PDA

View Full Version : பொறி....!!!...நிறைவடைந்தது....!!!சிவா.ஜி
22-03-2010, 01:09 PM
"மல்லிகா....நான் பேங்குக்குப் போயிட்டு, அங்கருந்து அப்படியே யூனிட்டுக்குப் போயிடறேன். மத்தியானம் சாப்பிட வரமாட்டேன். சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் ராஜாங்கம் சார்கூட ஒரு மீட்டிங் இருக்கு. கூடவே லஞ்சும் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க....மூணு மணிக்குதான் வருவேன்"

என்று மனைவியிடம் சொன்ன தில்லையரசனுக்கு 45 வயது. சிறு தொழில் அதிபர். பின்னேறிய முன்னெற்றி அவரது அனுபவத்தைப் பறைசாற்றியது. சொந்த ஊரைவிட்டு, பிழைப்புக்காக இந்தத் தொழில் நகரத்துக்கு 20 வருடங்களுக்கு முன்பு வந்தவர். இந்த இருபது வருடங்களில் மிகப்பெரும் வளர்ச்சியை கண்டவர். தொழிற்சாலை ஒன்றில் தினக்கூலியாக வேலை செய்து கொண்டிருந்தவர், ஸ்கிராப் என சொல்லப்படும் தொழிற்சாலையில் உபயோகித்தது போக மிச்சமாகும் கழிவுகளை குறைந்த விலைக்கு வாங்கி, தரம் பிரித்து அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தார். இன்று சொந்தமாய் ஒரு லேத் பட்டறையும் உள்ளது.


ஏ.சி.டி.சி வங்கி. நகரின் பரபரப்பான சாலையில் இயங்கிவந்தது. உள்ளே வந்தவர், சில்லென்ற ஏசிக் காற்றுப் பட்டதும், ஒரு முழு நிமிடம் அதை அனுபவித்தார். பணம் செலுத்துவதற்காக செலானை எடுத்தார். கையோடு கொண்டு வந்திருந்த சிறிய தோல்பையிலிருந்து பணக்கட்டுக்களை எடுத்துப்பார்த்து, செலானின் பின்புறம் டினாமினேஷனை எழுதினார். செலானைத் திருப்பி, விவரங்களை எழுதிக்கொண்டிருந்தவர் யாரோ தன்னையே பார்க்கிற உணர்வு தோன்றி, திரும்பிப்பார்த்தார். ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். என்ன என்பதைப்போல நெற்றிச் சுருக்கினார். அந்த இளைஞன் தயக்கத்துடன்,

"சார்...நீங்க எழுதி முடிச்சதும், கொஞ்சம் பேனா கிடைக்குமா...?"

என்றதும், மீண்டும் செலானை நிரப்பும் வேலையைத் தொடர்ந்தார். முடித்ததும் பேனாவைக் கொடுத்தார். அவன் எழுதிமுடிக்கும்வரை காத்திருந்தார். பேனாவை வாங்கிக் கொண்டு போய் பணத்தைக் கட்டிவிட்டு வெளியேறினார்.

பேனா வாங்கி எழுதிய இளைஞன் அவர் போவதையே ஒரு கேலிச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டைப் பையிலிருந்து அந்த சுயவிவர அட்டையை எடுத்துப்பார்த்தான். தில்லையரசன் என்ற பெயர் இருந்தது. முகவரி மற்றும் அலைபேசி எண்களுடன்.


தேசியமயமாக்கப்பட்ட மற்றொரு வங்கியில் புதிய கணக்குத் துவங்குவதற்காக விண்ணப்பத்துடன் அந்த மனிதர் நின்றுகொண்டிருந்தார். கைகளில் லேசான நடுக்கம், மனதுக்குள் இருக்கும் பதட்டத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. அறிமுகப்படுத்துவதற்கென கூட வந்திருந்த அவரது நண்பர் அந்த நடுக்கத்தைக் கவனித்து விட்டு,

"பாஸ்கர் சார்....என்ன இது...நீங்களேக் காட்டிக் குடுத்துடுவீங்க போலருக்கு. கேஷுவலா இருங்க சார். இங்க எல்லாருமே இப்படித்தான் செய்யறாங்க. நாம என்னக் கொள்ளையடிக்கவா போறோம். ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணப்போறோம். இப்பதான் வேற ஊர்லருந்து வந்திருக்கீங்க. உங்கக்கிட்ட அடரஸ் ப்ரூஃப் கேட்டா எங்க போவீங்க. அதான் இப்படி ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட். கவலைப் படாதீங்க. பீ....கூல்.."

கொஞ்சம் தைரியம் வந்தவராக...விண்ணப்பத்தைக் கேட்டுக் கைநீட்டிய வங்கி அதிகாரியிடம் நீட்டினார்.


அடுத்தநாள் நேற்று பார்த்த அதே ஏ.சி.டி.சி வங்கி. கிளை மேலாளர் பாண்டுரங்கனின் முன்பு நின்று கொண்டிருந்த அந்த நபர் கோபமாய் இருந்தார்.

"உக்காருங்க சார். டென்ஷனாகாதீங்க....!!"

பாண்டுரங்கனின் இந்த வாக்கியம் அவரை இன்னும் கோபப்படுத்தியது...

"என்ன சார் சொல்றீங்க...முழுசா என்பதாயிரம் எடுத்திருக்காங்க. நான் அதிகமா ஏ.டி.எம்ல பணம் எடுக்க மாட்டேன். எங்க வைஃப் இன்னிக்குப் போய் எடுக்க முயற்சிப் பண்ணியிருக்காங்க....கார்ட் அக்செப்ட் ஆகல. இங்க வந்து வித்ட்ரா பண்ணிப்பாத்தா...என்பதாயிரம் கொறையுது. அதையும் ஏ.டி. எம் சென்டர்லருந்துதான் எடுத்திருக்காங்க. கேட்டா...விசாரிக்கறோம்ன்னு சொல்றாங்க. என்ன சார் இதெல்லாம்."

"சார் கார்ட் உங்கக் கிட்ட இருக்கு. அதுவும் வொர்க்காகல...அப்படியிருக்கும்போது எப்படிசார் எடுக்க முடியும்? ஸ்ட்ரேஞ்சா இல்ல? அதுக்குத்தான் சார் விசாரிக்கனுன்னு சொல்றோம். கவலைப் படாதீங்க...இப்போதைக்கு மேற்கொண்டு யாரும் எடுக்காம இருக்கிறமாதிரி செஞ்சுடலாம்."

"இனிமே எடுக்காம இருக்கறது இருக்கட்டும் சார்....போனதுக்கு என்ன பண்றது?"

"சார்..கார்ட் தொலைஞ்சுப் போச்சின்னு சொல்லியிருந்தீங்கன்னா...அது வேற யாரோ எடுத்ததுன்னு சொல்லலாம். கார்ட் உங்கக்கிட்டயே இருக்கறதால...நாங்க எதுவும் செய்ய முடியாது. ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் குடுத்துட்டுப் போங்க. விசாரிக்கறோம்."

பாண்டுரங்கனின் குரலில் லேசாய் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

விருட்டென்று நாற்காலியை நகர்த்தி எழுந்தவர்...கோபமாய் வெளியேறியதும்,

இதைப் போலவே இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து நிறையப் பேர் வரப்போகிறார்கள் என்பது தெரியாமல், ஒரு கோப்புக்குள் பார்வையை இறக்கினார் பாண்டுரங்கன்.


தொடரும்.....

jayashankar
22-03-2010, 01:14 PM
ஆஹா நெடுங்கதையை தொடர்கதையாக்க போகிறீங்க போல....

நடக்கட்டும் நடக்கட்டும்....

கலையரசி
22-03-2010, 01:19 PM
குறுந்தொடரின் துவக்கம் நன்றாக உள்ளது. தொடருங்கள் சிவா.ஜி. அவர்களே!

சிவா.ஜி
22-03-2010, 02:55 PM
நன்றி ஜெய். அவசரமாய் அள்ளித்தெளித்தக் கோலத்தை ஆற அமர இடலாமென்ற எண்ணம்.

சிவா.ஜி
22-03-2010, 02:55 PM
மிக்க நன்றி கலையரசி அவர்களே.

அக்னி
22-03-2010, 03:13 PM
இத இத இதத்தான் எதிர்பார்த்தோம்...

ஒரே அத்தியாயத்தில், வரப்போகும் கதைக்களங்கள் அனைத்தையும் தொட்டுவிட்டீர்கள்.
அதுவும், பி்ரித்துக்காட்ட எந்தவிதக் குறியீடுகளும் பயன்படுத்தாமலே...

சட் சட் டென மாறும் கதைக் களங்கள்,
காமெராவின் ஷட்டர் மூடித் திறக்கக் காட்சி மாறும் உணர்வு மனதில்...

இந்த அத்தியாயத்தில்,
ஒரு சொற்றொடர்ப் பிரயோகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது... ;)

‘பொறி’
பறக்கட்டும். வைக்கட்டும். மாட்டட்டும்.

இக்கதை உங்களுக்கு ஒரு சவாலாகத்தான் இருக்கும். :icon_b:

சிவா.ஜி
22-03-2010, 03:34 PM
மாங்கு மாங்குன்னு எவ்ளவுதான் எழுதினாலும்....குறிப்பிட்ட சொற்றொட்ர்....அக்னிக் கண்ணுல மட்டும் அம்சமா உறுத்தியிருக்கு.....நடத்துங்க நடத்துங்க....

நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் சவாலான விஷயம்தான். சில கூட்டல்கள், சில கழித்தல்கள், சில செருகல்கள்...என டிங்கரிங் வேலை செய்ய வேண்டும். பார்ப்போம்.

மதி
22-03-2010, 04:22 PM
இது தான் சுவாரஸ்யமே... தெரிஞ்ச கதையை தெரியாத கதையோட்டத்தோடு படிப்பது... அசத்தலான உங்கள் பாணியில்... அக்னிக்கு உறுத்திய அந்த சொற்றொடர்.. எனக்கும்.. ஹிஹி.. அசத்துங்க..

govindh
22-03-2010, 06:13 PM
பொறி....!!!(குறுந்தொடர்)
பொறி...கிளப்புங்கள்...
கூடவே..வரோம்...
வாழ்த்துக்கள்...

அமரன்
22-03-2010, 10:01 PM
என்னடா கொஞ்ச நாளாய் ஆளின் அட்டகாசத்தைக் காணலையேன்னு நினைச்சேன். செல்வா கூடக் கேட்டான்.. இப்பத்தானே புரியுது. கலக்குங்க சிவா.

புள்ளிகளை பல(தை)ரை வைச்சாச்சு. கோலம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பைத் தூண்டியாச்சு. நம்ம சிந்தனை தறிகெடத் தொடங்கியாச்சு. நம்மை இப்படி ஏங்க வைச்சு புலம்ப வைக்கிறதே உங்களுக்குப் பிழைப்பாப் போச்சு.

கீதம்
22-03-2010, 10:52 PM
'பொறி'யைக் காணோமே என்று பொறி கலங்கிப் போய் பொறி வைத்தாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று முயற்சிக்க, பொறி தானாய் வந்து பொறியில் அகப்பட்டதைப்போல் என் பொறிகளில் ஒன்றில் அகப்பட, அப்பாடா! நிம்மதியாயிற்று.

பொறி வைத்துவிட்டீர்கள். தொடருங்கள். நாங்களும் வருகிறோம். பாராட்டுகளுடன் கீதம்.

aren
23-03-2010, 03:13 AM
ஏசிடிசி எழுபதுகளில் அமெரிக்காவின் பிரபலமான மியூசிக் பேண்டுகளில் இதுவும் ஒன்று, இதையே வங்கியின் பெயராக வைத்து அசத்தலான ஆரம்பத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். அவசரமே இல்லாமல் மெதுவாக கதையை நகர்த்துங்கள். முடிக்கவேண்டும் என்று நினைத்து எழுதவேண்டாம், அப்பொழுது உங்கள் ரசனைபடி கதை வளரும். அதற்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
23-03-2010, 05:14 AM
ஆஹா...மதி நீங்களும் அக்னி கூட சேர்ந்துட்டீங்களா....?

அதேதான் மதி. கதை என்னங்கறது தெரியும்...அட...இது அது இல்லையேன்னு சொல்ல வெக்கனும்....கஷ்டம்தான்...முயற்சி செய்றேன். நன்றி மதி.

சிவா.ஜி
23-03-2010, 05:17 AM
வாங்க பாஸ். உங்க செல்வாகிட்ட சொல்லுங்க....ஊர்லப் பாத்தா..பூசை இருக்குன்னு. வந்து வந்து எட்டிப் பாத்துட்டுப் போறதோட சரி. எதையாவது சொன்னாத்தானே...நம்ம மரமண்டைக்கு தெரியும். சின்ன 'பொறி' யில குட்டு வாங்கினதாலத்தான...பெருசாக்குறேன்....!!!

எல்லாம் மன்ற மக்களின் செயல். தொடர்ந்து பயணிக்கிறேன்....கூடவே வாங்க பாஸ். தைரியத்துக்காக....நன்றி அமரன்.

சிவா.ஜி
23-03-2010, 05:20 AM
நானும் அப்படித்தாங்க கீதம், ஒரு ஃபைன் மார்னிங்ல வந்துப் பார்த்து....பொறியைக் காணாம....சரி நாமளே இண்ணொன்னை பதிச்சடலான்னு ஆரம்பிச்சிருக்கேன். உங்க எல்லோரட 'கவனிப்பும்' தேவை. ரொம்ப நன்றி கீதம் அவர்களே.

சிவா.ஜி
23-03-2010, 05:21 AM
ஆமா ஆரென். இந்தமுறை அவசரமில்லை. கதையை எப்படிக் கொண்டு போகனுன்னு நினைக்கிறேனோ அப்படியே கொண்டு போகலான்னு இருக்கேன். முடிவு உங்க கையில. ஆலோசனைக்கு நன்றி ஆரென்.

அக்னி
23-03-2010, 07:54 AM
முடிவுதானே சிவா.ஜி... நான் சொல்றேன்...
எல்லாத்தையும் எழுதிக் கதையை முடிச்சப்புறம்,
‘முற்றும்’ ‘முடிந்தது’ ‘நிறைவுற்றது’
இப்பிடி அல்லது இது தொடர்பாக வேற ஏதாச்சும் போட்டிருங்க...
எப்பிடீ... :aetsch013:

*****
மதி, உங்களுக்கும் உறுத்திச்சுதோ அந்தத் தற்புகழ்ச்சிச் சொற்றொடர்...
ஹையா... :huepfen024:

*****
அடுத்த பாகத்தப் போட்டிருப்பாங்கன்னு வந்தா, இன்னும் போடல்லியே... :mad:

jayashankar
23-03-2010, 08:20 AM
ஏனுங்க!

நாங்க ஏதோ ஆர அமர கொடுங்கன்னு சும்மா சொன்னா, அதைமட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு, மிகவும் ஆஆஆஆஆஆஆஆஅரரரரரரரரரர..... அஅஅஅஅஅமமமமமமரரரரரரரர கொடுக்கப் போறீங்க போல....

ஹும் எல்லாம் நேரம்...

சிவா.ஜி
23-03-2010, 08:36 AM
ஆஹா அப்படியெல்லாமில்லீங்கோ....இன்னைக்குன்னு பாத்து நிறைய வேலை....சிஸ்டமும் ஷேரிங்கலதான் கிடைக்குது. அதான் தாமதம். விரைவில் போட்டுடறேன்.

jayashankar
23-03-2010, 08:41 AM
ஹி ஹி நல்லதுதானேங்க....

அப்பப்ப வேலையும் பாக்கணும்தானே... சம்பளம் தராங்கயில்ல. அதுக்காகவாவது.

கொடுங்க கொடுங்க.

அவசரமில்லை.

சிவா.ஜி
23-03-2010, 09:35 AM
அத்தியாயம்: 2தில்லையரசனின் பேனாவை வாங்கி எழுதிய இளைஞன்...இப்போது இருக்குமிடம் இரைச்சல் அதிகமாயிருந்த ஒரு சின்ன ஹோட்டல். அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தவனும் அதே வயதுதான். இவன் கொடுத்த, ஒரு பேப்பரையும், தில்லையரசனின் சுயவிவர அட்டையையும் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"இன்னும் ஒரே ஒரு டீடெய்ல் மட்டும் வேணும், வழக்கம்போல போன் பண்ணிடலாமா?"

அடங்கிய குரலில் கேட்டான்.

விவரங்களைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞன்....இந்த குரூப்புக்குத் தலைவன் போலத் தெரிகிறான். எதையும் திட்டமிட்டு செய்பவன் என்பது...சலனமில்லாத அவனது கண்களில் தெரிந்தது. அதிகம் பேசமாட்டான் போலிருக்கிறது. ஆனால் இப்போது பேசினான், மிக மெதுவாகப் பேசினான்.

"அவசரப்படாதே. முக்கியமானதை தயார் செஞ்சுக்கனுமே. கே.பி.என் காம்ப்ளக்ஸுக்கு போய், என் போட்டோவுக்கு கார்ட் ரெடி பண்ணனும், போனமுறை நீ போனதால இந்த முறை நான் போறேன். கூரியர்காரங்களுக்கு டவுட் வரக்கூடாது. ஜாக்கிரதையா இருக்கனும். வேலையை முடிச்சு நாலு நாள்தான் ஆகுது. இன்னும் நாலுநாள் போகட்டும்."

