PDA

View Full Version : ஓ.. மனமேHega
21-03-2010, 09:02 PM
இறைவா நீ வர வேண்டும்


என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ இருக்க வேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
வாழ்வை சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலந்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய்--மலர வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலேநான் மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்

govindh
21-03-2010, 09:42 PM
"இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலேநான் மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்."

நல்லாருக்கு....நிறைய எழுதுங்கள்....
வாழ்த்துக்கள்...

செல்வா
21-03-2010, 09:49 PM
மெட்டமைத்துப் பாடினால் இனியப் பாடலாக மலரும்
கவிதை...

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...!

பா.ராஜேஷ்
24-03-2010, 07:27 PM
மிக அழகாக எழுதி உள்ளீர்கள். பாராட்டு.

சரோசா
24-03-2010, 08:25 PM
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ இருக்க வேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
இந்த பந்தியை நான் மிகவும் ரசிக்கிறேன்
வாழ்த்துக்கள்... நிஷா

சிவா.ஜி
25-03-2010, 06:45 AM
அழகான சந்தத்தில் இறையின் துணை நாடும் வரிகள்.

அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

ஆதி
25-03-2010, 06:52 AM
உங்கள் கவிதையை வாசிக்கும் போது முன்பு நான் எழுதிய சிலப்பாடல்கள் நினைவுக்கு வந்தன..

அழகிய பாடல் இது, செல்வா சொன்ன மாதிரி மெட்டமைத்தாய் இனியதாய் தித்திக்கும்..

தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்...

இளசு
25-03-2010, 06:55 AM
நம்பிக்கை அளித்து வழிநடத்த
சாமியிடம் தாராளமாய் சரணடையலாம்.
(ஆசாமிகளிடம்தான் கவனம் தேவை..)


நல்ல நம்பிக்கைக் கவிதை.
நிஷாவுக்குப் பாராட்டு!


( இறைக்குரலால் நிலைகுலைதல் என்பது கொஞ்சம் நெருடலாய்...?)

ஆதி
25-03-2010, 07:02 AM
( இறைக்குரலால் நிலைகுலைதல் என்பது கொஞ்சம் நெருடலாய்...?)

அண்ணா, எனக்கும் இதே நெருடல் இருந்தது..

யோசித்த பிறகு இருந்த நெருடல் சரியானது..

நிலைகுலைதல் - தற்போது இருக்கும் நிலை குலைந்து அழிவது..

நாம் இருக்கும் பாதை சரியானதாய் இருக்கும் போது இந்த நிலை குலைவு நமக்கு தேவைப்படுவதில்லை, அதுவே தவறானதாய் இருக்கும் போது நிலைகுலைவு தேவைப்படுகிறது..

குலைவு ஒரு reformation-க்கு துவக்க புள்ளியாய் அமையலாம்..

காதலில் உன்னை பார்த்த பின்பே மறுமுறை பிறந்தேன் என்பது கூட ஒரு நிலைகுலைவு தானே அண்ணா..

இளசு
25-03-2010, 07:28 AM
சரியே ஆதன்...

சாதா சிலை குலைந்து களிமண்ணாகி
மீண்டும் நற்சிலையாய் வடியுமென்றால்

இந்த வகை நிலைகுலைதல்கள் தேவையே!

Hega
25-03-2010, 08:18 AM
கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Hega
25-03-2010, 08:27 AM
ஓ.........மனமே
நீ எங்கே போகிறாய்?
மண்ணான உலகில்
திண்டாடும் உயிரைக்
கண்ணாரக் காண்பாயோ?..........

மண்ணுக்கே போகும்
மன்னவனே……..நீ
போகும் பாதை
இன்னதென்பதை…………..
அறிவாயா?

வாழ்க்கையிலே போராட்டங்கள்
வழிகளிலெல்லாம் முட்செடிகள்,
விழிகளிலெல்லாம குருதித்துளிகள்…………
எதிர்பார்பபெல்லாம் ஏமாறறங்கள்.
தொடர்வதேனோ மனிதனே...

மண்ணிலே உயிர்த்த மானிடனே.....
மரணம் உன்னை நெருக்கிடும்
போதும் மௌனமாய் இருக்கிறாய்.?.
நிற்பதற்கே இடமில்லை,
நீ பற்றிப்படர நினைப்பாயோ?

