PDA

View Full Version : அவள் அப்படித்தான்!!! 6: நித்யாவின் ப்ளாஷ்பேக் தொடர்ச்சிaren
20-03-2010, 06:25 PM
அவள் அப்படித்தான்!!! புதிய தொடர்கதை!!!

1. புது மானேஜரின் வரவு!!!!

அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது, இன்னிக்கு புது மானேஜர் ஒருத்தர் பாம்பே பிராஞ்ச்லேயிருந்து டிரான்ஃபராகி சென்னைக்கு வருகிறார். அவரை எப்படியாவது தாஜா பண்ணிக்கொள்ள வேண்டும் என்று சில பெரிசுகளும், சில சிறுசுகளும் பிளான் பண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், பாம்பே பிராஞ்சில் வேலை செய்யும் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு ஃபோன் போட்டு பேசி அவர் எப்படிப் பட்டவர், அவருக்கு என்ன பிடிக்கும், வேலை வாங்குவதில் எப்படி, கீழே வேலை செய்பவர்களை எப்படி நடத்துவார் என்று பல விஷயங்களையும் வாங்கி வைத்துக்கொண்டு புது மானேஜரை எப்படி கவுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆஃபீஸ் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் என்றால் பாதி ஸ்டாஃப்க்குமேல் கால் மணியிலிருந்து அரைமணி நேரம் வரை லேட்டாக வரக்கூடியவர்கள், ஆனால் அன்று அனைவருமே ஒன்பது மணிக்குள் ஆஃபீஸில் ஆஜராகிவிட்டார்கள் எங்கே புது மானேஜர் இவர்களுக்கு முன்பாகவே வந்து முதல் நாளே பிரச்சனையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பில். பியூன் சேகருக்கு இது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. என்னங்க சார் இன்னிக்கு எல்லோருமே ஆஃபீஸ் டயத்துக்கு முன்னாடியே வந்துட்டாங்க என்று பக்கத்தில் இருந்த ஷேஷாத்திரையைக் கேட்டான். அது ஒன்னுமில்லையப்பா, இந்த புது மானேஜர் வர்றாரு இல்லே இன்னிக்கு, அதனாலேதான் இன்னிக்கு மட்டும் எல்லோரும் டயத்துக்கு வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றார்.

ஷேஷாத்திரி இந்த ஆஃபீஸின் அக்கெளண்டண்ட், மிகவும் நாணயமானவர், ஆஃபீஸுக்கு தினமும் முதலில் வருபவரும் அவரே. அனைவரிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்வார், யாரையும் ஒரு வார்த்தை கடிந்து பேசமாட்டார். தவறு செய்தவர்களிடமும் மிகவும் மரியாதையோடு பேசி எடுத்துச் சொல்வார். அதனாலே, தவறு செய்பவர்கள் இனிமேல் தவறே செய்யக்கூடாது என்று நினைக்கும்படி இருக்கும் அவருடைய பேச்சு. ஆஃபீஸில் அவருக்கென்று ஒரு தனி மரியாதை என்றைக்கும் இருக்கும்.

ஸ்ரீநிவாசன் இந்த ஆஃபீஸின் சேல்ஸ் மானேஜர், சரியான உதார் பேர்வழி, சேல்ஸ் ஆட்களுக்கே இருக்கும் உதார் இவரிடமும் இருந்ததால் இவருடைய பேச்சை ஏற்றுக்கொள்வதா அல்லது ஏற்காமல் இருப்பதா என்று இங்கேயிருந்த அனைத்து மானேஜர்களுக்கும் ஒரு பிரச்சனையாக இருந்திருக்கிறது இதுவரை. ஆனால் சில சமயங்களில் சொன்னதைவிட அதிகமாக செய்துவிடுவார், பல சமயங்களில் சொன்னதில் ஒரு பகுதிகூட சேல்ஸ் கொண்டுவராமல் சொதப்பி விடுவார். மானேஜர்கள் என்ன சேல்ஸ் என்று ஹெட் ஆஃபீஸுக்குச் முன்னறே சொல்லமுடியாமல் தடவுவார்கள். அதனாலேயே ஸ்ரீநிவாசனுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் கிடையாது இந்த ஆஃபீஸில். ஆனால் அவருக்கு ஹெட் ஆஃபீஸுல் பயங்கர செல்வாக்கு இருக்கிறது, அது தவிற தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கஸ்டமர்களும் இவருக்கு மிகவும் பரிச்சியம். எங்கே நாம் ஏதாவது சொல்லி இவர் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு கம்பெனியில் சேர்ந்து நமக்கு இருக்கும் கஸ்டமர்களையும் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்று பயம் வேறு இருந்தது.

இதற்கு முன்பு இருந்த மானேஜர் பார்த்திபனுக்கும் இதே பிரச்சனை இருந்தது. அவர் இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் இருந்த போது, அடுத்த வாரம் ரிட்டையர் ஆகப்போகும் வெங்கடாசலம் தயங்கியபடியே இவரோட ரூமிற்கு வந்து, தான் அடுத்த வாரம் ரிடையர் ஆவதால் குடும்பத்தின் பாரத்தைக் குறைக்க தன் மகள் நித்யாவிற்கு ஒரு வேலை போட்டுக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். நித்யா இந்த வருடம் எம்பிஏ மார்கடிங்க் முடித்துவிட்டு ஒரு சிறிய கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவாக இருப்பதாகவும், ஆனால் நம்ம கம்பெனியில் வேலை போட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொள்ளவும், இதுதான் சான்ஸ் என்று நினைத்து பார்த்திபனும் இங்கேயே சேல்ஸில் ஸ்ரீநிவாசனுக்கு அஸிஸ்டெண்டாக போட்டுவிட்டார்.

மேலும் ஸ்ரீநிவாசனைக் கூப்பிட்டு, நித்யாவிற்கு வேலைக் கொடுத்தது வெங்கடாசலம் இதுவரை நம் கம்பெனிக்கு உழைத்ததற்கான ஒரு நன்றிக்கடனே, ஆகையால் நீங்கதான் நித்யாவிற்கு எல்லா உதவிகளும் செய்யவேண்டும் என்றார். வெங்கடாசலம் தமக்கு பல விதங்களில் உதவி இருப்பதால் ஸ்ரீநிவாசனும் நித்யாவிற்கு உதவுவதாக சொல்லி அதன்படியே நிறைய உதவிகளும் நித்யாவிற்கு செய்தார்.

நித்யா இப்போது ஒரு சில டிஸ்டிரிக்ட்களை தானாகவே கவனிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாள். அவள் கவனிக்கும் டிஸ்டிரிக்ட்களில் வியாபாரம் மாதா மாதம் அதிகமாவதைக் கண்டு பார்த்திபனுக்கும் சந்தோஷமாக இருந்தது. இன்னும் அதிக டிஸ்டிரிக்ட்களை நித்யாவின் மேற்பார்வையில் கொண்டு வந்து ஸ்ரீநிவாசனுக்கு ப்ரோமஷன் மாதிரி கொடுத்து அவரை ஆஃபீஸிலிருந்தே சேல்ஸ்களை கவனிக்கும் படி செய்துவிட்டார் பார்த்திபன். இதனால் நித்யாவுக்கு அதிக வேலை இருந்தாலும் அவள் செவ்வனே செய்வதால் பார்த்திபனுக்கு ரொம்பவும் சந்தோஷம். சம்பளமும் அவளுக்கு இப்பொழுது அதிகமாக கொடுத்தார் பார்த்திபன்.

இப்போது இருக்கும் நிலையில் ஸ்ரீநிவாசன் வேலையைவிட்டுப் போனாலும் நித்யாவும் மற்ற சேல்ஸ் ஆளுங்களும் தாமாகவே சேல்ஸை கவனித்துக்கொள்ளமுடியும் என்ற நிலமைக்குக் கொண்டுவந்துவிட்டார் பார்த்திபன்.

இதனால் கம்பெனிக்கு சேல்ஸும் லாபமும் அதிகமானதால் பார்த்திபனை இன்னொரு பிராஞ்சுக்கு ப்ரோமஷன் கொடுத்து டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள்.

இப்பொழுது அந்த இடத்திற்குத்தான் புது மானேஜர் வருகிறார். புதிதாக வரும் மானேஜரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் பாம்பேயின் மானேஜராக கம்பெனிக்கு வந்தார். அதற்கு முன் இவர் காம்பிடிஷன் கம்பெனியில் சேல்ஸ் மானேஜராக இருந்தவர். பல சாதனைகளைப் புரிந்தவர் என்ற பேச்சு பரவலாக இருந்தது ஆஃபீஸில். இவர் இங்கே வந்தால் நம் பிராஞ்சில் பிஸினஸ் இன்னும் அதிகமாகும் என்று நினைத்தார் ஷேஷாத்திரி.

ஒன்பதரை மணிக்கு காரை டிரைவர் பார்க் செய்ய அதிலிருந்து இறங்கி வேகமாக உள்ளே வந்தார் கிருஷ்ணமூர்த்தி. பார்க்க மிகவும் இளமையாக இருந்தார், டிப் டாப்பாக கோட் சூட் போட்டுக்கொண்டு ஒரு ஹீரோ மாதிரியே இருந்தார் கிருஷ்ணமூர்த்தி. மானேஜருக்கு உரிய அந்த மிடுக்கு அவரிடம் அப்படியே இருந்ததை பலர் கவனித்தார்கள். எதிரே பார்த்த அனைவரையும் ஹலோ சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றார். பின்னாலேயே பியூன் உள்ளே போனான். பியூனிடம் ஒரு காப்பி சொல்லிவிட்டு செக்ரெட்டரி ஆஷாவை உள்ளே கூப்பிடச்சொன்னார். பியூனும் சரி சார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நேராகச் சென்று ஆஷாவை உள்ளே போகுமாறு சொல்லிவிட்டு காப்பி ரெடிசெய்யப் போனான்.

ஆஷாவும் ஒரு நோட் பேடையும் பென்சிலையும் எடுத்துக்கொண்டு அவருடைய ரூமுக்குள் போய், குட்மார்னிங் சொன்னாள்.

வாங்க ஆஷா என்று சொல்லிவிட்டு என்னென்ன இன்னிக்கு செய்யனும், தனக்கு ரிப்போர்ட் எப்படி வேண்டும் போன்ற விஷயங்களை அவளிடம் சொல்லி அவளை வெளியே அனுப்பும்போது, ஷேஷாத்திரியை உள்ளே வரும்படி சொல்லச் சொன்னார். ஆஷாவும் வெளியே போய் ஷேஷாத்திரியை உள்ளே போகச் சொன்னாள்.

ஷேஷாத்திரியிடம் என்னென்ன விஷயம் எப்படி இருக்கிறது, பணம் கையிருப்பு எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களைக் கேட்டுவிட்டு அவரிடம் ஸ்ரீநிவாசனை உள்ளே அனுப்புபடி சொன்னார்.

ஸ்ரீநிவாசனும் ஒரு குட்மார்னிங் சொல்லிவிட்டு உள்ளே வந்து உட்கார்ந்தார். ஸ்ரீநிவாசனிடம் மார்கெட் நிலவரம் எப்படி இருக்கிறது, காம்பெடிஷன் எப்படி இருக்கிறது, யார் யார் பெரிய கஸ்டமர்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன, எப்படி சேல்ஸை அதிகரிப்பது போன்ற விஷயங்களைப் பேசிவிட்டு அவரையும் அனுப்பினார்.

பின்னர் தனக்கு முடிக்க வேண்டிய வேலைகளை முதலில் கவனித்தார். அதற்குள் லஞ்ச் வந்துவிட்டது. லஞ்சுக்கு கொண்டு வந்திருந்த ஆப்பிளையும், ஆரஞ்சையும் சாப்பிட்டார். பின்னர் மறுபடியும் பியூனைக் கூப்பிட்டு ஒரு காப்பி கொண்டு வரும்படி சொல்லி அதைக் குடித்துவிட்டு தன் வேலைகளில் மீண்டும் கவனம் செலுத்தினார்.

ஷேஷாத்ரி கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார். சார் மத்த ஸ்டாஃபையும் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவா என்றார். அதுவும் நல்ல ஐடியாதான் என்றார். சரி சார், நான் ஒவ்வொருத்தரையா உள்ளே அனுப்பவா என்றார். இல்லே, அதெல்லாம் வேண்டாம், நானே வருகிறேன், அவர்கள் வேலை செய்யும் இடத்திலேயே அவர்களைப் பார்த்துவிடலாம் என்றார் கிருஷ்ணமூர்த்தி. இந்த விஷயம் புதிதாக இருந்தாலும் ஷேஷாத்ரி, சரி சார், அப்படியே செய்யலாம் என்று சொல்லி கதவைத் திறந்து அவர் வெளியே சென்றவுடன் அவர் பின்னால் தானும் வெளியே வந்தார்.

ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று அங்கேயிருந்த ஸ்டாஃபை அறிமுகம் செய்து வைத்து அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே வந்தார்.

அப்படியே சேல்ஸ் செக்ஷனுக்கும் வந்துவிட்டார்கள், அங்கேயிருந்த நித்யாவைக் காட்டி திஸ் ஈஸ் நித்யா, அஸிஸ்டெண்ட் சேல்ஸ் மானேஜர் என்று சொன்னவுடன், அவளும் எழுந்து ஹலோ என்று சொல்லி கையை நீட்டி மானேஜரின் முகத்தைப் பார்த்தாள், அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது, நித்யாவைப் பார்த்த கிருஷ்ணமூர்த்திக்கும் தூக்கிவாரிப் போட்டது.

இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே ஷாக்காகி நின்றுவிட்டார்கள்.

தொடரும்……

அன்புரசிகன்
20-03-2010, 09:57 PM
அலுவலக வேலைப்பளு உங்கள் எழுத்தில் தெரிந்தது. கண்முன்னே ஒரு அலுவலகம் தெரிந்தது.

இறுதியில் பெரிய சடன்ப்ரேக் போட்டிருக்கீங்க... ஆரம்பத்தில் தொடர்கதை என்று தெரிந்தாலும் கதையில் மறந்து பின் தொடர்கதை என்று அப்போது தான் தெரிந்தது. இரவு இரவாக எழுதினீர்களா??? அதிகாலையில் பதிந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள். தொடருங்கள்..

அமரன்
20-03-2010, 10:36 PM
அமர்க்களமான ஆரம்பம். அட்டகாசமான ஓட்டம். அசலான நிகழ்வுகளின் ஆல்பம்.

அசத்தல் அண்ணா.

மதி
21-03-2010, 03:31 AM
எங்களிக்கும் தான் ஷாக்.... அதிரடியா எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்...
மேலும் தொடருங்கள்

aren
21-03-2010, 03:34 AM
அலுவலக வேலைப்பளு உங்கள் எழுத்தில் தெரிந்தது. கண்முன்னே ஒரு அலுவலகம் தெரிந்தது.

இறுதியில் பெரிய சடன்ப்ரேக் போட்டிருக்கீங்க... ஆரம்பத்தில் தொடர்கதை என்று தெரிந்தாலும் கதையில் மறந்து பின் தொடர்கதை என்று அப்போது தான் தெரிந்தது. இரவு இரவாக எழுதினீர்களா??? அதிகாலையில் பதிந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள். தொடருங்கள்..

நன்றி அன்பு. இந்தக் கதையை இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டேன் ஆனால் ஒன்றிரண்டு பாகங்களாவது எழுதிவிட்டு பின்னர் இங்கே பதிக்கலாம் என்றிருந்தேன் ஆனால் நேரமே கிடைக்கவில்லை அடுத்த பாகம் எழுதுவதற்கு, சரி வருவது வரட்டும் என்று பதித்துவிட்டேன், இனிமேல்தான் நேரம் ஒதுக்கி அடுத்த பாகத்தை எழுதவேண்டும்.

முதலில் இதை சிறுகதையாகவே எழுதி முடித்துவிடலாம் என்று நினைத்தேன் ஆனால் இது முடியாது என்று தெரிந்தவுடன் கொஞ்சம் பெரிதாக எழுதலாம் என்று நினைத்து தொடர்கதையாக எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாது காரணம் அடுத்த பாகத்தில் என்ன எழுதப்போகிறேன் என்று எனக்கே இன்னும் தெரியாது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
21-03-2010, 03:36 AM
அமர்க்களமான ஆரம்பம். அட்டகாசமான ஓட்டம். அசலான நிகழ்வுகளின் ஆல்பம்.

அசத்தல் அண்ணா.

நன்றி அமரன்.

கதை ஆரம்பத்தில் நன்றாகவே இருக்கும் ஆனால் அந்த டெம்போவை அப்படியே மெயிண்டெயின் பண்ணுவது என்பதே பிரச்சனை. அடுத்த பாகம் இன்னும் ஆரம்பிக்கவில்லை, எப்படி வருகிறது என்று பார்க்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
21-03-2010, 03:38 AM
எங்களிக்கும் தான் ஷாக்.... அதிரடியா எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்...
மேலும் தொடருங்கள்

நன்றி மதி.

முதல் பகுதி என்பதால் கொஞ்சம் ஷாக் வைத்து எழுதினால் ஆரம்பம் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்தேன்.

தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

கலையரசி
21-03-2010, 05:03 AM
உங்களுடைய முதல் தொடர்கதையை உடனுக்குடன் படிக்காததன் விளைவு மிகவும் பின் தங்கி இன்னும் முடிக்கப்படாமலே உள்ளது. எனவே இம்முறை உடனே படிப்பதென முடிவு செய்து படித்து விட்டேன்.
புது கிளை மேலாளர் வந்து பதவியேற்கும் போது நடக்கும் நிகழ்வுகளைக் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். தொடர் கதைக்கேயுரிய ஒரு சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கிறீர்கள். நல்ல ஆரம்பம். தொடருங்கள்.
பாராட்டு.

சிவா.ஜி
21-03-2010, 06:14 AM
காட்சிகளைக் கண்முன்னேக் கொண்டுவந்துவிட்டீர்கள் ஆரென். ஒவ்வொரு கேரக்டரையும் அழகாய் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

மகளிர் மட்டும் படத்தில் கமல் என்ட்ரி ஆகும் காட்சியை நினைவுபடுத்தியது. சேஷாத்திரி, செவிட்டு மிஷின் தாத்தாவையும், ஆஷா, பசி சத்யாவையும், நித்யா, ரேவதியையும் நினைவு படுத்துகிறார்கள்.

தொடரும் போடுவதற்கு முன்னால், நல்ல சஸ்பென்ஸ் வைத்திருக்கிறீர்கள். ஏற்கனவே பரிச்சையமானவர்கள் எனத் தெரிகிறது....ஆனால் எந்தவிதத்தில் என்பதைப் படிக்க ஆவலைக் கூட்டிவிட்டீர்கள்....

புதிய தொடர்கதைக்கு வாழ்த்துக்கள் ஆரென். தொடருங்கள்.

aren
21-03-2010, 07:41 AM
உங்களுடைய முதல் தொடர்கதையை உடனுக்குடன் படிக்காததன் விளைவு மிகவும் பின் தங்கி இன்னும் முடிக்கப்படாமலே உள்ளது. எனவே இம்முறை உடனே படிப்பதென முடிவு செய்து படித்து விட்டேன்.
புது கிளை மேலாளர் வந்து பதவியேற்கும் போது நடக்கும் நிகழ்வுகளைக் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். தொடர் கதைக்கேயுரிய ஒரு சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கிறீர்கள். நல்ல ஆரம்பம். தொடருங்கள்.
பாராட்டு.

நன்றி கலையரசி. கோடையில் ஒரு குளிர்காலம் கதை முடிந்துவிட்டது, ஆகையால் நேரம் கிடைக்கும்போது மெதுவாகவே படியுங்கள்.

சஸ்பென்ஸ் வைக்கவில்லையென்றால் ஒரு சுவாரசியம் இருக்காதே, அதனால்தான் அப்படி முடித்திருக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
21-03-2010, 07:44 AM
காட்சிகளைக் கண்முன்னேக் கொண்டுவந்துவிட்டீர்கள் ஆரென். ஒவ்வொரு கேரக்டரையும் அழகாய் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

மகளிர் மட்டும் படத்தில் கமல் என்ட்ரி ஆகும் காட்சியை நினைவுபடுத்தியது. சேஷாத்திரி, செவிட்டு மிஷின் தாத்தாவையும், ஆஷா, பசி சத்யாவையும், நித்யா, ரேவதியையும் நினைவு படுத்துகிறார்கள்.

தொடரும் போடுவதற்கு முன்னால், நல்ல சஸ்பென்ஸ் வைத்திருக்கிறீர்கள். ஏற்கனவே பரிச்சையமானவர்கள் எனத் தெரிகிறது....ஆனால் எந்தவிதத்தில் என்பதைப் படிக்க ஆவலைக் கூட்டிவிட்டீர்கள்....

புதிய தொடர்கதைக்கு வாழ்த்துக்கள் ஆரென். தொடருங்கள்.

நன்றி சிவாஜி. மகளீர் மட்டும் கதையும் இப்படியா ஆரம்பித்திருக்கிறது, நான் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை. கதை அதே மாதிரியாக இருந்தால் காப்பியாகிவிடுமே. அடுத்த பாகத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், மகளீர்மட்டும் கதை மாதிரி இருந்தால் கதையை மாற்றவேண்டிவரும்.

தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
21-03-2010, 08:58 AM
கதை ஆரம்பம் இல்லை ஆரென்...அந்தப் படத்தில் கிளைமேக்ஸ் காட்சி இப்படி இருக்கும். அந்தப் படத்தோட கதையே வேற....உங்க கதையே வேற....உங்கள் காட்சியமைப்பும், பாத்திர அறிமுகமும் எனக்கு அந்தப் படத்தை நினைவு படுத்தியது. அவ்வளவுதான்

நீங்க தாரளமா தொடருங்க....!!!

பா.ராஜேஷ்
21-03-2010, 10:28 AM
துருவ நட்ச்சத்திரம் மிளிர இன்னும் நாட்களாகுமோ !! இந்த கதையும் மிக அருமையாக தொடங்கி உள்ளது. நல்ல புதிருடன் முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்.

கீதம்
21-03-2010, 11:15 PM
வாழ்த்துகள் ஆரென் அவர்களே. சூட்டோடு சூடாய் அடுத்தத் தொடர்கதையைத் துவக்கிவிட்டீர்கள். தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்விக்க வாழ்த்துகள். உங்கள் கூடவே தொடரும் எங்கள் பயணம் இனி.

aren
22-03-2010, 06:37 AM
கதை ஆரம்பம் இல்லை ஆரென்...அந்தப் படத்தில் கிளைமேக்ஸ் காட்சி இப்படி இருக்கும். அந்தப் படத்தோட கதையே வேற....உங்க கதையே வேற....உங்கள் காட்சியமைப்பும், பாத்திர அறிமுகமும் எனக்கு அந்தப் படத்தை நினைவு படுத்தியது. அவ்வளவுதான்

நீங்க தாரளமா தொடருங்க....!!!

நன்றி சிவாஜி. எங்கே முன்னாலே திரைப்படமாக வந்த கதையை அப்படியே மறுபடியும் எழுதுகிறேனோ என்ற பயம் வந்துவிட்டது.


நன்றி வணக்கம்
ஆரென்

aren
22-03-2010, 06:39 AM
துருவ நட்ச்சத்திரம் மிளிர இன்னும் நாட்களாகுமோ !! இந்த கதையும் மிக அருமையாக தொடங்கி உள்ளது. நல்ல புதிருடன் முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்.

நன்றி ராஜேஷ்.

துருவ நட்சத்திரம் ஒரு சிறந்த கதையாக வரவேண்டும் என்பதே என் ஆசை. ஆகையால் அதை கொஞ்சம் மெருகபடுத்தவேண்டும். கொஞ்சம் தாமதமாகும்.

இந்தக் கதை சும்மா ஆரம்பித்தது, இன்னும் அடுத்த பாகம் எழுத ஆரம்பிக்கவில்லை, நேரமின்மையே காரணம்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
22-03-2010, 06:41 AM
வாழ்த்துகள் ஆரென் அவர்களே. சூட்டோடு சூடாய் அடுத்தத் தொடர்கதையைத் துவக்கிவிட்டீர்கள். தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்விக்க வாழ்த்துகள். உங்கள் கூடவே தொடரும் எங்கள் பயணம் இனி.

