PDA

View Full Version : ம்ம்ம்... கவிதைகள் -1அலை...
21-03-2010, 05:36 AM
நீ நானகவும்..
நான் நீயாகவும் இருந்த காலம்..

தொடும் தூரத்தில் இருந்தும்
வார்த்தைகளால் காதல் செய்தோம்...

பேசும் தூரத்தில் இருந்தும்...
வார்த்தைகள் இல்லாமல் பேசிக்கொண்டோம்...

ஒரு நிமிடம் பிரிந்தாலும்...உயிர் பிரிந்தது போல இறந்தோம்...

அது நானா??

நான் உன்னை அத்தனை நேசித்தேனா?

நான் அத்தனை நேசிக்கப்பட்டேனா?

பின்பு?

எப்போது மறந்தேன்...

இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது என்று சொன்னால்...பச்சை பொய்...

உண்மையை சொன்னால்...
எத்தனை யோசித்தும்...

உன் முகம் ஒரு தோராய...அடையாள உருவமாய் தான் நினைவுக்கு வருகிறது...

யதேச்சையாய் நீ என்னை கடந்து சென்றால்...
நான் உன்னை கடந்து சென்றால்...

சட்டென்று நினைவுக்கு வருமா???

ம்ம்ம்...

நானா??

உன்னையா?

காதல் செய்தேனா??


அன்புடன்

அலை...

(பி.கு.)

ஒரு சின்ன வினவல்.. நான் ஏன் "நாமா? காதல் செய்தோமா?" என்று எழுதவில்லை???

ஓவியன்
21-03-2010, 06:09 AM
என்ன சொல்ல,

இதுவும் கடந்து போகும்.....

வாழ்த்துகள் அலை,
உங்களது அலை அலையான பதிவுகள் நம் மன்றமெங்கும் தொடர்ந்தும் பிரவாகிக்கட்டும்..!! :)

அலை...
22-03-2010, 04:50 AM
அருமை...(இதுவுமா கடந்து போகும்??)

நன்றி ஓவியன்...

எனக்காக நேரம் கிடைக்கும்போதெல்லாம்..

வருவேன்..


அன்புடன்

அலை...

பாரதி
22-03-2010, 12:56 PM
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வீசிய அலை.....!

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.

மன்றக்கடலில் இந்த அலையும் நிற்காமல் அடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

உங்கள் உறவினர் நலமா அலை..?

அலை...
23-03-2010, 01:15 PM
நன்றி பாரதி...

நம் பழைய நட்பு வட்டத்திலிருந்து ஒரு குரல்..
சுகமான விஷயம்...

மிக்க நன்றி...

இளசு
24-03-2010, 09:30 PM
வாருங்கள் அலை...

நலமா?


நீண்டதொரு இடைவெளிக்குப்பின் கண்டதில் மனங்கொள்ளா மகிழ்ச்சி..


இதேபோல் நிலா, மதுரைக்குமரன், நண்பன், பப்பி, முத்து, லாவண்யா, ராம்பால் போல பலரும்
என்றாவது மன்ற நினைவலைகளால் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என்ற நம்பிக்கையும்..


------------------------------------------

ஆணியே புடுங்கவேணாம் என்றதுபோல்:traurig001:
கவிதையே இல்லை என்றபின்
என்னத்தைச் சொல்ல?-------------------------

இது கவிதைதான்...

தைத்த அடுக்குதான் பிடிபடவில்லை...


இனிய பென்ஸ், ஆதவன், ஆதன், தாமரை, அமரன், அக்னி, யவனிகா, கீதம் போல
தக்கவர் வந்து ''அடி'' பிரித்துக் கொடுத்தால்தான் உண்டு..


------------------------------------------------

அலை...
26-03-2010, 12:40 AM
வாருங்கள் அலை...
இது கவிதைதான்...

தைத்த அடுக்குதான் பிடிபடவில்லை...
------------------------------------------------

மன்னருக்கே (இளசுவுக்கே) புரிந்துவிட்டது என்று சொல்லி தப்பிக்கலாம்னு பார்த்தா...