இன்னும் உறங்கிடும்..மனமே
பொறுமையை தகர்த்திடு மனமே
பொங்கி எழுந்திடு….மனமே
வெறுமையை போக்கிடு……மனமே
வேதனை நீக்கிடு…மனமே …

உன் உறக்கத்தை கலைத்திடு ……மனமே
விழித்திடு மனமே,,ஜெயித்திடு தினமே ..
நீ போகும் பாதையை உணர்ந்திடு…….மனமே!!!!

govindh
25-03-2010, 08:40 AM
"உன் உறக்கத்தை கலைத்திடு ……மனமே
விழித்திடு மனமே,,ஜெயித்திடு தினமே ..
நீ போகும் பாதையை உணர்ந்திடு…….மனமே!!!! "

தன்னம்பிக்கை ஊட்டும் கவி வரிகள்...
பாராட்டுக்கள்...

Hega
06-12-2010, 08:56 AM
"இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலேநான் மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்."

நல்லாருக்கு....நிறைய எழுதுங்கள்....
வாழ்த்துக்கள்...


மிக்க மகிழ்ச்சி கோவிந் அவர்களே.

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தாமதமான நனறிக்கு மன்னிக்க....

Hega
06-12-2010, 08:58 AM
மெட்டமைத்துப் பாடினால் இனியப் பாடலாக மலரும்
கவிதை...

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...!


நன்றி செல்வா அவர்களே...

இனி தொடர்ந்து எழுத முயற்சிப்பேன்...

Hega
06-12-2010, 08:59 AM
மிக அழகாக எழுதி உள்ளீர்கள். பாராட்டு.


நன்றி ராஜேஷ் அவர்களே....

Hega
06-12-2010, 09:01 AM
மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ இருக்க வேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்
இந்த பந்தியை நான் மிகவும் ரசிக்கிறேன்
வாழ்த்துக்கள்... நிஷா


நிச்சயமாக சரோசா..

மலையும் தடையாகும், ஆனால் அங்கும் வழி கிடைக்கும்

நன்றிங்க

Hega
06-12-2010, 09:02 AM
அழகான சந்தத்தில் இறையின் துணை நாடும் வரிகள்.

அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.


மகிழ்ந்தேன் சிவா அண்ணா.

மிக்க நன்றி... நலம் தானே அண்ணா..

Hega
06-12-2010, 09:03 AM
உங்கள் கவிதையை வாசிக்கும் போது முன்பு நான் எழுதிய சிலப்பாடல்கள் நினைவுக்கு வந்தன..

அழகிய பாடல் இது, செல்வா சொன்ன மாதிரி மெட்டமைத்தாய் இனியதாய் தித்திக்கும்..

தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்...


ஓஓஒ உங்கள் பின்னூட்டங்களை கவனிக்காமல் போனேனே..

மகிழ்வாக இருக்கிறது ஆதன் அவர்களே..

மிக்க நன்றி.

Hega
06-12-2010, 09:04 AM
நம்பிக்கை அளித்து வழிநடத்த
சாமியிடம் தாராளமாய் சரணடையலாம்.
(ஆசாமிகளிடம்தான் கவனம் தேவை..)


நல்ல நம்பிக்கைக் கவிதை.
நிஷாவுக்குப் பாராட்டு!


( இறைக்குரலால் நிலைகுலைதல் என்பது கொஞ்சம் நெருடலாய்...?)


இப்போவெல்லாம் ஆசாமிகள் செய்யும் நம்பிக்கையீனத்தல சாமிமீதும் நம்பிக்கை வருவதில்லையே..

நன்றி சார்...

Hega
06-12-2010, 09:09 AM
அண்ணா, எனக்கும் இதே நெருடல் இருந்தது..

யோசித்த பிறகு இருந்த நெருடல் சரியானது..

நிலைகுலைதல் - தற்போது இருக்கும் நிலை குலைந்து அழிவது..

நாம் இருக்கும் பாதை சரியானதாய் இருக்கும் போது இந்த நிலை குலைவு நமக்கு தேவைப்படுவதில்லை, அதுவே தவறானதாய் இருக்கும் போது நிலைகுலைவு தேவைப்படுகிறது..

குலைவு ஒரு reformation-க்கு துவக்க புள்ளியாய் அமையலாம்..