நன்றி கீதம்.

என்னிடம் நான்கு கதைகள் எழுதுவதற்கான அவுட்லைன் உள்ளது ஆனால் அதையெல்லாம் எழுதாமல் அவுட்லைனே இல்லாத இந்தக் கதையை ஆரம்பித்திருக்கிறேன். இது கொஞ்சம் சாலஞ்சாகவே உள்ளது.

தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

govindh
22-03-2010, 08:56 AM
அடுத்த பாகம் எப்போது வரும்...என ஆவலைத்
தூண்டும்....சஸ்பென்ஸ் ....அவள் அப்படித்தான்...!
அசத்துங்கள்...ஆரேன் அவர்களே...

அக்னி
22-03-2010, 12:08 PM
அவள் எப்படித்தான் எனப் பார்த்துவிடலாம்...

கலையரசி குறிப்பிட்டதுபோல்,
உங்களது முதற் கதையோடு கூடவே வராததனால், இன்னமும் வாசித்து முடிக்கவில்லை.
இந்தக் கதையோடு கூடவே வருவேன்.

‘சட்’டெனக் கதவைத் திறந்து அலுவலகத்தினுள்ளே நுழைந்துவிட்டதான உணர்வு முதலத்தியாயத்திலேயே.
சரியான இடங்களிற் பாத்திர அறிமுகங்கள். நாமே கைகுலுக்கிக்கொள்ளும் உணர்வு.
சின்னத்திரைத் தொடராக இருந்தால், இந்த அதிர்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை அறிய, ஒரு வருடமேனும் காத்திருக்கவேண்டியிருந்திருக்கும்.

நித்யாவின் உழைப்பைப் பார்த்திபன் திருடிவிட்டாரே என்ற ஆதங்கம் எழுகின்றது.
இங்கு கதைக்காக நித்யா அதே அலுவலகத்தில் இருத்தப்பட்டதாக ஆறுதல் கொண்டாலும்,
நிஜத்தில் எத்தனை நித்யாக்கள் தங்கள் உழைப்பைத் தாமறியாமலே பறிகொடுக்கின்றனர் என்பது ஆதங்கப்படவேண்டியதே...

jayashankar
22-03-2010, 01:06 PM
ஆரென் அவர்களே!

கதைக் களத்துக்குத் தேவையான அனைத்துப் பாத்திரங்களையும் ஒரு எதிர்பார்ப்பை கொண்டு வரும் வகையில் அறிமுகப்படுத்தியிருக்கின்ற விதம் அருமை.

ஸ்ரீனிவாசனைப் பற்றிக் கூறி, அதற்கு மாற்று மருந்து இது என்பதுபோல் நித்யா அவர்களைக் கொண்டு வந்து, இப்போது கடைசியில் அதெல்லாம் ஜுஜூபி உண்மையான கதைக் களமே இனிதான் தொடங்கப் போகுது என்பது போல் தொடரும் போட்ட விதம் அருமை.

இருந்தாலும், கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு வந்து குறைந்த நேரத்தில் அங்கு வேலை செய்பவர்களை பெயரோடு அழைப்பது சிறிது நெருடலாக இருந்தாலும், முக்கிய திருப்பு முனையை நோக்கி நீங்கள் வேகமாக நகர்ந்ததால் அறிமுகம் தேவையில்லை என்று நினைத்தீர்களோ என்னமோ.

இருப்பினும், கதையில் சரளமான வார்த்தை ஜாலங்கள் கதையோடு நம்மை கட்டிப்போட செய்கின்றன.

அலுவலகத்துக்கே உரித்தான அனைத்து வசதி வாய்ப்புகளை, மனிதர்களின் பழக்க வழக்கங்களை குன்றுமணி அளவு கூட குறையாமல் அழகாக எடுத்துரைத்திருக்கின்றீர்கள்.


அடுத்த பாகத்திற்காக காத்திருக்கின்றோம்.

நன்றி.

aren
23-03-2010, 03:00 AM
அடுத்த பாகம் எப்போது வரும்...என ஆவலைத்
தூண்டும்....சஸ்பென்ஸ் ....அவள் அப்படித்தான்...!
அசத்துங்கள்...ஆரேன் அவர்களே...

நன்றி கோவிந்த்.

கதையை ஆரம்பித்துவிட்டேன் எப்படி போகிறது என்று பார்க்கலாம்.

தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
23-03-2010, 03:02 AM
அவள் எப்படித்தான் எனப் பார்த்துவிடலாம்...

கலையரசி குறிப்பிட்டதுபோல்,
உங்களது முதற் கதையோடு கூடவே வராததனால், இன்னமும் வாசித்து முடிக்கவில்லை.
இந்தக் கதையோடு கூடவே வருவேன்.

‘சட்’டெனக் கதவைத் திறந்து அலுவலகத்தினுள்ளே நுழைந்துவிட்டதான உணர்வு முதலத்தியாயத்திலேயே.
சரியான இடங்களிற் பாத்திர அறிமுகங்கள். நாமே கைகுலுக்கிக்கொள்ளும் உணர்வு.
சின்னத்திரைத் தொடராக இருந்தால், இந்த அதிர்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை அறிய, ஒரு வருடமேனும் காத்திருக்கவேண்டியிருந்திருக்கும்.

நித்யாவின் உழைப்பைப் பார்த்திபன் திருடிவிட்டாரே என்ற ஆதங்கம் எழுகின்றது.
இங்கு கதைக்காக நித்யா அதே அலுவலகத்தில் இருத்தப்பட்டதாக ஆறுதல் கொண்டாலும்,
நிஜத்தில் எத்தனை நித்யாக்கள் தங்கள் உழைப்பைத் தாமறியாமலே பறிகொடுக்கின்றனர் என்பது ஆதங்கப்படவேண்டியதே...

நன்றி அக்னி.

முதல் பாகத்தில் ஒரு சில பாத்திரங்களையாவது அறிமுகப்படுத்திடவேண்டும் என்பதால்தான் அப்படி எழுதினேன்.

நித்யா கிருஷ்ணமூர்த்தி பற்றிய விஷயங்கள் அடுத்த பாகத்தில் தெரியவரும். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
23-03-2010, 03:05 AM
நன்றி ஜெயசங்கர்.

கிருஷ்ணமூர்த்தி பாம்பே ஆஃபீஸிலிருந்து இங்கே டிரான்ஸ்பர் ஆகி வந்ததால் அவருக்கு அவருடைய டைரக்ட் ரிப்போர்ட் ஸ்டாஃபின் பெயர்கள் தெரியும். காரணம் பாம்பே ஆஃபீஸில் இவர்களைப் பற்றி ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள். அதனால்தான் கிருஷ்ணமூர்த்தி அவர்களைக் கூப்பிடும்படி சொன்னான்.

நான் கணடாவிலிருந்து மாற்றலாகி சிங்கப்பூர் வரும் போது, என் கீழ் வேலை செய்யும் என்னுடைய டைரக்ட் ரிப்போர்ட் ஸ்டாஃப்களின் பெயர்களையும் எனக்கு சரி சமமாக வேலை செய்யும் மானேஜர்களின் பெயர்களையும் எனக்கு கொடுத்துவிட்டார்கள். ஆகையால் நான் சிங்கப்பூர் வந்தவுடன் எனக்கு என்ன செய்யவேண்டும் என்று முன்பே தெரிந்திருந்தது. அதையே இங்கேயும் பயன்படுத்தினேன்.

அடுத்த பாகம் விரைவில் வரும், தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

jayashankar
23-03-2010, 08:29 AM
நன்றி ஜெயசங்கர்.

கிருஷ்ணமூர்த்தி பாம்பே ஆஃபீஸிலிருந்து இங்கே டிரான்ஸ்பர் ஆகி வந்ததால் அவருக்கு அவருடைய டைரக்ட் ரிப்போர்ட் ஸ்டாஃபின் பெயர்கள் தெரியும். காரணம் பாம்பே ஆஃபீஸில் இவர்களைப் பற்றி ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள். அதனால்தான் கிருஷ்ணமூர்த்தி அவர்களைக் கூப்பிடும்படி சொன்னான்.

நான் கணடாவிலிருந்து மாற்றலாகி சிங்கப்பூர் வரும் போது, என் கீழ் வேலை செய்யும் என்னுடைய டைரக்ட் ரிப்போர்ட் ஸ்டாஃப்களின் பெயர்களையும் எனக்கு சரி சமமாக வேலை செய்யும் மானேஜர்களின் பெயர்களையும் எனக்கு கொடுத்துவிட்டார்கள். ஆகையால் நான் சிங்கப்பூர் வந்தவுடன் எனக்கு என்ன செய்யவேண்டும் என்று முன்பே தெரிந்திருந்தது. அதையே இங்கேயும் பயன்படுத்தினேன்.

அடுத்த பாகம் விரைவில் வரும், தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நீங்க சொன்னா சரியாத்தாங்க இருக்கும்.

நான் இதுவரை பார்த்ததில்லை அனுபவித்ததில்லை. எனவேதான் என் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள கேட்டேன்.

இப்படிப்பட்ட நல்ல முறை அனைத்து இடங்களிலும் பின்பற்றப் பட வேண்டும். முதல் நாளே நாம் ஒரு புரிதலோடு புதியவர்களை அணுகவும் முடியும், அவர்களும் நம்மை அன்போடு மதிப்பார்கள்.

தொடருங்கள் ஆரென் அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றோம்.

Akila.R.D
23-03-2010, 09:59 AM
அடுத்த கதை ஆரம்பிச்சாச்சா...
தினமும் புது அத்தியாயம் இருக்கானு பார்க்க வருவேன்...

ரொம்ப காக்க வைக்காம சீக்கிரமா அடுத்த பகுதியை போடுங்க ஆரேன்

aren
23-03-2010, 10:11 AM
நீங்க சொன்னா சரியாத்தாங்க இருக்கும்.

நான் இதுவரை பார்த்ததில்லை அனுபவித்ததில்லை. எனவேதான் என் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள கேட்டேன்.

இப்படிப்பட்ட நல்ல முறை அனைத்து இடங்களிலும் பின்பற்றப் பட வேண்டும். முதல் நாளே நாம் ஒரு புரிதலோடு புதியவர்களை அணுகவும் முடியும், அவர்களும் நம்மை அன்போடு மதிப்பார்கள்.

தொடருங்கள் ஆரென் அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றோம்.

நன்றி ஜெயசங்கர். இதையேதான் அனைத்து இடங்களிலும் பின்பற்றுகிறார்கள். ஆனால் மானேஜர் கம்பெனிக்கு புதியவராக இருந்தால் அவருக்கு அனைவரையும் தெரிந்திருக்க சாத்தியமில்லை, ஆனால் அவருக்கு இந்த விஷயங்கள் வேலையில் சேருவதற்கு முன்பாகவே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அடுத்த பாகம் இன்னும் தொடங்கவில்லை, கூடியவிரைவில் வருகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
23-03-2010, 10:12 AM
அடுத்த கதை ஆரம்பிச்சாச்சா...
தினமும் புது அத்தியாயம் இருக்கானு பார்க்க வருவேன்...

ரொம்ப காக்க வைக்காம சீக்கிரமா அடுத்த பகுதியை போடுங்க ஆரேன்

நன்றி அகிலா.

அய்யோ, போன தடவை மாதிரியே இந்த தடவையும் பிரஷர் கொடுக்கிறீர்களே, பார்க்கிறேன், எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, கொடுத்துவிடுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
23-03-2010, 06:08 PM
2. பெண் பார்க்கும் படலம்!!!

வெங்கடாசலம் தனக்கு வயதாகிக்கொண்டே போவதால் எப்படியாவது நித்யாவையாவது கரைசேர்த்துவிட வேண்டும் என்று மிகுந்த முனைப்புடன் இருந்தார். நித்யாவுக்கு கல்யாணமாகிவிட்டால் அடுத்தது இருக்கும் வித்யாவையும் கடைசிப் பையன் சுந்தரையும் எப்படியாவது கொஞ்சம் படிக்க வைத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றே எண்ணினார்.

நித்யாவைவிட வித்யா இரண்டு வயது சின்னவள், சுந்தர் வித்யாவைவிட இரண்டு வயது சின்னவன்.

நித்யாவுக்கு இப்போது 21 வயதாகிறது, பிஎஸ்ஸி கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்தாள், இன்னும் மூன்று மாதம் இருக்கிறது அவளுக்கு கடைசி வருஷம் பரிட்சை எழுதுவதற்கு.

இப்போதே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தால் தான் அவள் படிப்பு முடிந்தவுடன் ஒரு நல்ல இடமாக கிடைக்கும் என்று நினைத்து வெங்கடாசலம் மாப்பிள்ளை வேண்டும் என்று தெரிந்தவர்கள் அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். தனக்குத் தெரிந்த ஒரு ப்ரோக்கரிடமும் நல்ல வரணாகப் பார்க்கச் சொல்லியிருந்தார்.

இதைக் கேள்விப்பட்ட நித்யா நேராக அப்பாவிடம் வந்து, அப்பா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், நான் படிப்ப முடிச்சுட்டு வேலைக்குப் போகலாம் என்று இருக்கிறேன் என்றாள்.

அதற்கு வெங்கடாசலம், அதெல்லாம் சரிதான் நித்யா, எனக்கோ இப்போ வயசாகிவிட்டது, இன்னும் இரண்டு வருடத்தில் நான் ரிடையர் ஆகப்போகிறேன், அதற்குள் உனக்காவது கல்யாணம் பண்ணிவிட்டால் வித்யாவைப் பிறகு கல்யாணம் பண்ணிக்கொடுப்பது கொஞ்சம் ஈஸியாக இருக்கும் எனக்கு என்றார்.

நீங்க சொல்றது சரிதான் அப்பா, ஆனால் நான் படிப்பை முடித்தவுடன் ஒரு நல்ல வேலையாகப் பார்த்துக்கொண்டால், அதன் பிறகு மாப்பிள்ளை தானாகவே நம்ம வீட்டைத் தேடி வந்துவிடுவாரே, நாம் கஷ்டப்படாமல் அப்போ கல்யாணத்தை வச்சுக்கலாமே என்றாள் நித்யா.

இல்லையம்மா, என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தாதே, நான் எப்படியாவது முதலில் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுறேன், நீ கல்யாணத்துக்கப்புறம் உன் கணவரிடம் கேட்டு அவர் அனுமதி கொடுத்தால் பின்னர் வேலைக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார்.

அப்பாவின் விடாப்பிடியான பதிலால் நித்யாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சரிப்பா உங்க இஷ்டப்படியே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், ஆனால் ஒரு கண்டிஷன், எனக்கு வேலை கிடைப்பதற்கு முன்பாக கல்யாணம் நடந்தாலும் நான் நிச்சயமாக வேலைக்குப் போயே தீருவேன், அது போல, என்னுடைய முழுச் சம்பளத்தையும் வித்யா கல்யாணம் முடிந்து மற்றும் சுந்தர் படிச்சு முடிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்குப் போகிற வரைக்கும் உங்களிடம்தான் கொடுப்பேன், மாப்பிள்ளை வீட்டுக்குக் கொடுக்கமாட்டேன், இதுக்கு சம்மதிக்கும் மாப்பிள்ளையாக இருந்தால் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றாள் நித்யா.

அது எப்படி சாத்தியமாகும், எந்த மாப்பிள்ளை அதை ஒத்துக்குவான் என்றார் வெங்கடாசலம். அதனாலேதான் நான் அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கிறேன், நீங்கள் தான் அதை காது கொடுத்து கேட்கவில்லை என்றாள் நித்யா.

சரிம்மா, நான் முன்னாடியே இதை மாப்பிள்ளையிடமும் அவர் குடும்பத்தாரிடமும் சொல்லிவிடுகிறேன், இப்போ சம்மதம் தானே என்றார் வெங்கடாசலம் சிரித்துக்கொண்டே.

நித்யா பதில் ஒன்றும் சொல்லாமல் அவள் ரூமுக்குள் சென்றுவிட்டாள். உடனே எங்கே மாப்பிள்ளை வந்துவிடப்போகிறான் அதுவும் இத்தனை கண்டிஷன்களுடன், அதுக்கு இன்னும் நாளாகும், அதுக்குள்ளே வேறு ஏதாவது சொல்லி அப்பாவின் மனதை மாற்றிவிடலாம் என்றே நினைத்தாள் நித்யா. அதனால் அப்பா வரண் பார்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தினமும் காலேஜுக்குப் போய் வந்துகொண்டிருந்தாள். அவளுக்கு இது கடைசி வருடமாதலால் அனைத்து சப்ஜெக்டிலும் நல்ல மார்க் வாங்கவேண்டும் என்று நினைத்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.

ஒரு நாள் வழக்கம் போல காலையில் எழுந்தவுடன் பாடத்தை கொஞ்சம் படித்துவிட்டு குளித்து காலேஜுக்குப் போகக் கிளம்பினாள். அப்போ சமையலறைக்குப் போனவுடன் அங்கே அம்மா செளந்தர்யா நித்யாவிடம், சாயந்திரம் சீக்கிரமே வந்துடு எங்கேயும் வெளியே சுற்றிவிட்டு வராதே என்றாள்.

எதுக்கும்மா சீக்கிரம் வரணும் என்றாள் நித்யா.

உன்னை பொண்ணு பார்க்க இன்னிக்கு சாயந்திரம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் இன்னும் ஒன்றிரண்டு பேரும் வருவதாக உன் அப்பாதான் நேத்து ராத்திரி சொன்னார் என்றாள்.

ஏம்மா, மாப்பிள்ளை யாரு, என்ன வேலை செய்கிறார் என்று யாருமே என்கிட்டே சொல்லவில்லை, அட்லீஸ்ட் அவரோட போட்டோவையாவது என்கிட்டே காண்பித்திருக்கலாமே, அதுகூட எனக்கு காண்பிக்கவில்லையே, உங்க இஷ்டத்துக்கு நீங்களே டிசைட் பண்ணிட்டீங்களா என்னோட முடிவே உங்களுக்கு வேண்டாம்னு நினைச்சுட்டீங்களா என்று கத்தினாள் நித்யா.

நான் தான் அவரோட வாழப்போறவள், அதனாலே என்கிட்டே நீங்க ஒரு வார்த்தையாவது கேட்டிருக்கனும் என்றாள் நித்யா.

என்கிட்டே எதுவும் கத்தாதே, நீ வேண்டுமானால் உன் அப்பாவிடம் போய் கேள் என்று அம்மா கத்தினாள்.

சரி கேட்கிறேன் எனக்கு என்ன அப்பாகிட்டே பயமா என்ன என்று சொல்லிக்கொண்டே வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவிடம் நேராகவே சென்றாள் நித்யா.

அப்பா என்னப்பா இது, நீங்களே முடிவு செஞ்சிட்டீங்க என்னைக் கேட்காமலேயே என்று நேராகவே கேட்டாள் நித்யா.

நீ எதைப் பத்தி பேசறே, இன்னிக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்களே அதைப் பத்தி பேசறயா என்று எதுவும் தெரியாததுபோல் கேட்டார் வெங்கடாசலம்.

ஆமாம்பா அதைப் பத்தித்தான் கேட்கிறேன். அது போகட்டும், மாப்பிள்ளையிடம் என்னோட கண்டிஷனைச் சொல்லிட்டீங்களா என்றாள்.

நீ எந்த கண்டிஷனைச் சொல்றே என்றாள் ஒன்றும் தெரியாதது போல்.

என்னப்பா நீங்கள் இப்படி பேசறீங்க, நான் தான் கல்யாணம் ஆனதும் வேலைக்குத்தான் போவேன்னு.

வேலைக்குப் போகிறதைப் பத்தி சொல்றேயா, மாப்பிள்ளை வீட்டாரும் நீ வேலைக்கு நிச்சயம் போகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள், அதனால் இது ஒரு பிரச்சனையே இல்லை என்றார்.

அப்போ இது பிரச்சனையில்லைன்னா, இன்னொன்னு இன்னும் இருக்கே என்றாள் நித்யா.

நீ வேறு என்னத்தைச் சொல்றே என்றார் வெங்கடாசலம்.

நான் வித்யா கல்யாணமாகி போகிற வரையும், சுந்தருக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து செட்டிலாகும் வரையும் சம்பளத்தை நம்ம வீட்டுக்குத்தான் கொடுப்பேன் என்று சொன்னேனே, அதையும் சொல்லிவிட்டீர்களா என்றாள்.

அதுவா, அதையும் நான் ப்ரோக்கரிடம் சொல்லி சொல்லச் சொல்லிவிட்டேன், அவனும் சொல்லிவிடுவதாக சொல்லியிருக்கிறான் என்றார் வெங்கடாசலம்.

இதுலே ஏதாவது பிரச்சனை வந்தால் கல்யாணம் ஆனபிறகும் நான் வெளியே வந்துவிடுவேன், அதனாலே கொஞ்சம் யோசித்தே உங்க முடிவை எடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கே பதிலுக்குக் காத்திராமல் உள்ளே போனாள் நித்யா.

சாயந்திரம் அம்மா சொன்ன மாதிரியே காலேஜிலிருந்து சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்துவிட்டாள் அப்பாவை சங்கடப்படுத்தக்கூடாது என்ற காரணத்தால். பல விஷயங்களில் அவளுக்கும் அவள் அப்பாவுக்கும் ஒத்துப்போகாமல் இருந்தாலும் அவள் தன் அப்பாவை மிகவும் நேசித்தாள், அவர் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தாள். அதனால் அப்பா கேட்டுக்கொண்டதற்காக சீக்கிரமாகவே காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.

ஆனால் அப்பா மேல் மதிப்பு வைத்திருந்தாலும் அவளுக்கென்று ஒரு சில கொள்கைகளை வைத்திருந்தால், அதை எப்பொழுதும் நித்யா விட்டுக்கொடுத்ததேயில்லை. அவள் அப்பாவிடம் பேசி அவருடைய சம்மதத்தை எப்பொழுதும் வாங்கிவிடுவாள். ஆனால் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கொள்கிற இந்த விஷயத்தில்தான் அப்பாவின் பிடிவாதம் கொஞ்சமும் குறையவேயில்லை. நித்யாவிற்கு காரணம் புரியாமல் இல்லை, இருந்தாலும் அவளால் இந்த அவசர கல்யாணத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, அதே சமயம் அவள் அப்பாவை எதிர்த்து பேசவும் முடியாமல் சரி நடப்பது நடக்கட்டும் என்று விட்டுக்கொடுத்துவிட்டாள் பெண் பார்க்க வருவதற்கு.

சாயந்திரம் காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் குளித்து வேறு ஒரு நல்ல சுடிதாரை எடுத்து போட்டுக்கொண்டு அவள் ரூமிலிருந்து வெளியே வந்தாள் நித்யா.

நித்யா சுடிதாருடன் வெளியே வருவதைப் பார்த்த அவள் அம்மா செளந்தர்யா, என்னம்மா நீ சுடிதார் போட்டுக்கொண்டு இருக்கே, மாப்பிள்ளை வீட்டிலிருந்து அவர்கள் வரும் நேரமாகிவிட்டது, உள்ளே போய் ஒரு நல்ல புடவையா எடுத்து கட்டிக்கொள் என்றாள்.

சுடிதாருக்கு என்னம்மா குறைச்சல், இது நல்லாத்தான் இருக்கு, அது போக இது கொஞ்சம் சிம்பிளாகவும் இருக்கு. புடவை கட்டிக்கொண்டு இந்த பெண் பார்க்கும் படலத்தை ஒரு பெரிய விஷயமாக்கவேண்டாம் என்றாள் நித்யா.

என்னம்மா நீ இப்படி பேசறே, பெண் பார்க்க அடிக்கடியா மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவார்கள். ஒரு தடவைத்தான் வருவார்கள், அப்போ நீ நல்ல புடவையா கட்டிக்கொண்டு இருந்தால்தான் வருபவர்களும் உன்னைப் பார்த்து சம்மதம் சொல்வார்கள், ஏனோதானோ என்று ஒரு சுடிதாரைப் போட்டுக்கொண்டு நின்றால் அது நன்றாக இருக்காது என்றாள் செளந்தர்யா.

