமா யாரு அலைபாய வைத்தாங்கள் மனதை...உங்கள் கடைசி வரி புரியலையே :confused::confused::confused:

இன்பக்கவி
24-03-2010, 05:46 AM
தோல்விதான் வெற்றியின் முதல் படி. கவலைப்படவேண்டாம், இந்த வேலை போனாலும் இன்னொரு வேலை உங்களுக்காக காத்திருக்கும், இன்னும் ஓரிரு நாளில் அது உங்களைத் தேடி தானாகவே வரும். உங்களுடைய சீவியை மட்டும் மெருகேற்றாமல் உங்கள் தன்னம்பிக்கையையும் மெருகேற்றிக்கொள்ளுங்கள், உங்களுக்கு வெற்றி நிச்சயம். அதற்கு என் வாழ்த்துக்கள்.

நன்றிகள் ஆரேன் அவர்களே..
தன்னபிக்கை இல்லை எனில் இவ்வளவு தூரம் கடந்து வந்து இருக்க மாட்டேன்...
ஆறுதலாய் இங்கு எல்லோரும் இருக்கையில் ஒரு மன நிறைவு..

இனியவள்
24-03-2010, 05:51 AM
தோல்விக்குள் ஒளிந்திருக்கும்
வெற்றியை இனம் கண்டுகொள்

தோல்விகள் கற்துத் தரும்
வாழ்க்கைப் பாடத்தை
துணையாய் கொண்டு
முன்னேறி - ஓவ்வொரு
தோல்விகளும் உன்
வாழ்வின் வெற்றிப் படி

வாழ்த்துக்கள் தோழியே.. தேல்வியில் துவண்டிடாது வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறிடும் உங்கள் நம்பிக்கைக்கு :icon_b:

சிவா.ஜி
24-03-2010, 06:34 AM
"தோல்விக் கூட
தோற்று போயின
என் கண்களில் கண்ணீரை
காணாமல்..."

இது போதும் இன்பக்கவி. தோல்வியே உங்களிடம் தோற்றுப்போகும் நிலை....வெற்றியை வெகு விரைவில் வரவழைக்கும்....அன்றும் உங்கள் கண்கள் கண்ணீரற்று இருக்கும்...ஆனந்தத்தில் எல்லாக் கண்ணீரையும் கொட்டிவிட்டு...

எதுவும் நிரந்தரமில்லை நாமிருக்கும் உலகில். அமரன் சொன்னதைப் போல வாழ்க்கைத் துணையே கடைசிவரை வருவதில்லை...இருந்தும் வாழ்க்கை நகராமலிருக்கிறதா...

உங்கள் தன்னம்பிக்கையை அறிவேன்....எதையும் சமாளித்து மீண்டும் எழுவீர்கள்.

வாழ்த்துக்கள் கவிதா.

govindh
24-03-2010, 08:39 AM
தன்னம்பிகையை
மட்டுமே
துணையாகக் கொண்டு
மீண்டும் என் பயணம்...

பயணம் வெற்றி பெறட்டும்...

நடந்தால் பாதை வரும்..

பா.ராஜேஷ்
24-03-2010, 07:16 PM
கவலைப் படாதீர்கள் கவிதா. எல்லாம் நண்மைக்கே. இந்த நிலையும் விரைவில் மாறும்.

ஜனகன்
24-03-2010, 07:40 PM
உங்கள் 'வெற்pறியின் முதல் படி தோல்வி'மனதை தளர விடாதீர்கள்.
துன்பத்திலும் இக்கவிதை நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்

இன்பக்கவி
28-03-2010, 05:51 AM
உங்கள் 'வெற்pறியின் முதல் படி தோல்வி'மனதை தளர விடாதீர்கள்.
துன்பத்திலும் இக்கவிதை நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்


கவலைப் படாதீர்கள் கவிதா. எல்லாம் நண்மைக்கே. இந்த நிலையும் விரைவில் மாறும்.



வாழ்த்துக்கள் தோழியே.. தேல்வியில் துவண்டிடாது வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறிடும் உங்கள் நம்பிக்கைக்கு :icon_b:


"தோல்விக் கூட
தோற்று போயின
என் கண்களில் கண்ணீரை
காணாமல்..."

உங்கள் தன்னம்பிக்கையை அறிவேன்....எதையும் சமாளித்து மீண்டும் எழுவீர்கள்.

வாழ்த்துக்கள் கவிதா.


தன்னம்பிகையை
மட்டுமே
துணையாகக் கொண்டு
மீண்டும் என் பயணம்...

பயணம் வெற்றி பெறட்டும்...

நடந்தால் பாதை வரும்..
அனைவருக்கும் நன்றிகள்......:icon_b::icon_b::icon_b::icon_b:

அக்னி
01-04-2010, 07:00 AM
வெற்றியும் தோல்வியும்
நிரந்தரமானதில்லை...

வென்றாலும் தோற்றாலும்
மீண்டும் மீண்டும் இலக்காக
வெற்றி நிர்ணயிக்கப்படும்.

வா(ழ்க்)கை எங்கும் எதிலும் இருக்கின்றது.
சற்றே முயன்றாற் பெற்றிடலாம்...

பாதை இலக்கைச் சேர்க்கும்தான்.
ஆனால்,
நாம்தான் நடக்கவேண்டும்.

தடங்கல்கள்,
புது வழிசமைக்க வைக்கும்
ஊக்கியாக இருந்தால்,
எங்கும் நாமே வெற்றியாளர்கள்...

‘தோல்வி நிலையென நினைத்தால்...’
நெஞ்சமிசைக்கின்றது இப்பாடலை...

இளசு
06-04-2010, 09:24 PM
நம்பிக்கை இருக்க பயமேன்?

பாதையெல்லாம் மாறிவரும்..
பயணம் தொடர்ந்து விடும்..


வாழ்த்துகிறேன் கவிதா.

செல்வா
07-04-2010, 07:24 PM
இதுவும் கடந்து போகும் என்ற நிலை காட்டும் கவிதை...

எல்லாம் இனிமையாய் கடக்க
இனிய வாழ்த்துக்கள்... :)