"நீ சொல்றதும் சரிதான். அந்த ஆள் பையிலருந்து பணத்தை எடுத்ததைப் பாத்ததும், ரெண்டு லட்ச ரூபா....நாம ஏன் இவ்ளோ கஷ்டப்படனும், பேசாம அடிச்சுட்டுப் போயிடலாமான்னு கூட நினைச்சேன். புடிச்சாங்கன்னா டின்னு கட்டிடுவாங்க, போலீஸ் வேற பிரிச்சி மேஞ்சுடுவாங்க...அதான் அடக்கிக்கிட்டேன். ஆனா...உன்னோட திட்டம் சூப்பர். யாராலையும் நம்மளைக் கண்டுபிடிக்க முடியாது. அந்த ஆள் செலானை ஃபில் பண்ணப்ப அவனுக்குத் தெரியாம அந்த டீடெய்ல்ஸ படிச்சு மனப்பாடம் பண்ணிக்க கஷ்டமாயிடுச்சுடா...மனுஷன் தலையை ரொம்பக் கிட்டக்க வெச்சு எழுதிக்கிட்டிருந்தான். சாளேஸ்வரம் போலருக்கு...."

" செலானைக் கட்டோட வெச்சு எழுதுனா...இம்ப்ரெஷனை வெச்சுக் கண்டுபிடிச்சிடலாம். இந்த பேங்க்காரனுங்க...தனித்தனியா கிழிச்சி எழுதுற மாதிரி கட்டித் தொங்கவிட்டுடறானுங்க...சரி சீக்கிரம் சாப்புடு. ஜகனைப் பாத்துட்டு, காம்ப்ளக்ஸுக்கு போலாம்"

இப்போதே அதிகம் பேசிவிட்டதாய் நினைத்து அவசரம் காட்டினான்.

நான்கு நாட்கள் கழித்து தில்லையரசனுக்குப் போன் வந்தது. அலுவலகம் கிளம்பிக்கொன்டிருந்த நேரம். காலை 9: 45 இருக்கும்.

"........................................."

"ஆமா, தில்லையரசன்தான் பேசறேன்."

"..........................................., .............................., ..........................."

"கரெக்ட், இதே நம்பர்தான், அட்ரஸ் கரெக்ட்...சார்......நெட் பேங்கிங்கா...எனக்கு கம்ப்யூட்டர் அவ்ளோ பரிச்சயமில்லங்க, ஏ.டி.எம்.கார்ட் இருக்கு....மத்தபடி எல்லாம் பேங்க் மூலமா நேரடியாத்தான்."

"......................................................., ................................."

"ஓ....போன் பேங்கிங்கா...இன்டிமேஷனெல்லாம் போன் மூலமாவே வந்துடுமா...."

"..............."

"ஓக்கே சார் ஆக்டிவேட் பண்ணிடுங்க. இதே நம்பர்தான்....என்னங்க.......டேட் ஆஃப் பர்த்தா...நோட் பண்ணிக்குங்க....18.5.1965...ஓக்கே சார்...ரொம்ப தேங்க்ஸ்"

"சேது.."

"என்னப்பா"

"நான் ஆபீஸ் போறேன். நீ ஒரு பதினொரு மணிக்கு ரம்யா இண்டஸ்ட்ரீஸுக்குப் போய், சண்முகநாதனைப் பாரு. அவர் கேஷ் கொடுப்பாரு, வாங்கிட்டுப் போய் டெபாசிட் பண்ணிடு"

"சரிப்பா"


ஒரு வாரம் கழிந்து, ஏ.சி.டி.சி வங்கியில் தன் பாஸ்புக்கை கொடுத்து அப்டேட் செய்து வாங்கிய தில்லையரசன் அதைப் பார்த்து அதிர்ச்சியானார். ஐம்பதாயிரம், ஐம்பதாயிரமாக மூன்று முறை யாரோ ஏ.டி.எம்மிலிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள். அட்டை என்னிடமிருக்கிறது...பிறகு எப்படி எடுத்திருப்பார்கள். வீட்டில் விசாரித்துவிட்டு மேனேஜரைப் பார்க்கலாமென்று வீட்டுக்குப் போனார்.

மனைவியும், மகனும் எடுக்கவில்லையெனச் சொன்னார்கள். குழப்பமாய் இருந்தது. ஒருவேளை பேங்கில்தான் ஏதாவது தவறோ என நினைத்துக்கொண்டு மேலாளரைப் பார்க்கப் போனார்.

பாண்டுரங்கனும் குழப்பமடைந்தார். கணினியால் தவறா என அதன் பொறுப்பாளரை அழைத்துக் கேட்டார்.

"சார் இது கம்ப்யூட்டர் மிஸ்டேக் இல்லை சார். உங்களுக்கே தெரியும், இது நாலாவது கேஸ். இவருக்கு முன்னால இது மாதிரி ஆனவங்களோட கேஸ் இன்வெஸ்டிகேஷன்ல இருக்கு. இன்னும் ஹெட் ஆபீஸ்லருந்து இன்டிமேஷன் எதுவும் வரல. இவரோடதும் அதே டைப் கேஸான்னு பாத்து சொல்லிடறேன்...ஒரு நிமிஷம் சார்"

ஒரு நிமிஷம் என்றவர் ஐந்து நிமிடம் கழித்துத்தான் வந்தார்.

"நோ டவுட்....ஸேம் டைப் தான் சார். இவரோட ஏ.டி.எம் கார்டை ப்ளாக் பண்ணியிருக்காங்க. ஆனா....புது கார்ட்ல பணம் எடுத்திருக்காங்க....ஐ....திங்க்....வீ மஸ்ட் கோ ட்டூ போலீஸ்"


தொடரும்....

Akila.R.D
23-03-2010, 09:52 AM
இந்த சம்பவத்தை பேப்பர்ல பார்த்த மாதிரி இருக்கே....

ஆனா கடைசில இது அது இல்ல, இது வேறென்னு காட்டுவீங்க...

தொடருங்கள்..

சிவா.ஜி
23-03-2010, 09:57 AM
நீங்க சொன்னது உண்மைதான் அகிலா. ஹொசூர்ல நடந்த சம்பவம். நான் கொஞ்சம் என்னோட சரக்கையும் சேர்த்து தரேன்.

aren
23-03-2010, 10:17 AM
வாவ் அதுக்குள்ளே அடுத்த பாகம் ரெடியாகிவிட்டதா. இப்போ இன்னும் சுவாரசியம் கூடுகிறது. பணத்தை அடிக்க எப்படியெல்லாம் ப்ளான் போடுகிறார்கள்.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
23-03-2010, 11:38 AM
சம்பவம் கதையாகலாம். இங்கும் ஆகின்றது. ஓகே...
ஆனால், இந்தக் கதையை முடிச்சதும் இதைத் தொடர் சம்பவங்களாக்கிடுவமா பாஸ் சிவா.ஜி...
ஐடியாவெல்லாம் பக்காவா வருதே...

*****
இந்தப் பாகமும் நன்றாகவே வந்திருக்குதுங்கோ...

சிவா.ஜி
23-03-2010, 11:44 AM
ஆமா ஆரென். முன்னாடி எழுதுனதைக் கனெக்ட் பண்றதுக்கும், அதில் விட்டுப்போன்வைகளை சேர்க்கிறதுக்கும் இந்த சேர்ப்புகள் தேவையாயிருக்கு. என்னெல்லாம் சாத்தியம் என்று யோசித்து எழுதவேண்டியிருக்கிறது.

நன்றி ஆரென்.

சிவா.ஜி
23-03-2010, 11:46 AM
அப்படி சம்பவமாக்கினா....நம்மளை சரித்திரமாக்கிடுவாங்க.....அதுவும்....குற்ற சரித்திரத்தின் பக்கங்களில்.....!!

கற்பனை மட்டுமே போதும் பாஸ்....!!

கூட வர்றதுக்கு ரொம்ப நன்றி....!!!

கலையரசி
23-03-2010, 01:40 PM
கதையில் சுவாரசியம் கூடிக்கொண்டே செல்கிறது. தொடருங்கள். கூடவே வருகிறோம்.

மதி
23-03-2010, 02:58 PM
அடடே.. கதை அப்படியே விரிகிறது... சம்பவக்கோர்வைகளாய்.. கலக்குங்கண்ணா..!

சிவா.ஜி
23-03-2010, 03:13 PM
ரொம்ப நன்றிங்க கலையரசி அவர்களே....நீங்க முதல்முறை கேட்ட பின்னூட்டக் கேள்விகளுக்கும் சேர்த்து இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறேன்...கதையோடு சேர்ந்து....

சிவா.ஜி
23-03-2010, 03:15 PM
நன்றி மதி....உங்ககிட்ட ரொம்ப பயம்....நீங்க நல்லாருக்குன்னு சொல்லனுன்னா எப்படி இருக்கனும்ன்னு தெரிஞ்சே...முதல்தடவை தப்புப் பண்ணிட்டேன்....திருத்திக்க முயற்சிக்கிறேன்...!!!

மதி
23-03-2010, 03:21 PM
நன்றி மதி....உங்ககிட்ட ரொம்ப பயம்....நீங்க நல்லாருக்குன்னு சொல்லனுன்னா எப்படி இருக்கனும்ன்னு தெரிஞ்சே...முதல்தடவை தப்புப் பண்ணிட்டேன்....திருத்திக்க முயற்சிக்கிறேன்...!!!
இது நல்லாருக்கே... சும்மாவா... டெரர்ல.. ஹாஹா :D:D:D:D

சிவா.ஜி
23-03-2010, 03:29 PM
ஆமா.....ஆமா....டெர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.....!!!!

சிவா.ஜி
23-03-2010, 04:23 PM
இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, அவரது மேசைக்கு முன்னால் இரண்டுபேர் அமர்ந்திருந்ததைப் பார்த்தார். கான்ஸ்டபிள்களின் சல்யூட்டை வாங்கிக்கொண்டே, லேசான யோசனையுடன் தன் இருக்கைக்கு அருகில் போனார். அவரைப் பார்த்ததும் அனிச்சையாய் அந்த இருவரும் எழுந்தார்கள். அதில் சஃபாரி அணிந்தவர் கையை முன்னால் நீட்டிக்கொண்டே,

“ஐயேம் பாண்டுரங்கன், ஏ.சி.டி.சி பேங்கோட பிராஞ்ச் மேனேஜர். இவர் எங்க கஸ்டமர் தில்லையரசன்.”

இருவரிடமும் கைகுலுக்கல் முடிந்ததும் மூன்றுபேரும் அமர்ந்தனர்.

“சொல்லுங்க....என்ன விஷயமா என்னைப் பாக்க வந்தீங்க”

“சார், இவரோட அக்கவுண்ட்லருந்து இந்த மூணுநாள்ல ஒன்ற லட்சரூபாவை யாரோ இவருக்குத் தெரியாம எடுத்திருக்காங்க..”

‘எப்படி சார்...இவருக்குத் தெரியாமன்னா....”

“இவரோட ஏ.டி.எம். கார்டை யூஸ் பண்ணி எடுத்திருக்காங்க.”

“உங்க கார்டை தொலைச்சிட்டீங்களா ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் குடுத்துட்டு போங்க”

இந்தமாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம்....சஃபாரி சூட் போட்டுக்கிட்டு வந்துட்டாங்க...என்று நினைத்துக்கொண்டே, அவர்களைப் பார்த்தார்.

‘சார் என்னோட கார்ட் தொலையவேயில்ல....”

“என்ன சார் சொல்றீங்க....அப்ப எப்படி கார்ட் யூஸ் பண்ணி வேற யாரோ பணம் எடுத்திருக்க முடியும்....என்ன சார் கொழப்புறீங்களே... ஆறுமுகம் டீ சொல்லுய்யா. காலையிலருந்து பச்சத்தண்ணி குடிக்கல...சொல்லுங்க*”

“சார் இவர்கிட்ட இருக்குற கார்டை எங்க பேங்குல ப்ளாக் பண்ணியிருக்காங்க..ஒரு வாரத்துக்கு முன்னாலேயே”

“வெயிட்... வெயிட்....இவர் கார்ட் இவர்கிட்ட இருக்கு...அதையும் ப்ளாக் பண்ணியிருக்காங்க...அப்புறம் எப்படி சார்”

“அதான் சார் புரியல.....இந்த மூணுநாள்ல ஒன்ற லட்ச ரூபா எடுத்திருக்கான். இதுகூட இவருக்குத் தெரியல. இன்னைக்குத்தான் தன்னோட பாஸ்புக்கை அப்டேட் பண்ணும்போது பணம் எடுத்திருக்கிறது தெரிஞ்சி என்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணாரு.”

“டீ எடுத்துக்கங்க சார்....சரி இது உங்க பேங்க்ல நடந்த மிஸ்டேக்காகூட இருக்கலாமில்லையா..”

டீயை உறிஞ்சிக்கொண்டிருந்த பாண்டுரங்கன்,வாயிலிருந்ததை அவசரமாய் விழுங்கிவிட்டு,

“இது முதல் கேஸ் இல்ல. இதுக்கு முன்னாடியே நாலு கேஸ் இந்த மாதிரி ஆகியிருக்கு. ஆனா அதெல்லாம் பேங்க் என்கொயரியில இருக்கு. அதெல்லாம் முடிய ரொம்ப நாள் ஆகும். இந்தக் கேஸ்ல வெரிஃபை பண்ணிப் பார்த்தோம் சார். எங்க சைட்ல எந்த மிஸ்டேக்கும் இல்லை. இதுக்கு மேலயும் வெயிட் பண்ணக்கூடாதுங்கறதால* நானே பர்ஸனலா இந்தக் கேஸை உங்கக்கிட்டக் கொண்டு வந்திருக்கேன். நீங்கதான் சார் உதவி செய்யனும்”

“சார் நான் ஒரு ஃபாக்டரி ஓனர். இது ஒரு தொழில்நகரம்ங்கறதால, என்னைப்போல நிறைய பேர் இங்க இருக்காங்க. எங்களை மாதிரி இருக்கிறவங்க பல்க் அமௌன்டா ட்ரேன்சேக்ஷன் நடத்துறதால அதிகமா ஏ.டி.எம் கார்டை யூஸ் பண்றதில்லை. அதைத் தெரிஞ்சிக்கிட்டு...எங்களைப்போல இருக்கறவங்கக்கிட்ட யாரோ இந்த வேலையைக் காட்டறாங்க*”

மலைச்சாமி சற்று யோசித்துவிட்டு,

“ஆக்சுவலா...இது எங்க கேஸா...இல்ல சைபர் க்ரைம் டிபார்ட்மென்ட்டுதான்னு தெரியல. எதுக்கும் கம்ப்ளெயின்ட் குடுத்துட்டு போங்க...பாக்கறேன். ”

எழுத்துமூலமாய் புகாரை வாங்கியதும், இருவரும் எழுந்து நின்று கிளம்பத்தயாராகிக்கொண்டே,

‘சார் அப்ப நாங்க போய்ட்டு வரோம். ப்ளீஸ் ட்ரை ட்டூ ஃபைண்ட் இட் ஃபாஸ்ட், இது எங்க பேங்கோட ரெப்யூடேஷன் சம்பந்தப்பட்டது”

“கண்டிப்பா சார், நீங்க போய்ட்டு வாங்க."

"தேங்யூ சார். அப்ப நாங்க* கிளம்பறோம். வாங்க* மிஸ்டர் தில்லை.”

அவர்கள் கிளம்பிப்போனதும், பச்சையப்பனைப் பார்த்து,

"பச்சையப்பன்...சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ்தானே..."

"ஆமாங்க சார்"

மேசையிலிருந்த தொலைபேசியை அருகில் இழுத்து எண்களை ஒத்தினார். ரிசீவரைக் காதுக்குக் கொண்டுபோய், தொடர்பு கிடைத்ததும், பேசி முடித்துவிட்டு,

"அப்ப இந்தக் கேஸ நாமதான் எடுத்துக்கனும். பாஸ்வேர்ட் ஹாக்கிங், இல்ல இன்டர்நெட் பேஸ்டு கிரைம்ன்னாதான் அவங்க எடுத்துக்குவாங்களாம். சரி பார்ப்போம்"

அப்போதைக்கு அந்தக் கேஸை தூர வைத்துவிட்டு தன் அடுத்த வேலையைப் பார்க்கத்தொடங்கினார்.இரண்டுநாள் கழித்து, பாண்டுரங்கனிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை எடுத்த இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,

"ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர் ஸ்பீக்கிங்..."

என்றதும்,

"குட்மார்னிங் சார். நான் ஏ.சி.டி.சி. பேங்க் மேனேஜர் பாண்டுரங்கன் பேசறேன்.."

சற்றுத் தயங்கிவிட்டு, நினைவு வந்தவராக...

"ஓ...மிஸ்டர் பாண்டுரங்கன்....சொல்லுங்க சார்...."

"சார், ஏதாவது டெவலெப்மென்ட் இருக்குங்களா?"

தான் இதுவரை அந்தக் கேஸையே தொடவில்லை என்பது நினைவுக்கு வந்தாலும், புகார் கொடுத்த இரண்டு நாட்களுக்குள்லேயே...ஏதாவது தெரிந்ததா...என்றக் கேள்விக்கு சற்றே எரிச்சல் வந்தது. இருந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல்,

"சார், இன்ஃபேக்ட்....நாங்க இன்னும் இன்வெஸ்டிகேஷனே தொடங்கல....சீக்கிரம் ஆரம்பிச்சுடறோம். டோன்ட் வொர்ரி சார்....கண்டிப்பா ரொம்ப சீக்கிரம் பிடிச்சுடலாம்"

"சாரி ஃபார் த டிஸ்டர்பென்ஸ் சார்.....ஹெச்.பி.ஹெச்.டி பேங்குலயும் இதே மாதிரி நடந்திருக்கு சார். அந்த பிராஞ்ச் மேனேஜர் என்னோட நண்பர். அவர் சொல்லித்தான் தெரியும். இது இப்படியே கன்டினியூ ஆகாம...அந்தக் கல்பிரிட்டை சீக்கிரமா பிடிக்கனும் சார்.....ப்ளீஸ்..."

