PDA

View Full Version : கீரைகளின் குணங்கள்muthuvel
22-03-2010, 06:07 AM
முருங்கைக்கீரை - இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை அதிகரிப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குத லிருந்து தப்பிக்கலாம். சிறுநீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.
பசலைக்கீரை - குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.
சிறுகீரை - உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிக்கலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.
வெந்தயக்கீரை - முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.
அரைக்கீரை - நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தைப் பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.
அகத்திக் கீரை - வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.

மணத்தக்காளி கீரை- குடல் புண்ணை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டையை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
பாலக்கீரை - உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது.
குமட்டிக் கீரை - இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப்படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.

தொய்யல் கீரை - தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.

புளிச்சக் கீரை - உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.

கீதம்
23-03-2010, 07:10 AM
கீரையின் பயன்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி முத்துவேல் அவர்களே. நம் வீட்டுத்தோட்டத்திலேயே இவற்றை உரிய முறையில் வளர்த்து பயன்பெறலாம். செலவு மிச்சம்; பூச்சி மருந்து பற்றிய பயமும் கிடையாது.

Akila.R.D
23-03-2010, 11:05 AM
உபயோகமான செய்தி...

நன்றி முத்துவேல்

சரண்யா
23-03-2010, 12:21 PM
பகிர்வுக்கு நன்றி..
எனினும் ஒவ்வொரு கீரையின் பெயரை போல்ட் ஆக்குங்க..தெளிவாக பதிவு செய்யுங்க...சரியா..படிக்க ஈஸியாக இருக்கும்..

anna
24-03-2010, 09:01 AM
உபயோகமான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

govindh
24-03-2010, 09:08 AM
நோய்களைக் கீறும் கீரைகள் ....
பட்டியல் நன்று...
பகிர்வுக்கு நன்றி..

muthuvel
24-03-2010, 11:52 AM
மின் அஞ்சல் மூலம் அனைவர்க்கும் அனுப்புங்கள் ,

ரவிசங்கர்
10-07-2010, 06:09 PM
நான் மின் அஞ்சல் மூலம் அனைவருக்கும் அனுப்பி விட்டேன்.

தகவலுக்கு நன்றி...நன்றி...நன்றி.

வாழ்த்துக்கள்.

nambi
11-07-2010, 04:26 AM
பகிர்வுக்கு நன்றி!

(இருந்தாலும் இம்மாதிரி மருத்துவம் பற்றி எழுதும் பொழுது தகவல் எடுக்கப்பட்ட ஆதாரங்களை குறிப்பிடுவது நன்று!... பொதுவாகவே ஆதாரங்களை வைக்கலாம்...நம்பகத்தன்மைக்காக..)

பா.ராஜேஷ்
12-07-2010, 06:44 PM
மிகவும் பயனுள்ள அருமையான தொகுப்பு.. நன்றிகள் முத்துவேல்.

Narathar
21-07-2010, 06:23 PM
ஆகா அருமையான தகவல்
நன்றி பகிர்வுக்கு

(மூலத்தை இங்கு தருவது உங்கள் பகிர்வின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் அன்பரே)

அனுராகவன்
28-09-2010, 07:25 PM
பகிர்ந்தமைக்கு நன்றி...................நன்றிகள் முத்துவேல்

சூறாவளி
29-09-2010, 03:07 AM
தகவலுக்கு நன்றிகள்...

முருங்கைகீரை மட்டுமே எளிதில் கிடைக்கும் எங்க ஏரியாவில்... மற்ற வகை கீரைகளுக்கு வாங்கனும்னா மெனெக்கட்டுன்னு பஸ்ஸு புடிச்சி இதுக்குன்னு போவணும்...