இப்போ என்னம்மா சொல்லறே நீ என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் நித்யா.

நீ உள்ளே போய் ஒரு நல்ல புடவையை முதலில் கட்டிக்கொண்டு வா, அப்புறம் நாம் இதைப் பத்தி பேசலாம் என்றாள் செளந்தர்யா.

நித்யாவிற்கு புடவைக் கட்டிக்கொள்ள இஷ்டம் இல்லாவிட்டாலும் அம்மாவிடம் பேசுவது வீண்தான், அவள் நம்மை சுடிதாருடன் இருக்க சம்மதிக்க மாட்டாள் என்று தெரியுமாகையால், ரூமுக்குள் மறுபடியும் சென்று சுடிதாரை கழட்டிவிட்டு ஒரு நல்ல புடவையை எடுத்து கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

அம்மா சமையலறையில் வாங்கிவைத்திருந்த பூவை எடுத்து நித்யாவிடம் கொடுத்து தலையில் வைத்துக்கொள்ளச் சொன்னாள்.

நித்யாவும் மறுப்பேதும் சொல்லாமல் பூவை வைத்துக்கொண்டு அம்மா முன் வந்து நின்றாள்.

அப்சரஸ் மாதிரி ஒரு அழகுப்பதுமை தன் கண்முன்னே நிற்பதைப் பார்த்து செளந்தர்யா மிகவும் பெருமிதம் அடைந்தாள். தான் பெற்ற மகள் இவ்வளவு அழகாக இருக்கிறாளே என்ற சந்தோஷம் அவள் முகத்தில் தெரிந்தது.

இப்போதான் நீ மகாலஷ்மி மாதிரி இருக்கிறாய், சுடிதார் எல்லாம் சும்மா இருக்கும் நாட்களில் போட்டுக்கிறதுக்கு, இது மாதிரியான நாட்களுக்கு புடவையை விட்டா எதுவும் எடுபடாது என்று பெருமையாகச் சொன்னாள்.

சரிம்மா, உன்னோட புராணத்தை இத்தோட நிறுத்திக்கோ, எனக்கு முதலில் சாப்பிட ஏதாவது கொடு, அவர்களெல்லாம் வந்து எப்போ போவார்கள் என்று தெரியாது, அதனாலே என்னை அவர்கள் போகிறவரையில் பட்டினி போட்டுடாதே என்றாள்.

சரி வா என்று சொல்லிக்கொண்டே தட்டில் கொஞ்சம் பலகாரத்தை வைத்து அவளுக்கு கொடுத்துவிட்டு, சமையலறைக்கு மறுபடியும் போய், ஒரு டம்பளில் காப்பி கலந்துவந்து அதையும் நித்யாவிற்குக் கொடுத்தாள்.

நித்யா அழகாக அதை தன் கைகளில் எடுத்து லாவகமாக வாயில் போட்டுக்கொண்டாள். அதைப் பார்த்த செளந்தர்யாவிற்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது. சாப்பிடுவதில் கூட ஒரு நளினத்துடன் இருக்கும் தன் மகளை நினைத்து பெருமை பட்டாள்.

போற இடத்தில் எல்லோருக்கும் மனம் கோணாமல் இவள் நடந்தகொள்ளவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டாள்.

நித்யா அம்மா கொடுத்ததைச் சாப்பிட்டுவிட்டு காப்பியையும் குடித்துவிட்டு தட்டையும் டம்ளரையும் சிங்கில் போட்டுவிட்டு கையை அலம்பிக்கொண்டு வெளியே வந்தாள்.

அப்பா கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பதுபோல் நித்யாவிற்குத் தெரிந்தது. நேராக அப்பாவிடம் போய், என்னப்பா, ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் என்றாள்.

என்னம்மா பண்றது, இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து எல்லாம் நன்றாக நடக்கவேண்டுமே என்று கொஞ்சம் கவலையாக இருக்கிறது என்றார்.

நீங்க எதுக்கப்பா கவலைப்படவேண்டும், எல்லாம் நல்லபடியாக நடந்தால் நல்லது, அப்படி நடக்கவில்லையென்றால் இன்னொரு மாப்பிள்ளை கிடைக்காமலா போய்விடப்போகிறார். இவர் இல்லைன்னா இன்னொருத்தர் என்று வெகு கூலாகச் சொன்னாள் நித்யா. அவள் சொல்வதைப் பார்த்து என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றார் வெங்கடாசலம்.

வித்யாவும் காலேஜிலேர்ந்து வந்துவிட்டாள். செளந்தர்யா அவளை உள்ளேபோய் குளித்துவிட்டு ஒரு சுடிதாரை எடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னாள்.

என்னம்மா, நித்யா மட்டும் சூப்பரா புடவையிலே இருக்கா, நான் மட்டும் ஒரு சாதாரண சுடிதாரைப் போட்டுக்கொள்ளவேண்டுமா என்றாள் வித்யா.

அவளை பொண்ணு பார்க்க இன்னிக்கு மாப்பிள்ளை வருகிறார், அதனாலே அவள் புடவையைக் கட்டிக்கொண்டு இருக்கா, உன்னை என்னிக்கு பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வருகிறாரோ அன்னிக்கு நீயும் ஒரு நல்ல புடவையை எடுத்து கட்டிக்கலாம், அதுக்கு இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகும், அதனாலே அதைப் பத்தி அப்புறமா யோசிக்கலாம் என்று சொல்லி வித்யாவை பாத்ரூமூக்குள் தள்ளினாள்.

சுந்தரும் அப்பாவுக்கு உதவியாக சோபா செட்டை கொஞ்சம் சரியாக நகர்த்தி போட்டான், பிறகு ஹாலில் இருக்கும் புத்தகங்களையும் நியூஸ் பேப்பர்களையும் அங்கிருந்து எடுத்து இன்னொரு ரூமில் வைத்துவிட்டு ஹாலில் இருக்கும் ஷோகேஸின் தூசியையும் சோபாவில் இருக்கும் தூசியையும் ஒரு துணியால் துடைத்தான்.

11வதுதான் படிக்கிறான், அதற்குள் தன் மகனுக்கு நல்ல பொறுப்பு வந்துவிட்டதே என்று நினைத்து சந்தோஷப்பட்டாள் செளந்தர்யா.

வாசலில் யாரோ வருவதைப் பார்த்து வெங்கடாசலம் எழுந்தார். ப்ரோக்கர் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தார். அவர் உள்ளே வரும்பொழுதே, மாப்பிள்ளையிடம் எப்படி இந்த வீட்டிற்கு வரவேண்டும் என்று சரியான வழியைச் சொல்லியிருக்கிறேன் அதனாலே இங்கே வருவதில் அவர்களுக்கு பிரச்சனையிருக்காது என்றார்.

அப்படி பிரச்சனை ஏதாவது இருந்தால் சுந்தரை பைக்கை எடுத்துக்கொண்டு போய் அவர்களை இங்கே அழைத்துக்கொண்டு வரலாம் என்றார் வெங்கடாசலம். அதுக்கு தேவையிருக்காதுன்னு நான் நினைக்கிறேன் என்றார் ப்ரோக்கர். சரியென்று சொல்லி ப்ரோக்கரை உட்காரச் சொல்லிவிட்டு வெங்கடாசலம் மற்ற விஷயங்களை கவனிக்கத் தொடங்கினார்.

வருகிறவர்களுக்கு கொடுக்க பட்சணம் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டு செளந்தர்யாவும் குளித்து தன்னை தயார் செய்துகொள்ள உள்ளே போனாள்.

அனைவரும் ரெடியாகி, ஹாலில் மாப்பிள்ளை வீட்டார் வருவதற்க்காக காத்திருந்தார்கள்.

வீட்டு வாசலில் கார் வந்து நிற்பதைப் பார்த்து சுந்தர், மாப்பிள்ளை வீட்டார்கள் வந்துவிட்டார்கள் என்றவுடன், வெங்கடாசலமும் செளந்தர்யாவும் எழுந்து அவர்களை வரவேற்க வெளியே சென்றார்கள். ப்ரோக்கரும் கூடவே வெளியே வந்தார். சுந்தர் வீட்டு வாசக்கதவு அருகில் நின்றிருந்தான். நித்யாவும் வித்யாவும் அவர்கள் ரூமூக்குள் சென்று உட்கார்ந்துகொண்டார்கள். மாப்பிள்ளை வீட்டார் வந்து உட்கார்ந்தவுடன் அம்மா கூப்பிடுகிறேன், அது வரைக்கும் இருவரையும் உள்ளேயே இருக்கும்படி சொல்லியிருக்கிறாள். அம்மா பேச்சை இருவரும் அவ்வளவு பொருட்படுத்தாவிட்டாலும் இந்த விஷயத்தில் இருவரும் ஒத்துக்கொண்டு அம்மா மறுபடியும் சொல்லாமலேயே அவர்கள் ரூமூக்குள் சென்று உட்கார்ந்துகொண்டார்கள்.

நித்யாவும் வித்யாவும் உபயோகிக்கும் ரூமின் ஜன்னல் வீட்டின் பக்கவாட்டுப் பகுதியில் இருப்பதால் அவர்கள் வீட்டிலிருந்து அடுத்த வீட்டை மட்டுமே பார்க்கமுடியும், மாப்பிள்ளையும் அவர் வீட்டாரும் வாசலில் வந்து இறங்குவதை ஜன்னல் வழியாக பார்க்கமுடியவில்லை. அதனால் அவர்கள் உள்ளே வந்து உட்காரட்டும் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருவரும் ரூமூக்குள்ளேயே உட்கார்ந்திருந்தார்கள்.

மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் மற்றும் அவர்களுடன் வேறு இருவரும் வந்தார்கள். அனைவரையும் வெங்கடாசலமும் செளந்தர்யாவும் வரவேற்று உள்ளே அழைத்துவந்தார்கள்.

மாப்பிள்ளை வீட்டார்கள் நாலவரும் அங்கேயிருந்த சோபாவில் உட்கார்ந்தார்கள். மாப்பிள்ளையின் அம்மாவுடன் வந்திருந்த ஒரு பெண் தன் பையில் வைத்திருந்த ஒரு கண்டு மல்லிகைப் பூவையையும், ஒரு சீப்பு வாழைப்பழத்தையும் ஒரு டஜன் ஆப்பிள் பழத்தையும் ஒரு தட்டில் வைத்து செளந்தர்யாவிடம் கொடுத்தார்கள். செளந்தர்யாவும் அதை வாங்கிக்கொண்டு கீழே போட்டிருந்த பாயில் வைத்தாள்.

மாப்பிள்ளையிடமும் அவருடன் வந்திருந்த இன்னொருவரிடமும் வெங்கடாசலமும் ப்ரோக்கரும் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அதே மாதிரி செளந்தர்யாவும் மாப்பிள்ளையும் அம்மாவிடமும் அவருடன் கூட வந்திருந்த பெண்மணியிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.

வெங்கடாசலம் செளந்தர்யாவைப் பார்த்து கண்களைக் காட்டினார். செளந்தர்யாவும் புரிந்துகொண்டு எழுந்து உள்ளே போய் அனைவருக்கும் தட்டில் இனிப்பும் காரமும் வைத்துவிட்டு வித்யாவைக் கூப்பிட்டாள்.

வித்யாவும் இதற்காகவே காத்திருந்ததால் உடனே என்னம்மா என்று சொல்லிக்கொண்டு சமையலறைக்குள் வந்தாள்.

இந்த தட்டையெல்லாம் ஒவ்வொன்னா எடுத்துக்கொண்டு அவர்களுக்குக் கொடு. முதலில் மாப்பிள்ளைக்குக் கொடு, பின்னர் அவர் கூட வந்திருக்கவருக்குக் கொடு, அதுக்கப்புறம் மாப்பிள்ளையின் அம்மாவுக்குக்கொடு பின்னர் கூட வந்தவங்களுக்குக் கொடு, கடைசியாக ப்ரோக்கருக்குக்கொடு என்று ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னாள்.

வித்யாவும் சரிம்மா என்று சொல்லிவிட்டு, துப்பட்டாவை சரியாக கழுத்தில் போட்டுக்கொண்டு இரண்டு கைகளில் இரண்டு தட்டுகளை எடுத்துக்கொண்டு ஹாலுக்குப் போய் மாப்பிள்ளையிடமும் அவருடன் வந்திருந்தவரிடமும் கொடுத்தாள்.

வெங்கடாசலம் வித்யாவை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார், இங்கேயுள்ள காலேஜில் முதல் வருடம் படிக்கிறாள் என்று சொன்னார். அனனவரும் அவளை இன்முகத்துடன் பார்த்து புன்னகைத்தார்கள். வித்யாவுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்ததால் என்ன சொல்வது என்று தெரியாமல் மறுபடியும் சமையலறைக்குள் வந்து இன்னும் இரண்டு தட்டுகளை எடுத்துக்கொண்டு போய் மற்றவர்களுக்குக் கொடுத்தாள்.

சுந்தரும் அங்கேயே நின்றிருந்தான். வெங்கடாசலம் அவனையும் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தார்.

எல்லோருக்கும் இனிப்பும் காரமும் கொடுத்தாகிவிட்டது, செளந்தர்யா நித்யாவின் ரூமூக்குள் சென்று நித்யாவை வெளியே வரச்சொன்னாள். ஒரு தட்டில் காப்பி டம்ளர்களை வைத்து அனைவருக்கும் காப்பியைக் கொடுக்கச் சொன்னாள். நித்யாவும் முதலில் மாப்பிள்ளைக்கும் பின்னர் மற்றவர்களுக்கும் காப்பியைக் கொடுத்துவிட்டு அங்கேயே நின்று கொண்டாள். மாப்பிள்ளையின் அம்மா அவளை தன் அருகில் உட்காரச் சொன்னாள்.

மாப்பிள்ளையின் அம்மா தன் மகனைப் பார்த்தாள், மகனும் சம்மதம் என்று சொல்வதுபோல் சந்தோஷத்துடன் சைகை செய்தான். அதைப் பார்த்தவுடன் மாப்பிள்ளையின் அம்மா சந்தோஷத்துடன் பேச்சை ஆரம்பித்தாள்.

எங்களுக்கு பொண்ணை பிடித்திருக்கிறது, எங்களுக்கு பூரண சம்மதம் என்றாள். இதைக் கேட்ட செளந்தர்யாவுக்கும் வெங்கடாசலத்தும், சுந்தருக்கும், வித்யாவுக்கும் ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. நித்யா தலை குணிந்துகொண்டு அங்கே உட்கார்ந்திருந்தாள்.

மாப்பிள்ளையின் அம்மா நித்யாவைப் பார்த்து, படிப்பு எப்போ முடியும் என்று கேட்டாள். ஜூன் மாதம் கடைசி வருடப்பரிட்சை இருக்கு, அது முடிஞ்சதும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரிஸல்ட் வரும் என்றாள். மாப்பிள்ளை நித்யா பதில் சொல்வதையே ஆவலுடன் கேட்டுக்(பார்த்துக்) கொண்டிருந்தார்.

படிச்சுட்டு என்ன செய்யறதா உத்தேசம் என்று மறுபடியும் இன்னொரு கேள்வியைக் கேட்டாள் மாப்பிள்ளையின் அம்மா.

படிச்சுட்டு வேலைக்குத்தான் போகப்போகிறேன் என்றாள். அந்த வார்த்தையில் கொஞ்சம் அழுத்தம் தெரிந்தது.

ஆமாம், வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வது, வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளத்தான் நான் இருக்கிறேனே, நீ தாராளமாக வேலைக்குப் போகலாம் என்றாள்.

என் பையனுக்கும் நீ வேலைக்குப் போகவேண்டும் என்பதே விருப்பம். இப்போவெல்லாம் ஒரு சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவது என்பதே முடியாத காரியம் என்றாள்.

இதைக் கேட்டவுடன் நித்யா தன் அப்பாவைப் பார்த்தாள், அப்பா உடனே ப்ரோக்கரைப் பார்த்தார். ப்ரோக்கர் இதை காதில் வாங்கிக்கொண்டதுபோல் காட்டிக்கொள்ளாமல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தார்.

நித்யாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவள் தன் அப்பாவை சைகையில் பேசும்படி சொன்னாள். அவர் கொஞ்சம் பேசத் தயங்கினார். நல்ல சம்மந்தம், இந்த ஒரு விஷயத்துக்காக இந்த சம்மந்தத்தை விடலாமா என்று கொஞ்சம் தயக்கம் அவருக்கு. அதனாலே அவர் இதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை.

நித்யாவிற்கு இன்னும் கோபம் குறையவில்லை, தன் அப்பா எதுவும் பேசாமல் இருக்கிறாரே என்ற கோபம் இன்னும் அவள் முகத்தில் தெரிந்தது. சரி அப்பா பேசவில்லையென்றால் தான் பேசியே ஆகவேண்டும் இல்லையென்றால் இவர்கள் முகூர்த்தத் தேதியை குறித்துவிடுவார்கள் என்பதால் தானே பேசுவதற்கு தன்னை ஆயத்தம் செய்தாள்.

மெதுவாக கணைத்துக்கொண்டு, உங்ககிட்டே ப்ரோக்கர் எல்லா விஷயத்தையும் சொன்னாரா என்று மாப்பிள்ளையின் அம்மாவிடம் கேட்டாள் நித்யா.

என்ன விஷயத்தைப் பத்தி நீ பேசறே என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் மாப்பிள்ளையின் அம்மா.

என் படிப்பு முடிஞ்சதும் எனக்கு வேலைக்குப் போகவேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கு, அதனாலே கல்யாணத்துக்கப்புறமும் நான் வேலைக்குப் போகவேண்டும் என்றாள்.

அதை நாங்களே சொன்னோமே, நீ வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்று சொன்னாள் மாப்பிள்ளையின் அம்மா.

அது சரி, நீங்க சொன்னீங்க, ஆனா உங்ககிட்டே ப்ரோக்கர் இன்னொன்னையும் சொன்னாரா என்று தெரியவில்லை.

என்னுடைய அப்பாவுக்கு இப்போ 58 வயசாகிறது, அவர் இன்னும் இரண்டு வருஷத்தில் ரிடையர் ஆகிவிடுவார், என்னுடைய தங்கை வித்யா இப்போதான் ஃபர்ஸ்ட் இயர் காலேஜில் படித்துக்கொண்டு இருக்காள், அதே மாதிரி என் தம்பியும் இப்போதான் 11வது படித்துக்கொண்டு இருக்கான். அதனாலே என் அப்பா ரிடையர் ஆகிவிட்டால் என் குடும்பத்தை இவர்கள் ஒரு நிலைக்கு வரும் வரை காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு என்றாள்.

இதைக் கேட்டவுடன், இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நினைத்தாள் மாப்பிள்ளையின் அம்மா, ஆனால் நித்யா பேசுவதைத் தடுக்கவில்லை.

நித்யா தொடர்ந்து, இப்படி ஒரு நிர்பந்தம் இருக்கிறதாலே நான் கல்யாணம் ஆனாலும் வேலைக்குப் போயாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது, அது போல என்னோட சம்பளம் முழுவதையும் என் தம்பி சுந்தர் தலையெடுத்து ஒரு நல்ல நிலமைக்கு வரும் வரை என் வீட்டாரிடம்தான் கொடுக்கவேண்டியது வரும். அதுக்கு நீங்கள் சம்மதித்திருக்கிறீர்கள் அதனால் தான் என்னைப் பெண் பார்க்க வருகிறீர்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் உங்களுடைய பேச்சிலிருந்து இந்த விஷத்தை ப்ரோக்கர் உங்களுக்குச் சொல்லவில்லை என்று தெரிகிறது என்றாள் நித்யா.

பின்னர் தொடர்ந்து, இது எப்படிம்மா சாத்தியம். கல்யாணம் ஆனபிறகு நீ வாங்கும் சம்பளம் அனனத்தும் எங்கள் வீட்டுக்குத்தான் வரவேண்டும் அதெப்படி நீ உங்க வீட்டுக்குக் கொடுக்கமுடியும் என்றாள்.

நீங்க இப்போ இருக்கும் வீடு யாருடையது என்றாள் நித்யா. என் மாமானார் கட்டியது, அவர் போனதுக்கப்புறம் நாங்கதான் அதில் இருக்கோம், அது இப்போ எங்களுக்குச் சொந்தம்.

தாத்தா சொத்து பேரனுக்குத்தானே என்றாள் நித்யா.

ஆமாம், அந்த வீடு என் பையனுக்குத்தான் என்றாள் மாப்பிள்ளையின் அம்மா.

அப்படின்னா எங்களுக்குக் கல்யாணமானபிறகு அந்த வீட்டிலிருந்து உங்களை வெளியே அனுப்பிவிட்டு நானும் உங்க பிள்ளையும் அந்த வீட்டில் இருந்துகொண்டால் அது சரியா என்றாள்.

அது எப்படி சரியாகும் என் பையனை நான் இதுவரை வளர்த்திருக்கிறேனே, அதனால் என்னை கடைசி காலம் வரைக்கும் அவன் வைத்து காப்பாத்தவேண்டும் என்றாள்.

நீங்க சொல்கிறபடி பார்த்தால் ஆம்பிளைக்கு ஒரு சட்டம் பொம்பளைக்கு ஒரு சட்டமா. நானும் நீங்க சொல்கிறபடி என்னை இதுவரைக்கும் வளர்ந்து ஆளாக்கிய என் அம்மா அப்பாவிற்கு உதவவேண்டும் என்று சொல்கிறேன், அதுவும் என் தம்பி தலைதூக்கும் வரைக்கும்தான், ஆனால் நீங்கள் அது சாத்தியமில்லை என்கிறீர்கள்.

நாங்க ப்ரோக்கரிடம் இந்த விஷயத்தை முன்னாலேயே சொல்லிவிட்டோம், அதுக்கு ஒத்துக்கிற மாப்பிள்ளையை பெண் பார்க்க வரும்படி சொல்லியிருந்தோம். இந்த விஷயத்திலிருந்து நான் விலகுவதாக இல்லை. இதுக்கு ஒப்புக் கொண்டால் மேற்படி பேசலாம் என்று நறுக்கென்று சொன்னாள் நித்யா.

மாப்பிள்ளை இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாலும் இதைப் பற்றி ஒரு வார்த்தைப் பேசவில்லை. எல்லாமே அவருடைய அம்மாதான் பேசினார். மாப்பிள்ளை அவருடைய அம்மாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே நித்யாவிற்குத் தெரிந்தது.

உங்க வீட்டில் இரண்டு பெண்ணும் கடைசியில் பையனும் இருந்தால் உங்க அப்பாதான் முன்னாடியே யோசித்து கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்திருக்கனும். இப்படி கல்யாணம் ஆனபிறகு உன்னோட முழு சம்பளத்தையும் உன் வீட்டுக்கே கொடுப்பேன் என்று சொல்வது எப்படி நியாயமாகும்.

உனக்கு இப்போ 21 வயதுதான் ஆகுது, உங்கப்பாவுக்கு 58 வயசாகுது, அப்படியானால் நீ பொறக்கும்போது உங்கப்பாவுக்கு முப்பத்தேழு வயசாகிவிட்டது. அவர் இவ்வளவு லேட்டாக குழந்தைப் பெற்றுக்கொண்டது அவருடையே தப்பு, அந்த தப்புக்காக உன்னோட சம்பளத்தை கல்யாணமானதும் உங்க வீட்டுக்குக் கொடுப்பது என்பது முடியாத காரியம் என்று சொன்னாள் மாப்பிள்ளையின் அம்மா.

நித்யா மேலும் பேசுவதற்கு வாயைத் திறந்தவுடன், வெங்கடாசலம் அவளைத் தடுத்தார். ஆனால் நித்யா அவரை சும்மா இருக்கும்படி சைகை செய்துவிட்டு மாப்பிள்ளையின் அம்மாவைப் பார்த்து பேசத் தொடங்கினாள்.