இப்படி ஆகிவிட்டது...டச் விட்டு போய்டுச்சு..

கவிதையை விடுங்கள்...

நலமா?
நண்பர்கள் நலமா?

புதிதாக எதாவது எழுதினிர்களா?

பழைய நண்பர்களுக்கு ஒரு பொதுவான மின் அஞ்சல் அனுப்பலாமா?

இளசு
01-04-2010, 08:35 PM
அலை

நலமே

உங்களைக் கண்டதில் நலம் இன்னும் கூடிப்போச்சு.


பல படைப்புகளைப் படிக்காமல், பின்னூட்டம் இடாமல் மருகும் காலகட்டம் எனக்கு..

புதிதாய் ஏதும் எழுதவில்லை அலை..


நீங்கள் அடிக்கடி வாங்க..
எழுதுங்க.

பழைய கோஷ்டி (வால்)கூட்டத்துக்கு பொது மின்னஞ்சல் அனுப்புங்கள்..
பலன் பலமாய் கிடைக்கட்டும்..

அக்னி
02-04-2010, 06:40 AM
இன்றைய அமாவாசை இருட்டு,
பௌர்ணமி முழுநிலவை
மறக்கடிக்குமா...

இன்று பாதம் மோதும் சிற்றலை,
சுனாமியின் அவலத்தை
மறக்கடிக்குமா...

மனதிற் பதிந்தவை,
என்றும் அழிந்துவிடா...

அழிந்திடும் என்றால்,
இந்தக் கவிதையும் இங்கில்லை...

முதற்காதல் முதல்,
முழுக்காதலும்,
எப்போதும் இல்லாவிட்டாலும்
அவ்வப்போ நினைவெழத்தான் செய்யும்...

சுயம்புவான இந்நினைவுகளுக்கு
மறுப்பரிதாரம் பூசும் மனங்கள்...

தொடும் தூரத்தில் வார்த்தைகளாற் பேசி,
பேசும் தூரத்தில் வார்த்தைகளின்றிப் பேசியது
மனதைக் கவர்ந்தது...

இங்கு ‘ம்ம்ம்...’ வாழ்க்கைத் துணையைச் சமாளிக்கும் மழுப்பலோ...

அலை...
10-04-2010, 06:14 PM
அருமை அக்னி...

என் கவிதைக்கு மகுடம் சூட்டியதற்கு மிக்க நன்றி...

ம்ம்...யோசித்து பதில் எழுதுகிறேன்...

நான் மிகவும் எதிர்பார்த்த பதில்..

மிக்க நன்றி..

அன்புடன்

அலை...

ps. நன்றி இளசு, ஒரு பு(பொ)து அஞ்சல் அனுப்பி பார்கிறேன்..

அலை...
10-04-2010, 06:25 PM
அழிந்திடும் என்றால்,
இந்தக் கவிதையும் இங்கில்லை...நிஜம் சுடத்தான் செய்கிறது...

பார்த்து, பேசி, பகிர்ந்து ஒரு 15 ஆண்டுகள் ஓடிவிட்டது..

புகைபடம் இருந்தாலாவது...
புதுப்பித்துக் கொள்ளலாம்..

உடைத்து சொல்கிறேன்..

எத்தனை யோசித்தும்...

அவள் முகம் ஒரு தோராய...அடையாள உருவமாய் தான் நினைவுக்கு வருகிறது...

உண்மைதான்...

காதல் நினைவிருப்பதால் தான் இந்தக் கவிதை..

ஆனால் காதலி தான் நினைவில் இல்லை...


அன்புடன்

அலை...

பி.கு.

1. "சுயம்புவான இந்நினைவுகளுக்கு
மறுப்பரிதாரம் பூசும் மனங்கள்" - அருமை..

2 . நான் ஏன் "நானா காதல் செய்தேனா" என்று எழுதுகிறேன்..?
ஏன் "நாமா? காதல் செய்தோமா?" என்று எழுதவில்லை???

3 . வாழ்க்கை துனையையாவது..
சமாளிப்பதாவது...
அதுவும் ஒரு சின்ன கவிதையால்...

போங்க சார்....