"ஓ மை காட்...ஓக்கே சார். யூ டோன்ட் வொர்ரி. நான் இன்னைக்கே விசாரனையை ஆரம்பிச்சுடறேன்."

சொல்லிவிட்டு, நாற்காலியில் பின்புறமாக நன்றாக சாய்ந்துகொண்டு, கால்களை நீட்டி, கண்களை மூடி அமர்ந்துகொண்டார். எங்கிருந்து தொடங்குவது.....முதலில் அந்த வங்கியின் நடைமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள* வேண்டும், ஒரு கார்டு இருக்கும்போதே இன்னொரு கார்ட் வாங்க முடியுமா, அதை யார் வேண்டுமானாலும் வாங்கலாமா.... இதையெல்லாம் தெரிந்துகொள்ள* வேண்டும். அவரிடமிருந்தே தொடங்கலாம். சுறு சுறுப்பாய் எழுந்தார். தொப்பியை மாட்டிக்கொண்டு கிளம்பினார்.


ஏ.சி.டி.சி. வங்கியின் அந்தக் கிளை பரபரப்பான தெருவில் புதியக் கட்டித்தில் இருந்தது.உள்ளே நுழையும்போதே அதன் பணக்காரத்தன்மை ஜில்லென்று முகத்திலறைந்தது.கிரனைட் கற்களின் வழுவழுப்பில் இருந்த தரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நாற்காலிகள், கண்ணாடித் தடுப்பில் சின்னச் சின்ன அறைகள் என வளப்பம் நிறைந்திருந்தது.இவர்களை தன் அறையிலிருந்தேப் பார்த்த பாண்டுரங்கன், அவசரமாய் எழுந்து கிட்டத்தட்ட ஓடி வந்தார்.

"வாங்க சார். இப்பதான்...."

"ஆமா, உங்கக்கிட்ட பேசின உடனே நான் இந்தக் கேஸ்ல இறங்கிட்டேன். எனக்குக் கொஞ்சம் விவரங்கள் தேவைப்படுது. உங்க ரூமுக்குப் போயிடலாமா.."

"வித் ப்ளஷர்....வாங்க சார்..."

"இப்ப....ஒருத்தரோட ஏ.டி.எம் கார்ட் தொலைஞ்சா உங்ககிட்டதான் வந்தாகனுமா...இல்ல கஸ்டமரே நேரடியா கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் பண்ணிக் கம்ப்ளெயிண்ட் கொடுக்க முடியுமா?”

‘கஸ்டமரே நேரடியா அவங்களைக் கூப்பிட்டு சொல்லமுடியும் சார். இன்ஃபேக்ட்..அங்க சொல்லியே ப்ளாக்கும் பண்ண முடியும், புதுக் கார்ட்டுக்கும் ரெக்வெஸ்ட் பண்ண முடியும்”

“அப்ப வெரிஃபிகேஷனுக்கு என்னெல்லாம் கேப்பாங்க...”

“கஸ்டமரோட அக்கவுண்ட் நம்பர், எந்தப் பேர்ல அக்கவுண்ட் இருக்கு, அட்ரஸ்...அப்புறம் டேட் ஆஃப் பர்த்”

"ஓக்கே, உங்க கஸ்டமரோட இந்த டீடெய்லையெல்லாம், உங்க பேங்குல வேலை செய்யுற யாரோ ஒருத்தர்கூட, வெளியாளுக்குக் கொடுக்க முடியுமில்லையா?"

"முடியும் சார்...ஆனா...அப்படி யாரும் இங்க இல்லை சார். எல்லாமே டீஸன்டானவங்க..."

"உங்களைப் பொருத்தவரைக்கும் உங்க ஸ்டாஃப் எல்லாரும் நல்லவங்கதான் சார். ஆனா போலீஸ் எல்லாரையும் சந்தேகத்தோடத்தான் பாக்க வேண்டியிருக்கு. நான் உங்க ஸ்டாஃப் எல்லாரையும் விசாரிக்கனும். ஆனா, அவங்களை அதிகமா சங்கட*ப்படுத்தாம, ஈவினிங் கஸ்டமர்ங்க இல்லாத டயத்துல வரேன். அதுக்கு முன்னாடி அவங்கக்கிட்ட சொல்லிடுங்க. ஆனா கேஸோட டீடெய்ல் எதுவும் சொல்லாதீங்க. போலீஸ் என்கொயரி இருக்குன்னு மட்டும் சொல்லுங்க. அப்ப நான் ஈவினிங் வரேன்"

"ஓக்கே சார்."

வெளியே வந்தவர், தன் சட்டைப் பையிலிருந்த தில்லையரசனின் விசிட்டிங் கார்டை எடுத்து, அவரது அலைபேசி எண்ணுக்கு அழைத்தார்.

"சார், நான் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி. உங்கள உடனே பாக்க முடியுமா?....ஓக்கே நானே அங்க வரேன்"அங்கே என்பது அந்தத் தொழிற்பேட்டையில், சின்னச் சின்னதாய் இருந்த பல சிறு தொழிற்கூடங்களில் ஒன்று. தன் மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு நிமிர்ந்தவரின் பார்வையில், வாசலிலேயேக் காத்துக்கொண்டிருந்த தில்லையரசன் தெரிந்தார். லேசாகச் சிரித்துக்கொண்டே அவரை நோக்கி நடந்தார்.

அங்கு நடந்த விசாரணையின் முக்கியச் சுருக்கம்.....“ஓக்கே சார்...கடந்த பத்துநாள்ல...நீங்க உங்க பேங்க் சீக்ரெட் டேட்டாவை யார்கிட்டயாவது சொன்னீங்களா?”

“பர்ஸனலா யார்கிட்டயும் சொல்லல சார். அப்படி சொல்லவும் மாட்டேன். ஆனா ஒரு வாரத்துக்கு முன்னால இதே பேங்க்லருந்து எனக்கு கஸ்டமர் சர்வீஸ்லருந்து ஒரு போன் வந்தது. போன் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்யனுன்னு சொல்லிட்டு, என்னோட அக்கவுண்ட் நம்பரையும், என்னோட வீட்டு அட்ரஸையும் சொல்லி கரெக்ட்டான்னு கேட்டாங்க. ஆமான்னேன். அப்புறமா, உங்க டேட் ஆஃப் பர்த்தைச் சொல்லுங்கன்னு கேட்டாங்க சொன்னேன். சரின்னு சொல்லிட்டு வெச்சுட்டாங்க. இதுல வித்தியாசமா எதுவும் எனக்குத் தெரியல. அதான் பேசாம இருந்துட்டேன்.”

“ஐ ஸீ....அந்த நம்பர் இப்ப உங்க போன்ல இருக்குமில்ல...பாத்தா தெரியுமா?”

சங்கடமாக நெளிந்துகொண்டே....

“சார் நான் பிஸினெஸ்ல இருக்கறதுனால...ஒரு நாளைக்கு நிறைய போன் வரும். அதனால மெமரிக் கெப்பாஸிட்டியைவிட ஜாஸ்தியாயிடும். ஸோ...இப்ப அந்த நம்பர் இருக்குமான்னு தெரியல...இருந்தாலும் கரெக்ட்டா அதான்னு சொல்ல முடியுமான்னு தெரியல சார்.”

“டோண்ட் வொர்ரி சார். என்னைக்கு அந்த போன் வந்ததுன்னு சொல்ல முடியுமா...”

“அது தெரியும் சார். போன சாட்டர்டே...காலையில் ஆஃபீஸுக்குக் கிளம்பிகிட்டு இருந்தப்ப வந்தது.”

“வெரிகுட்,நார்மலா எத்தனை மணிக்கு நீங்க ஆஃபீஸுக்கு கிளம்புவீங்க”

“ஒம்பதரை மணியிலருந்து பத்துக்குள்ள*”

“உங்க போனைக் கொஞ்சம் குடுங்க”

போன் கைக்கு வந்ததும், log ஆப்ஷனுக்குப் போய் அனைத்து அழைப்புகள், குறுஞ்செய்திகளின் தேதி, நேரம்வாரியாகப் பதிவாகியிருந்தவைகளில் தேடி சனிக்கிழமை ஒன்பதரையிலிருந்து, பத்து மணிக்குள் வந்த அழைப்புகளின் எண்களைக் கண்டு பிடித்தார். அனைத்தையும் ஒரு பேப்பரில் எழுதினார். மொத்தம் நான்கு எண்கள்தான் இருந்தன. அதில் இரண்டு பெயர்களுடனும், இரண்டு எண்களாகவும் இருந்தது. அதைக் காட்டியவுடன், தில்லையரசன் சரியான எண்ணைச் சொல்லிவிட்டார். உடனே அவரைப் பார்த்து,

“இப்பதான் மேனேஜரைப் பாத்துட்டு வரேன். உங்கபேர்ல, உங்கக் கார்டை ப்ளாக் பண்ணிட்டு, புதுக் கார்ட்க்கு ரெக்வெஸ்ட் பண்ணத் தேவையான டேட்டாவைக் கலக்ட் பண்ணத்தான் அந்தக் கிரிமினல் உங்களுக்குப் போன் பண்ணியிருக்கான். ஆனா...டேட் ஆஃப் பர்த்தைத் தவிர மீதி எல்லா டீடெய்லும் அவன்கிட்ட இருந்திருக்கு...அது எப்படி அவன்கிட்ட கிடைச்சுதுன்னு கண்டுபிடிக்கனும். ஓக்கே மிஸ்டர் தில்லையரசன். தேங்க்யூ ஃபார் தி கோ ஆப்பரேஷன். மறுபடியும் பார்க்கலாம்”


கிடைத்த போன் நம்பருடன் வீட்டுக்கு வந்தார்.தொடரும்.....

jayashankar
23-03-2010, 04:27 PM
ஹும் முதல் இரண்டு அத்தியாயங்கள் உங்கள் கதையில் இல்லவேயில்லை.

மூன்றாவது அத்தியாயத்தில்தான் உங்களுடைய கதையை தொட்டிருக்கின்றீர்கள்.

விசாரணை இன்னும் இரண்டு மூன்று அத்தியாயங்களை கடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மனதில் ஏற்படுகின்றது.

தொடருங்க.....

சிவா.ஜி
23-03-2010, 04:35 PM
ஆமா ஜெய். உண்மையிலேயே நான் முதல் முறை எழுதும்போது, இதையெல்லாம் விளக்கமாய் சொல்லத்தான் நினைத்தேன். சிறுகதையாக்கும் எண்ணத்தில் அரைகுறையாகிவிட்டது.

இந்தமுறை கொஞ்சம் விளக்கமாய்க் கொடுக்க எண்ணியிருக்கிறேன்.

aren
23-03-2010, 04:52 PM
பழைய கதை இதில்தான் ஆரம்பித்தது. ஓக்கே, நன்றாகவே ஜெல் ஆகியிருக்கிறது. அவசரப்படாமல் மெதுவாகவே கதையை நகர்த்துங்கள். கதை இதுவரை சூப்பராக இருக்கிறது, தொடருங்கள்.

சிவா.ஜி
23-03-2010, 04:54 PM
உங்கள் ஊக்கத்திற்கும், உடன் வருவதற்கும் மிக்க நன்றி ஆரென்.

jayashankar
23-03-2010, 04:56 PM
நேரம் எடுத்து சிறந்த படைப்பினைத் தாருங்கள் சிவா.....

சிறுகதை என்பதால் சில/சிறு தவறுகளை கருத்தில் கொள்ளாமல் விட்டு விடலாம். ஏனெனில் உங்களுக்கு பிரச்சினை வந்ததே இந்தக் கரு சிறுகதைக்கான கருவல்ல அதனால்தான்.

எனவே, தொடர்கதையில் கதைக்களத்தை நன்றாக வடிவமைக்க அத்தியாயங்கள் சுலபமாக கிடைக்கும். எனவே, நன்றாக நேரமெடுத்தே அத்தியாயங்களைப் பதியுங்கள்.

govindh
23-03-2010, 05:48 PM
"பொறி"...குறுந்தொடராகப் படிக்கும் போது..
விறுவிறுப்பு கூடுகிறது...!
தொடருங்கள்...அசத்துங்கள்...

அக்னி
23-03-2010, 07:11 PM
மிகவும் சவாலாகத்தான் நினைச்சிருக்கிறீங்க போலிருக்கே சிவா.ஜி...

இல்லையென்றால்,
பின்னாடி நின்று விவரம் சேகரித்ததைப் பற்றி, முன்னாடியே நமக்குச் சொல்லிவிட்டு,
மலைச்சாமிக்குச் சொல்லாம விட்டிருப்பீங்களா...

பார்ப்போம்.
எப்படி மலைச்சாமி அதனைக் கண்டறியப்போகின்றார் என்று...

சிவா.ஜி
24-03-2010, 05:13 AM
உண்மைதான் ஜெய். சிறுகதைக்குள் அனைத்தையும் அடக்க முடியாமல்தான்....அப்படியாகிவிட்டது. இந்த பாகத்தை நான் உடனே கொடுத்ததற்குக் காரணம்...ஏற்கனவே எழுதி வைத்திருந்ததை மெர்ஜ் பண்ணினால் போதுமென்பதாலேயே. ஆனால் அடுத்த பாகம் யோசிக்க வேண்டும்.

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
24-03-2010, 05:13 AM
ரொம்ப நன்றி கோவிந்த்.

சிவா.ஜி
24-03-2010, 05:15 AM
ஆமா...அக்னி, பின்னாலிருந்து குறிப்பெடுத்தது மலைச்சாமிக்கு எப்படித் தெரியும்....? அவர் இப்போதுதானே விசாரனையிலேயே இறங்கியிருக்கிறார். அவராகவே கண்டுபிடிக்கட்டும்.

உடன் வருவதற்கு மிக்க நன்றி.

இனியவள்
24-03-2010, 05:46 AM
அழகிய ஆரம்பம் ஆர்ப்பட்டம் இல்லாமல் பயணிக்கிறது

வாழ்த்துக்கள் சிவா அண்ணா..

உங்கள் அடுத்த பகுதியை ஆர்வத்தோடு எதிர் பார்க்கும் இனியவள்

சிவா.ஜி
24-03-2010, 06:23 AM
ரொம்ப நன்றிம்மா. இனியவளின் மறுபிரவேசம்....மகிழ்ச்சிக்குரியது. தொடர்ந்து வாருங்கள் தங்கையே.

மதி
24-03-2010, 09:28 AM
சபாஷ்... சரியான களம்... அசத்தல் வேகத்தில்.. கொண்டு போறீங்க..உங்க கதைகளை தொகுத்து கொஞ்சம் மெருகேற்றி.. நீங்கள் புத்தகமாக வெளியிடலாம்.

சிவா.ஜி
24-03-2010, 09:40 AM
ரொம்ப நன்றி மதி. இன்னும் எனக்கு அந்த தகுதி வந்ததா நினைக்கல. எனக்குத் திருப்தி வரும்போது முயற்சி செய்கிறேன்.... இப்போதைக்கு....தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறேன்....உங்கள் மதிப்பெண்களை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்.

கலையரசி
24-03-2010, 02:59 PM
இப்போ படித்த பகுதி ஏற்கெனவே படித்தது. குறுந்தொடரான பின் தேவையான விவரங்களுடன் கதை சுவாரசியமாகப் பயணிக்கிறது. தொடருங்கள் சிவா.ஜி. அவர்களே!

சிவா.ஜி
24-03-2010, 03:10 PM
மிக்க நன்றி கலையரசி அவர்களே....இன்னும் சில விவரங்களுடன் கொடுக்கலாமென்றிருக்கிறேன்.

jayashankar
24-03-2010, 03:26 PM
ரொம்ப நன்றி மதி. இன்னும் எனக்கு அந்த தகுதி வந்ததா நினைக்கல. எனக்குத் திருப்தி வரும்போது முயற்சி செய்கிறேன்.... இப்போதைக்கு....தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறேன்....உங்கள் மதிப்பெண்களை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்.

நீங்க கதை எழுதுங்க படிக்குறோம்.

ஆனா இப்படி கதை எல்லாம் உடக்கூடாது.

நாங்க புத்தகமா போடுங்கன்னா, சரின்னு சொல்லனும். அப்புறம் சொன்னப்டி செய்யணும்.

சரிங்களா....

சிவா.ஜி
24-03-2010, 03:43 PM
நீங்க சொல்லி நான் கேக்காம இருப்பனா....போட்டுருவோம்....!!!

jayashankar
24-03-2010, 04:04 PM
போடுங்க போடுங்க...

போட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டே வருகின்றது. இன்னும் 10 நாட்கள்தான்.

மதி
24-03-2010, 04:31 PM
போடுங்க போடுங்க...

போட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டே வருகின்றது. இன்னும் 10 நாட்கள்தான்.
இதென்ன கணக்கு..!!!

jayashankar
24-03-2010, 04:44 PM
ஹி ஹி அது வேறவொன்னுமில்லீங்க....

தலைவர் இன்னும் பத்து நாட்களில் தாயகம் வருகின்றார் விடுமுறையில் அதான்.

இப்ப இருக்குற ஊருல, இப்படி கதை எழுதத்தான் முடியும். புத்தகமாக போட வேண்டுமென்றால் அதற்கு நம்ம ஊருதான் சரி.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூருப் போலாகுமா?

