PDA

View Full Version : இதற்கொரு முடிவு இல்லையா?குணமதி
23-03-2010, 04:50 PM
இதற்கொரு முடிவு இல்லையா?


சிவப்பு கருப்பு செங்காவி உடைகள்!

நாள் கிழமை மாத வழிபாடுகள்!

கிழக்கில் மேற்கில் வடக்கிலுள ஊர்கள்!

பொழுது போக்கு மகிழ்ச்சிச் செலவுகள்!

தெய்வமே தானெனும் திறமைமிகு துறவிகள்!

தீர்வெனக் கூறி சிறப்பு வழிபாடுகள்!

திரை மறைவினில் தீயொழுக்கங்கள்!

கடவுள் பேரால் காசு பறிப்புகள்!

கையுங் களவுமாய்ப் பிடிபடல்கள்!

கால ஓட்டத்தில் மக்களின் மறதிகள்!

தூயராய்த் திரும்பும் துறவிப் போலிகள்!

துணைக்கு வரச்சில அரசியல் கடசிகள்!

தொலையாமல் தொடரும் ஏமாற்றுச் செயல்கள்!

இந்திய மண்ணில் இதற்கொரு முடிவு

இல்லையா, இல்லையா, எப்போதும் இல்லையா?

jayashankar
23-03-2010, 05:00 PM
போலித் துறவிகளின் அட்டகாசங்களை அட்டவணைப் போட்டு கவிதை வரிகளில் படைத்திருக்கின்றீர்கள் குணமதி.

அருமை.

விட்டில் பூச்சிகளைப் போல் கண்ணை மூடிக்கொண்டு அந்த சாக்கடையில் விழும் மனிதர்கள் இருக்கும்வரை இதற்கு நிச்சயம் முடிவேயில்லைதான்.

இந்தியர் மட்டுமல்ல பல வெளிநாட்டாரும் இப்படி இருப்பதுதான் வியப்பைக் கொடுக்கின்றது.

பகிர்ந்தமைக்கு நன்றி குணமதி அவர்களே..

govindh
23-03-2010, 05:04 PM
தொலையாமல் தொடரும் ஏமாற்றுச் செயல்கள்!
அவமானமான உண்மை...!

முடிவு வர வேண்டும்....!
விடிவு மலர வேண்டும்...!

அமரன்
23-03-2010, 10:31 PM
என்னைப் பொறுத்தமட்டில்.....

வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பாட்டாலும் ஒவ்வொருவருக்கும், கற்புண்டு. ஒரு சிலர் அதை இழக்கும் போது பெண்கள் கற்பிழந்தைப் போல் (இந்த கற்பிழப்பு நம்ம நடைமுறை வழக்கு) பெரிதுபடுத்தப்படுகிறது. அதிலொன்றுதான் சாமியார் விவகாரங்கள். என்னதான் நாத்திகம் விதையூன்றப்பட்டு இருந்தாலும் ஆன்மீகம் மீதான அன்பு அழைந்திடாதையும் இதுக்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று.

அதை விடுவோம்..

மக்களுக்குப் பிரச்சினை கூடிக் கொண்டே போகுது. எவனாச்சும் எதையாவது சொல்லி நம்பக் கூடிய விதத்தில் நடந்தால் அவன் பின்னால் போகத் தயாராக இருக்கும் மந்தைகளாக மாந்தர்களை பிரச்சினைகள் மாற்றியுள்ளன. பிரச்சினைகளை குறைக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பும் இதிலுண்டு.

இல்லாவிடில், பொம்மைக் கடைக்காரன், துணிக்கடைக்காரன் போல வியாபார நுணுக்கம் தெரிந்தவர்களாத்தானே உள்ளார்கள் என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ளலாம். அல்லது யாரும் ஒழுங்கில்லை... எதுவும் சரியில்லை என்று அம்பியாட்டம் அழுது புலம்பலாம்..

நல்லதொரு எண்ணம் கொண்டு வந்த பாவுக்கு பாராட்டு.

குணமதி
24-03-2010, 03:50 AM
///விட்டில் பூச்சிகளைப் போல் கண்ணை மூடிக்கொண்டு அந்த சாக்கடையில் விழும் மனிதர்கள் இருக்கும்வரை இதற்கு நிச்சயம் முடிவேயில்லைதான்.///

சரியாகச் சொன்னீர்கள்.

நன்றி.

குணமதி
24-03-2010, 03:50 AM
தொலையாமல் தொடரும் ஏமாற்றுச் செயல்கள்!
அவமானமான உண்மை...!

முடிவு வர வேண்டும்....!
விடிவு மலர வேண்டும்...!

நன்றி கோவி.