நீங்க சொல்றது சரியான பேச்சு. ஆமாம் அவர் லேட்டாத்தான் எங்களை பெற்றுக்கொண்டார். அதுக்குக் காரணம் எங்கப்பாத்தான் வீட்டுக்கு மூத்த பையன், அவருக்குப் பிறகு மூன்று தங்கைகள், அனைவருக்கும் எங்கப்பாதான் கல்யாணம் செய்து வைத்தார். அவர்களுக்குக் கல்யாணம் முடிந்து எங்கப்பாவுக்குக் கல்யாணமாகும்போது அவருக்கு வயது முப்பத்தி மூன்று என்றாள்.

உடனே ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று கேட்கிறீர்களா என்று மாப்பிள்ளையின் அம்மாவைப் பார்த்து கேட்டுவிட்டு, அதுக்கு பதிலும் நானே சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தாள்.

எங்கம்மாவுக்கு உடம்புலே ஏதோ பிரச்சனை, அதனாலே எங்கம்மாவுக்கு குழந்தை உண்டாகலே. அதுக்கப்புறும் ஏதோ ஒரு டாக்டர் அமெரிக்காவிலே போய் ஸ்பெஷலா படிச்சுட்டு வந்திருந்தார். அவர் எங்கம்மாவைப் பார்த்து அம்மாவுக்கு இருந்த பிரச்சனையை சரிசெய்துவிட்டார். அந்த சந்தோஷத்தில் பிறந்தவதான் நான் என்றாள் நித்யா. அதனாலேதான் இவ்வளவு தாமதமா எங்கப்பா குடும்பஸ்தனானார்.

மாப்பிள்ளையின் அம்மாவிற்கு இதுக்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

இதுக்கு மேலே பேச எங்களுக்கு ஒன்னும் இல்லை, உன்னோட சம்பளத்தை உங்க வீட்டுக்குக் கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன், அதனாலே இந்த சம்மந்தம் நடக்காது என்று சொல்லிக்கொண்டே மாப்பிள்ளையின் அம்மா எழுந்துகொண்டாள்.

மாப்பிள்ளையும் ஒரு வார்த்தையும் அம்மாவை எதிர்த்து பேசாமல் எழுந்துகொண்டார்.

கிருஷ்ணமூர்த்தி கிளம்புடா, இந்த சம்மந்தம் நமக்கு சரிப்பட்டு வராது என்று சொல்லிக்கொண்டே கிளம்பினாள் மாப்பிள்ளையாக வந்த கிருஷ்ணமூர்த்தியின் அம்மா.

இந்த மாதிரி அடாவடியாக பேசற மருமக எனக்கு வேண்டாம், பொண்ணாகவா வளர்த்து வைத்திருக்கிறீர்கள், இவ ஒரு புடவை கட்டிய ஆம்பிளை என்று சொல்லிக்கொண்டே கிருஷ்ணமூர்த்தியின் அம்மா வெளியே போனாள், பின்னாடியே கிருஷ்ணமூர்த்தியும் வெளியே போனார்.

புடவை கட்டிய ஆம்பிளை என்று இவங்களும் சொல்கிறார்களே என்று நினைத்தாள் செளந்தர்யா.

புடவை கட்டிய ஆம்பிளை என்று இவங்களும் சொல்கிறார்களே என்று நினைத்தார் வெங்கடாசலம்.

புடவை கட்டிய ஆம்பிளை என்று இவங்களும் சொல்கிறார்களே என்று நினைத்தாள் நித்யா.

புடவை கட்டிய ஆம்பிளை என்று இவங்களும் சொல்கிறார்களே என்று நினைத்தாள் வித்யா.

புடவை கட்டிய ஆம்பிளை என்று இவங்களும் சொல்கிறார்களே என்று நினைத்தான் சுந்தர்.


தொடரும்…………….

govindh
23-03-2010, 06:43 PM
ஆவலுடன்..அடுத்த பகுதியையும் (படலம்)...படித்து விட்டேன்......
ஆர்வம் கூடுகிறது.
அடுத்த பகுதியினையும்.....விரைவில் தாருங்கள்..ஆரேன் அவர்களே...

"புடவை கட்டிய ஆம்பிளை என்று இவங்களும் சொல்கிறார்களே ....!"
ஏன் என்று..நாங்களும்..தெரிந்து கொள்கிறோம்...

பா.ராஜேஷ்
23-03-2010, 06:50 PM
பெரிய்ய்ய்ய்ய பாகமாய் அமைந்து விட்டது. ஒரு பெண் பார்க்கும் படலம் கண் முன் நிகழ்ந்ததை போல் மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். தாய்மையின் மனப்பான்மையையும் அருமையாக படம் பிடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் ...

அக்னி
23-03-2010, 07:13 PM
அவர்தானா இவரு... இருக்கட்டும்... இருக்கட்டும்... :huh:
ஒருவேளை ரெண்டுபேரும் கல்யாணம் கட்டுவாங்களோ... :icon_hmm: பார்க்கலாம்...

தொய்வின்றிச், சரளமான எளிய நடையில் அமைந்த இந்தப் பாகம்,
தளைகளை அறுத்தெறியப் போராடும் பெண்மையின் வாதாட்டக் களமாக
மிகச் சிறப்பாகவே அமைக்கப்பட்டுள்ளது...

தழைக்க முயலும் பெண்களைத் தளைக்க முயலும் பெண்களை
என்னவென்பது...???

பூம் பூம் மாடாக வந்த மாப்பிள்ளை, தன் தாயாற் தப்பித்தார்.
இல்லாவிட்டால், நிராகரிப்பு நித்யாவிடமிருந்து வந்திருக்கும்.

அப்புறம்... :lachen001: (அப்பிடித்தான் கேப்பம். அதுக்காக அவசரப்படாதீங்க...)

அப்புறம்... :aetsch013: (அப்பிடித்தான் கேப்பம். அதுக்காக அவசரப்படாதீங்க...)

அப்புறம்... :p (அப்பிடித்தான் கேப்பம். அதுக்காக அவசரப்படாதீங்க...)

அப்புறம்... :wuerg019:

jayashankar
23-03-2010, 07:16 PM
ஆஹா!

இரண்டாம் அத்தியாயத்தில் பெண் பார்க்கும் படலமா....

அலுவலக விவரங்களை கதைகளத்தோடு பின்னிக் கொடுத்தது போல், பெண் பார்க்கும் படலத்தையும் மிகவும் அற்புதமாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றீர்கள் ஆரென்.

அதுவும் பெண் பார்க்கும் படலத்துக்காக வீட்டை தயார் செய்வது ( சோபாவை நகர்த்தி பேட்டான் போன்றவை ) மற்றும், புடவை கட்டிக்கோ போன்ற நுணுக்கமான விசயங்களை அதற்கே உரிய யதார்தமான முறையில் கொடுத்த விதம் அருமை.

புடவை கட்டிய ஆம்பிளையாக நித்யா, அம்மா பையனாக கிருஷ்ணமூர்த்தி அட்டகாசமாக பாத்திரத்தின் தன்மையை உணர்த்தியுள்ள விதத்திற்கு ஒரு சபாஷ் ஆரென் அவர்களே....

அடுத்த அத்தியாயத்தை இன்னும் யோசிக்கவேயில்லை என்று கூறிவிட்டு இவ்வளவு அருமையாக கொடுத்திருக்கின்றீர்கள். யோசித்துக் கொடுத்தால் என்னாவது.

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கின்றோம்....

aren
24-03-2010, 02:34 AM
நன்றி கோவிந்த்.

அடுத்த பாகம் இன்னும் ஆரம்பிக்கவில்லை, கூடியவிரைவில் கொடுத்துவிடுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
24-03-2010, 02:36 AM
நன்றி ராஜேஷ்.

கதைக்கு கொஞ்சம் அடித்தளம் வேண்டுமல்லவா, அதான் கொஞ்சம் பெரியதாக வந்துவிட்டது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
24-03-2010, 02:38 AM
நன்றி அக்னி.

ஆமாம் அவரேதான் இவரும். இப்போது அந்த ஷாக் ஏன் என்று தெரிந்திருக்கும்.

அப்புறம் அப்புறம் இன்னும் ஆரம்பிக்கவில்லை, கூடியவிரைவில் வருகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
24-03-2010, 02:40 AM
நன்றி ஜெய்சங்கர். உண்மையாகவே சொல்கிறேன், முதல் பாகத்தை எழுதும்போதும் இரண்டாவது பாகத்தை எழுதும்போதும் என்ன எழுதுவது என்று தெரியாமல்தான் ஆரம்பித்தேன். அடுத்த பாகம் எழுதுவதற்கும் கையில் ஸ்டாக் விஷயம் எதுவும் இல்லை. முயற்சி செய்து எழுதவேண்டும். கூடியவிரைவில் விஷயத்துடன் வருகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
24-03-2010, 05:29 AM
தன் பக்கத்து நியாயத்தை அழகாக எடுத்து வைத்தாள் நித்யா. அதைப் புரிந்துகொள்ளும் பெரிய மனது மாப்பிள்ளையின் அம்மாவுக்கு இல்லை.

இவ்வள*வு நல்ல மருமகள் கிடைக்க அவர்களுக்கு அதிர்ஷ்டமில்லை.

பெண்பார்க்க வருவதற்கு முன்னான நிகழ்வுகளையும், பெண்பார்க்கும் நிகழ்வையும் எதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள் ஆரென். முதல் அத்தியாயத்தின் முடிவோடு இணைந்த இந்தப் பாகத்துக்குப் பிறகு...நித்யாவை ஏன் எல்லோரும் அப்படி அழைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள* வைக்கும் அடுத்தடுத்த பாகங்களை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.

தொடருங்கள்.

aren
24-03-2010, 05:41 AM
நன்றி சிவாஜி.

மாப்பிள்ளை வீட்டார் மருமகளின் சம்பளத்தை அப்படியே அவர்கள் வீட்டுக்கே கொடுக்கவேண்டும் என்றே அனைவரும் நினைப்பார்கள். அதுதான் இன்றைய காலத்தின் நியதியும் கூட. நித்யா வேறுமாதிரி கேட்கிறாள். அதுதான் அந்த அம்மாவின் கோபத்துக்குக்காரணம்.

நித்யாவை ஏன் அப்படி அனைவரும் அழைத்தார்கள் என்று ஒரு வரி எழுதிவிட்டேன், அதை எப்படி டெவலப் செய்வது என்று இன்னும் எனக்கு புலப்படவில்லை. கூடியவிரைவில் அடுத்த பாகத்துடன் வருகிறேன். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

மதி
24-03-2010, 09:27 AM
மாறுபட்ட இரண்டாம் பாகம்... பெண்பார்க்கும் படலம்..!!! என் தோழியை பெண் பார்க்க வந்த கதையை அவள் விவரித்த விதமும் இதுவும் ஒத்துப் போகிறது. அவள் மாமியார் அதிகாரமாக பேசினார்களாம். நல்ல வேளை அவளுக்கு நித்யா மாதிரி எந்த நிர்பந்தமும் இல்லாததால் திருமணம் நிச்சயமாகிவிட்டது. ஏனோ எவ்வளவோ சொல்லியும் வருங்கால மாமியார் மேல் பெரிய அபிப்ராயம் இல்லாமல் இருக்கிறாள்.

மேலும்.. தொடருங்கள் ஆரென்ண்ணா.. சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்...!!! அடுத்த பாகம் நோக்கி..

கலையரசி
24-03-2010, 02:55 PM
மிகவும் யதார்த்தமான பெண் பார்க்கும் படலம்.
பெண்ணின் பெற்றோர் அவளை எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் படிக்கவைத்து வேலைக்கனுப்பி இருந்தாலும் திருமணம் ஆகிவிட்டால் அவளது சம்பளத்தை அவள் குடும்பத்துக்குக் கொடுக்க (அவர்கள் எவ்வளவு கஷ்டநிலையிலிருந்தாலும்) அவளுக்குச் சிறிது கூட உரிமையில்லை. நித்யா கேட்கும் கேள்வி நியாயமானதே. பெண்ணானவள் வாயை மூடிக்கொண்டு அடங்கிக் கிடக்க வேண்டும். எதிர்த்து ஒரு கேள்வி கேட்டு விட்டால், அது நியாயமான கேள்வியாக இருந்தாலும் ஆம்பிளை என்று தான் இந்தச் சமூகம் பழிக்கும். நித்யா இந்தச் சமூகத்தை எதிர்த்து நிற்கப் போகிறாளா? என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன். தொடருங்கள் ஆரென் அவர்களே!

aren
24-03-2010, 05:16 PM
நன்றி மதி.

நல்லகாலம் நீங்கள் சொன்னதுபோல் உங்கள் தோழி எந்த கண்டிஷனும் போடாததால் தப்பித்தார்கள். நான் தொடர்கிறேன், நீங்களும் தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
24-03-2010, 05:30 PM
நன்றி கலையரசி.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை, அப்படி சாத்தியமாகவேண்டும் என்று யாராவது பேசினால் அவர்களை நித்யாவுக்கு முத்திரை குத்தியது மாதிரி முத்திரை குத்திவிடுவார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஜனகன்
24-03-2010, 10:14 PM
ஒரு அலுவலக கதையும், பெண் பார்க்கும் கதையுமாக இரண்டு பகுதியையும் ஒரே முறையில் வாசித்தேன்.
கதை சூப்பராக போகின்றது.ரசித்து வாசித்தேன்.கதை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.இனி மன்றத்தில் கொண்டாட்டம் தான், வாசித்து சுவைக்க.
வாழ்த்துக்கள் அரேன் தொடருங்கள்.

கீதம்
24-03-2010, 11:48 PM
நல்ல துவக்கம். நித்யாவின் மூலமாய் சாட்டையடி வசனங்கள், பெண்மைக்கு ஆதரவாய்ப் பிரச்சாரங்கள் என தூள் பறத்துகிறீர்கள். பாராட்டுகள். தொடருங்கள். கூடவே வருகிறோம்.

aren
25-03-2010, 08:53 AM
நன்றி ஜனகன்.

தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
25-03-2010, 08:54 AM
நன்றி கீதம்.

ஆரம்பம் உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து சந்தோஷம். இதே டெம்போவை கடைசி வரைக்கும் மெயிண்டெயின் செய்யவேண்டும் என்ற கவலை இருக்கிறது. தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

samuthraselvam
25-03-2010, 09:45 AM
ஆஹா... அருமையான கதை....

சித்ரபாலா என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார். தேவியின் கண்மணி என்ற மாத நாவலில் இவர் கதைகள் இடம்பெறும்... அவரின் கதைகள் பெரும்பாலும் இது போலவே இருக்கும்....

படிக்க படிக்க சுவாரிஸ்யமாக உள்ளது....

அடுத்த அத்யாயம் எங்கே?

அடுத்த அத்யாயம் எங்கே?

அடுத்த அத்யாயம் எங்கே?

Akila.R.D
25-03-2010, 10:54 AM
ஒரு டிபிகல் பெண் பார்க்கும் படலம் கண் முன்னே வந்து போனது...

என் தோழிகள் கூட கல்யாணத்துக்கு பின்னும் சம்பளத்தில் பாதியை அம்மா வீட்டுக்கு தந்துட்டு தான் இருக்காங்க..

aren
25-03-2010, 02:13 PM
ஆஹா... அருமையான கதை....

சித்ரபாலா என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார். தேவியின் கண்மணி என்ற மாத நாவலில் இவர் கதைகள் இடம்பெறும்... அவரின் கதைகள் பெரும்பாலும் இது போலவே இருக்கும்....

படிக்க படிக்க சுவாரிஸ்யமாக உள்ளது....

அடுத்த அத்யாயம் எங்கே?

அடுத்த அத்யாயம் எங்கே?

அடுத்த அத்யாயம் எங்கே?

நன்றி லீலுமா.

பெரியவர்களுடன் என்னை ஒப்பிடவேண்டாம் லீலுமா, நான் வெறும் அமெச்சூர்தான்.

அடுத்த அத்யாயம் எங்கே எங்கே எங்கே என்று பயமுறுத்துகிறீர்கள். வருகிறேன், கூடிய விரைவில் வருகிறேன், நீங்களும் தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
25-03-2010, 02:15 PM
ஒரு டிபிகல் பெண் பார்க்கும் படலம் கண் முன்னே வந்து போனது...

என் தோழிகள் கூட கல்யாணத்துக்கு பின்னும் சம்பளத்தில் பாதியை அம்மா வீட்டுக்கு தந்துட்டு தான் இருக்காங்க..

நன்றி அகிலா.

உங்கள் தோழிகளும் நித்யாமாதிரி கொஞ்சம் புத்திசாலிகள் போலிருக்கு. இது வரவேற்கத்தக்க விஷயம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அன்புரசிகன்
25-03-2010, 08:50 PM
முந்தநாளே படித்துவிட்டேன். வீடுவந்து பதிலிடலாம் என்று நினைத்துவிட்டு மறந்துவிட்டேன்.. புதுமைப்பெண் ஒருத்தி பெண்பார்க்கும் நாளன்று பேசினால் எப்படியிருக்கும் என்ற விதத்தில் அந்த சம்பாசனைகள் இருந்தது அழகாக உள்ளது. கண்முன்னே நிகழ்வுகள் தெரிந்தன. அடுத்த பாகம் பக் ரு ஃப்ளாஷ்பக் ஆஹ்?? இல்லையா???

தொடருங்கள். வாழ்த்துக்கள் அண்ணா...

Ravee
26-03-2010, 01:05 AM
ஆரேன் பிரம்மாதமாக போகிறது கதை . சமிப காலமாக எழுபதில் வந்த பாலச்சந்தர் படங்களை பார்த்தீர்களோ ... காட்சி படைப்பில் , கதாபாத்திரங்களில் அவரின் நடை தெரிகிறது . அவரின் சாதனை பெண்களின் வரிசையில் நித்யா வருவாள் என்று நினைக்கிறேன் .
எனக்கும் ஆவலாக இருக்கிறது அடுத்த பாகம் எங்கே எங்கே எங்கே ???

aren
26-03-2010, 09:16 AM
நன்றி அன்புரசிகன்.

கதை படிக்கும்பொழுது நேரில் நடப்பது போல் இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான், அது உங்கள் பதில் மூலம் சரியாக வந்திருக்கிறது என்றே தெரிகிறது. தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
26-03-2010, 09:18 AM
நன்றி ரவி.

பாலச்சந்தர் எங்கே, நாமெல்லாம் எங்கே ரவி. ஏதோ மனதில் பட்டதை எழுதுகிறேன், வார்த்தைகள் எப்படி கோர்வையாக வருகிறதோ அந்த மாதிரிதான் எழுதுகிறேன்.

அடுத்த பாகம் இன்னும் ஆரம்பிக்கவில்லை, காரணம் எப்படி ஆரம்பிப்பது என்று இன்னும் தெரியவில்லை. அது தெரிந்தவுடன் உடனே அடுத்த பாகத்துடன் வருகிறேன். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
28-03-2010, 03:01 PM
3. வெங்கடாசலம் பிளாஃஷ்பேக்!!!

புடவை கட்டிய ஆம்பிளை என்று மாப்பிள்ளையின் அம்மாவும் சொல்கிறார்களே என்று வெங்கடாசலம் நினைத்தவுடன் அவருக்கு பழைய நினைவு ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

நித்யா அனைவரிடமும் சர்வ சகஜமாக பேசும் திறமை படைத்தவள், அதனாலே நித்யாவிற்கு பள்ளியிலும் சரி, தெருவிலும் சரி நிறைய நண்பர்கள் இருந்தனர். இதில் பாதிக்கு மேல் பாய்ஸ், மற்றவர்கள் கேர்ல்ஸ்.

நித்யா பாய்ஸ்களிடமும் கேர்ல்ஸ்களிடமும் ஒரே மாதிரிதான் பழகினாள், யாரையும் மட்டமாக பேசும் வழக்கம் கிடையாது, அதே சமயம், யாரும் அவளை மட்டமாக பேசுவதற்கும் விட்டதில்லை. இதனாலே சில சமயங்களில் நண்பர்களை இழந்திருக்கிறாள். பல சமயங்களில் அவர்களே தன் தவறை உணர்ந்து நித்யாவிடம் மறுபடியும் வந்து நட்பாக பழகத் தொடங்கிவிடுவார்கள். நித்யாவும் பழைய நிகழ்வுகளை மனதில் வைத்துக்கொள்ளாமல் இவர்களுடன் முன் மாதிரியே சகஜமாகப் பழகுவாள்.

சில கேர்ல்ஸ் இவள் பாய்ஸுடன் பேசுவதை எதிர்த்திருக்கிறார்கள், காரணம் இவள் பாய்ஸுடன் பேசுவதால் இவள் மற்ற கேர்ல்ஸையும் கெடுத்துவிடுவாள் என்று சில கேர்ல்ஸ்களின் பெற்றோர்கள் நினைத்தார்கள். இதனால் சில பெற்றோர்கள் அவர்கள் பெண் குழந்தைகளை நித்யாவுடன் பேசுவதற்கு தடை விதித்தார்கள்.

நித்யாவுக்கு இது தெரிய வரும்பொழுது நித்யா ரொம்பவும் வருத்தப்படுவாள். தவறே செய்யாத தன் மேல் இப்படி பழி வருகிறதே என்று கவலைப்படுவாள். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே தப்பு தன் மேல் இல்லை தான் ஏன் வருத்தப் படவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, அவர்கள் என்னுடன் நட்புடன் இருக்க விரும்பவில்லையென்றால் நஷ்டம் அவர்களுக்குத்தான் எனக்கு இல்லை என்று சொல்லிவிட்டு தன்னுடைய வேறு வேலைகளை கவனிக்கத்தொடங்கிவிடுவாள்.

ஆனால் அப்படி பொத்தி பொத்தி வளர்க்கும் கேர்ல்ஸ்களில் ஒரு சிலர் தங்களுக்கென்று பாய் ஃபிரண்ட்ஸுகளுடன் ஊர் சுத்த ஆரம்பித்தார்கள். அது தெரிந்தபிறகுதான் நித்யா மேல் எந்த தவறும் இல்லை என்று சொல்லி தம்முடைய தவறை உணர்வார்கள். இது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

நித்யாவுடன் பேசும் பாய்ஸ்களில் ஒருவன் தான் சுரேஷ் என்கிற சுரேஷ்குமார். நித்யா படிக்கும் அதே பள்ளியில் அவனும் பிளஸ் டூவில் படிக்கிறான், ஆனால் இருவரும் வெவ்வேறு கிளாஸ்களில் படித்தார்கள்.

அவனுக்கு நித்யாவுடன் எப்பொழுது பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டான். தினமும் நித்யாவைப் பார்க்க வீட்டுக்கு வருவான், நித்யாவும் அவனுடன் சகஜமாகவே பழகினாள். நித்யாவுடன் உட்கார்ந்துகொண்டு படிப்பு சம்பந்தமான விஷயங்களை முதலில் பேச ஆரம்பித்தவன் பின்னாளில் சினிமா, கிரிக்கெட், அரசியல், சுஜாதா, ஹெரால்ட் ராபின்ஸ், ஸ்கூலில் நடக்கும் விஷயங்கள் இப்படி அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்தான்.

நித்யா சுரேஷுக்குச் சளைக்காமல் இந்த விஷயங்களைப் பற்றியும் அலசுவாள். நித்யாவின் அறிவுக்கூர்மையை நினைத்து சுரேஷ் ஆச்சர்யப்படுவான்.

எப்பவும் புத்தகும் கையுமாக இருக்கும் நித்யாவிற்கு இத்தனை விஷயங்கள் தெரிகிறதே என்று ஆச்சர்யப்பட்டு அதை அவளிடம் கேட்டேவிட்டான் சுரேஷ்.

படிக்கும் சமயத்தில் படிக்கவேண்டும், விளையாடும் சமயத்தில் விளையாடவேண்டும் ஊர் சுத்தும் சமயத்தில் ஊர் சுத்தவேண்டும், இது தான் என்னுடைய கொள்கை, அதனால் படிக்காத போது மற்ற விஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்வேன், காரணம் உன்னைமாதிரி யாராவது வந்து பேசினால் பேந்த பேந்த முழிக்கக்கூடாதுபார் அதுக்குத்தான் என்பாள் நித்யா.