மதி
24-03-2010, 05:00 PM
சொல்லவே இல்லை.... அண்ணா வழக்கம் போல.. பெங்களூரிலா தரையிறங்க போறீங்க...???

jayashankar
24-03-2010, 05:34 PM
ஹி ஹி தண்டோரா போட நாங்க இருக்கோமில்ல.

அப்புறம் அவரு வேற தனியா சொல்லணுமா என்ன?

வேற வழி பெங்களூருவில்தான் இறங்குவாரு.

ஜனகன்
24-03-2010, 10:54 PM
கதையை விரிவான கோணத்தில் படிக்கும் போது, அருமையாக உள்ளது.
எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கதை நன்று .
அதிகம் காத்திருக் வைக்க வேண்டாம். தொடருங்கள் சிவா.

கீதம்
24-03-2010, 11:33 PM
மிகுந்த சுவாரசியத்துடன் கதையைக் கொண்டு செல்லத் துவங்கிவிட்டீர்கள். எதிர்பார்ப்புகளுடன் நாங்களும் மலைச்சாமியைப் பின் தொடர்கிறோம்.
வாசகர்கள் கருத்துக்கு மதிப்பளித்து, சிரமம் பார்க்காது கதையை விரிவாக்கியமைக்கு நன்றி.

சிவா.ஜி
25-03-2010, 05:38 AM
மிக்க நன்றி ஜனகன். அடுத்த அத்தியாயத்தை விரைவில் பதிகிறேன்.

சிவா.ஜி
25-03-2010, 05:40 AM
நன்றி கீதம் அவர்களே. இதில் சிரமம் இல்லை. எழுத்தின் தரத்தை உயர்த்திக்கொள்ள நீங்களனைவரும் அளிக்கும் சந்தர்ப்பம் இது. அனைவருக்கும் என் நன்றிகள்.

samuthraselvam
25-03-2010, 09:14 AM
இவ்வளவு நாளாய் நான் சரியாக மன்றம் வராமல் இருந்ததினால் உடனே பாராட்ட முடியவில்லை... இன்று தான் மூன்று அத்தியாயங்களையும் முழுதாகப் படித்தேன்... அருமை அண்ணா....

நூதன முறையில் கொள்ளை அடிப்பதைப் பற்றிய கதை எழுதி, அனைவரையும் விழிப்படைய வைத்துவிட்டீர்கள்.....

மேலும் வளர வாழ்த்துக்கள்....

சிவா.ஜி
25-03-2010, 09:30 AM
ஆமாம்மா....கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்கோ....நாம நினைச்சுப் பாக்க முடியாத ரூட்டுலயெல்லாம் யோசிச்சு திருடாறாங்க.

பாராட்டுக்கு ரொம்ப நன்றி லீலும்மா.

(நெட் பிரச்சனை சரியாயிடிச்சா....இனி மன்றத்துக்கு நிறைய நேரம் ஒதுக்கனும்....ஓக்கேவா...!!)

samuthraselvam
25-03-2010, 09:53 AM
ஆமாம்மா....கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்கோ....நாம நினைச்சுப் பாக்க முடியாத ரூட்டுலயெல்லாம் யோசிச்சு திருடாறாங்க.

பாராட்டுக்கு ரொம்ப நன்றி லீலும்மா.

(நெட் பிரச்சனை சரியாயிடிச்சா....இனி மன்றத்துக்கு நிறைய நேரம் ஒதுக்கனும்....ஓக்கேவா...!!)

ஆமாண்ணா..... திருட்டை கண்டுபிடிக்கிறவங்களை விட திருட்டை என்னென்ன முறையில் செய்தால், எப்படி கண்டு பிடிக்க முடியாது என்று யோசித்து செய்றவங்க கொஞ்சம் அறிவாளிகள் தான்... இவங்க இந்த அறிவை நல்ல வழியில் பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்....

நெட் பிரச்சனை இன்னும் கொஞ்சம் இருக்கும்..... போகப் போக சரி பண்ணிடுவாங்க....

சிவா.ஜி
25-03-2010, 01:10 PM
அத்தியாயம்:4


வீட்டுக்கு வந்த சற்று நேரத்துக்கெல்லாம், இணைக் கண்காணிப்பாளரின் அழைப்பு வந்தது. உடனடியாக அவரை வந்து அவரது அலுவலகத்தில் சந்திக்கும்படி சொன்னார். மலைச்சாமி மதிய சாப்பாட்டை மறந்தார். அவருடைய மனைவியின் அலு(ழை)ப்புக் குரலுக்கு புறமுதுகு காட்டி, நடையின் வேகத்தைக் கூட்டி, வாகனத்தை விரைந்து ஓட்டி.....விறைப்பான சல்யூட்டுடன் அடுத்த பதினைந்தாவது நிமிடம் அதிகாரியின் முன்னால் நின்றார்.

"வாங்க மலைச்சாமி. ஒங்களோட இந்த டெடிகேஷந்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. கூப்ட்ட பதினைஞ்சி நிமிஷத்துல் என் முன்னால நிக்கறீங்க பாருங்க. வெல்டன்.....உக்காருங்க"

"பரவால்ல சார்...சொல்லுங்க..."

"நோ ஃபார்மாலிட்டீஸ். உங்க வயசுக்கும், சர்வீஸுக்கும் கொடுக்கிற மரியாதையை ஏத்துக்குங்க...ப்ளீஸ் டேக் யுவர் ஸீட்"

தயக்கமாய் அமர்ந்ததும், அதிகாரியின் முகம் நோக்கினார். துடிப்பான இளைஞன். ஐ.பி.எஸ் முடித்துவிட்டு நேரடியாக துறையில் சேர்ந்திருந்தார் அந்த அதிகாரி. போலீஸ் நுணுக்கங்களை மலைச்சாமியிடம் கற்றுக்கொண்டவர். அந்த மரியாதையும் அவருக்கிருந்தது.

"அந்த ஏ.டி.எம். கேஸப்பத்தி கொஞ்சம் முன்னாலத்தான் எஸ்பி போன் பண்ணிச் சொன்னார். நம்ம ஏரியா மினிஸ்டருக்கு அந்த பேங்குல பங்கு இருக்கு போலருக்கு. பேங்கோட ரெப்யூட்டேஷன் கெடக்கூடாதுன்னு, சீக்கிரமா இந்தக் கேஸை கண்டுபிடிக்கச் சொல்லி ப்ரெஷர் கொடுக்கிறாராம்."

மலைச்சாமி நிமிர்ந்து உட்கார்ந்தார்.

"நீங்க இப்போதைக்கு வேற எந்தக் கேஸையும் பாக்காதீங்க. உங்கக்கூட ரெண்டுபேரை வெச்சுக்குங்க. ட்ரை ட்டூ ஃபைன்ட் இட் ஃபாஸ்ட். இன்னையிலருந்து நீங்க ஸ்டேஷன் போக வேண்டாம். சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் டெம்ப்ரவரி சார்ஜ் எடுத்துக்குவார். அப்பப்ப எனக்கு அப்டேட் பண்ணிக்கிட்டிருங்க. ஆல் தி பெஸ்ட்"

சல்யூட்டுக்குப் பிறகு வெளியே வந்தவர், நேராக ஸ்டேஷனுக்குப் போய், பச்சையப்பனையும் மற்றொரு கான்ஸ்டபிள் ரத்தினசாமியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, முத்துக்குமாரிடம் விவரங்களைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

தனக்குக் கிடைத்த அந்த போன் நம்பரை எடுத்துக் கொண்டு அந்த அலைபேசி நிறுவனத்தின் முகவர் அலுவலகத்துக்குப் போய் விசாரித்ததில், அதை வாங்கியவரின் முகவரி கிடைத்தது. அந்த முகவரியில் விசாரித்தால், தன் கைப்பேசி சிம்கார்டுடன் தொலைந்துபோனதாய் சொன்னார். தொலைந்துபோயிருக்காது திருடு போயிருக்கும் என நினைத்துக் கொண்டே அந்த திருடனின் சாமர்த்தியத்தை வியந்தார். புதிது, புதிதாய் சிம் கார்ட் வாங்குவதற்குப் பதிலாக, திருட்டு போனின் கார்டிலிருந்து ஒரே ஒரு முறை பேசிவிட்டு அதை அழித்துவிடும் முறையை கையாண்டிருக்கிறான். புத்திசாலிதான். அவனைக் கண்டுபிடிக்க நிறைய அலையவேண்டியிருக்குமென நினைத்துக் கொண்டார்.

அடுத்த நாள் காலையில், தன் மனைவியிடம்,

"பாப்பாவோட அக்கவுன்ட்ல பணம் போடனும், நான் பேங்குக்குப் போயிட்டு கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கு. மதியம் சாப்பாட்டுக்கு வரமாட்டேன்...ரவி எங்க காணோம்...."

"அவன் காலையிலேயே பெங்களூர் போயிட்டான். ஏதோ இன்டர்வியூவாம். நீங்க வீட்ல இருந்தாத்தானே இதெல்லாம் தெரியும். என்ன போலீஸ் பொழப்போ...வீட்ல என்ன நடக்குது, யார் என்ன செய்யறாங்கன்னுகூட தெரியாம ஓடிக்கிட்டிருக்கீங்க...அப்படியும் இதே வாடகை வீடுதான். உங்க ரேங்குல இருக்கிறவங்கெல்லாம் லட்சக்கணக்குல செலவு பண்ணி வீடு கட்டியிருக்காங்க...நீங்கதான் நேர்மை, சத்தியம்ன்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க..."

"இதப்பாரு ரமா...இதப்பத்தி இத்தனை வருஷத்துல ஆயிரம் தடவை பேசியிருப்போம். இனியும் பேசினாலும் என்னோட கொள்கையை நான் மாத்திக்கப் போறதில்ல. எனக்குக் கிடைக்கிற சம்பளத்துலதான் நம்மப் பையனையும் எஞ்சினியரிங் படிக்க வெச்சோம், பொண்ணு இப்ப காலேஜ்ல படிச்சிக்கிட்டிருக்கா....அந்தப் படிப்புதான் அவங்களுக்கு சொத்து. லஞ்சம் வாங்கி லட்ச லட்சமா சேத்து...பிள்ளைங்க மட்டும் தறுதலையாப் போன பல போலீஸ் குடும்பத்த நாம பாத்திருக்கோம். அந்த மாதிரி ஒரு நிலைமை நமக்கும் தேவையா. நீ என்ன சொன்னாலும் எனக்கு நேர்மைதான் முக்கியம். சரி...நான் கிளம்பறேன்"

இந்த வசனத்தைக் கேட்டுக் கேட்டு அலுத்தவளாக ரமா சலிப்போடு அமர்ந்தாள்.

மலைச்சாமியின் மகள் வெளியூரில் விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படித்து வருகிறாள். அவளுக்கு மாதாமாதம் அவளது கணக்கில் இங்கே பணத்தைப் போட்டுவிடுவார். அவளுக்குத் தேவைப்படும் பொழுது அதிலிருந்து அவள் அங்கிருந்து எடுத்துக்கொள்வாள்.

அந்தப் பணத்தைப் போடுவதற்காக வங்கிக்கு வந்தவர், செலானை எடுத்து, நிரப்பத்தொடங்கினார். போலீஸ் உடையில் இல்லாமல், சாதாரண உடையிலிருந்ததால் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. அப்போது அவருக்கு அடுத்து அதே போல செலானை நிரப்பிக்கொண்டிருந்தவர், பின்னாலிருந்து பார்க்கும் ஒருவரைப் பார்த்து,

"சார் ஏன் சார் எட்டி எட்டி பாத்துக்கிட்டிருக்கீங்க....டிஸ்டர்ப் பண்ணாதீங்க..."

"ஹி.....ஹி...அதில்ல சார்....ஃபில் பண்ணத் தெரியாது. அதான் நீங்க எங்கெங்க என்ன எழுதுறீங்கன்னுப் பாத்து அதே மாதிரி எழுதறேன்...தப்பா நினைச்சுக்காதீங்க சார்...சாரி..."

அந்த திருடனுக்கு மற்ற* விவரங்கள் எப்படிக் கிடைத்திருக்குமென்று இப்போது மலைச்சாமிக்குத் தெரிந்தது. அங்கிருந்து நேராக பாண்டுரங்கனைப் பார்க்கப் போனார்.

"வாங்க சார், மினிஸ்டர்...."

அவர் இழுத்ததை துண்டித்துவிட்டு,

"டி.எஸ்.பி சொன்னர் சார். நான் இப்ப அந்த விஷயமாத்தான் விசாரனையைத் தொடங்கியிருக்கேன். உங்க பேங்குலருந்து ட்யூப்ளிகேட் கார்ட் கூரியர்லதான அனுப்புவாங்க..அது எந்தக் கூரியர் சர்வீஸ்ன்னு சொல்ல முடியுமா?"

"ப்ரொஃபெஷனல் கூரியர் சார். ஆனா.....இந்த விவகாரங்களுக்கு அப்புறமா...இப்ப நேரடியா அப்ளிகேன்ட்டுக்கு அனுப்பாம எங்க பிராஞ்சுக்கே அனுப்பற முடிவுக்கு வந்துட்டாங்க..."

"நோ...நோ...மிஸ்டர் பாண்டுரங்கன். நல்ல முடிவுதான். ஆனா உடனே இம்ளிமென்ட் பண்ண வேண்டான்னு சொல்லுங்க. ஏன்னா நமக்கு இருக்கிற ஒரே சான்ஸ் அந்தக் கூரியர்தான். அதை வெச்சுத்தான் அவனை ட்ராப்(Trap) பண்ண முடியும். ரொம்ப சீக்கிரமாவே நாங்க அவனைப் பிடிச்சுடுவோம். அதுக்கப்புறமா இம்ப்ளிமென்ட் பண்ணச் சொல்லுங்க. இந்த விஷயத்துல உங்க ஹெட் ஆஃபீஸோட ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியம் தேவை."

"ஓ...ஐ...ஸீ....ஓக்கே சார். நான் உடனடியா ஹெட் ஆஃபீஸுக்கு தெரிவிச்சுடறேன். "

"தேங்க்யூ சார். கூடிய சீக்கிரம் அவனைப் பிடிச்சிட்டு வந்து பாக்கறேன்."

நேராக அந்தக் கூரியர் ஆபீஸுக்குப் போனார்.


போலீஸ் விசாரணை என்றதும் சற்றே பதட்டம் காட்டிய அந்தக் கிளையின் மேலாளர், அடுத்து அவர் சொன்ன மோசடிப் பற்றியும், அதை ஏன் அந்தக் கூரியர் சர்வீஸின் ஆட்களில் யாரோ ஒருவர் செய்திருக்கக் கூடாது என்ற கேள்விக்கும், கொஞ்சங்கூட அலட்டிக்கொள்ளவேயில்லை. அவரது நிறுவனத்தின் நம்பகத்தன்மையில் அவருக்கிருந்த நம்பிக்கை அந்தத் தைரியத்தைக் கொடுத்திருந்தது.

“சார் நாங்க ஒரு ரெப்யூட்டெட் கம்பெனி. இங்க நீங்க சொல்றமாதிரி தவறு நடக்க சான்ஸே இல்லை. முருகேஷைக் கூப்புடுப்பா...சார் நீங்க சொல்ற அட்ரஸ் இருக்கிற ஏரியாவுக்கு டெலிவரி செய்யறவர்தான் இந்த முருகேஷ். ரெண்டு வருஷமா இங்கதான் வேலை செஞ்சிக்கிட்டிருக்கார். இவர் மட்டுமில்ல, இங்க இருக்கிற என்னோட எல்லா ஸ்டாஃபுமே ரொம்ப நாளா இங்க இருக்கிறவங்க. ரொம்ப நம்பிக்கையானவங்க. உங்களுக்கு வேணுன்னா இவர்கிட்டயே விசாரிச்சுக்குங்க”

“தேங்க்யூ. முருகேஷ்...இந்த அட்ரஸ் தெரியுமா உங்களுக்கு?”

“தெரியும்சார். நிறைய கூரியர் வரும். தில்லையரசன் சார் ரொம்ப நல்லமாதிரி. டிப்ஸெல்லாம் குடுப்பாரு. ஆனா...எங்க கம்பெனி ரூல்ஸ்படி வாங்கக்கூடாதுன்னு சொல்லி வேண்டான்னுட்டு வந்துடுவேன்.”

“சமீபத்துல இவர் பேருக்கு பேங்க்லருந்து ஏதாவது கூரியர் வந்துச்சா?”

“இல்ல சார். பதினஞ்சு நாளைக்கு முன்னால ஒரு கூரியர் வந்துச்சி. அதுக்கப்புறமா வரலை.”

“இல்லையே வந்திருக்கனுமே. மேனேஜர் சார்...வர்ற எல்லா கூரியரையும் ரெஜிஸ்டர்ல மெயிண்டெயின் பண்றீங்க இல்ல?”

“ஷ்யூர் சார். ஒவ்வொரு ஏரியாவையும் பிரிச்சி, அந்தந்த ஏரியாவுக்கு வந்திருக்கிற கூரியரோட டீடெய்ல்ஸ அந்த ஏரியா ரிஜிஸ்டர்ல எழுதி, அதுல டெலிவரியானதும் கையெழுத்து வாங்கிட்டு வரச் சொல்வோம். உங்களுக்கே தெரியுமில்ல சார்”

“சரி, முருகேஷ் அப்ப உங்க ஏரியாவோட ரெஜிஸ்டரைக் கொண்டு வாங்க”

“சார் இந்தாங்க. இதுல தேதிவாரியா இருக்கு.”