காதலில் உன்னை பார்த்த பின்பே மறுமுறை பிறந்தேன் என்பது கூட ஒரு நிலைகுலைவு தானே அண்ணா..நல்லதொரு விளக்கம்.

பொதுவாக நாம் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் நமக்கு கிடைக்கும் அன்பும் பாசமும் நம்மை அறிவிழந்து போக செய்து அடிமையாக்கும் அல்லவா.. ..அப்படியே இறையின் எதிர்பாராகுரலால் உதவியால் தன் நிலை இழப்பதும் உண்டல்லவா. அதையே சுட்டினேன்.

நன்றிங்க

Hega
06-12-2010, 09:10 AM
"உன் உறக்கத்தை கலைத்திடு ……மனமே
விழித்திடு மனமே,,ஜெயித்திடு தினமே ..
நீ போகும் பாதையை உணர்ந்திடு…….மனமே!!!! "

தன்னம்பிக்கை ஊட்டும் கவி வரிகள்...
பாராட்டுக்கள்...


நன்றி கோவிந்

பாலகன்
06-12-2010, 01:13 PM
முதல் கவிதையில் கடவுளை உங்கள் வாழ்க்கை முழுவதும் கட்டிப்போட விரும்புவது நன்கு தெரிகிறது. இளவயது நாயகராகவும் முதுவயதின் நண்பராகவும் கடவுளை ஏற்பது அரிது. உங்கள் கவிதை நன்று

இரண்டாவது கவிதை மானிட வாழ்வின் இயலா நிலைகளை அழகாக எடுத்துரைக்கிறது.

எனது பாராட்டுகள்

அன்புடன்
மகாபிரபு

ஆன்டனி ஜானி
06-12-2010, 01:33 PM
உங்கள் கவிதையின் மூலம்
இறைவன் மேல் வைத்துஇருக்கும்
அன்பு தெரிகிறது .....

வாழ்த்துக்கள் ....

Hega
06-12-2010, 03:35 PM
நன்றிங்க மகாபிரபு

இந்த அன்பளிப்பெல்லாம் வேண்டாமே.. கூடவே எனக்கு இது பற்றியெல்லாம் எதுவும் தெரியாதுங்க. உங்க புரிதலே போதுமானது.

Hega
06-12-2010, 03:37 PM
உங்கள் கவிதையின் மூலம்
இறைவன் மேல் வைத்துஇருக்கும்
அன்பு தெரிகிறது .....

வாழ்த்துக்கள் ....நன்றி ஆனடனி

இறைவ்ன மேல் மட்டுமல்ல மனிதர்மேல் வைத்த நம்பிக்கையும் இல்லாமல் போகும் காலம் இதுவல்லவா...:aetsch013:

ஆன்டனி ஜானி
06-12-2010, 03:45 PM
நன்றி ஆனடனி

இறைவ்ன மேல் மட்டுமல்ல மனிதர்மேல் வைத்த நம்பிக்கையும் இல்லாமல் போகும் காலம் இதுவல்லவா...:aetsch013:

உங்களுடய நம்பிக்கை எதுவும் வீண் போகாது ..

உங்களுடய பாராட்டுக்கு மிக்க நன்றி ........

வாழ்த்துக்கள் .....

Hega
07-12-2010, 10:23 PM
முதல் கவிதையில் கடவுளை உங்கள் வாழ்க்கை முழுவதும் கட்டிப்போட விரும்புவது நன்கு தெரிகிறது. இளவயது நாயகராகவும் முதுவயதின் நண்பராகவும் கடவுளை ஏற்பது அரிது. உங்கள் கவிதை நன்று

இரண்டாவது கவிதை மானிட வாழ்வின் இயலா நிலைகளை அழகாக எடுத்துரைக்கிறது.

எனது பாராட்டுகள்

அன்புடன்
மகாபிரபுமிக்க மகிழ்ச்சி மகா பிரபு

தங்கள் புரிதலுடனான பின்னூட்டத்திற்காக என் மன்மார்ந்த நன்றி

Hega
07-12-2010, 10:25 PM
உங்களுடய நம்பிக்கை எதுவும் வீண் போகாது ..

உங்களுடய பாராட்டுக்கு மிக்க நன்றி ........

வாழ்த்துக்கள் .....


மனிதர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையா ஆன்டனி

அது நிச்சயமாக் வீணாகும். என் அனுபவம் அப்படி.

உங்கள் நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்கு நன்றி.