சுரேஷ் அடிக்கடி வந்து நித்யாவுடன் பேசுவதைப் பார்த்த சுரேஷுன் ஃபிரண்ட்ஸில் ஒரு சிலர் இதைப் பற்றி சுரேஷ் வீட்டாரிடம் போட்டு கொடுத்துவிட்டார்கள்.

இதைக் கேள்விப்பட்ட சுரேஷுன் அப்பாவிற்கும் அம்மாவுக்கும் ரொம்பவும் கோபம் வந்துவிட்டது. அவர்கள் நேராகவே நித்யாவைப் பார்க்க வீட்டிற்கே வந்துவிட்டார்கள்.

அவர்கள் வந்தபோது வெங்கடாசலமும் நித்யாவும் வீட்டிலே இருந்தார்கள்.

அவர்களை அழைத்து உள்ளே உட்கார வைத்து வெங்கடாசலம் என்ன விஷயம் என்று கேட்டபோது, அவர்கள் இருவரும் நித்யா சுரேஷை காதல் கீதல் என்று சொல்லி கெடுக்கிறாள், அவனால் இதனாலே படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை, அவன் இப்போ குறைவாக மார்க வாங்க ஆரம்பித்திருக்கிறான் என்று நேரடியாகவே புகாரை வெங்கடாசலத்திடம் சொன்னார்கள்.

இதைக் கேட்ட வெங்கடாசலம், சுரேஷ் தினமும் இங்கே வருகிறான் அவன் நித்யாவிடம் பேசுகிறான் என்ற விஷயம் உண்மையே. இது இந்தத் தெருவில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்தவிஷயமே, இது நாள் வரை அது எப்படி உங்களுக்குத் தெரியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவள் சுரேஷைக் காதலிப்பதாகவும் நித்யாவால்தான் சுரேஷின் படிப்பு கெடுகிறது என்று நீங்கள் சொல்வது சரியில்லை. சரி, நான் நித்யாவைக் கூப்பிடுகிறேன் நீங்களே என்ன விஷயம் என்று அவளிடமே நேரிடையாகப் பேசுங்கள், எனக்கு இதில் ஆட்சேபனையில்லை என்றார்.

வெங்கடாசலம் நித்யாவை ரூமிலிருந்து கூப்பிட்டவுடன் அவள் வெளியே வந்தவுடன் சுரேஷின் அம்மாவும் அப்பாவும் அங்கே இருப்பதைப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே ஹலோ அங்கிள், ஹலோ ஆண்டி என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாள்.

வெங்கடாசலம் நித்யாவிடம், சுரேஷின் பேரண்ட்ஸ் இங்கே வந்தது, உன்னைப் பத்தி ஏதோ கம்ப்ளெயிண்ட் பண்ண, என்ன சொல்றாங்கன்னு நீயே கேளு என்றார்.

கம்ப்ளெயிண்டா, என்ன அங்கிள் என்ன விஷயம் சொல்லுங்க என்று சொல்லிக்கொண்டே அருகே இருந்த சோபாவில் உட்கார்ந்தாள் கொஞ்சமும் பதட்டப்படாமல்.

நித்யா நாங்க நேரிடையாகவே விஷயத்துக்கு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே சுரேஷின் அப்பா பேசத் தொடங்கினார்.

நித்யா நீ சுரேஷைக் கெடுக்கிறே, அவனிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவனை காதலிப்பதாகச் சொல்லி அவனைக் கெடுக்கிறே, நல்லா படிச்சுட்டிருந்தவன் இப்போ படிப்பில் கவனம் செல்லாமல் அவனுடைய மார்க்கும் இப்போ குறைந்துவிட்டது, அதனாலே நீ அவனை மறந்துவிடவேண்டும் என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த நித்யா கொஞ்சமும் பயப்படாமல், சுரேஷ் இங்கே வந்திருக்கிறானா, எங்கே இருக்கான் என்று கேட்டுக்கொண்டே வெளியே சுரேஷைத் தேடினாள்.

உடனே அவன் இங்கே இல்லை, நாங்க இரண்டு பேர்தான் வந்தோம் என்றாள் சுரேஷின் அம்மா.

என்னையும் சுரேஷையும் வைத்து நீங்க பேசுவதால் சுரேஷும் இங்கே இருந்தான்னா அவனிடம் எது உண்மை எது பொய் என்று நேராகவே கேட்டுவிடலாம் என்று சொல்லிக்கொண்டே உள்ளே பார்த்து வித்யா என்றாள்.

வித்யா வெளியே வந்தவுடன், நீ நேராகப் போய் அந்த சுரேஷை உடனே இங்கெ அழைத்துக்கொண்டு வா என்றாள். அவள் வார்த்தையில் இருந்த அழுத்தத்தைப் பார்த்தவுடன் ஒன்றும் எதிர்கேள்வி கேட்காமல் வித்யா வெளியே ஓடினாள் சுரேஷைக் கூப்பிட்டுக்கொண்டு வருவதற்கு.

நித்யா சுரேஷின் அப்பாவைப் பார்த்து, உங்ககிட்டே யார் சொன்னா நான் சுரேஷை லவ் பண்ணுகிறேன் என்று என்றாள்.

சுரேஷோட ஃபிரண்ட்ஸ்தான் சொன்னார்கள், நாங்களும் சுரேஷின் போக்கை கொஞ்ச நாட்களாக கவனித்துக்கொண்டுதான் வருகிறோம், அதனாலே இரண்டையும் வைத்து பார்த்துவிட்டு இதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே வந்தோம் என்றார்.

நீங்க இதைப் பத்தி சுரேஷிடம் பேசினீங்களா என்றாள் நித்யா.

நாங்க எதுக்கு இதைப் பத்தி சுரேஷிடம் பேசவேண்டும், அவன் சின்னப் பையன், அவனிடம் இதைப் பேசி இந்தப் பிரச்சனையை மேலும் வளர்க்க விரும்பவில்லை என்றாள் சுரேஷின் அம்மா.

சுரேஷ் சின்னப் பையன்னா, அவனைவிட இரண்டு மாதம் பிறகு பிறந்த நான் பெரியவளா என்றாள் நித்யா. மேலும் நித்யா தொடர்ந்து, நீங்க இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடனேயே இங்கே வந்தது ஒரு விதத்தில் நல்லதுதான். இந்த விஷயத்தை இன்னிக்கே முடிச்சுடலாம் என்று சொன்னாள் நித்யா.

அவளுடைய பேச்சைக் கேட்டவுடன் சுரேஷின் அப்பா, என்ன இது புதுக்கதையா இருக்கே, நீ பேசுவதைப் பார்த்தால் என் பையன் தான் ஏதோ தப்பு பண்ணிவிட்டான் என்று சொல்வது போல் இருக்கிறதே என்றார்.

நிச்சயமாக அதுதான் கரெக்ட். நான் சுரேஷோட வெறும் ஃப்ரெண்டாகத் தான் பழகினேன், எனக்கு இந்த காதல் கத்திரிக்காய் இதிலெல்லாம் நம்பிக்கையே கிடையாது. அதனால்தான் நீங்க இதைப் பத்தி பேசியவுடனேயே என் அப்பா என்னையே உங்களிடம் பேசச்சொல்லிவிட்டார், காரணம் காதல் விஷயத்திலே என்னோட ஒபினீயன்பத்தி அவருக்கு நல்லாவேத் தெரியும். எனக்கு வாழ்க்கையில் ஏதாவது அச்சீவ் பண்ணவேண்டும் என்று இருக்கிறது, அதனால் இந்த காதலில் எல்லாம் நான் விழமாட்டேன், அதுக்கான வயசு இதுவல்ல. பிளஸ் டூ படிப்பவர்களுக்கு படிப்புதான் முக்கியமே தவிற மத்த விஷயங்களெல்லாம் இப்போ நினைத்துக்கூட பார்க்க முடியாதவை என்றாள் நித்யா படபடவென்று.

என்னவோ என் பையனுக்குத்தான் வேறு வேலையே இல்லாமல், அச்சீவ் பண்ணவேண்டும் என்று நினைப்பே இல்லாமல் உன்னை லவ் பண்ணனும்னு மட்டுமே அவனுக்கு நினைப்பு இருப்பது போல பேசுகிறாயே என்றாள் சுரேஷின் அம்மா. அவனுக்கு நல்லா படிச்சு ஏதாவது அச்சீவ் பண்ணவேண்டும் என்ற ஆசை இருக்கு, அந்த ஆசையிலே நீ மண்ணைப் போட்டுவிடப்போகிறாயே என்றுதான் நாங்க இங்கே உன்கிட்டே நேராகவே பேச வந்தோம் என்றாள் அவளே தொடர்ந்து.

இதோ பாருங்க எனக்கு சுரேஷ் மேலே எதுவும் கிடையாது. நான் அப்படி யாரையாவது லவ் பண்ணித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருந்தால் நான் லவ் பண்ணும் பையன் நிச்சயமாக சுரேஷாக இருக்கமுடியாது, அதுக்கான தகுதியும் சுரேஷுக்குக் கிடையாது என்றாள் நித்யா கொஞ்சம் கோபத்துடன்.

விஷயம் வரம்பு மூறும் போல் இருப்பதைப் பார்த்த வெங்கடாசலம் ஏதோ பேச வாயெடுத்தார். நித்யா அவரைத் தடுத்து, அப்பா இந்த விஷயத்தை நானே பார்த்துக்கிறேன், என் மேல் இவங்க அபாண்டமா பழி போடறாங்க, அதை நானே ஹாண்டில் பண்ணி அதுக்கு பதில் சொல்லிக்கிறேன் என்றாள் நித்யா.

என்ன என் பையன் அவ்வளவு குறைச்சவனா என்ன, நிச்சயமா அவனை உன்னை மாதிரியான ஊர் சுத்தும் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கவே மாட்டோம், அது நாங்க இரண்டு பேரும் உயிரோட இருக்கிறவரையில் நடக்கவே நடக்காது.

நடக்கவே வேண்டாம், அதுவும் உங்க பையனோடவா, என்னாலே நினைச்சே பாக்கமுடியவில்லை உவ்வே என்றாள் நித்யா வாந்தி வருபதுபோல். இதைப் பார்த்தவுடன் சுரேஷின் அப்பாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. நீ என் பையனைப் பத்தி இவ்வளவு மட்டமாக பேசுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியாது என்றார்.

பின்னே என்ன அங்கிள், எவனோ சொன்னான்னு என்னிடம் வந்து கேட்கிறீங்களே, முதலில் உங்க பையனிடம் என்னவென்று கேட்க உங்களுக்குத் தோன்றவேயில்லையே, இதை நினைச்சா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. உங்க பையன் நான் அவனை லவ் பண்ணுவதாக நினைத்துக்கொண்டிருந்தால் முதலில் அவனை அதை மாத்திக்கொள்ளச் சொல்லுங்கள். நான் செத்தாலும் அவனை லவ் பண்ணமாட்டேன்.

இனிமேலாவது இப்படி பைத்தியக்காரத்தனமாக ஒரு பெண்ணிடம் போய் இப்படி எதுவும் பேசாதீங்க என்றாள் நித்யா கொஞ்சம் கோபமாக.

இதைக் கேட்டவுடன் சுரேஷ் அப்பாவிற்கு இன்னும் கோபம் வந்தது. என்ன நீ வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டேயிருக்கே. நாங்க ஒன்னும் பைத்தியக்காரத்தனமா வந்து உங்கிட்டே பேசிக்கொண்டிருக்கவில்லை, எல்லாம் விஷயம் தெரிந்துதான் உங்கிட்டே நேராகவே பேச வந்திருக்கோம் என்றார்.

இப்படி இருவரும் கோபமாகப் பேசிக்கொண்டிருக்கும் போதே சுரேஷைக் கூட்டிக்கொண்டு வித்யா உள்ளே வந்தாள்.

சுரேஷ் வீட்டுக்குள் வந்தவுடன் அங்கே அவன் அப்பாவும் அம்மாவும் உட்கார்ந்துகொண்டிருப்பதுகண்டு கொஞ்சம் பயந்தேவிட்டான். எதுக்கு இவர்கள் இருவரும் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமல் அவனும் உள்ளே வந்து ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டான்.

டேய் சுரேஷ் நான் உன்கிட்டே எப்படிடா பழகறேன் என்றாள் நித்யா நேரடியாக சுரேஷிடம். நீ என்னோட ஃபிரண்டுதான் வேறு எதுவும் இல்லை என்றான் சுரேஷ். நீ என்னை லவ் பண்றாயா என்றாள் நித்யா சுரேஷிடம். இல்லை நான் உன்னை லவ் பண்ணவில்லை, ஆனால் உன்கிட்டே ப்ரெண்ட்ஷிப் வைத்திருக்க எனக்கு பிடிச்சிருக்கு, உன்னோட இண்டெலிஜென்ஸ் பிடிச்சிருக்கு, அதனாலத்தான் நானே உன்னைத் தேடி தினமும் வந்து பேசுகிறேன் என்றான் சுரேஷ்.

நான் உன்னை லவ் பன்றேன்னு என்னிக்காவது சொல்லியிருக்கேனா என்று சுரேஷிடம் கேட்டாள் நித்யா. அதற்கு சுரேஷ், இல்லையே அப்படி என்னைக்குமே நீ கேட்டதில்லையே என்றான்.

நான் உன்னை லவ் பண்றேனாம் அதை நிறுத்தனுமாம் உங்க அம்மாவும் அப்பாவும் இங்கே வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணறாங்க. உன்னோட தறுதல ஃப்ரெண்ட்ஸில் யாரோ உன்னைப் பிடிக்காதவங்க உங்க வீட்டுலே சொல்லியிருக்காங்க, அதை உன்கிட்டே பேசி என்ன என்று விசாரிக்காமல் இங்கே வந்து என்னை அதை நிறுத்தச் சொல்றாங்க என்றாள் நித்யா.

இதைக் கேட்டவுடன் கொஞ்சம் கடுப்பாகி சுரேஷோட அப்பா, என்ன உன் இஷ்டத்துக்குப் பேசறே என்றார்.

பின்னே என்ன அங்கிள், யாரோ வந்து உங்ககிட்டேச் சொன்னா, முதல்ல உங்க பையன்கிட்டேதானே இதைப் பத்தி கேட்டிருக்கனும் அதை விட்டுவிட்டு என்ன அர்த்தத்தில் எங்க வீட்டுக்குவந்து என்கிட்டே இதைப் பத்தி பேசுவீங்க என்றாள். இப்படி வந்து கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லை என்று கேட்டாள் நித்யா. அந்த பேச்சில் கோபம் அதிகமாகவே இருப்பது தெரிந்தது அனைவருக்கும்.

இதுக்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை சுரேஷின் அப்பாவுக்கு, தன்னை இப்படி இழுவு படுத்திவிட்டாளே என்று நித்யா மேல் கட்டுக்கடங்காத கோபம், என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்து சுரேஷின் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். அவன் அப்படியே கதி கலங்கி கன்னத்தைப் பிடித்துக்கொண்டு பேயறைந்தது போல் உட்கார்ந்துவிட்டான். உனக்கு யார் யார்கிட்டே ஃபிரண்ட்ஷிப் வெச்சுக்கனும்னு தெரியவில்லை, இப்படிப்பட்ட ஒரு பொண்ணிடமா ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கிறது என்று கத்தினார்.

பின்னர் சுரேஷுடைய காலரைப் பிடித்து வீட்டுக்குவா உன்னை வெச்சுக்கிறேன் என்று சுரேஷைப் பார்த்து திட்டிக்கொண்டே அவனை தரதரவென்று இழுத்துக்கொண்டு வெளியே போனார்.

அவருக்குப் பின்னால் சுரேஷின் அம்மாவும் எழுந்து சென்றாள், அப்படி வெளியே போகும் போது வெங்கடாசலத்தைப் பார்த்து பொண்ணாவா பெத்து வெச்சுருக்கீங்க, இவ புடவைக் கட்டிய ஆம்பிளை என்று சொல்லிவிட்டு வெங்கடாசலத்தின் பதிலுக்குக் காத்திராமல் வெளியே சென்றாள்.

அவர்கள் போனவுடன், நித்யா தன் அப்பாவைப் பார்த்து என்னப்பா இது, நான் சாதாரணமாகத்தான் பேசினேன், அவங்க என்னென்னமோ சொல்லிட்டுப் போறாங்களே என்றாள்.

அதைக் கேட்ட வெங்கடாசலம், நீ ஒன்னும் கவலைப்படாதேம்மா, எனக்கு உன்னைப் பத்தி நல்லாவேத் தெரியும், அவங்க சொல்லிட்டுப் போகட்டும், அப்படி அவங்க சொல்லிட்டு போறாதாலே நீ ஒன்னும் பெண் இல்லைன்னு ஆயிடாது, இந்த விஷயத்தை விட்டுவிட்டு உன் வேலையைப் பார் என்று சொன்னார்.

நித்யா வெங்கடாசலத்தைப் பார்த்து, தாங்க்ஸ்ப்பா, நீங்களாவது என்னை நல்லா புரிந்து வெச்சுருக்கீங்களே என்றாள்.

நீ அருமையாக இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ணினே, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, கொஞ்சம் பிரச்சனையாகுமோ என்று முதலில் பயந்தேன், ஆனால் நீ பேசியதைப் பார்த்தவுடன் உன்னால் இதை எளிதாக எதிர்கொள்ளமுடியும் என்று நினைத்து நானும் குறுக்கே வராமல் அங்கேயே நின்றுவிட்டேன், அயம் பிரெளடு ஆஃப் யூ என்றார்.

நித்யா அவர் தோளில் சாய்ந்துகொண்டு அப்படியே கண்ணை மூடிக்கொண்டாள். பின்னாடியே வித்யாவும் வந்து அவளைக் கட்டிக்கொண்டு நாங்க இருக்கோம் அக்கா, கவலைப்படாதே என்றாள். நித்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக வழிந்து ஓடியது.

தொடரும்…….

govindh
28-03-2010, 08:16 PM
அடுத்த பாகமும் நன்றாகப் போகிறது....
கூடவே ஆவலும் கூடுகிறது..
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்...
அசத்துங்கள் ஆரேன் அவர்களே....

பா.ராஜேஷ்
28-03-2010, 10:01 PM
இன்னும் எத்தனை பேர் அப்படி சொல்லி இருக்காங்களோ!? தொடர தொடரத்தானே தெரியும். தொடருங்கள் ஆரென். இந்த பாகம் மிக நன்றாக சென்றது. பனிரெண்டாவது படிக்கும் பெண்ணுக்கு இவ்வளவு மேச்சூரிட்டியா என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. இப்படி பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நன்றாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் !

aren
29-03-2010, 02:54 AM
அடுத்த பாகமும் நன்றாகப் போகிறது....
கூடவே ஆவலும் கூடுகிறது..
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்...
அசத்துங்கள் ஆரேன் அவர்களே....

நன்ற் கோவிந்த்.

அடுத்த பாகம் கூடியவிரைவில் இங்கே பதிக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
29-03-2010, 02:55 AM
இன்னும் எத்தனை பேர் அப்படி சொல்லி இருக்காங்களோ!? தொடர தொடரத்தானே தெரியும். தொடருங்கள் ஆரென். இந்த பாகம் மிக நன்றாக சென்றது. பனிரெண்டாவது படிக்கும் பெண்ணுக்கு இவ்வளவு மேச்சூரிட்டியா என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. இப்படி பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நன்றாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் !

நன்றி ராஜேஷ்.

நித்யாவின் மெச்சூரிட்டிக்குக் காரணம் அவளுடைய வளர்ப்புமுறை. வெங்கடாசலமும் செளந்தர்யாவும் அதற்குக் காரணம். தொடர்கிறேன், தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

Akila.R.D
29-03-2010, 04:17 AM
கதை ரொம்ப நல்லா போகுது...
நித்யா அழகா பேசியிருக்கா...

வாழ்த்துக்கள் ஆரென்...

aren
29-03-2010, 06:21 AM
நன்றி அகிலா. தொடர்ந்து வாருங்கள், நித்யா இன்னும் அழகா பேசுவாள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
29-03-2010, 12:19 PM
நித்யாவின் கேரக்டரை ரொம்பத் தெளிவா சொல்லியிருக்கீங்க. உண்மையிலேயே ரொம்ப புத்திசாலி மட்டுமில்ல...ரொம்பத் தெளிவாவும் இருக்கா. சுரேஷோட அப்பா அம்மாவை ஹேன்டில் பண்ண விதம் அருமை.

நல்லாப் போகுது. தொடருங்க ஆரென்.

jayashankar
29-03-2010, 12:33 PM
நித்யாவின் பின்புலம் பற்றி இவ்வளவு விவரமாக கூறுவதிலேயே தெரிகின்றது. இந்தக் கதை ஒரு புதுமைப்பெண்ணைப் பற்றியது என்று.

தொடருங்கள்....

கலையரசி
29-03-2010, 01:56 PM
"சில கேர்ல்ஸ் இவள் பாய்ஸுடன் பேசுவதை எதிர்த்திருக்கிறார்கள், காரணம் இவள் பாய்ஸுடன் பேசுவதால் இவள் மற்ற கேர்ல்ஸையும் கெடுத்துவிடுவாள் என்று சில கேர்ல்ஸ்களின் பெற்றோர்கள் நினைத்தார்கள்."

ஓர் ஆலோசனை. கதையில் ஏராளமான ஆங்கில வார்த்தைகளைக் கலந்து எழுதுகிறீர்கள். கூடுமானவரை அவற்றைத் தவிர்த்து தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் நல்லது.

நித்யா பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத் தோன்றுகிறாள். இந்தச் சமூகத்திற்குப் பயப்படாமல் தன் மனதில் தோன்றுவதை வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்று பேசுகிறாள். பாத்திரப்படைப்பு மிகவும் நன்று. பாராட்டுக்கள்.

aren
29-03-2010, 02:33 PM
நித்யாவின் கேரக்டரை ரொம்பத் தெளிவா சொல்லியிருக்கீங்க. உண்மையிலேயே ரொம்ப புத்திசாலி மட்டுமில்ல...ரொம்பத் தெளிவாவும் இருக்கா. சுரேஷோட அப்பா அம்மாவை ஹேன்டில் பண்ண விதம் அருமை.

நல்லாப் போகுது. தொடருங்க ஆரென்.

நன்றி சிவாஜி.

நித்யாவின் கேரக்டரை சரியாக அறிமுகப்படித்தவேண்டும் என்ற நினைப்பிலேயே எழுதப்பட்ட பாகம் அது. சரியாக வந்திருப்பதுகண்டு மகிழ்ச்சியே.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
29-03-2010, 02:35 PM
நித்யாவின் பின்புலம் பற்றி இவ்வளவு விவரமாக கூறுவதிலேயே தெரிகின்றது. இந்தக் கதை ஒரு புதுமைப்பெண்ணைப் பற்றியது என்று.

தொடருங்கள்....

நன்றி ஜெயசங்கர்.

கரெக்டா சொல்லிவிட்டீர்கள். நித்யாவின் நிலமையை எப்படியாவது வெளியே கொண்டுவந்துவிட்டால் பின்னால் படிக்க செளகரியமாக இருக்கும் என்று நினைத்தேன். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
29-03-2010, 02:37 PM
நன்றி கலையரசி.

இது நகரத்தில் படித்தவர்கள் மத்தியில் நடக்கும் கதையாதலால் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்கமுடியாது. கதையின் போக்கிற்குத் தகுந்தமாதிரி ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்க வேண்டி வரும். முடிந்தவரை குறைக்கப் பார்க்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
29-03-2010, 02:41 PM
கேரக்டர்கள் தங்களுக்குள் பேசும்போது இயல்பாய் உபயோகப்படுத்தும் ஆங்கில வார்த்தைகள் வந்தால் பரவாயில்லை ஆரென். கலையரசி அவர்கள் சுட்டிக் காட்டியிருப்பது....நேரேஷன்ல வர்றது. அதுல முடிஞ்ச வரைக்கும் ஆங்கிலத்தைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்.

aren
29-03-2010, 02:50 PM
கேரக்டர்கள் தங்களுக்குள் பேசும்போது இயல்பாய் உபயோகப்படுத்தும் ஆங்கில வார்த்தைகள் வந்தால் பரவாயில்லை ஆரென். கலையரசி அவர்கள் சுட்டிக் காட்டியிருப்பது....நேரேஷன்ல வர்றது. அதுல முடிஞ்ச வரைக்கும் ஆங்கிலத்தைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்.