வாங்கி, போன சனிக்கிழமையிலிருந்து ஐந்து நாட்களுக்கான லிஸ்டை வரிசையாய் பார்த்துக்கொண்டு வந்தார். தில்லையரசனின் பெயர் காணவில்லை.

ஆயாசமாய் அதை திருப்பிக் கொடுத்துவிட்டு, நாற்காலியில் அமர்ந்தார்.

அவரையே பார்த்துக்கொண்டிருந்த மேலாளர்,

‘சார்...சில சமயம் கஸ்டமர்ங்க இங்கேயே வந்து நேரடியா வாங்கிட்டுப் போயிடுவாங்க. ஏரியா ரிஜிஸ்டர்ல பதிவு பண்றதுக்கு முன்னால வாங்கிட்டுப் போயிட்டாங்கன்னா...அது அந்த ரெஜிஸ்டர்ல இருக்காது. ஆனா.. கம்ப்யூட்டர் டேட்டாவுல இருக்கும். இருங்க பாத்து சொல்றேன்”


"நானும் பாக்க*றேன் வாங்க*"

சற்று நேர தட்டச்சு சத்தத்துக்குப் பிறகு, தில்லையரசனின் முகவரி தெரிந்தது...

‘சார்...மூணு நாளைக்கு முன்னால, வந்திருக்கு சார். அந்த பேங்குலருந்துதான் வந்திருக்கு. ஆனா...அவர் இங்கேயே வந்து வாங்கிட்டுப் போயிருக்கார்”

"ஓக்கே ஒரு காரியம் பண்ணுங்க, லாஸ்ட் ட்டூ மன்த்ல அந்த பேங்குலருந்து வந்த கூரியரை, நேரடியா வந்து வாங்கிட்டுப் போனவங்க எல்லோரோட டீடெய்லையும் ஃபில்டர் பண்ணி பிரிண்ட் பண்ணிக் குடுங்க."

அச்சாகி வந்த அந்தத் தாளில் மொத்தம் 6 முகவரிகள் இருந்தது. அப்ப ஆறு பேரை ஏமாற்றியிருக்கிறான். மற்றொரு பேங்கிலும் இதேப் போல நடந்ததாகச் சொன்னாரே...அதையும் சேர்த்து இன்னும் எத்தனைப் பேரோ...இந்த ஆறு பேரையும் விசாரிக்க வேண்டும்.

மனதுக்குள் சில முடிவுகளை எடுத்துக் கொண்டு,

“அது சரி, எந்த பேஸிஸ்ல பர்ஸனலாக் குடுக்கறீங்க...?”

“ஐடெண்ட்டிட்டி வெரிஃபை பண்ணிட்டுதான் சார் குடுப்போம். போட்டோ ஒட்டுன ஏதாவது ஒண்ணு, ரேஷன் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், வோட்டர் ஐடி...இப்படி எதாவது ஒண்ணுக் காட்டுனாப் போதும் சார். ஏரியா டெலிவரி பாய் இருந்தா, ஆளைத் தெரிஞ்சிருக்கும், அப்பவும் கொடுத்துடுவோம்.”

"மை காட்...அப்ப அந்த திருடனுக்கு, கூரியர் எப்ப வருது, எப்ப ஏரியா பிரிப்பாங்க,அந்த ஏரியா டெலிவரி பாய் இல்லாத நேரம் எது எல்லாம் தெரிஞ்சிருக்கு. ரொம்பநாளா நோட் பண்ணியிருக்கான். அப்படீன்னா....அடையாள அட்டையையும் போலியா தயாரிச்சிருக்கனும்....பெரிய ஆளாத்தான் இருக்கான் என்று நினைத்துக்கொண்டே,

‘தேங்க்யூ சார். இன்னொரு உதவியும் உங்கக்கிட்டருந்து தேவைப்படுது. இதே மாதிரி இன்னொருமுறை ஏதாவது பேங்குலருந்து ஏ.டி.எம் கார்ட் கூரியர் வந்தா, உடனே எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க.அவன் வாங்க வரும்போது அமுக்கிடலாம். இந்தாங்க இது என்னோட செல் நம்பர். கூரியர் வந்ததும் இம்மீடியட்டா எனக்குத் தகவல் சொல்லுங்க.”

பச்சையப்பனையும், ரத்தினசாமியையும் அழைத்து, அந்த ஆறு முகவரிகளிலும் விசாரிக்கச் சொல்லிவிட்டு, எப்போதும் விழிப்போடு அனைத்தையும் கவனித்துக் கண்காணிக்கச் சொன்னார்.


தொடரும்....

govindh
25-03-2010, 01:24 PM
அத்தியாயம் 4...விறுவிறுப்பான விசாரணை...
விளக்கம்...அனைத்தும் அருமை...

அடுத்தது எப்போ...? அவசரமில்லை...
கொஞ்சம் சீக்கிரம் தாருங்கள்...!
வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
25-03-2010, 02:51 PM
நன்றி கோவிந்த்.

மதி
25-03-2010, 02:58 PM
வழக்கம் போல அதே விறுவிறுப்பு குறையாமல் அடுத்த பாகம்.. அசத்துங்கண்ணா..!!! அடுத்ததுக்கு வெயிட்டிங்..

சிவா.ஜி
25-03-2010, 03:08 PM
நன்றி மதி. அவ்ளோதான்....இன்னும் ஒண்ணு அல்லது இரண்டு அத்தியாயத்துல முடிச்சிடறேன்...!!!

அன்புரசிகன்
25-03-2010, 09:00 PM
மலைச்சாமியின் அறிமுகம் அண்மைய கமலின் திரைப்படத்தின் நினைவு கண்முன்னே வந்தது.

போலீசுக்கான மிடுக்கு எழுத்தில் தெரிகிறது அண்ணா. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

ஜனகன்
25-03-2010, 10:06 PM
துப்பறியும் பாங்கு, விறுவிறுப்பான விசாரணை எல்லாவற்றையும் எழுத்தில் அழகாக வடிக்கின்றீர்கள்.தொடர்ந்து அசத்துங்க சிவா.

சிவா.ஜி
26-03-2010, 05:15 AM
ரொம்ப நன்றி அன்பு. படித்தது, பார்த்தது, கேட்டது....இதையெல்லாம் வைத்துதான் ஒரு குத்துமதிப்பாக எழுதி வருகிறேன். நீங்களனைவரும் கொடுக்கும் உற்சாகம் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

சிவா.ஜி
26-03-2010, 05:16 AM
உங்கள் தொடர்ந்த ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றி ஜனகன்.

அன்புரசிகன்
26-03-2010, 05:44 AM
ரொம்ப நன்றி அன்பு. படித்தது, பார்த்தது, கேட்டது....இதையெல்லாம் வைத்துதான் ஒரு குத்துமதிப்பாக எழுதி வருகிறேன். நீங்கலைவரும் கொடுக்கும் உற்சாகம் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

மனதுக்கு மட்டும் நிறைவாக இருக்கட்டும். வேறு எந்த பாகத்திற்கும் குறிப்பாக தலைக்கு :confused: எந்த எபக்ட்டும் வரப்படாது...:lachen001:

சிவா.ஜி
26-03-2010, 06:06 AM
இன்னும் என்ன எஃபெக்ட் பாக்கியிருக்கு......!!!!!

aren
26-03-2010, 08:23 AM
கதை நன்றாக வந்துகொண்டிருக்கிறது, அவசரப்படாமல் எழுதுங்கள்.

கூரியர் கம்பெனியில் சிசிடிவி காமிரா இல்லையா, இருந்திருந்தால் அந்த ஆறு பேரும் ஒரே ஆளா என்று பார்த்திருக்கலாம்.

தொடருங்கள்.

சிவா.ஜி
26-03-2010, 08:37 AM
கூரியர் கம்பெனியிலெல்லாம் கேமிரா வைக்க மாட்டாங்க ஆரென். ஆனா ஒரே ஆளா இருக்க சான்ஸ் இல்ல. அவங்க மூணு பேருன்னு சொல்லியிருக்கேன். மாத்தி மாத்தி போய் வாங்குவாங்க.

அதுல ஒருத்தனை பிடிச்சாலும் போதும்...பாக்கியிருக்கறவங்க மாட்டிக்குவாங்க.

தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி ஆரென்.

சிவா.ஜி
26-03-2010, 01:06 PM
அத்தியாயம்:5


பச்சையப்பனும், ரத்தினசாமியும் விசாரித்ததில் இரண்டுபேர் உண்மையாகவே அவர்களது தபாலைத்தான் நேரில் சென்று வாங்கியிருக்கிறார்களென்று தெரிய வந்தது. பாக்கியுள்ள நான்கு பேரின் அட்டைகளையும் அந்தத் திருடன் வாங்கியிருக்கிறான். இந்த விவரங்கள் தெரிந்ததும், மலைச்சாமி, இரண்டு காவலர்களையும் தினமும் சில முறை அந்த கூரியர் அலுவலகத்தை யாருக்கும் தெரியாமல் கண்காணிக்கச் சொன்னார்.

அன்று மாலை தன் நண்பரின் வீட்டு விசேஷத்துக்குப் போயிருந்தபோது, முத்துக்குமாரிடமிருந்து அழைப்பு வந்தது. உடனடியாக நண்பரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு காவல் நிலையம் விரைந்தார்.அங்கே நாகரீகமான உடையில் ஒருவர், முகமெல்லாம் அச்சம் தெரிய, நடுக்கத்துடன் நின்றிருந்தார். அவரையே கேள்விக்குறியோடு பார்த்த மலைச்சாமி,

"முத்துக்குமார்...யார் இவரு....எதுக்கு ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க...."

"சார் விசாரிச்சிட்டோம். நம்ம கான்ஸ்டபிள்ஸ் சர்வேலென்ஸ் செஞ்சிக்கிட்டிருக்கும்போது, இந்த ஆள் கே.பி.என் காம்ப்ளெக்ஸுலருந்து வெளியே வந்திருக்கார், அவங்களைப் பார்த்ததும் பதட்டப்பட்டு அவசரமா அங்கிருந்து ஓடப்பார்த்தாராம், சந்தேகத்துல இவரை இங்கே கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க."

பேசுவதை நிறுத்தி, நடுங்கிக் கொண்டிருந்தவரைப் பார்த்து,

"என்கிட்ட சொன்னதை அய்யாக்கிட்ட சொல்லுய்யா..."

"முத்துக்குமார்.....இவரைப் பாத்தா டீஸென்ட்டா இருக்கார்....கொஞ்சம் மரியாதையாவே பேசுங்க..வாய்யா போய்யான்னு சட்டுன்னு பேசிடாதீங்க. நீங்க சொல்லுங்க...ஏன் போலீஸைப் பாத்து ஓடினீங்க?"

"சார். நான் இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கேன். டைட்டான்ல எஞ்சினியரா இருக்கேன். பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்றதுக்கு அட்ரஸ் புரூஃப் தேவைப்பட்டுச்சி. என்கூட வேலை செஞ்சிக்கிட்டிருக்கிற ஃபிரென்ட் மூலமா, அந்த கே.பி.என் காம்ப்ளக்ஸுல போலி வோட்டர்ஸ் ஐ.டி தயாரிச்சுத் தராங்கன்னு கேள்விப்பட்டு, வாங்கிட்டு வரும்போதுதான் இவங்களைப் பாத்தேன். போலீஸ்ன்னதும் பயந்துட்டேன். மன்னிச்சுக்குங்க சார்...என் மேல கேஸ் போட்டீங்கன்னா என்னோட பியூச்சரே பாழாயிடும் சார்...ப்ளீஸ் சார்"

"ஓக்கே ஓக்கே....பதட்டப்படாதீங்க. படிச்சவங்க நீங்களே இப்படி செஞ்சா எப்படி சார்? உங்களைச் சொல்லியும் தப்பில்லை, இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாவே எடுத்துக்காம, ஏதோ சாதாரண விஷயமா நினைச்சுக்கிட்டு, அட்ரஸ் ப்ரூஃப்ப அக்செப்ட் பண்ணிக்கறாங்களே அவங்களச் சொல்லனும். ஆனா இது ஒரு கிரைம்ங்கறதாவது உங்களுக்குத் தெரியுமா இல்ல நீங்களும் இதை சாதாரணமானதா நினைக்கிறீங்களா?"

"நிச்சயமா இது தப்புதான் சார். ஆனா...வேற வழி தெரியல சார். வந்து கொஞ்சநாள்லயே எப்படி சார் ரேஷன் கார்ட் வாங்க முடியும். அந்த ஊர்ல ரேஷன் கார்ட்டை சரண்டர் பண்னிட்டு வந்து, புதுக் கார்டுக்கு அப்ளை பண்ணியிருக்கேன். ஆனா அது அவ்ளோ சுலபமா கிடைக்கிற மாதிரியில்ல...டிரைவிங் லைசென்ஸ் இருக்கு..ஆனா அதுல எங்க ஊர் அட்ரஸ்தான் இருக்கு...என்ன செய்யறது சார்?"

"உண்மைதான். ஆனா இந்த விஷயத்துல உங்க கம்பெனி உங்களுக்கு உதவலாம். தற்காலிகமா உங்க கம்பெனி அட்ரஸ்லேயே அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிக்க அவங்க உதவி செய்ய முடியும். ஓக்கே இந்தக் கேஸ் முடிஞ்சதும் நானே கம்பெனிக்காரங்ககிட்ட பேசறேன். நீங்க இப்ப எங்கக்கூட வாங்க..அந்தக் கடையை அடையாளம் காட்டுங்க."

"சார்...என்னை...."

"வாங்க...உங்க மேல எதுவும் ஆக்ஷன் எடுக்க மாட்டோம். ஆக்சுவலா..அரெஸ்ட் பண்ண வேண்டிய கேஸ்தான். ஆனா உங்க எதிர்காலத்தை நினைச்சு இந்தமுறை மன்னிக்கறோம். இனி இப்படி ஒரு தப்பை செய்யாதீங்க.."

"சத்தியமா செய்ய மாட்டேன் சார்...ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்..."


அந்த நகரத்தின் முக்கியமான வணிகவளாகமான அந்த கே.பி.என் காம்ப்ளக்ஸின், முதல் மாடியில் செயல்பட்டுக் கொண்டுவந்த கைப்பேசி பழுதுபார்க்கும் ஒருகடைக்குப் போனவர்கள்...உள்ளே மறைவாய் இருந்த அந்த இடத்தைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டனர். கணினி, பிரிண்ட்டர், டிஜிட்டல் கேமரா, ஹோலோகிராம் தயாரிக்கும் எந்திரம் என பக்காவாக செயல்பட்ட போலி ஆவணத் தயாரிப்புக் கூடமாக இருந்தது. அதை இயக்கிக்கொண்டிருந்தவன் 19 வயது இளைஞன்.

அவனிடம் விசாரணை நடத்தியபோது அவன் சொன்ன விவரங்களைக் கேட்டு....கோபப்படுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.

"சார் இந்த ஊர்ல நிறைய ஃபாக்டரிங்க இருக்கறதால....நிறைய வெளியூர்க்காரங்க வராங்க. அவங்களுக்கு பேங்க் அக்கவுண்ட் அவசியமாத் தேவைப்படுது. அதுக்கு அட்ரஸ் ப்ரூஃபுக்கு எங்க போவாங்க. அதான் இந்த வேலையில இறங்கிட்டேன். அதிகமா எதுவும் வாங்கறதில்லை சார்...ஒரு அட்டைக்கு 200 ரூபாதான் வாங்கறேன். இதுவும் ஒரு சேவை மாதிரிதானே..."

அவனையும், அந்த உபகரணங்களையும் அள்ளிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தார்கள். ஒரு மோசடியை மடக்கியாச்சு....இனி முக்கியமான அந்தத் திருடனைப் பிடிக்கனும்.....கூரியர் அலுவலகத்திலிருந்து வரும் போன் காலுக்காகக் காத்திருந்தார்.


அடுத்தநாள் அதிகாலையிலேயே அவரது மாமனாருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டதாக வந்தத் தகவலையடுத்து, அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஊருக்கு மனைவியுடன் புறப்பட்டார். மகன் ரவி, தனக்கு ஒரு தொழிற்சாலையில் நேர்காணல் இருப்பதாய் சொல்ல அவனை மட்டும் விட்டுவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.

மாமனாரைப் பார்த்துவிட்டு, சொந்தக்காரர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது கூரியர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. பேசிவிட்டு, உடனடியாகப் பச்சையப்பனைத் தொடர்பு கொண்டார். இரண்டு பேரையும் உடனே அங்கே போகும்படியும், தான் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு வந்துவிடுவதாயும் சொன்னார்.

அவர் புறப்படுவதாய் சொன்னதும் அவரது மனைவி ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார்....

"எங்கப்பா...சாகக்கிடக்கிறார்....இப்பக்கூட அந்தப் பாழாப்போன போலீஸ் உத்தியோகம்தான் உங்களுக்குப் பெருசாப்போச்சா....எங்க தங்கச்சி வீட்டுக்காரரைப் பாருங்க....வந்ததிலிருந்து, இங்கையும் அங்கையுமா ஓடி, ஓடி அலைஞ்சிக்கிட்டிருக்காரு, எங்க சொந்தக்காரங்க கேட்டா எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு பதில் சொல்லுவேன்....வீட்டுக்கு மூத்த மருமகனா பொறுப்பா இல்லாம....போனீங்கன்னா போங்க...நானே இங்கருந்து எல்லாத்தையும் பாத்துக்கறேன்..."

