PDA

View Full Version : முகவரி



சரோசா
22-03-2010, 06:54 PM
மழை
" வழங்கும் வானமே நீ வாழ்க"
. என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின .
:aetsch013:
.
காற்றுக்குச் சினம் பொங்கியது.
என்ன கொடுமை! வானமா வழங்கியது .
பூமிக்காகக் காற்று பொருமியது



. " நீர் கொடுப்பதோ பூமி .
பேர் எடுப்பதோ,. வானம்"

govindh
22-03-2010, 07:20 PM
மாரியின் பொருட்டு...
மாறி விட்ட முகவரி...!
பாராட்டுக்கள்..

ஜனகன்
22-03-2010, 07:29 PM
. " நீர் கொடுப்பதோ பூமி .
பேர் எடுப்பதோ,. வானம்"

சிந்திக்க வைக்கும் வரிகள்.
தொடர்ந்து தாருங்கள் சரோசா,வாழ்த்துக்கள்.

சரோசா
22-03-2010, 07:34 PM
நன்றி கோவிந்த் பாராட்டுக்கு

சரோசா
22-03-2010, 07:35 PM
நன்றி ஜனகன் பாராட்டுக்கு.

அமரன்
22-03-2010, 09:41 PM
சோனி.. பனசோனிக்.. சாம்சுங்... எல்.ஜி..
எல்லாக் கடையிலும் ஒரே மாதிரித்தான். அந்தந்த நிறுவனத்தின் தயாரிப்புத்தான். ஆனால், அந்தக் கடையில் வாங்கினால் தரம் என்று சொல்வோரும் உண்டு. அது போல்தான் இதுவும்.

நீர்வட்டம் நினைவுக்கு வருது.

கீதம்
22-03-2010, 10:16 PM
எடுத்தாலும் எடுத்த இடத்துக்கே சேர்ப்பித்து விடுகிறதே! பாராட்டு, முகவரி மாறிப்போனாலும், நீராட்டு, சரியான முகவரிக்கே வந்துவிடுவதை நினைத்து மகிழலாம்.

வாழ்த்துகள் சரோசா.

குணமதி
23-03-2010, 01:28 AM
வேறுபட்ட கோணத்தில்...
பாராட்டத் தக்க முயற்சி!

சிவா.ஜி
23-03-2010, 06:02 AM
முகவரி மாறிய முகஸ்துதி....

மாறுபட்ட சிந்தனைக்கு வாழ்த்துக்கள் சரோசா.