நன்றி சிவாஜி.

அந்த வார்த்தைகளும் வெங்கடாசலம் அவர்களின் ஃபிளாஷ்பேக்கில்தான் வருகிறது. அவருடைய நினைப்பில் வருகிறது. நான் எழுதிய என்னுடைய கண்ணோட்டத்தில் வரவில்லையே.

சென்னையில் வசிக்கும் பலர் பேசும்பொழுது இந்த மாதிரியான ஆங்கில வார்த்தைகளை கலந்தே பேசுவார்கள் என்பதை மறுக்கமுடியாதே. அதே மாதிரியான ஃபீலிங்க் வரவேண்டும் என்பதாலேயே ஆங்கில வார்த்தைகளை உபயோகித்தேன்.

எங்கெங்கு ஆங்கிலம் இருந்தால் நேச்சுரலாக இருக்குமோ, அங்கே மட்டுமே உபயோகித்திருக்கிறேன் என்பதை இந்தக் கதையை தொடர்ந்து படித்தால் புரியும்.

உங்கள் புரிதலுக்கு நன்றி.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
29-03-2010, 02:57 PM
கதையின் எதார்த்தத்துக்குத் தேவைப்பட்டால் தாராளமாய் உபயோகிக்கலாம். அப்போதுதான் நீங்கள் சொன்ன ஃபீலிங்கை ஃபீல் பண்ண முடியும். என்னோட பொறி கதையிலயும் நான் நிறைய ஆங்கில வார்த்தைகளை உபயோகித்திருக்கிறேன். என்னுடைய மற்றக் கதைகளில் அப்படியிருக்காது.

உங்கள் பாணியிலேயே தொடருங்கள் ஆரென். நல்லா போய்க்கிட்டிருக்கு.

aren
29-03-2010, 03:00 PM
கதையின் எதார்த்தத்துக்குத் தேவைப்பட்டால் தாராளமாய் உபயோகிக்கலாம். அப்போதுதான் நீங்கள் சொன்ன ஃபீலிங்கை ஃபீல் பண்ண முடியும். என்னோட பொறி கதையிலயும் நான் நிறைய ஆங்கில வார்த்தைகளை உபயோகித்திருக்கிறேன். என்னுடைய மற்றக் கதைகளில் அப்படியிருக்காது.

உங்கள் பாணியிலேயே தொடருங்கள் ஆரென். நல்லா போய்க்கிட்டிருக்கு.

நன்றி சிவாஜி.

இன்னும் அடுத்த பாகம் ஆரம்பிக்கவில்லை, என்ன எழுதுவது என்று முடிவுசெய்யவில்லை. கூடிய விரைவில் அடுத்த பாகத்துடன் வருகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஜனகன்
29-03-2010, 03:28 PM
கதைமிகவும் அருமையாக போகின்றது அரேன்.
நித்தியா போன்ற பெண்களின் துணிவு, எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.

வழக்கம் போலவே கதை சொல்லும் விதம், இயல்பான உரையாடல்கள் என அனைத்துமே ஒகே!!!!!!!!!!

aren
29-03-2010, 04:14 PM
நன்றி ஜனகன்.

தொடர்கிறேன், தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
01-04-2010, 07:01 AM
ஓவியா அக்காவின் கையெழுத்து:
“பாரதி காணா புதுமைப்பெண்”
நித்யாவுக்கு நன்றாகவே பொருந்துகின்றது.

ஆண்பிள்ளை என்றால் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போய்,
பெண்பிள்ளைகளிற் குற்றம் கண்டு, குற்றம் சுமத்தும் சுரேஷின் பெற்றோர்கள் போன்றவர்கள் இருக்கும்வரைக்கும்,
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையான தூய நட்பு, கொச்சைப் பட்டுக்கொண்டேயிருக்கும்.

நித்யாவின் சாட்டை, இன்னும் விளாசட்டும்...

பெண்ணைப் பெற்றாற் தலைகுனிந்தே, மௌனித்தே இருக்கவேண்டும் என்ற பெற்றோரின் நிலையை மாற்ற,
நித்யா போன்ற பெண்களாற்தான் முடியும்.

*****
யதார்த்தமாகத் தமிழில் எழுத, வழக்குத் தமிழின் ஆங்கிலக் கலப்புத் தடைதான்...
தமிழுக்கு வந்த சோதனையா... வேதனையா...
இந்நிலை மாற்றம் பெறும் சாத்தியம் ஒரு வீதமேனும் இருப்பதுபோலத் தெரியவில்லையே...
இப்பொழுதே எத்தனையோ சொற்கள் மருகி மறைந்துவிட்டன. காலப்போக்கில்...???

aren
02-04-2010, 04:23 PM
நன்றி அக்னி.

பெண்கள் என்றாலே விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதே நிலமை, யாராவது எதிர்த்துப் பேசினால் அவர்களைப் பற்றி மட்டமாக பேசுவதே நம் மக்களின் கொள்கை. அதையும் எதிர்த்து ஒரு சிலரே வெற்றி பெருகிறார்கள். அதுதான் இன்றைய நிலமை.

தமிழில்தான் அனைத்தையும் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் சில இடங்களில் பேச்சுத்தமிழில் எழுதினால் கதைக்கு உதவியாக இருக்கும் என்றே எழுதுகிறேன், அதில் ஆங்கிலம் தானாகவே வந்துவிடுகிறது, என்ன செய்வது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
05-04-2010, 01:27 AM
நண்பர்களே என்னை மன்னித்துவிடுங்கள். நேரம் கிடைக்காததால் என்னால் இந்தக் கதையின் அடுத்த பாகத்தை தொடரமுடியவில்லை. கூடிய விரைவில் அடுத்த பாகத்துடன் வருகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

govindh
08-04-2010, 05:59 PM
பொறுமையாகக் காத்திருக்கிறோம்...!

அக்னி
09-04-2010, 06:11 AM
ஆரென் அண்ணா...
அவசரம் இத்தொடரின் இயல்பைக் குலைத்துவிடலாம்.
ஆகையாற் பொறுமையாகவே தொடருங்கள் இத்தொடரை...

jayashankar
11-04-2010, 03:55 PM
நான் அக்னியாரின் கருத்தை வரவேற்கின்றேன்.

கதாசிரியர் எப்போதுமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்றிருக்கவே கூடாது.

சிவாவுக்கும் நான் இதையே கூறினேன்.

பொறுமையாக கொடுங்கள்.

நீங்களோ நாங்களோ இந்த மன்றம் விட்டு எங்கே போகப் போகின்றோம்.

aren
16-04-2010, 08:55 AM
4. செளந்தர்யா பிளாஃஷ்பேக்!!!

புடவை கட்டிய ஆம்பிளை என்று மாப்பிள்ளையின் அம்மாவும் சொல்கிறார்களே என்று செளந்தர்யா நினைத்தவுடன் அவருக்கு பழைய நினைவு ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

நித்யா குழந்தையிலிருந்து படு சுட்டியாக இருப்பாள். அனைவரிடமும் பயப்படாமல் தைரியமாக பேசுவாள். பள்ளியில்கூட டீச்சரிடமும் ஹெட்மிஸ்டர்ஸிடமும் தைரியமாக பயப்படாமல் பேசுவாள்.

பள்ளியில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ என்ற கவலை இல்லாமல் கலந்துகொள்வாள். சில போட்டிகளில் ஜெயித்திருக்கிறாள், சில போட்டிகளில் தோற்றிருக்கிறாள். இருண்டுக்குமே ஒரு பெரிய அலட்டலோ அல்லது வருத்தமோ பட மாட்டாள். சில சமயங்களில் நமக்கே இப்படி தோத்துவிட்டு வந்திருக்கிறாளே ஒன்றுமே வருத்தப்படவேயில்லையே என்ற கவலை இருக்கும், ஆனால் அவள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய மற்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கிவிடுவாள். அதே மாதிரி ஜெயித்து கப் வாங்கிக்கொண்டு வந்தாலும் அதைப் பற்றி பெரிதாக நினைக்காமல் தன் மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றுவிடுவாள். அவளைப் பொறுத்தவரை, அந்த வேலை முடிந்தது என்று நினைத்து மற்ற வேலைகளை கவனிக்கிறாளோ என்று சில சமயங்களில் நமக்கே நினைக்கத் தோன்றும்.

அவளுக்கு பத்து வயதானவுடன் அவள் ப்ரைமரி ஸ்கூலிலிருந்து ஹை ஸ்கூலுக்குச் சென்றாள். அங்கேயும் படிப்பிலும் விளையாட்டிலும் படு சுட்டியாக இருந்தாள். டீச்சர் அனைவருக்கும் மிகவும் பிடித்தவளாக ஆனாள் நித்யா. சில கூடப் படிக்கும் ஃப்ரெண்ட்ஸின் பேரண்ட்ஸும் நித்யாவைப் பத்தி நல்ல வார்த்தைகளைச் சொல்லும்பொழுது நமக்கே அது மிகவும் பெருமையாக இருக்கும், ஆனால் நித்யா இதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. நானே சில சமயங்களில் கேட்டிருக்கிறேன், அதற்கு அவள் இதெல்லாம் என்னம்மா பெரிய விஷயம் என்று சர்வ சாதாரணமாகச் சொல்லுவாள்.நித்யாவிற்கு பத்து வயதாகும்போது அவளுடைய பெரியம்மா பெண் உஷா பெரியவளானாள். அதற்காக பெரியம்மா வீட்டில் இதை ஒரு பெரிய விழாவாக நடத்தினார்கள். அங்கே உஷாவின் அத்தைப் பையன் உஷாவைவிட இரண்டு வயதுப் பெரியவன், அவனை ஒரு மாப்பிள்ளை போலவும், உஷாவை அவன் தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறவன் போலவும் அனைவரும் பேசினார்கள். அவன் தான் உஷாவுக்கு அருகில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்தான். இதைப் பார்த்த நித்யாவிற்கு இந்த சடங்குகள் எதுவும் பிடிக்கவில்லை. அந்த சின்ன வயதிலும் அவள் இந்த சடங்குகளை வெளிப்படையாகவே விமர்சனம் செய்தாள். அருகில் இருந்தவர்கள் அனைவரும் என்ன பெரிய மனுஷி மாதிரி பேசுகிறாளே என்று நித்யாவை கிண்டல் செய்தார்கள்.

நித்யாவிற்கு பத்து வயது முடிந்து பதினொன்னாவது வயது வந்த பிறகும் ஒன்றும் நடக்காதது குறித்து நித்யாவின் தந்தைவழிப் பாட்டிக்கு கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. அவர்கள் மாதம் ஒரு முறையாவது புலம்ப ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சு இவளுக்கு இன்னும் ஒன்னுமே ஆகவில்லையே என்று கவலைப்பட்டார்கள்.

செளந்தர்யாவும் தன் மாமியாரிடம், இல்லை அத்தை, அவள் இன்னும் குழந்தைதானே என்பாள். ஒரு சிலருக்கு சீக்கிரமே ஆகிவிடுகிறது ஆனால் ஒரு சிலருக்கு சில வருடங்கள் ஆன்பிறகே ஆகிறது. இது உடம்புவாகைப் பொருத்தது என்பாள் செளந்தர்யா.

செளந்தர்யா சொல்வதை மாமியார் ஒப்புக்கொண்டாதாகவே தெரியவில்லை. இந்த விஷயம் மாதத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் வீட்டில் நடக்கும் ஒரு விஷயம். மேலும் நித்யா வயதிற்கு ஏற்றாற்போல் மாறிவருவதையும் செளந்தர்யா கவனிக்கத் தவறவில்லை. அதனால் செளந்தர்யாவும் நித்யாவிடம் என்னென்ன விஷயங்களை செய்யவேண்டும் என்று சொல்லிவைத்தாள். நித்யாவும் அதை கவனத்துடன் கேட்டுக்கொண்டாள்.

மாமியாருக்கு சந்தேகம் வலுத்துக்கொண்டே போனது, செளந்தர்யாவிடம் நேரடியாகச் சொன்னாள், உன் பொண்ணு உன் கிட்டே ஏதோ மறைக்கிறாள், மறுபடியும் கேட்டுப்பார் என்றார்.

இல்ல அத்தை, இதையெல்லாம் அவள் மறைக்க என்ன இருக்கிறது, சரி நீங்கள் இதைப் பற்றி கவலைப்படவேண்டாம் எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.செளந்தர்யா அப்படி சொல்லிவிட்டாலும், அவளுக்கும் இதே கவலையாகவே இருந்தது, காரணம் அவளுடைய அக்கா மகள் உஷாவிற்கு எல்லாம் நல்லபடியாக நடந்துவிட்டதால் தன் மகளுக்கும் எதுவும் குறையில்லாமல் நடக்கவேண்டும் என்ற நினைப்பு இருந்தது. அதனால் தன் மாமியார் இதைப் பற்றி புகாராகச் சொன்னாலும் அதை புகாராக எடுத்துக்கொள்ளாமல் செளந்தர்யாவும் இதை நினைத்து கொஞ்சம் பயப்படவே செய்தாள்.

செளந்தர்யாவின் மாமியார் நித்யாவை டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று சொன்னாள். செளந்தர்யா இதற்கு உடனே ஒரு மறுப்பைச் சொல்லிவிட்டாள். நித்யா இன்னும் குழந்தைதான் அத்தை, அதனாலே அதற்குள் அவளை டாக்டரிடம் செக்கப்புக்கு அழைத்துச் செல்வது என்பதெல்லாம் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டாள்.

ஆனால் மாமியார்தான் அடிக்கடி அசறீரீ மாதிரி இந்த விஷயத்தை மாதத்திற்கு ஒரு முறையாவது சொல்லிக்கொண்டேயிருந்தாள்.

நித்யாவிற்கு 11 வயது முடிந்து 12வது வயது ஆரம்பமாகியது. இனிமேலும் இந்த விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து, செளந்தர்யா தன் கணவரிடம் இதைப் பற்றி பேசினாள். ஆனால் அவர், நித்யா இன்னும் குழந்தைதான், இன்னும் சில மாதங்கள் போகட்டும் அதற்கப்புறம் இதைப் பத்தி பேசலாம் என்று சொல்லிவிட்டார்.

இப்படி இருக்கையில் ஒரு நாள், எதற்காகவோ வித்யா நித்யா இல்லாத சமயத்தில் அவளுடைய ஸ்கூல்பேகைத் திறந்து எதையோ எடுக்கும்போது எதேச்சயாக செளந்தர்யா அவள் பையில் ஏதோ ஒன்று இருப்பதைப் பார்த்தவுடன் வித்யாவிடமிருந்து நித்யாவின் ஸ்கூல்பேகை வாங்கிக்கொண்டாள். வித்யாவும் நித்யாவின் ஸ்கூல்பேகிலிருந்து தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு ஸ்கூல்பேகை அம்மாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

செளந்தர்யா நித்யாவின் ஸ்கூல்பேகில் இருந்த அந்தப் பொருளை வெளியே எடுத்தாள். அதைப் பார்த்து அதிர்ந்துவிட்டாள். அது ஒரு சானிடரி நாப்கின். இதை எதற்கு நித்யா தன் ஸ்கூல்பேகில் வைத்திருக்கிறாள் என்று ஒன்றும் புரியாமல் தன் கணவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அவருக்கும் அதைக் கேட்டவுடன் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. சரி நீ எதுவும் இதைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்காதே, நித்யா வரட்டும் அவளிடம் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார், செளந்தர்யாவும் சரியென்று சொல்லிவிட்டு தன் வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.


நித்யாவின் வருகைக்காக செளந்தர்யாவும் வெங்கடாசலமும் காத்திருந்தார்கள். அவள் கூடப் படிக்கும் பெண்ணிற்கு பர்த்டே என்று அவள் வீட்டிற்குச் சென்றிருந்தாள். ஒன்பது மணியாகும் வருவதற்கு, ஆனால் இவர்கள் இருவரும் ஐந்து மணியிலிருந்தே நித்யாவின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

நித்யாவும் பர்த் டே பார்ட்டி முடிந்து ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வந்தாள். வெங்கடாசலமும் செளந்தர்யாவும் இந்த பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று கொஞ்சம் சங்கடப்பட்டார்கள். தன் பெண்ணை அவர்கள் அப்படி வளர்க்கவில்லை, எல்லா விஷயத்திலும் சுதந்திரம் கொடுத்திருந்தார்களா

செளந்தர்யா மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள். நித்யா இப்படி இனிமே ராத்திரி ஏழு மணிக்கு மேல் எங்கேயும் வெளியே போகவேண்டாம் என்றாள். அதற்கு நித்யா என்னம்மா இது புதுக்கதையா இருக்கு. நான் என்றைக்காவது ஒரு தடவை மட்டுமே சாயந்திரம் போகிறேன், அதுவும் ஏதாவது இந்த மாதிரி பர்த்டே பார்ட்டியா இருந்தா மட்டும்தான், மற்றபடி நான் வெளியே எங்கேயும் போகிறதேயில்லையே, இன்னிக்கு ஏன் புதுசா இப்படி சொல்றே என்றாள்.

எனக்கு உன் மேல் கொஞ்சம் நம்பிக்கை குறைந்துவிட்டது அதனால்தான் அப்படி சொல்கிறேன் என்றாள் செளந்தர்யா.

அப்படி என்னம்மா நான் தப்பு பண்ணினேன், நான் என்ன தப்பு பண்ணினேன் என்று எனக்கே தெரியவில்லை என்றாள் நித்யா.

மட மடவென்று நித்யாவின் ரூமுக்குள் சென்று அவளுடைய ஸ்கூல்பேகை எடுத்துக்கொண்டு வந்து அதில் இருக்கும் அந்த சானிடரி பேடை வெளியே எடுத்து, இது என்ன, இது உனக்கு எதுக்கு என்று கோபமாக சத்தம் போட்டாள் செளந்தர்யா.

இது என்னோடதுதான், எனக்கு எல்லாமே ஆயிடுத்து, நான் தான் உங்களிடம் சொல்லவில்லை என்றாள் நித்யா.

என்னடி நீ சொல்றே, உனக்கு எல்லாமே அயிடுத்தா, பின்னே ஏன் எங்களிடம் சொல்லவில்லை என்றாள் செளந்தர்யா கோபத்துடன்.

ஆமாம்மா, நான் வேண்டும்ன்னுதான் உங்ககிட்டே சொல்லவில்லை, உங்ககிட்டே சொன்னா, நீங்க உஷாவுக்கு பண்ணினது மாதிரி ஊரையே கூட்டி என் மானத்தை வாங்கிவிடுவீங்க, அதான் சொல்லவில்லை என்று செளந்தர்யாவை நிமிர்ந்து பார்த்து சொன்னாள்.

உனக்கு எப்போ இது நடந்தது என்றாள் செளந்தர்யா நித்யாவைப் பார்த்து. எனக்கு போன வருஷம் ஆகஸ்ட் மாசம் 22ஆம் தேதி இது நடந்தது என்றாள் மிகவும் கூலாக.

என்னடி இப்படி சொல்றே, அப்படின்னா நீ பத்து மாசமா எங்ககிட்டே இதைப் பத்தி சொல்லவேயில்லையா என்று கேட்டாள் செளந்தர்யா. நித்யா பதில் எதுவும் சொல்லவில்லை.

செளந்தார்யாவுக்கு கோபம் தாங்கவில்லை, அவள் நேராக வெங்கடாசலத்தைப் பார்த்து, உங்க பொண்ணப் பாருங்க, என்ன சொல்றான்னு காது கொடுத்துக் கேளுங்க என்று கத்தினாள்.

எதுக்கும்மா அப்பாவை இதுலே இழுக்கிறே, நான் தான் நீங்க செய்யற இந்த சடங்குகள் பிடிக்கலை, அதனாலேதான் நான் உங்ககிட்டே சொல்லலேன்னு சொல்றேனே என்றாள் நித்யா.

எப்படி சும்மா இருக்கிறது, பாட்டியும் உன்கிட்டே மாசா மாசம் இதைப் பத்திச் சொன்னாலே, நீ எதையும் காதுலே வாங்காமயே போயிட்டு இருந்தியே, ஏன் இப்படி என்றாள் செளந்தர்யா கண்களில் கண்ணீருடன். இப்போ இந்த விஷயம் வெளியே தெரிந்தா நான் எப்படி மத்தவங்களுக்கு பதில் சொல்லப்போகிறேன் என்றாள் மேலும் தொடர்ந்து.

எல்லோரும் இப்படி சத்தமாகப் பேசுவதைக் கேட்டு ரூமில் தூங்கிக்கொண்டிருந்த நித்யாவின் பாட்டி வெளியே வந்து என்ன விஷயம் என்றாள்.

எல்லாமே நீங்க சொன்னபடிதான் ஆயிருக்கு அத்தை. நித்யா பத்து மாசத்துக்கு முன்னாலேயே பெரிய மனுஷி ஆயிட்டா, ஆனால் அதை நம்மகிட்டே சொல்லாம மறைச்சிட்டா. அவள் பெரிய மனுஷி ஆனது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு, ஆனா நான் தான் அதை கவனிக்க தவறிட்டேன் என்றாள் செளந்தர்யா அழுதுகொண்டே.

எனக்கு அவ முகத்தைப் பார்த்தவுடனேயே அந்த சந்தேகம் வந்தது. ஒவ்வொரு மாதமும் அந்த நாட்களில் அவள் முகத்தில் இருந்த அந்த மாற்றத்தைப் பார்த்தே நான் உன்னிடம் இதைப் பத்தி கேட்டேன், ஆனால் நீதான் சொல்வதைக் கேட்கவில்லை என்றாள் மாமியார்.

மாமியார் மேலும் தொடர்ந்து, நித்யா பெண் ரூபத்தில் இருக்கும் ஒரு ஆண் என்றாள் கோபமாக.

தொடரும்…..

ஜனகன்
16-04-2010, 10:58 AM
எமது கல்லச்சாரத்தை பொறுத்த வரையில் இப்படியான விடயங்களை மறைப்பது.பெரிய தவறுதான்.ஏன் என்றால் அதற்காக ஒரு விழா எடுக்க எல்லோரும் ஆவாலாய் இருப்பார்கள்.
தவிரவும் அப்படி ஆகாத பெண்களை வேறு பெயர் சொல்லி அழைக்கவும் ஆரம்பித்து விடுவார்கள்.

நித்தியாவின் பாட்டி கவலை படுவதிலும் தவறில்லையே

வெளி நாட்டை பொறுத்த வரையில் இது நடந்து ஒருவருடத்தின் பின் தான் தாய்க்கே இது பற்றி தெரிய வரும்.
எல்லாம் பாடசாலையில் சொல்லி கொடுக்கின்ற படியால் அது பற்றி பெற்றோரும் அவ்வளவு அலட்டி கொள்வதில்லை.

அரேன், நன்றாகவே கதையை நகரத்து கின்றீர்கள்.வாழ்த்துக்கள்

aren
16-04-2010, 04:45 PM
நன்றி ஜனகன். இந்த காலத்தில் பெண்களுக்கு இந்த விஷயங்கள் வீட்டில் சொல்லிக்கொடுக்காமலேயே தெரிந்துவிடுவதால் கொஞ்சம் பயம் பெற்றோர்களுக்கு இருக்கிறது என்பது நியாயமே.

கொஞ்சம் பிஸியாக இருப்பதால் கதையை எழுத நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரத்தில் ஐபிஎல் மாட்ச் வேறு.

அடுத்த பாகத்தை விரைவாக கொடுத்துவிடுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

govindh
18-04-2010, 12:19 AM
நான்காம் பாகமும் நன்றாக அமைத்திருக்கிறீர்கள்.....