மனைவியின் புலம்பலில் இந்தமுறை நியாயம் இருப்பது தெரிந்தாலும், போக வேண்டியது கட்டாயம் என்பதால், வேறு எதுவும் பேசி குழப்பாமல், பிறகு சமாதானம் செய்து கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

பாதிப் பிரயாணத்தில், மீண்டும் பச்சையப்பனின் அழைப்பு.

"சார் நீங்க உடனே நம்ம ஸ்டேஷனுக்கு வந்துடுங்க. ஆளைப் பிடிச்சிட்டோம். சப் இன்ஸ்பெக்டர் சார் விசாரிச்சிக்கிட்டிருக்கார்..சார்....வந்து....."

"என்னங்க பச்சையப்பன்...ஏன் இழுக்கிறீங்க...எல்லாம் சரியாத்தானே நடந்தது...?
'அதெல்லாம் சரியா நடந்தது சார்...ஆனா....நீங்க நேர்ல வாங்க சார். உங்களுக்கேத் தெரியும்"

தொடர்பைத் துண்டித்துவிட்டார். மலைசாமி குழப்பமானார். என்ன பிரச்சனையாயிருக்கும்....!!!


தொடரும்....

jayashankar
26-03-2010, 01:12 PM
மனைவியின் அலு(ழை)ப்புக் குரலுக்கு புறமுதுகு காட்டி

ஹி ஹி 4 ஆம் அத்தியாயத்தின் நல்ல தொடக்கம்.

நன்றாக ஆர அமர யோசிச்சி எழுதுகின்றீர்கள் என்பது உங்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெளிப்படுகின்றது.

அதனூடே சிவாவுக்கே உரித்தான நீதி நேர்மை நியாயம் போன்ற அறிவுரைகள், ஆற்றாமைகள் கதையில் புகுத்தியிருப்பது இன்னும் சிறப்பு....

சீக்கிரம் அடுத்த பகுதியை கொடுங்க...

jayashankar
26-03-2010, 01:16 PM
என்னங்க! திடீரென ஒரு திருப்பம் கொடுத்து தொடரும் போட்டுட்டீங்க அத்தியாயம் 5 ல்.

ஹும்! தொடருங்க....

சிவா.ஜி
26-03-2010, 02:31 PM
நன்றி ஜெய். இந்தக் கதையை விரிவாக்க ஒரு சந்தர்ப்பத்தை உங்களைப் போன்ற உறவுகள் கொடுத்திருப்பதால், அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயண்படுத்திக்கொள்ளவேண்டுமல்லவா....

முன்புக் கொடுத்ததையே பிரித்துப் போட்டுக் கம்பாசிட்டர் கவிதை மாதிரிக் கொடுத்தால் நியாயமா? அதனால்தான் அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

jayashankar
26-03-2010, 02:47 PM
அதுவும் சரிதான்

அக்னி
26-03-2010, 04:03 PM
புரவியோட்டுபவரே...
உங்கள் யாதார்த்தச் சிந்தனையான எழுத்தாற்றலுக்கு ஐந்தாம் அத்தியாயத்தின் முதலாவது பத்தியும் ஒரு சான்று.
ஏன் எனப் புரியும் என நினைக்கின்றேன்...

அடுத்து இறுதியோ...

சிவா.ஜி
26-03-2010, 04:36 PM
அடுத்து இறுதிதான் அக்னியாரே.....

(எனக்கு உங்களளவுக்கு திறனாய்வுத் திறமை குறைவு அக்னியாரே....ஐந்தாம் அத்தியாயத்தின் முதல் பத்தியில் எனக்கு எதுவும் தெரியவில்லை.)

ஜனகன்
26-03-2010, 05:21 PM
கதையை கூட்டி, கழித்து, பெருக்கி, பிரித்து எழுதும் போது, நல்லாவே பிரித்து மேய்ந்திருக்கின்றீர்கள்.
இதில் உங்கள் திறமை நன்றாகவே தெரிகின்றது.
விரிவான கதையை வாசிக்கும்போது அமைப்பு அருமை.
வாழ்த்துக்கள் சிவா.

aren
26-03-2010, 05:52 PM
கடைசி பக்கம் வந்தாச்சு போலிருக்கே, ஆனால் இந்த முறை போன முறை எழுதிய கதையிலிருந்து திருப்பமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் பிடித்தவன் இன்ஸ்பெக்டரின் மகனாகவும் இருக்கலாம். அவன் தான் படித்துவிட்டு வேலையில்லாமல் திரிந்துகொண்டிருக்கிறான்.

govindh
26-03-2010, 06:53 PM
கடைசி பக்கம் வந்தாச்சு போலிருக்கே, ஆனால் இந்த முறை போன முறை எழுதிய கதையிலிருந்து திருப்பமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் பிடித்தவன் இன்ஸ்பெக்டரின் மகனாகவும் இருக்கலாம். அவன் தான் படித்துவிட்டு வேலையில்லாமல் திரிந்துகொண்டிருக்கிறான்.

"மலைசாமி குழப்பமானார். என்ன பிரச்சனையாயிருக்கும்....!!!"


ஆஹா...இப்படியும் இருக்குமோ...?!

அக்னி
26-03-2010, 07:12 PM
(ஐந்தாம் அத்தியாயத்தின் முதல் பத்தியில் எனக்கு எதுவும் தெரியவில்லை.)
அந்த ஆறு கூரியர்களில் இரண்டு உண்மையானவை என்பது,
யதார்த்தமாக நிகழக்கூடியதே...
ஆறுமே திருட்டுக் கூரியர் என்றால் அது அப்பட்டமான வெறும் கற்பனை.
இது நிஜமுலாம் பூசப்பட்ட கற்பனை.

எழுத்தாற்றலின் அடுத்த பரிமாணம்..,
கருவையும் கதையோட்டத்தையும் மூளை சிந்திக்க,
வார்த்தை அலங்காரங்களையும் காட்சிப்படுத்தல்களையும்
விரல்(கள்) இயல்பாகவே வடிவமைக்கும்...

அந்த நிலையை நீங்கள் அடைந்ததுதான், உங்கள் யதார்த்த எழுத்தை நீங்கள் அறியாததன் காரணம்...

கதையுலகில் சிவா.ஜி யின் பெயர் பேசப்படும் காலம் தூரத்திலில்லை...


அவர்கள் பிடித்தவன் இன்ஸ்பெக்டரின் மகனாகவும் இருக்கலாம்.
நான்காம் அத்தியாயத்தில், மலைச்சாமி மனைவி,

"அவன் காலையிலேயே பெங்களூர் போயிட்டான். ஏதோ இன்டர்வியூவாம். நீங்க வீட்ல இருந்தாத்தானே இதெல்லாம் தெரியும். என்ன போலீஸ் பொழப்போ...வீட்ல என்ன நடக்குது, யார் என்ன செய்யறாங்கன்னுகூட தெரியாம ஓடிக்கிட்டிருக்கீங்க...
இப்படிப் புலப்பியபோதே,
நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன்.
அதனாற்தான் இதற்கு முந்தைய என் பதிவிற் புரவியோட்டியானார் சிவா.ஜி...

சிவா.ஜி வேற ஏதாச்சும் திருப்பம் தருவாரன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்...

Hega
26-03-2010, 09:39 PM
முழுக்கதையும் இனறுதான் படித்தேன்.

நெடுங்கதையை குறுந்தொடராக்கி சம்பவங்களை விபரித்தவிதம் மிக அருமை.

அடுத்து என்ன என்பதை அறியும் ஆவலோடு......

சிவா.ஜி
27-03-2010, 05:12 AM
ரொம்ப நன்றி ஜனகன். கதை நன்றாக வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் மன்ற உறவுகளே....!!

ஒவ்வொருவரும் ஒரு ஆசானாய் திகழ்கிறார்கள். பிடிக்கவில்லையென்றால்...அண்ணனென்றும் பார்ப்பதில்லை, ஐயாவென்றும் பார்ப்பதில்லை. எவ்வளவு ஆரோக்கியமான சூழல் அமைந்திருக்கிறது இங்கே....!!!

சிவா.ஜி
27-03-2010, 05:13 AM
ஆஹா....ஆரென்....இப்புடிப் போட்டு உடைச்சிட்டீங்களே....!!! பார்ப்போம் கதாசிரியர் என்ன சொல்றாருன்னு....ஹி...ஹி...

சிவா.ஜி
27-03-2010, 05:16 AM
குழப்பத்துக்கு நிறையக் காரணம் இருக்கு கோவிந்த்...இப்படியுமிருக்கலாம்...அப்படியுமிருக்கலாம்....!! தொடர்ந்த உற்சாகப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
27-03-2010, 05:19 AM
இதுதான் அக்னி...நான் இந்த மன்றில் கண்டு வியப்பது. ஒரு படைப்பாளியின் படைப்பின் உள்வரைச் சென்று அவனுக்கே தெரியாதவற்றை, அழகாய் சொல்லும் ஆழ்ந்த கருத்துக்கள். அக்னியில் விழுந்த மாசு நிறைந்த உலோகம்...மாசு நீங்கி வெளிவருவதைப்போல...படைப்பாளிகளைப் பட்டைத் தீட்டும் உங்களைப் போன்ற உறவுகளுக்கு ஓராயிரம் நன்றிகள்.

சிவா.ஜி
27-03-2010, 05:21 AM
ஒரே மூச்சில் அனைத்து அத்தியாயங்களையும் வாசித்து, ஊக்கப் பின்னூட்டமளித்த தங்கை நிஷாவுக்கு அன்பான நன்றிகள்.

கீதம்
27-03-2010, 08:57 AM
கதையோட்டத்தோடு ஒன்றவைத்துவிட்டீர்கள். அடுத்த பகுதி எப்போது என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகளுடன் கீதம்.

சிவா.ஜி
27-03-2010, 09:26 AM
உங்கள் ஊக்கத்துடனான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம். விரைவில் நிறைவுசெய்துவிடுகிறேன்.

சிவா.ஜி
27-03-2010, 01:09 PM
நிறைவுப்பகுதி


ஆளைத்தான் பிடித்துவிட்டார்களே இன்னமும் என்னப் பிரச்சனை...ஒருவேளை, தப்பிப்போக முயற்சிக்கும்போது சுட்டுவிட்டார்களோ....இல்லையே....விசாரித்துக்கொண்டு இருப்பதாய் சொன்னாரே.....விசாரிக்கும்போது அதிகமாய் அடித்து, ஏதாவது விபரீதம் நடந்திருக்குமோ.....நான் வரும்வரைக் கடுமைக் காட்ட மாட்டார்களே......

என பலவிதமான சிந்தனைகள் மூளைக்குள் நெளிய, இருப்புக் கொள்ளாமல் தவித்தவர், தன் வாகனத்தின் வேகத்தைக் கூட்டினார்.

காவல்நிலையம் அடைந்ததும், பரபரப்பாய் உள்ளே போனவரை, ஆழ்ந்த அமைதி வரவேற்றது. என்ன ஆச்சு....??? அவரைப் பார்த்ததும், அனைவரும் சல்யூட் அடித்தார்கள். முத்துக்குமார் முகம் சுரத்திழந்திருந்தது. பச்சையப்பனும், ஒன்றும் பேசாமல் மௌனமாய் இருந்ததைப் பார்த்ததும், சுருசுருவெனக் கோபம் கிளம்பியது.

"முத்துக்குமார் என்ன ஆச்சு...? ஏன் இப்படி எல்லாரும் தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கீங்க....அக்யூஸ்ட் எங்க...இருக்கானா? நிறைய அடிக்கலையே..."

"இருக்கான் சார். அடிக்கறதா....தொடக்கூட முடியாது. நீங்க வர்றதுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம். சிக்கலான கேஸ்தான்..."

முத்துக்குமார் இப்படிச் சொன்னதும், ஆத்திரத்தோடு..."

"என்ன பேசறீங்க...அப்படி யாரு அந்த வி.ஐ.பி..."

இப்போது பச்சையப்பன்,

"வி.ஐ.பி. இல்ல சார்...வி.ஐ.பியோட மகன். நம்ம தொகுதி எம்.எல்.ஏ வோட பையன். அவர் ஆளுங்கட்சி வேற....இன்னும் கொஞ்சநாள்ல மந்திரியாகப்போறார்ன்னு கூட பேசிக்கறாங்க...என்ன சார் செய்யறது?"

சட்டென்று லாக்கப்புக்குள் நுழைந்து, பார்த்தார். சர்வ அலட்சியமாய் அந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான். மலைச்சாமியைப் பார்த்ததும், தெனாவட்டான சிரிப்புடன்,

"ஓஹோ நீதான்...இன்ஸ்பெக்டரா....நான் இங்க வந்து ரெண்டு மணிநேரம் ஆகுது. இன்னும் எங்கப்பாவுக்குத் தெரியாது. ஒடனே என்னை வெளியில விடலன்னா...உன் தொப்பி உன் தலையில இருக்காது..."

அவன் சொல்லி முடிப்பதற்குள் படு வேகமாய் அவனை அணுகி தன் முரட்டுக் கைகளால் ஓங்கி....அறைய நினைத்தார்.....ஆனால்....மிகவும் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டார். அவனைக் கோபமாய்ப் பார்த்தார்.

"உங்கப்பன்கிட்ட இல்லாதப் பணமாடா....எதுக்குடா...இந்த வேலை செஞ்சே..."

"பணம் எனக்குப் பெரிய விஷயமில்ல....ஒரு திரில்லுக்காகத்தான் செஞ்சேன். என் ஃபிரண்டுங்க ஒண்ணும் பெரிய பணக்காரங்க இல்ல....அவங்க செலவுக்குத் தேவைப் பட்டுது....நான் ஹெல்ப் பண்ணேன். எவனும் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேன்....இங்கபார்...சும்மா ஏதாவதுக் கேள்விக் கேட்டு டார்ச்சர் பண்ணாத....எங்கப்பாவுக்குப் போன் போடு....இல்லன்னா...."


மகா வெறுப்புடன் கதவை அறைந்து சாத்திவிட்டுத் தன் நாற்காலியில் வந்து தொப்பென அமர்ந்தார்.

உள்ளே அவன் பேசியது வெளியிருந்தவர்களுக்கும் கேட்டது. சங்கடமாய் மலைச்சாமியைப் பார்த்தார்கள். சற்று நேரம் கண்ணை மூடிக்கொண்டு யோசித்த மலைச்சாமி,

"முத்துக்குமார். அந்த எஃப்.ஐ.ஆர் ரெஜிஸ்டரை எடுங்க..."

என்றார்.

"சார்...அவசரப்படாதீங்க....ஒரு நிமிஷம்...நாம அந்த ரூமுக்குப் போயிடலாம்..."

என மெல்லியக் குரலில் சொல்லிவிட்டு, சைகையால், பச்சையப்பனையும் அழைத்த முத்துக்குமார்....அறைக்குள் நுழைந்ததும்,

"சார்....இது ஆளுங்கட்சி விவகாரம். நம்மளால எதுவும் செய்ய முடியாது. அந்த மொபைலக் குடுங்க பச்சையப்பன்....இது அந்தப் பையன்கிட்ட இருந்து கிடச்சுது. இதுல இருக்கிற நம்பர்ங்களைப் பாத்தா, இவன்கூட இன்னும் ரெண்டு பசங்க இருப்பாங்கன்னு சந்தேகப்படறோம். அந்த ரெண்டுபேர் நம்பரைத்தவிர வேற எந்த நம்பரும் இதுல இல்ல. இன்னொரு மொபைல்லதான்...அவங்க வீட்டு நம்பர், மத்த நம்பரெல்லாம் இருக்கு. அந்த ரெண்டு பசங்களையும் மடக்கிடலாம். அவங்க மேல எஃப்.ஐ.ஆர் போட்டுக் கேஸை முடிச்சிடலாம்.."

"என்ன சொல்றீங்க நீங்க..."

"சார்...ப்ளீஸ் சத்தம் போடாதீங்க....உங்க பாலிஸி எங்களுக்கும் தெரியும். யாருக்கும் பயப்பட மாட்டீங்க...ஆனா...இப்பத் தேவை வேகம் இல்லைசார் விவேகம்தான். நான் உங்களுக்கு ரொம்ப ஜூனியர்...ஆனா உங்களை என்னோடக் குருவா நினைக்கிறேன்...தயவுசெஞ்சு கேளுங்க சார்.... அவனை அரெஸ்ட் பண்ணினாக்கூட....கொஞ்சநாள்ல திரும்பி வந்துடுவான். இது ஒண்ணும் பெரியக் கேஸ் இல்ல.....அதுக்கப்புறம்...நம்ம நிலைமையை நினைச்சுப் பாருங்க சார்..."

பச்சையப்பனும், சேர்ந்து மேலும் பலக் கசப்பான பின்விளைவுகளைப் பற்றிச் சொல்ல....மலைச்சாமி வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்.

"பட்...அந்தப் பையனை வெளியே விடறதுக்கு முன்னால அந்த மத்த ரெண்டு பசங்களையும் பிடிக்கனும்...இல்லன்னா அலர்ட் ஆயிடுவானுங்க. நான் எம்.எல்.ஏக்கு போன் பண்ணிப் பேசறேன். அவர்கிட்ட விஷயத்தை சொல்லி....இவனை அதுவரைக்கும் இங்கேயே இருக்க வெக்கலாம்..."

"ஆமா சார்...அதான் சரி. நாம சொல்லாம, வேற யார்மூலமாவது தெரிஞ்சா....அந்த ஆள்....மோசமானவன்...என்ன செய்வானோ தெரியாது. பேசுங்க சார்..."

"ஓக்கே நான் பேசிக்கறேன்...உடனே அந்த மத்த ரெண்டு பசங்களையும் பிடிக்கனும். சீக்கிரம் கிளம்புங்க..."

