PDA

View Full Version : எழுந்து பறந்தது!



குணமதி
22-03-2010, 12:26 PM
எழுந்து பறந்தது!


"காற்று வாரியில் அடையும்

கருப்புக் குருவியே!

ஒரு கூடு கட்டிக்கொள்ளக் கூடாதா?"

குருவியைக் கேட்டேன் குற்றமில் லன்புடன்!


"கூடுங் கட்டினேன்!

குடியுமிருந்தேன்!

கொடியோர் வந்தனர்;

கூட்டைக் கலைத்தனர்;

முழுமையாய்க் குஞ்சு பொரிக்க இருந்த

முட்டையை உடைத்தனர்!

இனிய என்னுடை இணையும் இறந்தது!

இனி,

எனக்கேன் கூடு?

எனக்கேன் வாழ்வு?

என்று கலங்கி இங்கே அமர்ந்தேன்!

என்னையும் கொல்ல எண்ணமிருந்தால் எனக்கது மகிழ்ச்சி"

என்றது குருவி.

கீழோர் செயலைக் கேட்டதும்

நெஞ்சங் கலங்கி நெடிது வருந்தி

இரங்கினேன்; யானும் என்ன சொல்வது?

" கலங்காதிரு நீ!

உன்னைப் போல உறையுள் இழந்தோர்

உள்ளனர்; அவர்க்கே உறுதுணை என்றே

உள்ளநாள் மட்டும் உதவியாய் இருப்பாய்!

உன்றன் வாழ்வும் உயிர்ப்புறும்; உலகில்

உயரெண்ணங்கள் மலர்ந்திட ஒருதனி

எடுத்துக் காட்டென இலங்குக என்றேன்"

எழுந்து பறந்தது எங்கோ அறியேன்!

என்ன நினைத்ததோ யாரறிவாரே!

govindh
22-03-2010, 12:42 PM
எழுந்து பறந்தது எங்கோ அறியேன்!
என்ன நினைத்ததோ யாரறிவாரோ!

ஏங்கும்....கவி வரிகள்...மிக அருமை..!
வாழ்த்துக்கள்..

குணமதி
22-03-2010, 02:57 PM
நன்றி கோவி.

இனியவள்
22-03-2010, 05:28 PM
இழந்ததை எண்ணி
இருப்பதை இழப்பதை விட
இருப்பதை கொண்டு
புதிய உலகை படைத்திட
பறந்ததோ ?

கவிதை அருமை நண்பரே வாழ்த்துக்கள்

குணமதி
22-03-2010, 05:39 PM
இழந்ததை எண்ணி
இருப்பதை இழப்பதை விட
இருப்பதை கொண்டு
புதிய உலகை படைத்திட
பறந்ததோ ?

கவிதை அருமை நண்பரே வாழ்த்துக்கள்

மிக்க நன்றி.

ஜனகன்
22-03-2010, 07:11 PM
உன்னைப் போல உறையுள் இழந்தோர்
உள்ளனர்; அவர்க்கே உறுதுணை என்றே
உள்ளநாள் மட்டும் உதவியாய் இருப்பாய்!

இப்படி மனதை தேற்றி கொள்வோர் பலர் உண்டு.
இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும்.
நல்ல கவிதை வரிகள். வாழ்த்துக்கள் குணமதி.

குணமதி
24-03-2010, 04:01 AM
சிறப்பான பின்னூட்டமிட்டீர்கள்.

நன்றி ஜனகன்.

அமரன்
24-03-2010, 06:22 AM
எதை இழந்தாலும் சிற`கை` இழக்காதவரை ஓகேதான். சிறகை இழந்தாலும் நிலத்தில் வாழ்க்கைதான்.

காற்று எவர் கண்ணுக்கும் புலப்படுவதில்லை.
காற்றின்றி எவருக்கும் புலனே இல்லை.

காற்றாய் இரு..

அற்புதம் கவியே.

குணமதி
24-03-2010, 12:02 PM
நன்றி அமரன்.

பா.ராஜேஷ்
24-03-2010, 07:21 PM
காலம் மாறும் என நம்பிக்கையுடன் நாளை எதிர் நோக்குவதே சரி.
அற்புத கவிதைக்கு நன்றி குணமதி

குணமதி
25-03-2010, 06:25 PM
மிக்க நன்றி நண்பரே.