"புடவை கட்டிய ஆம்பிளை என்று மாப்பிள்ளையின் அம்மாவும் சொல்கிறார்களே என்று செளந்தர்யா நினைத்தவுடன் அவருக்கு பழைய நினைவு ஒன்று ஞாபகத்திற்கு வந்தது."

காரணங்களும் வலுவாகவே உள்ளன.
வாழ்த்துக்கள்.....தொடருங்கள்...

Akila.R.D
19-04-2010, 10:20 AM
உங்களது அலுவல்களும் ஐபிஎல் விரைவில் முடிய வேண்டும்...
ரொம்ப நாட்கள் காக்க வேண்டி உள்ளதே அதனால்தான்..

ரங்கராஜன்
19-04-2010, 10:34 AM
அடேங்கப்பா ஆரென் அண்ணா, கதையா எழுதி தள்ளுகிறீர்கள் போல, நிறைய வாசகர்களும் பெற்று இருக்கிறீர்கள் போல. வாழ்த்துக்கள் அண்ணா படித்து விட்டு விமர்சனம் போடுகிறேன்.

aren
20-04-2010, 08:19 AM
நான்காம் பாகமும் நன்றாக அமைத்திருக்கிறீர்கள்.....

காரணங்களும் வலுவாகவே உள்ளன.
வாழ்த்துக்கள்.....தொடருங்கள்...

நன்றி கோவிந்த். அடுத்த பாகம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. கூடியவிரைவில் வருகிறேன். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
20-04-2010, 08:19 AM
உங்களது அலுவல்களும் ஐபிஎல் விரைவில் முடிய வேண்டும்...
ரொம்ப நாட்கள் காக்க வேண்டி உள்ளதே அதனால்தான்..

நன்றி அகிலா. உங்கள் ஆதங்கம் புரிகிறது. கூடியவிரைவில் எல்லாம் சரியாகி, உடனுக்குடன் அடுத்தடுத்த பாகங்களைக் கொடுக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
20-04-2010, 08:21 AM
அடேங்கப்பா ஆரென் அண்ணா, கதையா எழுதி தள்ளுகிறீர்கள் போல, நிறைய வாசகர்களும் பெற்று இருக்கிறீர்கள் போல. வாழ்த்துக்கள் அண்ணா படித்து விட்டு விமர்சனம் போடுகிறேன்.

நன்றி தக்ஸ். இதை ஒரு சிறுகதையாக எழுதலாம் என்றே ஆரம்பித்தேன் ஆனால் கதையின் போக்கு தொடர்கதையாக மாற்றிவிட்டது. என்ன செய்வது, எல்லாம் உங்கள் விதி, நீங்கள் படித்தேயாகவேண்டும் என்றாகிவிட்டது, என்ன செய்வது.

நன்றி வணக்கம்
ஆரென்

அன்புரசிகன்
20-04-2010, 09:53 AM
அட... அடுத்த பாகம் வந்தாகிவிட்டதா??? கவனிக்கவில்லை...

அந்த சடங்கினை வைத்து பெரிய போராட்டமே நடத்திவிடுவார்கள் நம்மவர்கள்.. புதுமைப்பெண்ணுக்குரிய இலக்கணத்தில் வாழ்பவளுக்கு ஆண் பட்டமா...

தொடருங்கள் அண்ணா...

sarcharan
20-04-2010, 11:23 AM
அண்ணா அடுத்த பாகம் தாருங்க... ஆவல் குறுகுறுப்பை தாங்கலை

aren
21-04-2010, 02:24 PM
அட... அடுத்த பாகம் வந்தாகிவிட்டதா??? கவனிக்கவில்லை...

அந்த சடங்கினை வைத்து பெரிய போராட்டமே நடத்திவிடுவார்கள் நம்மவர்கள்.. புதுமைப்பெண்ணுக்குரிய இலக்கணத்தில் வாழ்பவளுக்கு ஆண் பட்டமா...

தொடருங்கள் அண்ணா...

நன்றி அன்பு. எனக்கு பிடிக்காத விஷயங்களில் இதுவும் ஒன்று, அதான் சான்ஸ் கிடைக்கும்போது எழுதிவிட்டேன். தொடர்கிறேன், நீங்களும் தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
21-04-2010, 02:25 PM
நன்றி சர்சரன்.

அடுத்த பாகம் இன்னும் ஆரம்பிக்கவில்லை, கூடிய விரைவில் வருகிறேன், தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
22-04-2010, 06:31 AM
சில சம்பிரதாயங்களுக்குள் தவிர்க்க முடியாமற் கட்டுண்டே இருக்க வேண்டிய நிலை.
கலாச்சாரம், பண்பாடு என்பன ஆதிக்கம் செலுத்துவதே இதன் காரணம்.
இவற்றிலெல்லாம் புரட்சி பேசுபவர்கள் கூட, இந்தச் சடங்குகள் சம்பிரதாயங்களிலிருந்து தப்பிவிடுவதில்லைதான்.

எனக்கும் கூட, சில சம்பிரதாயங்களில் இஷ்டமில்லை.
ஆனோல் ஊரோடுகையில் ஒத்து ஓடவேண்டியிருக்கின்றதே...

அடுத்த பாகமும் நித்தியாவைப் புதுமைப் பெண்ணாகக் காட்டுவதில்,
வெற்றிபெற்றுவிட்டது.
அதனாற் தாய்மை தன் கவனிக்கும் தன்மையைச் சற்று இழந்ததை
விட்டுக்கொடுக்கலாம்.

தொடருங்கள் அண்ணா...

அக்னி
22-04-2010, 06:48 AM
பாட்டியும் வித்யாவும் கூட, அடுத்தடுத்த பாகங்களில்,
நித்யா பற்றி மின்னற்பின் செல்வதும்,
அவள் அப்படித்தான் என்பதற்கு வலுச்சேர்க்கும் என நினைக்கின்றேன்.

என்ன சொல்றீக ஆரென் அண்ணா...

aren
22-04-2010, 11:02 AM
நன்றி அக்னி.

நித்யா புதுமைப் பெண் என்று தன்னை நிரூபித்துக்கொள்ள நினைக்கவில்லை, மாறாக அவள் கொஞ்சம் வேறுபட்டவள் என்று நினைக்கிறாள்.

அடுத்த பாகம் எழுத ஆரம்பித்திருக்கிறேன். கூடியவிரைவில் வந்து பதிவு செய்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

கலையரசி
22-04-2010, 12:47 PM
இன்று தான் படித்தேன். நித்யா மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் மனதுக்குச் சரியென்று நினைத்ததைச் செய்கிறாள். அவளது பாத்திர வார்ப்பில் மெருகு கூடிக் கொண்டே செல்கிறது. அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்.

aren
23-04-2010, 09:04 AM
நன்றி கலையரசி. அடுத்த பாகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் இங்கே பதிவு செய்கிறேன்.

மதி
23-04-2010, 01:01 PM
ஒரு வழியா விட்ட பாகங்களை படித்துவிட்டேன். அழகான கதையோட்டமும் வர்ணனையும் பெருகு சேர்க்கின்றது, கதையுள் ஒன்ற வைக்கின்றது.

இந்த சடங்கைப்பற்றி.. எப்போதோ படித்த நாவல் நினைவிற்கு வருகிறது, மூன்று தலைமுறையைப் பற்றியது. பெண் வயதுக்கு வருவதையும் திருமணத்தையும் வெகுவிமரிசையாய்... பலநாட்கள் கொண்டாடும் பாட்டியின் காலமும், மத்திம காலத்திய சடங்குகள் நிறைந்த அம்மாவின் காலமும், இயற்கை நிகழ்வுகளை பெரிதாய் கண்டுக்கொள்ளாத நித்யாவை ஒத்த பேத்தியின் காலமும்.. எந்த நாவல், யார் எழுதியது என்று நினைவில்லை.. எப்போதோ படித்தது..

சீக்கிரமே தொடருங்கள்.. எங்களை மாதிரி உங்கள் தீவிர வாசகர்களை வெகுநாள் காத்திருக்க வைக்காதீர்கள்.!

aren
24-04-2010, 04:25 AM
நன்றி மதி.

செளந்தர்யாவின் ஃபிளாஷ்பேக்கை நான் எங்கேயிருந்து திருடவில்லை என்று இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

அடுத்த பாகம் எழுதிக்கொண்டிருக்கிறேன், கூடியவிரைவில் வருகிறேன்.

ஐபிஎல் முடியப்போகுது, இனிமேல் நிறைய நேரம் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

மதி
24-04-2010, 04:35 AM
அடடா திருட்டு இல்லை ஒத்த கருத்து

aren
24-04-2010, 06:22 AM
அடடா திருட்டு இல்லை ஒத்த கருத்து

சரி இது ஒத்த கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நம்மள மாதிரியே பெரிய ஆளுங்களும் சிந்திக்கிறார்கள் போலிருக்கு.

Akila.R.D
27-04-2010, 05:56 AM
தொடர் கதை எழுதுரவங்க எல்லாம் இப்படி அனியாயமா காக்க வைக்கறீங்க...

சீக்கிரம் அடுத்த பாகத்தை குடுங்க...

IPL முடிந்து 2 நாள் ஆகுது..

aren
27-04-2010, 02:38 PM
நன்றி அகிலா. எழுத ஆரம்பித்துவிட்டேன், கூடிய விரைவில் வருகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

பாரதி
30-04-2010, 02:06 PM
எல்லா பாகத்தையும் படிச்சுட்டேன். அடுத்த பாகம் எப்போ...?

சிவா.ஜி
01-05-2010, 04:55 PM
நான்காம் பாகம் வாசித்தேன். மிகவும் முற்போக்கானப் பெண்ணாகத்தானிருக்கிறாள் நித்யா. ஆனாலும், 12 வயதிலேயே இத்தனை முதிர்ச்சியா என எண்ணத் தோன்றுகிறது. ஒரே வீட்டில் வசித்தும், ஒரு தாய்க்கு தன் மகள் பெரியமனுஷி ஆனது தெரியாமல் இருக்குமா எனவும் கேட்கத் தோன்றுகிறது.

எனக்குத் திருப்தி தராத பாகமாய் இது அமைந்துவிட்டது. இனி வரும் பாகங்கள் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன். தாமதமாகிவிட்டது என அவசரமாய் எழுதியதைப்போல இருக்கிறது.

தொடருங்கள் ஆரென்.

aren
02-05-2010, 01:52 AM
நன்றி சிவாஜி. இது உண்மையான நடந்த விஷயம். அதையே இந்தக் கதையில் எழுதினேன். 1 1/2 வருடங்கள் கடந்தபின்பே கண்டுபிடித்தார்கள். நமக்கு பல விஷயங்கள் வெளியே தெரிவதில்லை காரணம் நம் மகள் இன்னும் சின்னக்குழந்தைதான் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதனால் வந்த குழப்பம்தான் இது. ஆனால் அந்த வீட்டில் இருக்கும் பாட்டி கண்டுபிடித்துவிட்டாள், ஆனால் அம்மாதான் அதனை ஏற்கவில்லை காரணம் தன் மகள் தன்னிடம் சொல்லாமல் இருக்கமாட்டாள் என்ற நினைப்பினால்தான்.

இந்த விஷயம் கொஞ்சம் ஜீரணிக்கமுடியாதது அதனாலேயே இந்த பாகம் நிறைய பேருக்கு பிடிக்காது என்று எனக்குத் தெரியும்.

அடுத்த பாகங்கள் அனைவருக்கும் பிடித்திருக்குமாறு எழுதுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
02-05-2010, 06:05 AM
ஓ...உண்மைச் சம்பவமா....ஆச்சர்யமான விஷயம்...அதோடு கவலை தரும் விஷயம். ஒரே வீட்டில் இருந்தும்...இத்தனை முக்கிய விஷயம் அதுவும் மகளைப் பற்றியது....அம்மாவுக்கே தெரியாமல் இருக்கிறது என்றால்..அவர்களிடம் அத்தனை நெருக்கமில்லாததே காரணமாக இருக்கும்.

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடருங்கள் ஆரென்.

கீதம்
02-05-2010, 11:05 AM
சிவா.ஜி அவர்கள் சொல்வது உண்மைதான். தாயும் மகளும் சிநேகமாய்ப் பழகினால் இது போன்ற இக்கட்டுகளைத் தவிர்க்கலாம். என்னதான் ஒரு பெண் வெளியுலகத்திடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டாலும், இது போன்ற சூழலில் தாயின் வழிகாட்டுதலோ, ஆலோசனையோ இன்றி அவளால் சரிவர செயல்படமுடியாது என்பது என் எண்ணம்.

கதை நன்றாகப் போகிறது. ஆனால் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கவில்லை.

தொடருங்கள் ஆரென் அவர்களே. நாங்களும் பின் தொடர்கிறோம்.

அன்புரசிகன்
09-05-2010, 09:49 AM
எச்சூஸ்மி....... யாராச்சும் இருக்கீங்களா??? :D

sarcharan
10-05-2010, 12:31 PM
ஆரென்,

கதை உறங்குகிறதா இல்லை நீங்கள் உறங்குகின்றீர்களா?

மன்ற மக்கள் என்னடா கதைய காணோமேன்னு மண்டைய சொரிய ஆரம்பிச்சுட்டாங்க...

சந்தேகம் இருந்தா "தலை" தலைய பாருங்க!! :) அட தலைய கேளுங்கன்னு சொல்ல வந்தேன்...

aren
10-05-2010, 12:36 PM
கொஞ்சம் பிஸி. அதனால்தான் தாமதம்

sarcharan
10-05-2010, 12:42 PM
கொஞ்சம் பிஸி. அதனால்தான் தாமதம்

ஒ கே ஆபீசர்.. :lachen001::lachen001::lachen001:

aren
10-05-2010, 01:03 PM
கூடிய விரைவில் அடுத்த பாகத்துடன் வருகிறேன். அதன் பிறகு கொஞ்சம் வேகம் எடுக்கும் என்றே நினைக்கிறேன்.

govindh
11-05-2010, 12:18 AM
அடுத்த படலம் பதித்து விட்டீர்களா...! என பார்க்க வந்தேன்....பரவாயில்லை....
காத்திருக்கிறோம்...!

aren
11-05-2010, 04:10 AM
நன்றி கோவிந்த்.

அடுத்த பாகத்தை ஆரம்பித்துவிட்டேன் ஆனால் இன்னும் முடிக்கவில்லை.

எழுதியதுவரை இங்கே பதிக்கிறேன். மீதியை நாளை பதிவு செய்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
11-05-2010, 04:10 AM
5. நித்யா பிளாஃஷ்பேக்!!!

புடவை கட்டிய ஆம்பிளை என்று மாப்பிள்ளையின் அம்மாவும் சொல்கிறார்களே என்று நித்யா நினைத்தவுடன் அவளுக்கு தன் பழைய நினைவு ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

நித்யா 12 முடித்து, அவள் வாங்கிய மார்க்கிற்கு இன்ஜினியரிங் சீட் தாராளமாக கிடைக்கும் என்று பலம் சொன்னபோது பிடிவாதமாக எத்திராஜ் கல்லூரியில் பீ.காமில் சேர்ந்தாள்.

எல்லோர் மாதிரியும் அவளும் ஒரு இன்ஜினியர் அல்லது சாஃப்ட்வேர் ஃப்ரோஃபேஷனல் என்று சொல்லிக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. மற்றவர்கள் செய்வதைவிட வேறு விதமாக ஏதாவது செய்யவேண்டும் ஆனால் அதை சிறப்பாக செய்யவேண்டும் என்று நினைப்பாள் நித்யா. அதற்க்காக அயராது உழைக்கவும் செய்வாள். எதுவும் எளிதில் கிடைத்துவிடாது, அதற்காக நாம் உழைக்கவேண்டும் என்று நினைப்பு அவளிடம் எப்பொழுது இருந்தது. பீ.காம் படித்தும் சாதிக்கலாம் என்று நினைத்தாள், அதன்படியே பீ.காமிலும் சேர்ந்தாள்.

கூடப்படித்த சிலர் நித்யா பீ.காமில் போய் சேர்ந்ததற்கு கேலி செய்தார்கள். அவள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை. தனக்கு இது பிடித்திருக்கிறது, அதனால் இதை நான் செய்கிறேன் என்று சொல்லி கேலி செய்தவர்களின் வாயை அடைத்தாள் நித்யா.

பீ.காம் சேர்ந்தவுடனேயே படிப்பில் கவனம் செலுத்தினாள் நித்யா. பிளஸ் டூ படிக்கும்போது காமர்ஸ் குரூப் எடுக்கவில்லையாதலால், முதலில் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, ஆனால் நித்யாவிற்கு கணக்கில் நல்ல தேர்ச்சி இருந்ததால் அவளால் பாடங்களை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது.

காலேஜ் ஆரம்பித்த முதல் மாதத்திலேயே நித்யா மற்ற மாணவியர்களைவிட சிறப்பாகவே படிப்பில் மார்க்குகள் எடுத்தாள். இத்தனைக்கும் அவள் வகுப்பில் படிக்கும் அனைவரும் காம்ர்ஸ் குரூப் எடுத்து பின்னர் பீ.காமுக்கு வந்தவர்கள். இருந்தாலும் நித்யாவின் முனைப்பினால் நித்யாவால் எளிதாக அதிகமாக மார்க்குகள் வாங்கமுடிந்தது. முதலில் பார்த்த நித்யாவிற்கும் இப்போது பார்க்கும் நித்யாவிற்கும் நிறைய வித்யாசங்கள் இருப்பதை கூடப்படிக்கும் மாணவிகளும் ஒப்புக்கொண்டு நித்யாவுடன் நட்புடன் நடந்துகொண்டார்கள்.

நித்யா கூடப்படிக்கும் மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு தன் படிப்பில் முதல் மாணவியாக இருந்தாள். இதனால் அவள் பெயர் காலேஜ் முழுவதும் தெரியத்தொடங்கியது. பலர் லெக்சரரிடம் கேட்க வேண்டிய சந்தேகங்களைக் கூட நித்யாவிடம் கேட்டு தெரிந்துகொண்டார்கள்.

அப்படி வந்து ஒட்டிக்கொண்டவள்தான் நிம்மி என்கிற நிர்மலா. நித்யா வசிக்கும் தெருவிற்கு இரண்டு தெரு தள்ளித்தான் நிம்மியின் வீடு இருக்கிறது. காலேஜ் சேர்ந்த புதிதில் தன் வீட்டிற்கு அருகிலிருந்து வருகிறாளே என்று கொஞ்சம் புன்னகையுடன் பேச நெருங்கிய நித்யாவை நிம்மி பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாள்.

என்றைக்கும் எதற்கும் கவலைப்படாத நித்யா சரி உனக்கு வேண்டாம்னா போய்க்கோ என்று சொல்லிவிட்டு தன் வேலைகளில் கவனிக்கத் தொடங்கினாள். அதன் பிறகு நிம்மியும் நித்யாவும் ஒரே பஸ்ஸில் காலேஜுக்குப் போனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதேயில்லை. இரண்டு பேரும் ஒரே வகுப்பில் வேறு படிக்கிறார்கள். சில சமயங்களில் நித்யா அதை நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக்கொள்வாள்.

ஆனால் போகப்போக நித்யாவின் பெயர் அவளுடைய வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் பரிச்சியமாகி அனைவரும் நட்புடன் பழகத்தொடங்கினார்கள், அது தவிற காலேஜுல் மற்ற வகுப்புகளில் படிக்கும் இன்னும் சிலரும் நித்யாவுடன் நட்புடன் பழகுவதைப் பார்த்த நிம்மி இனிமேலும் நித்யாவுடன் பழகாமல் இருந்தால் நமக்குத்தான் பிரச்சனை என்று நினைத்து அவளே வந்து நித்யாவுடன் பழகத்தொடங்கினாள்.

நித்யா எதையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லையாதலால் நிம்மி வந்து நட்புடன் பழகியவுடன் அவள் நட்பை ஏற்றுக்கொண்டாள். இப்பொழுது நிம்மியின் நெருங்கிய சிநேகிதி யார் என்று அவளிடம் கேட்டால் அவள் நித்யா என்றே சொல்லுவாள் அந்த அளவிற்கு நித்யாவுடன் நெருங்கிவிட்டாள் நிம்மி. ஆனால் நித்யாவிற்கு நிம்மியைப் போல பல நெருங்கிய சிநேகிதிகள் இருந்தார்கள். நித்யா அனைவரையும் ஒன்றாகவே பாவித்து நட்புடன் நடந்துகொண்டாள்.நிம்மிக்கு நித்யாவைப் பற்றி ஏதாவது பேசிக்கொண்டிருப்பதே முழு வேலையாகிவிட்டது அவள் வீட்டில். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நிம்மியின் அண்ணன் ரகுவிற்கு நித்யாவைப் பார்க்கவேண்டும் யார் இவள் என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

ரகு சென்னைக்கு அருகே இருக்கும் ஒரு இன்ஜினியரிங்க் கல்லுரியில் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கிறான். நிம்மி போகும் பஸ் ஸ்டாண்ட் திசையும் ரகு போகும் பஸ் ஸ்டாண்ட் திசையில் வேறு வேறு திசையில் இருந்ததால் இதுநாள் வரை ரகு நிம்மியின் பஸ் ஸ்டாண்டிற்குப் போனதேயில்லை, அதனால் நித்யாவைப் பார்க்கும் வேளை அவனுக்கு இதுவரை வரவில்லை.

நிம்மி நித்யாவைப் பற்றி புகழ்ந்து பேசுவதால் அவள் யாரென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தான் ரகு. அதனால் ஒரு நாள் நிம்மி காலேஜுக்குக் கிளம்பியவுடன் ரகுவும் உடனே கிளம்பினான். ஆனால் ரகு அவன் தினமும் செல்லும் பஸ் ஸ்டாண்டிற்குப் போகாமல் நிம்மியைப் பின் தொடர்ந்து அவள் போகும் பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றான்.

பஸ் ஸ்டாண்ட் அருகில் வந்தவுடன் நிம்மி ஒரு பெண்ணைப் பார்த்து ஹாய் என்று கையை ஆட்டினாள். ஆனால் அந்தப் பெண்ணின் பின் பக்கம்தான் ரகுவிற்குத் தெரிந்தது, முகம் சரியாகத் தெரியவில்லை. சரி கொஞ்சம் கிட்டேபோய் பார்க்கலாம் என்று நினைத்து இன்னும் கொஞ்சம் அருகில் சென்றான்.

பஸ் ஸ்டாண்ட் அருகில் வந்தவுடன் நிம்மி அந்தப் பெண்ணுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தாள், இன்னும் ரகுவிற்கு அவள் பின் பக்கம்தான் தெரிந்தது.

ஆனால் ரகுவிற்கு அந்தப் பெண்னின் பின்னழகு மிகவும் பிடித்திருந்தது. தலைமுடி இடுப்பு வரை இருந்தது. அதை அவள் அழகாக பின்னியிருந்தது இன்னும் பிடித்தது அவனுக்கு. ஒல்லியான உடல்வாகு அந்த சுடிதாரில் இன்னும் அழகு சேர்த்தது போலிருந்தது ரகுவிற்கு. பின்னால் பார்க்கும்போதே இப்படித் தெரிகிறாளே, முன்னால் நின்று பார்த்தால் எப்படி இருப்பாள் என்ற நினைப்பே ரகுவிற்கு ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

சரி நிம்மி பார்த்தாலும் பரவாயில்லை என்று நினைத்து இன்னும் கொஞ்சம் அருகே வந்தான் ரகு, அப்பொழுதும் முகம் சரியாகத் தெரியவில்லை அவனுக்கு. தெருவை கிராஸ் செய்து நிம்மி நிற்கும் திசைக்கு எதிர் பக்கம் சென்றான். அங்கேயிருந்து நிம்மியிடம் பேசிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்தான் ரகு. அங்கே அவன் கண்டது …….

தொடரும்………

Akila.R.D
11-05-2010, 04:49 AM
அப்பாடா...

ஒரு வழியா அடுத்த பாகம் வந்தாச்சு...

அப்படி ரகு என்னதான் பார்த்தான்?...

காத்திருக்கிறோம்....

sarcharan
11-05-2010, 07:01 AM
தூள்! மீண்டும் ஒரு சஸ்பென்ஸ். பலே!