"சார்...நான் ஒரு யோசனை சொல்லட்டுமா...?"

"சொல்லுங்க பச்சையப்பன்..."

அவர் யோசனையைக் கேட்டதும்....மூன்றுபேரும் லாக்கப்புக்கு வெளியே, அந்தப் பையனின் காதில் விழுமாறு,

"முத்துக்குமார்....என் கேரக்டரைப் பத்தி உங்களுக்கே தெரியும்....ராத்திரி பகல் பாக்காம நானும், எங்க ஆளுங்களும், கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சக் கேஸ் இது. அவன் எவ்ளோ பெரிய ஆளோட மகனா இருந்தாலும் பரவால்ல....நான் சும்மா விடப் போறதில்ல...அவனை இங்கக் கொண்டுவரும்போது அவன் மாறுவேஷத்துல இருந்தான்னு வேற* சொல்றீங்க. அப்ப நாம அவனை இங்கே வெச்சிருக்கறது யாருக்கும் தெரியாது. அவங்கப்பனுக்கூட தெரியாது...அதனால...நைட் வரைக்கும் இங்கேயே இருக்கட்டும்....ஆளைக் காலி பண்ணிடலாம்...அப்புறம்கோர்ட்... கேஸுன்னு எந்தத் தொல்லையுமில்ல...இந்தமாதிரி கிரிமினல்ங்க....இருக்கவே கூடாது....."

வைத்தப் பொறியில் எலி தானாய் வந்து விழுந்தது....மூடியிருந்த லாக்கப் கதவைப் பிடித்து பலமாய் ஆட்டிக்கொண்டே...

"சார் என்ன ஒண்ணும் செஞ்சுடாதீங்க சார்...நான் என்னக் கொலையா சார் பண்ணேன்...இதுக்கே என்னைத் தீத்துக்கட்றேன்னு சொல்றீங்க....நான் ஒத்துக்கறேன் சார்...எங்கப்பாக்கிட்டக்கூட நான் சொல்லிடறேன் சார்....தயவுசெஞ்சி என்ன ஒண்ணும் பண்ணிடாதீங்க சார்...ப்ளீஸ்...சார்...."


கதறியவனை...அமைதியாய்ப் பார்த்த மலைச்சாமி...

"சரி...சின்னப் பையனா இருக்கே....உன்னை எதுவும் செய்யக்கூடாதுன்னா...உன் கூட்டாளிங்க ரெண்டுபேரும் எங்க இருக்காங்கன்னு சொல்லு..."

"சொல்லிடறேன் சார்...அவங்க..."

"இரு இரு....இந்தா உன் போன். அவனுங்க ரெண்டுபேரையும் நீங்க வழக்கமா மீட் பண்ற இடத்துக்கு வரச் சொல்லு. மேல ஒரு வார்த்தை பேசுன.."

முத்துக்குமாரின் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றிப்பொட்டில் வைத்தார்.பின் குறிப்பு: கிடைத்த அந்த இரண்டுபேரையும் வைத்துக் கேஸை மூடிவிட்டார்கள். எம்.எல்.ஏ மந்திரி ஆகிவிட்டார். மந்திரி பையனுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதியின் மகளுடன் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. அந்தத் திருமணத்தில்...பந்தோபஸ்த்துக்கு மலைச்சாமியும், முத்துக்குமாரும், பச்சையப்பனும், மண்டப வாசலில் காவலிருந்தார்கள்.

govindh
27-03-2010, 01:32 PM
ஆஹா..."பின் குறிப்பு...", பின் மண்டையில்..ஓங்கி..
அடி வாங்கிய உணர்வு...

...மலைச்சாமி,முத்துக்குமார்,பச்சையப்பனுக்கும் ..இருந்திருக்கும்..!

jayashankar
27-03-2010, 02:49 PM
ஹி ஹி!

குழப்பி தெளிவு படுத்திவிட்டீர்கள் சிவா.

நல்ல கதை. இருந்தாலும் இந்த சினிமாத்தனமான முடிவுதான் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஹும் என்ன செய்ய சினிமாவும் நிஜவாழ்வின் மிகைப்படுத்தப்பட்ட பிம்பம்தானே....

கடமை தவறாத அதிகாரியை கடமை தவறச் செய்துவிட்டீர்கள்.

தொடர்கதையை கொண்டு சென்றவிதத்தில் எதுவும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியது.

சிவா.ஜி
27-03-2010, 03:02 PM
தொடர்ந்து உடன் வந்து ஊக்கமளித்தமைக்கு மிக மிக நன்றி கோவிந்த்.

சிவா.ஜி
27-03-2010, 03:05 PM
ஜெய், சினிமாவில் நடப்பதைவிட நிஜத்தில் நடப்பது மிக மோசம். நான் சொல்லியிருப்பது எதார்த்தம். கடமை தவறாத அதிகாரி....கடமையில் கருத்தாய் இருந்திருந்தால்....எத்த்னையோ அல்லல்களுக்கு ஆளாகியிருப்பார். அதுமட்டுமல்ல....இந்தக் கேஸ்...நமது குற்றச் சட்டங்களில் உறுதியாய் தாக்குப் பிடிக்காது. ரொம்ப சீக்கிரம் அந்தப் பையன் வெளியே வந்துவிடுவான்.

அனைத்தையும் அலசிய பின்னரே....வேண்டாவெறுப்பாய் எடுத்த முடிவு இது.

ஆரம்பம் முதல் உடன் வந்து ஊக்கமளித்ததற்கு மிக்க நன்றி ஜெய்.

கலையரசி
27-03-2010, 03:06 PM
பந்தோபஸ்த்துக்கு மலைச்சாமியும், முத்துக்குமாரும், பச்சையப்பனும், மண்டப வாசலில் காவலிருந்தார்கள்.

ஆகா! அருமை. யதார்த்தத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறீர்கள்.

யாரோ ஓர் இளைஞன் என்கிற பழைய முடிவை மாற்றித் திருப்பத்தைக் கொடுத்தமை நன்று.
அந்த அதிகாரி கடமை தவறாமல் இருந்திருந்தாலும் எம்.எல்.ஏ அவரைத் தூக்கித் தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றி விட்டு இப்படித் தான் கேசை முடித்திருப்பார்.
சினிமாத் தனமான முடிவாக எனக்குத் தோன்றவில்லை. பழைய கதையில் இருந்த குறைகள் களையப்பட்டு நிறைவைக் கொடுக்கும் கதை.
பாராட்டு சிவா.ஜி. அவர்களே!

jayashankar
27-03-2010, 03:11 PM
ஹி ஹி இன்னிக்கு கடமை தவறிய அதிகாரி முன்னமேயே தவறியிருந்தா ஒரு சொந்த வீடாவது கிடைக்குமே என்ற ஆதங்கத்தில் எழுதிய எழுத்து அது சிவா.

சினிமாத்தனம் என்று கூறினாலும், நிஜங்களின் பிம்பம் என்று குறிப்பிட்டது சரியென்ற கருத்தை தெரியப் படுத்தவே.

சிவா.ஜி
27-03-2010, 03:13 PM
தினம், தினம் நாம் பார்க்கும், போலீஸ்+அரசியல்வாதிகளின் உறவைப் பற்றி நாம் அறிந்ததுதானே. அதையேக் காட்ட நினைத்தேன். எப்படியோ இருந்தக் கதையை...இப்படியாக்கியது நீங்களனைவரும்தான்.

மிக்க நன்றிகள் கலையரசி அவர்களே.

சிவா.ஜி
27-03-2010, 03:19 PM
இப்பக் கட்மை தவறினதுக்குக் காரணம் காசில்லையே ஜெய். அவருக்கும் குடும்பம் இருக்கிறது. வயதுக்கு வந்த மகள் இருக்கிறாள்....(இன்றைய சூழலில்...இது மிகப்பெரிய பலவீனம்)


ஆமாம் ஜெய்...சினிமாவும் நிஜங்களின் பிம்பம்தானே....நீங்கள் சொன்னதும் சரிதான்.

jayashankar
27-03-2010, 03:26 PM
நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன் சிவா.

என் தந்தை கையூட்டு வாங்க மாட்டேன் என்று இருந்ததாலேயே, ஓய்வு பெறுவதற்குள் அவர் வேலை செய்த பி.டபுள்யூ.டி அதிக மாற்றலை வாங்கியவராகவும், கையூட்டு வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது வேண்டுமென்றே விடுமுறை எடுத்தும் தன் கொள்கையை காப்பாற்றிக் கொண்டவர். ஓய்வு பெறும்போது அவருக்கென்று ஒரு வீடில்லை. இன்றும் வாடகை வீடுதான்.


ஏதாவது சொன்னால், தான் உயிரோடு இருக்கும்வரை தன் வாழ்வை தானேதான் அமைத்துக் கொள்வேன் என்ற பிடிவாதத்துடன் இன்றும் இருக்கின்றார்.

ஆகையால், எம்.எல்.ஏ என்ற ஒரு விசயம் பிரச்சினையே இல்லை என்பது என் எண்ணம்.

சிவா.ஜி
27-03-2010, 03:33 PM
அது அந்தக்காலம் ஜெய். இந்தக்காலத்துக்கு இவ்வளவு கடமையுணர்வு போதும். தன் குடும்பத்துக்கும், மற்றவர் குடும்பத்துக்கும் பாதிப்பு வராமல், தன் கடமையை சரியாகச் செய்தாலே போதுமென்பது என்னுடைய நிலைப்பாடு.

முக்கியமான ஒன்று ஜெய்.....எந்த கேஸுக்கு...எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமென அளவிருக்கிறது. ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள், அல்லது கற்பழிப்பு மட்டுமே செய்யப்பட்டாளென்ற வழக்கில் எம்.எல்.ஏ அல்ல....மந்திரி மகனாய் இருந்தாலும், மலைச்சாமி விடமாட்டார். தன் குடும்பமே பாதிக்கப்படுமென்றாலும், தன் உயிரே போய்விடுமென்றாலும்....பின் வாங்க மாட்டார். ஆனால்....இதற்கு தேவையில்லை என நினைத்துவிட்டார்.

கலையரசி அவர்கள் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார். என்னதான் கடமையுணர்வில் அந்தப்பையனைக் கைது செய்தாலும், எம்.எல்.ஏ....மிகச் சுலமாய்..அந்தக் கேஸிலிருந்து தன் மகனை விடுவித்திருப்பார். பிறகு இவரது எல்லா முயற்சியும் வீண்தானே...

பா.ராஜேஷ்
27-03-2010, 03:55 PM
பின்குறிப்பு சரியான நெத்தியடி... கதை மிக அருமை அண்ணா. பாராட்டுக்கள்

மதி
27-03-2010, 04:22 PM
ஜெய் சொன்னது போல் பரபரப்புக்காக எழுதப்பட்ட சினிமேட்டிக் கிளைமாக்ஸாக இருக்கிறது.. எம்.எல்.ஏ மேட்டரே தேவையில்லையோ..? ஒரு மாதிரி க்ளிஷே மாதிரி.. கதை இப்படித் தான் முடியும் முடிய வேண்டும் என்கிற மாதிரி. சின்ன ஏமாற்றம் தான்... :). எப்படியோ.. நன்றாக கதையை கொண்டு சென்றமைக்கு பாராட்டுக்கள்..

Hega
27-03-2010, 04:23 PM
என்ன தான் இருந்தாலும்கதையிலும் கூட இப்படி ஒரு முடிவு தேவைதானா எனதோன்றுகிறது. நிஜவாழ்வில் இதைவிட மோசமாக நடக்கலாம். ஆனால் அப்படி நடப்பதனால் தொடர்ந்தும் அப்படித்தான் நடக்குமென எதிர்பார்க்காமல இனிமேல் இம்மாதிரி தவறு செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல தொரு பாடம் புகட்டும் விதமாக உங்க முடிவு இல்லையே.

அதிகாரத்துக்கும் ,பணத்துக்கும் எப்படிப்பட்ட நேர்மையான அதிகாரியும் அடிபணிந்து தான் போக வேண்டுமா..

அப்படியானால் அதிகாரத்தில் இருப்பவஎர் என்ன தவறு வேணுமானாலும் செய்யலாம். வசதியில்லாத ஏழைக்குமட்டும் தான் தண்டனை கிடைக்க வேணடுமா.

இம்மாதிரி பல கேள்விகள் எனக்குள் எழுந்தாலும் சிறியதொரு பொறியை வைத்து நெடுங்கதையையாக்கி அதையே குறுந்தொடராக்கியதுமன்றி பல டிகெட்டிவ் முறைகளையும் கையாண்டு கதைக்களைத்தை அமைத்திருந்த விதம் மிக மிக அருமை.


பாராட்டுக்கள்.

மதி
27-03-2010, 04:24 PM
அது அந்தக்காலம் ஜெய். இந்தக்காலத்துக்கு இவ்வளவு கடமையுணர்வு போதும். தன் குடும்பத்துக்கும், மற்றவர் குடும்பத்துக்கும் பாதிப்பு வராமல், தன் கடமையை சரியாகச் செய்தாலே போதுமென்பது என்னுடைய நிலைப்பாடு.
அப்படி சொல்ல முடியாதுண்ணா.. ஜெய் சொன்ன காரணத்துக்காகவே... என் அப்பாவும் இரண்டு வருடம் முன் தன் வேலையை விட்டு வி.ஆர்.எஸ் வாங்கினார். கொள்கையுள்ளவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.. இன்றளவும்..!:)

சிவா.ஜி
27-03-2010, 04:24 PM
ரொம்ப நன்றி ராஜேஷ்.

சிவா.ஜி
27-03-2010, 04:34 PM
மறுபடியும் இந்தக்கதையை எழுத ஆரம்பித்தபோதே...முடிவை முடிவு செய்துவிட்டேன் மதி. கெட்டவன் கடைசியில் தண்டனையடைவான் என்பது நல்லதுதான். ஆனால்...எதார்த்தத்தில் இருப்பதைக் காட்டுவதும் எழுத்தாளனின் கடமை. எப்போதும் கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்காமல், நடைமுறையையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இது ஒரு சாதாரணக் கேஸ். இதற்கே இப்படியென்றால்.....மிகப்பெரிய வழக்குகளில், தங்கள் கடமையுணர்வைக் கைவிட வேண்டிய நிலைக்கு எத்தனையோ நல்லக் காவல் அதிகாரிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எங்கள் மாவட்டத்திலேயே ஒரு இன்ஸ்பெக்டர்...பெயர் முத்தமிழ்முதல்வன். மிக நேர்மையானவர். உள்ளூர் எம்.எல்.ஏவைப் பகைத்துக் கொண்டக் காரணத்தால், காணாமல்போன 13 வயது சிறுவனை...இவர்தான்...பாலியல் கொடுமை செய்து மறைத்து வைத்திருக்கிறாரென்று எல்லோரையும் நம்பவைத்தனர்.

சஸ்பெண்ட் ஆனவர்...திரும்ப வந்து...நேர்மையாவது, கடமையாவது என நொந்துபோய்....தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார். லஞ்சம் வாங்குவதில்லையேத் தவிர....எந்த அரசியல்வாதிகளையும் பகைத்துக் கொள்வதில்லை. இன்றைய தேதிக்கு நம் நாடு இருக்கும் நிலை இதுதான். சினிமாத்தனமாக....என் குடும்பமே அழிந்தாலும் பரவாயில்லையென, தன் கடமையுணர்வைக் காட்டும் போலீஸ் அதிகாரியைக் காட்ட எனக்கு எவ்வளவு நேரம் வேண்டும் மதி?...சிலப் பத்திகளை மாற்றி எழுதினால் போதும். ஆனால்....இதுதான் என் முடிவு.

இதனை மாற்றத்தேவையில்லை என்பது என் எண்ணமாய் இருந்ததால்...அதை அப்படியேக் கொடுத்தேன்.

தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி மதி.

மதி
27-03-2010, 04:40 PM
சேச்சே... நான் அதிகாரியைப் பற்றி சொல்லல.. எம்.எல்.ஏ..வை இழுத்ததை தான்.. சொன்னேன். எல்லா இடத்துலேயும் அரசியல் புகுந்திருக்கு.. இந்த நூதனத் திருட்டை.. வேறுகாரணத்துக்காக..வேற ஆள் செய்யலாம்.. அரசியல்வாதி கொஞ்சம் புளித்துப் போன மேட்டரா தோணுச்சு.. வேற ஒன்னுமில்லை..

சிவா.ஜி
27-03-2010, 04:43 PM
நிஷாம்மா....மதிக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்....கற்பனையில் மட்டும்தான்....கடமைக்காக உயிரையே விடுவார்கள். நிஜத்தில் பலதையும் யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

ஜெய் மற்றும் மதியின் தந்தைகள்....கடமைத் தவறாதவர்களாய் இருக்கிறார்களென்றால்...போற்றப்பட வேண்டியவர்கள். சாதாரண வேலையில் கடமைத் தவறாமல் இருப்பதற்கும், காவல்துறையில் கடமைத் தவறாமல் இருப்பதற்கும்...மிகப்பெரிய வித்தியாசமிருக்கிறது. மணல்லாரியை மறித்த எத்தனை தாசில்தார்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம் அவற்றை அனுமதித்ததால்...செல்வச்செழிப்பில் இருப்பவர்கள்...மிக மிக அதிகம். அதை சரியென்று சொல்லவில்லை.....யதார்த்தம் அதுதானெனச் சொல்ல வருகிறேன்.

சில நேரங்களில்....கற்பனையைத்தாண்டி உண்மையையும் சொல்ல வேண்டும்.

