PDA

View Full Version : புதிய இரண்டு ஐபிஎல் டீம்கள்!!!



aren
21-03-2010, 07:54 AM
புதிய இரண்டு ஐபிஎல் டீம்கள்!!!

அடுத்த வருடத்திலிருந்து இரண்டு புதிய ஐபிஎல் டீம்கள் உள்ளே வருகின்றன. ஒன்று புனேயிலிருந்தும் மற்றொன்று கொச்சியிலிருந்தும் வருகின்றன. புனே டீமை சஹாரா குரூப் 370 மில்லியன் அமெரிக்க டாலருக்கு எடுத்துள்ளது, அதே மாதிரி கொச்சின் டீமை ரெண்டவூ ஸ்போர்ட்ஸ் குரூப் 333 மில்லியன் அமெரிக்க டாலருக்கு எடுத்துள்ளது.

போன தடவை நடந்த ஆக்ஷனில் முதல் எட்டு ஐபிஎல் டீமும் 79 முதல் 120 மில்லியன் டாலருக்குள் வாங்கியது.

பணம் அதிகம் புழங்குவதால் லாபம் எதிர்பார்த்து அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

புதிய டீமுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன்.

இன்னும் 50 கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் கிடைக்கும். நல்லது.

சிவா.ஜி
21-03-2010, 09:14 AM
அடக்கடவுளே.....கிரிக்கெட் இந்தமாதிரியெல்லாம்....மில்லியன் கணக்குல பணத்தைக் கொட்டும்ன்னு தெரிஞ்சிருந்தா....என் பையனை எஞ்சினியரிங்கே படிக்க வெக்காம...கிரவுண்டுக்கு தொரத்தியிருப்பேன்...

Hega
21-03-2010, 10:28 AM
கிரிக்கெட் என்றாலே பணங்கொழிக்கும் விளையாட்டுத்தானே..

வருமானத்துக்கு வருமானம், புகழுக்கு புகழ், விளையாட்டுக்கு விளையாட்டு எல்லாம் சேர்ந்து கிடைக்கும். சாமானியர் சேர்வதுதான் ரெம்ப கஷ்டம்.

புதிய டீமுக்கு வாழ்த்துக்கள்.

பா.ராஜேஷ்
21-03-2010, 10:31 AM
விளையாட்டு வியாபாரமாகி, விபரதீத்தில் முடியாமலிருந்தால் நல்லது !

மன்மதன்
21-03-2010, 10:46 AM
எது எப்படியோ அரசியல், சினிமாவுக்கு அடுத்தது கிரிக்கெட் என்றாகிவிட்டது. புனே , கொச்சி க்கு அடுத்தது எந்தெந்த ஊர்கள் ஐபிஎல் இல் இடம் பிடிக்கும் என்ற வாக்கெடுப்பு நடத்தலாம்..

arun
22-03-2010, 04:21 AM
கிரிக்கெட் என்பது பொழுதுபோக்கு என்றில்லாமல் வியாபாரமாகி விட்டது

aravindhraju
12-04-2010, 02:19 PM
தனது திறமையை நிரூபித்து காட்டிய கொல்கத்தா தலைவர் சவுரவ் இந்த ஆண்டு அதிக ஓட்டம் குவித்தவர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சியான சேய்தியாகும்.

kay
16-04-2010, 06:37 PM
கொச்சி ஐபிஎல் அணி தடுமாற்றத்தில் இருக்கிறது போலும்! சசி தரூர் சுநந்தா புஷ்கர் விவகாரம் அணியை ஓய்த்து விடும் போலிருக்கிறது!
:):):)

இளசு
16-04-2010, 08:16 PM
விளையாட்டு வியாபாரமாகி, விபரதீத்தில் முடியாமலிருந்தால் நல்லது !



ராஜேஷ்..

அருள்வாக்குபோல் ஆகிவிட்டது உங்கள் பதிவு..
அமலாக்கப்பிரிவின் ஆய்வில் ஐபிஎல் கணக்குகள் தற்போது..

தமிழ் மைந்தன்
24-07-2010, 01:35 PM
எதனை டீம் வந்தாலும் சென்னைதான் வின் பன்னும்..

மச்சான்
24-07-2010, 03:29 PM
அடக்கடவுளே.....கிரிக்கெட் இந்தமாதிரியெல்லாம்....மில்லியன் கணக்குல பணத்தைக் கொட்டும்ன்னு தெரிஞ்சிருந்தா....என் பையனை எஞ்சினியரிங்கே படிக்க வெக்காம...கிரவுண்டுக்கு தொரத்தியிருப்பேன்...
இன்னும் ஒண்ணும் கெட்டுப்போகலைங்ணா.....! அடுத்த பையனை/பையனுக்கு ரெடி பண்ணுங்க...!:medium-smiley-007:

.