குணமதி
24-03-2010, 03:53 AM
///மக்களுக்குப் பிரச்சினை கூடிக் கொண்டே போகுது. எவனாச்சும் எதையாவது சொல்லி நம்பக் கூடிய விதத்தில் நடந்தால் அவன் பின்னால் போகத் தயாராக இருக்கும் மந்தைகளாக மாந்தர்களை பிரச்சினைகள் மாற்றியுள்ளன. பிரச்சினைகளை குறைக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பும் இதிலுண்டு.///

சரியான கருத்தோடு பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி அமரன்.

இனியவள்
24-03-2010, 05:26 AM
மூடநம்பிக்கைகள் உள்ள வரை
முடிவிலியாய் தொடர்ந்திடும்
கதையிது

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை
ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே
இருப்பார்கள் என்று எங்கோ கேட்ட வார்த்தை இங்கே
ஞாபகம் வருகின்றது உங்கள் கவியை கண்டவுடன்

வாழ்த்துக்கள் நண்பரே..!

சிவா.ஜி
24-03-2010, 06:41 AM
உண்மையிலேயே இது முடிவிலிதான்...."எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்" என்ற நிலையில் இருக்கும் மனிதர்கள், தவறுகளை சொத்தாகச் சேர்த்து வைத்திருக்கும் குற்றம் புரிந்தவர்கள்...அந்த சொத்தினால் கிடைக்கப்போகும் வருமானத் தண்டனையிலிருந்து தங்களைக் காப்பாற்ற இவரேனும் உதவுவாரா என காவிகளிடம் அடைக்கலம்....

நல்லவர்களும், சாதாரணமானவர்களும் நாடுவதில்லை எந்த நயவஞ்சக போலிகளையும்...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள் குணமதி.

அக்னி
24-03-2010, 07:48 AM
முன்பெல்லாம்
வெள்ளம் ஆறைச்சேர்ந்து,
கடலைச் சேர்ந்தது...

தடங்கல்களால்
தடுமாறிய வெள்ளம்
வடிகால் தேடியது...

அங்குமிங்கும் தோன்றிய
வடிகால்கள்,
எங்குமாகிப் போகின...

வடிகால்களின்
ஆழத்துளையறியாமல்
காலைவிட்ட வெள்ளம்
உறிஞ்சப்பட்டபோதிலும்,
வெள்ள வரத்திற் தடையில்லை...

துளைகள் நிரம்பிப் போனாலும்,
உறிஞ்சலை நிறுத்தவில்லை...

பாவம் வெள்ளம்...
அறிந்தும் அறியாமலும்
துளையின் இழுவைச்சக்தியால்,
வெளிவரத் தெரியாமலே... முடியாமலே...

வடிகால்கள் கடலைச் சேர்க்குமா
என ஆராயாமலே,
பாய்ந்தோடி வரும் பக்திவெள்ளம்,
நம்பிக்கையல்ல, மூடநம்பிக்கை...

(நம்மை) நம்பிக் கை வைத்தாலே மூடப்படும் துளைகள்...
(நம்மில்) நம்பிக்கை வைத்தாலே கிட்டிடும் பேரின்ப நிலை...

குணமதியின் கவிதைக்கும்,
கவிதையை இன்னும் அலங்கரிக்கும் சிறப்புப் பின்னூட்டங்களுக்கும்,
எனது பாராட்டுக்கள்...

குணமதி
24-03-2010, 12:06 PM
///ஏமாறுபவர்கள் இருக்கும்வரை
ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே
இருப்பார்கள்///

உணரவேண்டிய கருத்து.

மிக்க நன்றி.

குணமதி
24-03-2010, 12:10 PM
///நல்லவர்களும், சாதாரணமானவர்களும் நாடுவதில்லை எந்த நயவஞ்சக போலிகளையும்...///

ஏமாறும் ஏனையோரும் விழித்திட வேண்டும்.

நன்றி சிவா.

குணமதி
24-03-2010, 12:12 PM
அரிய பின்னூட்டமிட்ட 'அக்னி'க்கு நன்றி.

பா.ராஜேஷ்
24-03-2010, 07:18 PM
இதற்கொரு முடிவு வந்தால் அதன் மூலம் இந்தியாவிற்கு விடிவு காலமும் வரும். வருமா என்பது மிக பெரிய கேள்வி குறிதான்

ஜனகன்
24-03-2010, 07:49 PM
உலக நாடுகள் அனைத்திலும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டபோதிலும் மூடநம்பிக்கை மறையாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
நல்ல கவிதை பாராட்டிக்கள் குணமதி.

குணமதி
26-03-2010, 06:14 PM
இதற்கொரு முடிவு வந்தால் அதன் மூலம் இந்தியாவிற்கு விடிவு காலமும் வரும். வருமா என்பது மிக பெரிய கேள்வி குறிதான்

இருக்கின்ற நிலையைச் சரியாகச் சொன்னீர்கள்.

நன்றி.

குணமதி
26-03-2010, 06:15 PM
பாராட்டிற்கு நன்றி ஜனகன்.