மிக்க நன்றி நிஷாம்மா.

சிவா.ஜி
27-03-2010, 04:45 PM
அதுவும் சரிதான் மதி. அரசியல்வாதி மேட்டர் புளித்துப்போனதுதான். ஆனால் உண்மை என்னவென்றால்....எனக்கு வேறு யாரையும் பற்றி சிந்திக்கத் தோணவேயில்லை என்பதும்....அந்தளவுக்கு மாறுபட்டு சிந்திக்க...என்னிடம் மேட்டர் எதுவுமில்லை என்பதும்தான்.

மதி
27-03-2010, 06:37 PM
அதுவும் சரிதான் மதி. அரசியல்வாதி மேட்டர் புளித்துப்போனதுதான். ஆனால் உண்மை என்னவென்றால்....எனக்கு வேறு யாரையும் பற்றி சிந்திக்கத் தோணவேயில்லை என்பதும்....அந்தளவுக்கு மாறுபட்டு சிந்திக்க...என்னிடம் மேட்டர் எதுவுமில்லை என்பதும்தான்.
இதை நாங்க ஒத்துக்கணுமாக்கும்....:D:D:D:D
இவ்ளோ தூரம் சொல்றதே உங்ககிட்டேர்ந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்ங்கறது மட்டும்.... தெரிந்த புரிந்த விஷயங்களை திரும்ப சொல்லும்போது..அலுத்துப்போக வாய்ப்புள்ளது.. :eek::eek::eek:.. அதான்..

உங்களால முடியாததா.... வித்தியாசமானதை எத்ர்பார்க்கிறோம்.. :) முடியாதுனு சொல்லி தப்பிக்க முடியாது

கீதம்
27-03-2010, 10:43 PM
மனம் கனக்கவைத்தாலும் யதார்த்தமான முடிவு. பேரண்மை படத்தின் முடிவும் இப்படிதான் நிகழ்கால நடைமுறையைச் சொல்லி நின்றது. எத்தனைச் செய்திகள் படிக்கிறோம்; பார்க்கிறோம். அத்தனையும் சரியான கோணத்தில்தான் ஆராயப்பட்டு முடிக்கப்படுகின்றன என்பதற்கு என்ன ஆதாரம்? பல வழக்குகள் இப்படிதான் இடம், பொருள், ஏவல் பார்த்து முடிக்கப்படுகின்றன என்பது என் கருத்து. எனவே இக்கதை இப்படி முடிவுற்றதில் எனக்குத் திருப்தியே! பாராட்டுகள் சிவா.ஜி அவர்களே.

சிவா.ஜி
28-03-2010, 05:25 AM
உண்மைதான் கீதம் அவர்களே....பல சந்தர்ப்பங்களில்...உண்மைகள் மறைக்கப்படுகின்றன....பணமும், அதிகாரமும், ஆட்பலமும்....நீதியை மாற்றி எழுதுகின்றன.

புரிதலுடனான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
28-03-2010, 05:32 AM
நீங்க சொன்ன மாதிரி வித்தியாசமான முடிவைக் கொடுத்திருக்க முடியும்தான் மதி. மலைச்சாமியின் மகனை...சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்து...அவனில்லை எனச் சொல்ல இந்த முடிவு.

இன்னும் கொஞ்சம் மூளையைக் கசக்கியிருந்தால்....வேறு எதிர்பாராத முடிவைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் நான் அதிகம் யோசிக்கவில்லை. வேறு ஒரு கதைக்காக....என் சிந்தனையைத் திருப்பிவிட்டிருந்தேன்....அதனால்கூட இதன்மேல் இன்னும் கூடுதலான கவனத்தை செலுத்தாமலிருந்திருக்கலாம்.

மன்றமும், மன்ற உறவுகளும் அளிக்கும் இந்த ஊக்கத்தின் உதவியால்...வித்தியாசமானக் கதைக் கருக்களைக் கையாள முடியும். கையாளுகிறேன். நன்றி மதி.

மதி
28-03-2010, 06:11 AM
அடுத்த கதையா...? சீக்கிரம் தாங்கோ...!!

ஜனகன்
28-03-2010, 09:48 AM
எதார்த்தமான ஒரு முடிவை கொடுத்தாலும், நிறைவாக கொடுத்த கதை.

அதன் பின் வந்த பின் ஊட்டங்களும், அதற்க்கு நீங்கள் கொடுத்த பதில்களும் விளக்கமாக உள்ளன.
நன்றி வாழ்த்துக்கள்.நல்லகதை முடிவுற்றது.:icon_b::aktion033:
தொடர்ந்து தாருங்கள் சிவா.

Akila.R.D
29-03-2010, 04:57 AM
பரீட்சை இருந்ததால் ஒரு வாரமாக மன்றம் பக்கம் வராமல் இருந்து விட்டேன்...

கதையை இன்றுதான் படித்து முடித்தேன்...

ரொம்ப நல்லா வந்துருக்கு...

இன்னும் இது மாதிரி நிறைய கதைகள் தந்துக்கிட்டே இருங்க...

aren
29-03-2010, 05:20 AM
ஐயோ கடைசியில் இப்படி ஆகிவிட்டதே. பணமும் பதவியும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது உண்மைதான், அதை உங்கள் கதையிலும் சொல்லிவிட்டீர்களே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தாலும், கதை நன்றாக வந்திருக்கிறது, பாராட்டுக்கள்.

அடுத்தக் கதையிலாவது பயப்படாத ஒரு ஹீரோவை அறிமுகப்படுத்துங்கள்.

அக்னி
29-03-2010, 06:50 AM
எதிர்பார்க்காத முடிவு...

மற்றவர்கள் போலே, மலைச்சாமியின் நேர்மைக்குப் பங்கம் வந்ததான ஆதங்கம் இருந்தாலும்,
யதார்த்தமாக இருப்பதனால், எனக்கு இம்முடிவு சரியானதாகவேயுள்ளது.

இறுதிப்பாகத்தை வாசித்துச் செல்கையில்,
குற்றவாளி, காவலரின் பயமுறுத்தும் பேச்சில் குற்றத்தைத் தானாகவே ஒப்புக்கொண்டு விடுவான் என்றோ,
எம்.எல்.ஏ. தனது மகனென்றும் பாராமால், நடவடிக்கை எடுக்கப் பணித்திருப்பார் என்றோ,
இறுதிபெறும் என்ற எண்ணவோட்டம் மனதில் எழுந்தது.
இவற்றிற்கான நிகழ்தகவு மிக அரிதுதான் என்பதனால்,
யதார்த்தமான உங்கள் முடிவு ஏமாற்றம் தரவில்லை.

முடிவு எதிர்பாராதது.
முடிவில் நீதியினதும் நேர்மையினதும் அரசியல் முன்னரான சக்தியிழப்பு,
என்று விடியும் நம் தேசம் என எதிர்பார்க்க வைக்கின்றது.

நம் அனைவர் வேண்டுகோள்களையும் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு,
சிறுகதையைக் குறுந்தொடராக்கி, அலுக்காமற் சலிக்காமற் தந்ததற்காக
சிவா.ஜி க்கு மிக்க நன்றி.

நான்கு நட்சத்திரப் பாராட்டுக்கள்...

jayashankar
29-03-2010, 09:53 AM
அக்னி அவர்களே உண்மை.

வேண்டுகோளை ஏற்று, அதனை செம்மையாக கொடுத்திருக்கும் விதம் மிகவும் அருமை.

ஏதோ கேக்குறாங்களே! அதற்காக கொடுப்போம் என்றிருக்காமல், நிறைய விசயங்களை ஆராய்ந்து, தெளிவுடன் கதையை நகர்த்திச் சென்றிருந்த விதத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அதிலும், கதையாக வந்தபோது கொடுத்ததை அப்படியே சிறிதும் குலைக்காமல் பயன்படுத்திக் கொண்டவிதத்தை என்னவென்று சொல்ல....

வேண்டுகோளாக கொடுத்ததையும் திருப்தியுடன் முடித்துக் கொடுக்கும் பாங்கை சிவாவிடம்தான் கற்க வேண்டும்.

jayashankar
29-03-2010, 10:14 AM
அது அந்தக்காலம் ஜெய். இந்தக்காலத்துக்கு இவ்வளவு கடமையுணர்வு போதும். தன் குடும்பத்துக்கும், மற்றவர் குடும்பத்துக்கும் பாதிப்பு வராமல், தன் கடமையை சரியாகச் செய்தாலே போதுமென்பது என்னுடைய நிலைப்பாடு.

முக்கியமான ஒன்று ஜெய்.....எந்த கேஸுக்கு...எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமென அளவிருக்கிறது.

ஹா ஹா ஹா!

சரியான நெத்தியடிங்க சிவா....

என் தந்தையும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் அவ்வளவுதான். இந்த சமுதாயத்தோடு மோதவில்லை. உண்மைதான் சிவா. அப்படி மோதியிருந்தால், என்னவாகியிருக்கும் என்று தெரியாது.

இருப்பினும் என் தந்தை எனக்கு கூறியதை உங்களுக்கு இங்கே கூற கடமைபட்டுள்ளேன்.

இதே கேள்வியை நான் கேட்க என் தந்தை கூறினார்.

இந்த உலகில் நாம் மனிதனாக பிறந்தோம். தெய்வமாக இறக்காவிட்டாலும் மனிதனாக இறக்க வேண்டும்.

பொய், பித்தலாட்டம், லஞ்சம், பெண் பித்து, மது, புகை, திருட்டு, கொலை, கொள்ளை போன்றவைகளை பின்பற்றும் யாரும் மனிதர்களில்லை என்பது என் கருத்து. ஏனெனில், இதில் மற்றவருக்கு தீங்கு விளைவிக்கும் வித்து இருப்பதால் ஒருநாள் இல்லை ஒருநாள் இதன் எதிர் பயனை அனுபவிக்க வேண்டியிருக்கும். இறந்த பிறகு ஒரு நல்ல மனுசன் நம்மளயெல்லாம் விட்டு போய்ட்டாம்பா என்று அடுத்தவர்கள் போற்றிக் கூறும்படி இறக்க வேண்டும் என்றார்.

நான் கேட்டேன் புகை, மது போன்றவை எப்படி தீயவையாகும் என்றேன். அதற்கு முதலில் நன்றாக இருக்கும் ஒரு நிலையில் நாம் அதன் கட்டுப்பாட்டில் இருப்போம். இதனால் குடும்பத்தில் குழப்பங்கள் வரும். மனைவியை அடிக்கவேண்டிய அளவு நாம் தாழ்ந்து போகலாம். அடுத்த சந்ததியின் பிறப்பே கூட இதனால் பாதிக்கப்படலாம். அதனால் இதுவும் கெடுதலே. முதலில் நம்மை கெடுத்து பிறகு மற்றவர்களை துன்புறுத்தும் விஷம் என்றார்.

அதனாலேயே, இந்த 20 வருட உழைப்பில் கையூட்டு வாங்க, கெட்டுப் போக பல நல்ல சந்தர்ப்பங்கள் இருந்தும் அதற்கு அடிமையாகாமல் கடந்திருக்கின்றேன்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு

என்பதே சரி.

நன்றி சிவா.....

சிவா.ஜி
29-03-2010, 11:29 AM
நன்றி ஜனகன்.

நன்றி அகிலா.(பரீட்ச்சை நல்லபடியாக முடிந்ததா? வாழ்த்துக்கள்)

சிவா.ஜி
29-03-2010, 11:32 AM
என்ன செய்வது ஆரென். தன் கடமையில் தவறாமல், அவனை கைது செய்திருந்தாலும், முடிவு என்னவோ அரசியல்வாதிகள் நினைப்பதைபோலத்தானிருந்திருக்கும். அதற்காக...பின் விளைவுகளை அனுபவிக்கப் போவது மலைச்சாமியும், அவருடனிருப்பவர்களும்தான்.

தைரியமானவர்தான்....ஆனால்...சில எதார்த்தங்களுக்கு வளைந்துகொடுத்துவிட்டார்.

நீங்கள் சொன்னதைப்போல நல்ல தைரியமானவனை அடுத்தடுத்த ஏதாவது ஒரு கதையில் காண்பித்துவிடலாம்....

ரொம்ப நன்றி ஆரென்.

சிவா.ஜி
29-03-2010, 11:37 AM
தொடர்ந்த உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி அக்னி.

உண்மைதான் அக்னி....கசந்தாலும் உண்மை உண்மைதானே. இன்றைய எங்கள் மாநிலம் இப்படித்தானிருக்கிறது. அரசியல் பின்னணி இருப்பவர்கள் எல்லாக் குற்றங்களிலிருந்தும் வெகு சுலபமாகத் தப்பிவிடுகிறார்கள். இந்த நிலை எப்போது மாறும்....நீதி அனைவருக்கும் பொதுவானதாய் எப்போது ஆகும்.....அனைவரின் ஆதங்கம் இதுவே.

சிவா.ஜி
29-03-2010, 11:43 AM
உங்கள் தந்தையை எண்ணி பெருமிதமுண்டாகிறது ஜெய். அதேப்போல அவரது நம்பிக்கையைப் பொய்யாக்காமல்....நடந்துவரும் உங்களை நினைத்தும் பெருமிதம் கொள்கிறேன்.

இப்போதும் நிறைய அரசு ஊழியர்கள் நேர்மை தவறாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களால்தான் சிறிதளவாவது நல்லவைகள் நடக்கின்றன.

என்னுடைய மாமனார் போலீஸ்துறையில் இருந்து ஓய்வு பெற்றபின் விபத்தில் இறந்துவிட்டார். அவருக்குச் சேரவேண்டிய ஒரு பெரும்தொகையை அரசிடமிருந்து பெற ஒரு அதிகாரியை பார்க்கப் போயிருந்தேன். பெணதிகாரி அவர். அவரது அலுவலகத்துக்குள் நுழையுமுன்பு அங்கிருந்த ஒரு காவலர் என்னிடம் சொன்னது...

"தப்பித்தவறிக்கூட லஞ்சம் என்ற பேச்சையே அவரிடம் பேச வேண்டாம்....உங்கள் காரியம் ஆகாது"

எனச் சொன்னார். ஆச்சர்யப்பட்டுவிட்டேன். அதேப்போல...அவரால் ஆன உதவியை அந்த அதிகாரி...செய்து...அந்தத் தொகை மிக விரைவில் கிடைக்கச் செய்தார். அவரைப் போல உள்ளவர்களால்தான் அரசுத் துறை இன்னமும்...முழுதாய் சீரழியாமல் இருக்கிறது.

samuthraselvam
01-04-2010, 04:26 AM
வருத்தப் படுத்த வைக்கிற முடிவுடன் முடித்திருக்கிறீர்கள்....

எப்பேர்பட்டவராக இருந்தாலும் அவரும் பயப்பட ஒரு காரணம் உண்டு என்றும், மேல்மட்டத்தில் தப்பு செய்தால் தப்பிக்க ஆயிரம் வழிகள் உண்டு என்றும் இக்கதை மூலம் தெரிகிறது.....

பாராட்டுகள் அண்ணா....

சிவா.ஜி
01-04-2010, 05:37 AM
ஆமாம்மா.....அதிகாரமும், பணமும்...என்ன வேணுன்னாலும் செய்யும்.
(இடைத்தேர்தல்கள்ல பாக்காததா...)


ரொம்ப நன்றி லீலும்மா.

மஞ்சுபாஷிணி
03-04-2010, 07:01 AM
அட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தொடர்கதை.... :)

படிச்சிட்டு பின்னூட்டமிடுவேன் சிவா...

இளசு
12-04-2010, 09:04 PM
அன்பு சிவா


விறுவிறுப்பான குறுந்தொடர்.

ஒரே மூச்சில் வாசித்தேன்.கதைமாந்தர், காட்சி கோர்த்தல், தகவல் நேர்த்தி என உங்கள் முத்திரைகள் கதை நெடுக...


ஆய்வாளர் மகனும் அக்கூட்டத்தில் ஒருவனோ என வாசகனாய் தடுமாறினேன் கொஞ்ச நேரம்.

தற்கால குற்றநிகழ்வுகளுக்கான பின்னணி, இக்கால குற்ற மூளைகளின் செயல்திறன், புலனாய்வின் வளர்ச்சி, நடைமுறை யதார்த்தம் என
முழுமையான நிறைவைத் தந்த தொடர்.


பாராட்டுகள்.. சிவா.

sarcharan
15-04-2010, 02:08 PM
நல்லாருக்கே சிவா ஜி அண்ணே!! முடிவு பிராக்டிகாலா இருக்கு. சுபெர்ப்!!

sarcharan
15-04-2010, 02:13 PM
அவரது அலுவலகத்துக்குள் நுழையுமுன்பு அங்கிருந்த ஒரு காவலர் என்னிடம் சொன்னது...

"தப்பித்தவறிக்கூட லஞ்சம் என்ற பேச்சையே அவரிடம் பேச வேண்டாம்....உங்கள் காரியம் ஆகாது"


வேலிக்கு ஓணான் சாட்சியா? கரும்பாலையில் வேலை பார்ப்பவன் புறங்கைய நக்காமல் இருக்கமாட்டான் என்பது அனுபவஸ்தர்கள் சொன்ன பழமொழி.எனச் சொன்னார். ஆச்சர்யப்பட்டுவிட்டேன்.

ஆச்சர்யம் தானுங்க.... :p:p

இதை பதிப்பதற்காக மன்னியுங்கள் அனால் உண்மை

வெப்தமிழன்
16-04-2010, 10:39 AM
முடிவு பிடிக்கவில்லை . ஆனால் எதார்த்தத்தை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும். வாழ்த்துக்கள் அன்பரே !