சிவா.ஜி
11-05-2010, 09:02 AM
இரண்டாம் அத்தியாயத்திலிருந்து "இவள் புடவைக் கட்டிய ஆம்பிளை" தொடர்ந்து வருதே...அதையொட்டியே எல்லா சம்பவங்களும் ஃப்ளாஷ் பேக்குக்கு போகிறது. எப்போது புடவைக்கட்டிய பொம்பளையாவாள் என்று அறிய ஆவலுண்டாகிறது.

ரகு அங்கே யாரைப்பார்த்தான்...அவனுக்கு கிடைத்தது அதிர்ச்சியா ஆனந்தமா....தொடருங்கள் ஆரென்.

Mano.G.
11-05-2010, 09:28 AM
அன்பின் ஆரேன் ஒரு வழியா,
உங்க சிறுகதையை இன்னைக்கு
ஒரு வரி கூட விடாம வாசிச்சு முடிச்சிட்டேன்.

இவ்வளவு பிசியிலும் எப்படி ஐயா இப்படியெல்லாம்
எழுதரீங்க, இராத்திரியில தூங்கரீங்கலா இல்லையா?

இப்ப கதைக்கு வருவோம்.

ஆரம்பத்துல நான் ஏதோ அலுவலகத்தில நடக்க போகும்
அலுவலக பாலிட்டிக்ஸ் பத்தி தான் எழுத போரிங்கன்னு நினைச்சேன்.
புது மேனேஜர், புது அலுவலகம் , புது பணியாளர்கள், அவங்க பேர மனனம்
செய்யவே ஒரு நாளாவது எடுக்கும் (இது நான் ஒவ்வொரு முறையும்
வேலை மாறுதலில் அனுபவிக்கும் ஒன்று). பணியாளர்கள் அறிமுகத்தில்
நமக்கு தெரிந்த ஒருத்தர் இருந்தால் ஒரு சின்ன தைரியம் வரும்.

ஆனா இந்த கதையில அம்மாதிரி அறிமுகத்தையும் வச்சி மெகா சிரியல்கணக்க
தொடரும் போட்டிங்கலே அப்பா!!!!!!!!!!!!!!!!!.

அப்புறம் கல்யாண ஏற்பாடு பொண்ணுக்கு,
வரன் பார்க்கும் படலம் அதற்கான கண்டிஷங்கள்
(மணல் கயிறு- எஸ்.வி.சேகரோட கண்டிஷன் மாதிரி இல்ல)
ஆன அந்த பொண்ணோட கண்டிஷன் எனக்கு சரியாகவே படுது.
அதுக்கு தான் பெண்பிள்ளைகள் குடும்பத்தில முத்த பெண்ணாக
பிறக்க கூடாதுன்னு சொல்லாரங்களோ.

வேஷ்கட்டிய பெண் - மாப்பிள அம்மா பின்னாடி ஒழிஞ்சுகிட்டு இருக்காரே
மீசை இருந்துச்சா தெரியலையே- ஆரேன் தான் சொல்லனும்.

அடுத்து பெண்பிள்ளைகள ருதுவாகிரது பற்றிய பிரச்சனை
(எனக்கு அது பிரச்சனைதான்).
அந்த காலத்தில சடங்கு சம்பிரதாயங்கள் எல்லம் செய்ததற்கு
ஏதோ காரணங்கள் சொன்னாங்க.
(அண்மையில் நாதஸ்வரம்ங்கிர சீரியல்ல தாய்மாமன்களுக்கும்
மச்சானுக்கும் நடக்கும் கூத்த பார்த்தவர்களுக்கு தெரியும்)
அம்மாதிரி சடங்குகள் எனக்கு ஒவ்வாதவை.

புறம் சொல்லரது நம்ம இனத்தில தானா?
இத அடிக்கடி நான் யோசிக்கரது உண்டு
நம்ம பிள்ள தப்பே செய்யாது, அடுத்தவங்க
பிள்ள தான் என பிள்ளய கெடுத்துடுச்சு.
இதுவும் எப்ப திருந்துமோ.


அன்பின் ஆரேன் தொடருங்கள்
காத்திருக்கும்

மனோ.ஜி(இப்ப கதையை வாசிச்சு விமர்சனமும் எழுதிட்டேன் சந்தோஷமா???)

அன்புரசிகன்
11-05-2010, 10:30 AM
அடக்கடவுளே. அடுத்தபாகம் வந்துவிட்டது என்று படிக்க ஆரம்பித்தால் இப்படியா திடீர் தடுப்பு போடுறது. ரகு பார்தது யாரை.. ? அடுத்த பாகம் விரைவாக பதியுங்கள் அண்ணா...

aren
11-05-2010, 12:39 PM
நன்றி அகிலா. அடுத்த பாகம் எழுதுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நேரமில்லாத நிலமை இப்போது. கூடிய விரைவில் அது சரியாகும் என்றே நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
11-05-2010, 12:41 PM
நன்றி சர்சரன். இந்த பாகத்தை பாதியிலேயே நிறுத்தவேண்டியதாகிவிட்டது. அதான் தொடரும் வந்திருக்கிறது. அடுத்த பாகத்தை விரைவில் கொடுக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
11-05-2010, 12:44 PM
இரண்டாம் அத்தியாயத்திலிருந்து "இவள் புடவைக் கட்டிய ஆம்பிளை" தொடர்ந்து வருதே...அதையொட்டியே எல்லா சம்பவங்களும் ஃப்ளாஷ் பேக்குக்கு போகிறது. எப்போது புடவைக்கட்டிய பொம்பளையாவாள் என்று அறிய ஆவலுண்டாகிறது.

ரகு அங்கே யாரைப்பார்த்தான்...அவனுக்கு கிடைத்தது அதிர்ச்சியா ஆனந்தமா....தொடருங்கள் ஆரென்.

நன்றி சிவாஜி. கூடிய விரைவில் சகஜ நிலைக்கு வரும் என்றே நினைக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
11-05-2010, 12:46 PM
நன்றி மனோஜி. இதுவரை வந்த கதையை அப்படியே புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
11-05-2010, 12:48 PM
நன்றி அன்புரசிகரே.

என்ன செய்வது, தொடரும் என்று போட எனக்கும் இஷ்டமில்லை, என்ன செய்வது, கொஞ்சம் முடித்திருந்தேன், அதை அப்படியே பதித்துவிட்டேன். தொடர்ந்து வாருங்கள், அடுத்த பாகத்துடன் விரைவில் வருகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
11-05-2010, 01:36 PM
நற... நற... நற...
என்ன யோசிக்கிறீங்க... பல்ல நெருமிறன்... :sauer028:

ரகு,
யாரைப் பார்த்தான்... யாரைப் பார்த்தான்... யாரைப் பார்த்தான்...

அத்தியாயங்களுக்கிடையே, கால இடைவெளி இருந்தாலும்,
பாத்திரங்கள் நினைவில் உடன் வருவதும், பாத்திர அறிமுகங்கள் குழப்பாதிருப்பதும்,
உங்கள் விசேஷ எழுத்தாளுமைதான்...

செல்வா
11-05-2010, 02:44 PM
இப்போ தான் முழுக்க வாசிச்சு முடிச்சேன்....

சேலை கட்டிய ஆம்பளை என்ற வார்த்தை வழியாக ஒவ்வொருவர் அனுபவத்தையும் கொடுப்பது அருமை...

அதிலும் ஒவ்வொன்றும் விதவிதமான அனுபவங்களாயிருப்பது கதையாசிரியரின் திறமைக்குச் சாட்சி...

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...

சீக்கிரம் அடுத்தப் பாகத்தைத் தாருங்கள்...

அக்னி
11-05-2010, 02:53 PM
வேட்டி கட்டிய ஆம்பளை
:eek: :sprachlos020: :eek:
ஆமாமா...
சேலை கட்டினா பொம்பிளை... :rolleyes:

செல்வா
11-05-2010, 03:09 PM
:eek: :sprachlos020: :eek:
ஆமாமா...
சேலை கட்டினா பொம்பிளை... :rolleyes:

அடப்பாவி போயும் போயும் உன்னோட கண்ணுல பட்டுருச்சே... :traurig001::traurig001:

பா.ராஜேஷ்
11-05-2010, 04:26 PM
தொடரும் போட்டுவிட்டு தொடர தாமதமாகும் என்று சொன்னால் எப்படி ஆரேன் அண்ணா!!? பரவாயில்லை, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாகவே வாங்க..

govindh
12-05-2010, 12:10 AM
ஆஹா...ஐந்தாம் படலமும் அதிரடியாக .....
ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைத்திருக்கிறீர்கள்....
அடுத்த அத்தியாமும் விரைவில் தொடருங்கள்.

aren
13-05-2010, 10:20 PM
அத்தியாயங்களுக்கிடையே, கால இடைவெளி இருந்தாலும்,
பாத்திரங்கள் நினைவில் உடன் வருவதும், பாத்திர அறிமுகங்கள் குழப்பாதிருப்பதும்,
உங்கள் விசேஷ எழுத்தாளுமைதான்...

நன்றி அக்னி.

போனதடவை தொடர்கதை எழுதும்போது கொஞ்சம் நேரமிருந்தது, ஆனால் இந்தக் கதை ஆரம்பித்ததுமுதல் பிரச்சனை மாற்றி பிரச்சனை வந்துகொண்டேயிருப்பதால் உடனே கதையை எழுத முடியவில்லை. இனிமேல் உடனுக்குடன் இங்கே பதிவு செய்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
13-05-2010, 10:21 PM
இப்போ தான் முழுக்க வாசிச்சு முடிச்சேன்....

சேலை கட்டிய ஆம்பளை என்ற வார்த்தை வழியாக ஒவ்வொருவர் அனுபவத்தையும் கொடுப்பது அருமை...

அதிலும் ஒவ்வொன்றும் விதவிதமான அனுபவங்களாயிருப்பது கதையாசிரியரின் திறமைக்குச் சாட்சி...

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...

சீக்கிரம் அடுத்தப் பாகத்தைத் தாருங்கள்...

நன்றி செல்வா. நித்யாவின் குணாதிசயங்களை தெரிவு படுத்தவே இந்த ஃப்ளாஷ்பேக்குகள். கூடியவிரைவில் மெயின் கதைக்கு வந்துவிடலாம். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
13-05-2010, 10:22 PM
தொடரும் போட்டுவிட்டு தொடர தாமதமாகும் என்று சொன்னால் எப்படி ஆரேன் அண்ணா!!? பரவாயில்லை, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாகவே வாங்க..

நன்றி ராஜேஷ். கூடியவிரைவில் வருகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
13-05-2010, 10:24 PM
ஆஹா...ஐந்தாம் படலமும் அதிரடியாக .....
ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைத்திருக்கிறீர்கள்....
அடுத்த அத்தியாமும் விரைவில் தொடருங்கள்.

நன்றி கோவிந்த். ஐந்தாம்படலம் அதிரடியாகவா இருக்கிறது. இந்த பாகம் கொஞ்சம் பெரியதாக வருவதால் அதை இரண்டாக பிரித்துவிட்டேன். கூடியவிரைவில் அடுத்த பாகத்துடன் வருகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

DREAMER
14-05-2010, 02:31 AM
அட்டகாசமான அலுவலகச்சூழலில் ஆரம்பம்..! சஸ்பென்சுடன் அடுத்த தொடருக்கு ஆவல் தூண்டிவிட்டீர்கள்! தொடருங்கள் காத்திருக்கிறேன்...!

-
DREAMER

aren
14-05-2010, 04:23 AM
நன்றி ஹரீஷ். அடுத்த பாகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

மதி
14-05-2010, 04:41 AM
நன்றி ஹரீஷ். அடுத்த பாகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்
சீக்கிரம் எழுதுங்க.. காத்திட்டு இருக்கோம்ல..

aren
17-05-2010, 09:26 AM
சீக்கிரம் எழுதுங்க.. காத்திட்டு இருக்கோம்ல..

நினைச்சேன் மதி, உங்க கதையை பதிவு செய்தவுடனேயே நீங்க என்னை இப்படி கேட்பீங்கன்னு நினைச்சேன். அதுமாதிரியே கேட்டுவிட்டீர்கள்.

நாளை நிச்சயம் பதிவு செய்துவிடுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
25-05-2010, 08:20 PM
பாகம் 6: நித்யாவின் ப்ளாஷ்பேக் தொடர்ச்சி

ரகு நிம்மிக்கு வெகு அருகாமையில் வந்து அவளிடம் பேசிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்தான்.

ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், ப்ரீத்தி ஜிந்தா போன்றவர்களை தியேட்டரிலும் டெலிவிஷனிலும் பார்த்து அசந்திருக்கிறான். ஆனால் இன்று நிம்மியுடன் பேசியிருக்கும் பெண்ணைப் பார்த்தவுடன் அவள் அழகில் அப்படியே மயங்கி அங்கேயே அசந்து நின்றுவிட்டான். அந்தப் பெண் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், ப்ரீத்தி ஜிந்தா ஆகிய மூவரின் அழகையும் ஒன்றாக குழைத்தால் எந்த மாதிரியான அழகுப்பதுமை வெளிப்படுமோ அந்த மாதிரியான ஒரு அப்சரஸ் மாதிரி இருந்தாள். அவள் நிம்மியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

இவள் தான் நித்யாவா என்று ரகுவிற்குத் தெரியவில்லை. எப்படித் தெரிந்துகொள்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே நிம்மி கொஞ்சம் தலையை திருப்பும்போது ரகு அங்கே நிற்பதைப் பார்த்துவிட்டாள்.

அய்யோ இவள் பார்த்துவிட்டாளே என்று ரகு நினைத்து அங்கிருந்து நகரலாம் என்று நினைக்கும்போதே, நிம்மி ரகுவைப் பார்த்து, ரகு இங்கே வாடா என்றாள்.

ரகுவுக்கும் வேறு வழியில்லை மாட்டிக்கொண்டோம் என்று மனதில் நினைத்தாலும் அந்த அப்சரஸ் யாரென்று தெரிந்துகொள்ளலாம் என்று அருகில் சென்றான்.

நீ என்னடா இந்தப் பக்கம் என்றாள். இல்லே நான் வேறு இடத்துக்குப் போய்ட்டு அப்புறம்தான் என்னோட காலேஜுக்குப் போகனும் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் வந்தான்.

நிம்மி ரகுவைக் காட்டி, இவன் என்னோட அண்ணன் ரகு, இன்ஜினியரிங் மூனாவது வருஷம் படிக்கிறான் என்று சொல்லிவிட்டு, இவதான் நான் எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் நித்யா என்றாள்.

வாவ்!!! இவதான் நித்யாவா என்று மனதில் நினைத்துக்கொண்டே நித்யாவிடம் ஒரு ஹலோ சொன்னான். நித்யாவும் ரகுவைப் பார்த்து ஒரு ஹலோ சொன்னாள்.

உங்களைப் பத்தி நிம்மி பேசாத நாளே எங்கள் வீட்டில் கிடையாது. எப்போதும் உங்களோட புராணம்தான் எங்கள் வீட்டில் என்றான் ரகு.

அப்படி என்னைப் பற்றி தினமும் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்றாள் நித்யா ஒன்றும் புரியாமல்.

காத்தால எங்கள் வீட்டில் இருந்து கிளம்பி உங்களைப் பார்த்ததிலிருந்து திரும்பி வீட்டிற்கு வரும்வரை உங்களைச் சுற்றி நடந்த விஷயங்கள் அனைத்தும் எங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நிம்மி மூலம் தினமும் தெரிந்துவிடும் என்றான் ரகு.

என்னடி நிம்மி, எல்லாத்தையும் சொல்லிவிடறயா என்றாள் நித்யா பொய் கோபத்துடன். அதைப் பார்த்து நிம்மியும் ரகுவும் சிரித்தார்கள், கூடவே நித்யாவும் சிரித்தாள். நித்யா சிரிக்கும்போது அவள் கன்னத்தில் குழி விழுந்து அவள் அழகை இன்னும் மெருகூட்டியதை ரகு கவனிக்கத் தவறவில்லை.

இப்படியே பேசிக்கொண்டிருக்கும்போதே நித்யாவும் நிம்மியும் ஏறவேண்டிய பஸ் வந்துவிட்டது. இருவரும் ரகுவிற்கு டாட்டா சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே பஸ்ஸில் ஏறினார்கள்.

ரகுவிற்கு நித்யாவைப் பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது. அவளைப் பற்றி ஏற்கெனவே நிம்மி மூலம் தெரிந்துகொண்டதால் இருந்த மோகத்துடன் அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட கிளர்ச்சியும் சேர்ந்துகொண்டு ரகுவை என்னவோ செய்தது. அதுவே அவள்மேல் காதல் கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டது.

இதுதான் கண்டதும் காதலா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் ரகு. அவன் உதடு அவனையறியாமலேயே ஒரு புன்னகையை உதிர்த்தது.

சந்தோஷத்துடன் அங்கிருந்து நடந்து தான் காலேஜ் போகும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தான்.

மறுநாள் காலையில் நிம்மி நித்யாவைப் பார்த்தவுடனேயே, நித்யா உனக்கு சேதி தெரியுமா, என் அண்ணன் ரகு உன்னைப் பற்றி புகழ்ந்துகொண்டே இருந்தான் நேற்று. நான் சொல்லும் புராணம்போய் இப்போ ரகு சொல்லும் புராணம் எங்கள் வீட்டில் ஆரம்பமாகிவிட்டது. உன்னோட அழகில் அப்படியே மயங்கிவிட்டான் எங்கள் வீட்டு மன்மதன் என்றாள் நிம்மி.

என்னடி உளர்ற, நான் உன் அண்ணனோட பேசியது ஒரு ஐந்து நிமிடம் கூட இருக்காது, அதுக்குள்ளே என்னைப் பற்றி உன் அண்ணனுக்கு என்னது தெரியும் என்றாள் நித்யா ஒன்றும் புரியாமல்.

நான் தான் உன்னைப் பற்றி எங்கள் வீட்டில் தினமும் பேசிக்கொண்டே இருக்கிறேனே, இதிலேயே அவனுக்கு உன்னைப் பற்றி எல்லா விஷயமும் தெரிந்திருக்கும், அது தவிற உன்னை வேறு அவன் நேற்று பார்த்துவிட்டான், இது போதுமே அவன் உளறுவதற்கு என்றாள் நிம்மி சிரித்துக்கொண்டே. அதற்குள் பஸ் வந்துவிட்டது, இருவரும் பஸ்ஸில் ஏறி சென்றுவிட்டனர்.

மறுநாள் காலையில் நித்யா பஸ் ஸ்டாண்டில் நிம்மிக்காக காத்துக்கொண்டிருக்கும்போது ரகு அங்கே நித்யாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தான்.

நித்யாவும் ரகுவைப் பார்த்து புன்னகை செய்தாள். கிட்டே வந்தவுடன் ரகு நித்யாவைப் பார்த்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு, நான் ஒன்று சொன்னால் நீ கோபித்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லி நித்யாவின் பதிலை எதிர்பாக்காமலேயே, நித்யாவைப் பார்த்து, நான் முந்தாநாள் உன்னைப் பார்த்தவுடனேயே உன் அழகில் மயங்கிவிட்டேன், எனக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அப்படியே முழித்துக்கொண்டிருந்தேன். நீ ரொம்பவும் அழகாக இருக்கிறாய் என்றான்.

நான் ரொம்பவும் அழகாக இருக்கிறேன் என்று சொல்லும் முதல் ஆள் நீங்கதான் என்றாள்.

நீ என்றே கூப்பிடலாம் என்றான் ரகு.

சரி, நீ தான் அப்படி சொல்லும் முதல் ஆள் என்றாள் நித்யா சிரித்துக்கொண்டே.

எங்கே உன் உடன்பிறப்பு நிம்மி என்றாள். பின்னால் வருகிறாள், நான் தான் அவளை ஒரு ஐந்து நிமிடம் கழித்து வீட்டிலிருந்து கிளம்பச் சொன்னேன், நான் உன்னிடம் பேசப்போகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன் என்றான் ரகு.

என்ன, குடும்பமே சேர்ந்து ஒரு கூட்டுச்சதி செய்கிறது போலிருக்கே என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் நித்யா.

அப்படியெல்லாம் இல்லை, நான் இன்று உன்னிடம் பேசப்போகிறேன் என்று நிம்மியிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன், அவள் கரடி மாதிரி நடுவில் வரக்கூடாது என்பதற்காக. அவள் கரடி என்றால் அவள் அண்ணன் நீ, உன்னை என்னென்னு கூப்பிடுவது என்றாள் நித்யா மறுபடியும் சிரித்துக்கொண்டே.

உனக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படியே கூப்பிடு என்றான் ரகு. என்ன அதுக்குள்ளேயே ஜொல்லா என்றாள் நித்யா.

இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கே நிம்மி வந்துவிட்டாள். அதைப் பார்த்த நித்யா, உன்னோட பூஜையில் கரடி வந்துவிட்டது என்றாள் சிரித்துக்கொண்டே.

ரகுவும் திரும்பி அங்கே நிம்மி வருவதைப் பார்த்தவுடன் சிரித்தான்.

இருவரும் தன்னைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்தவுடன் நிம்மி அருகில் வந்து, என்ன ரெண்டு பேருமா சேர்ந்து என்னைப்பத்தி ஏதோ உருட்டுகிறீர்கள் போலிருக்கிறதே என்றாள்.

ஆமாம், உன்னை கரடி என்று உன் அண்ணன் சொன்னான், அதான் உன்னோட பூஜையில் கரடி வந்துவிட்டது என்றேன் அவனிடம் என்றாள் நித்யா.

நிம்மி ரகுவை செல்லமாக ஒரு அடி அடித்தாள். அப்படி அடித்துவிட்டு, சரி கண்ணா இத்தனை நேரம் பேசியாச்சு இல்லே, நல்ல பையனா இங்கிருந்து கிளம்பு என்றாள் நிம்மி.

ரகுவும் இருவருக்கும் பை சொல்லிவிட்டு அங்கிருந்து சிரித்துக்கொண்டே கிளம்பினான், அதற்குள் நித்யாவும் நிம்மியும் செல்லவேண்டிய பஸ்ஸும் வந்துவிட்டது.

இப்படியே ரகு அடிக்கடி வந்து நித்யாவுடன் பேச ஆரம்பித்தான். அதே மாதிரி நிம்மியைப் பார்க்க நித்யா அவர்கள் வீட்டிற்குப் போகும்போதும் ரகு அவனாகவே வந்து பேச ஆரம்பித்துவிடுவான். நிம்மிக்கும் ரகுவிற்கும் இதனால் சண்டைகூட சில நாட்கள் வந்திருக்கிறது. ரகு எதையும் சட்டை செய்யாமல் நித்யாவுடன் பேசிக்கொண்டிருப்பான்.

நித்யாவும் ரகுவுடன் பேசுவாள். அவள் ரகுவை நிம்மியின் அண்ணன் என்ற அளவிலேயே நினைத்து பேசி வந்தாள். ஆனால் ரகு நித்யாவின் மேல் ஒரு விதமான காதலை வளர்த்துக்கொண்டான்.

நிம்மி ஒரிரு சமயங்களில் நித்யாவிடம் இதைப் பற்றி சொன்னாள். ஆனால் நித்யா தான் ரகுவை காதலிக்கவில்லை என்றே சொன்னாள். ரகு நிம்மி மூலம் நித்யா சொன்னதைத் தெரிந்துக்கொண்டாலும் அவனுடைய நினைப்பிலிருந்து மாறவேயில்லை. அவன் நித்யாமீது ஒரு வெறியுடனே இருந்தான் என்றே சொல்லவேண்டும்.

இப்படியே சில மாதங்கள் சென்றிருக்கும். ஒரு நாள் ரகு நேரிடையாகவே நித்யாவிடம் வந்து அவளை காதலிப்பதாகச் சொன்னான். அதற்கு நித்யா உடனேயே ரகுவிடம் தான் ரகுவை ஒரு நண்பனாகவே பார்ப்பதாகவும் தன் வாழ்க்கையில் இப்போது படிப்பைத் தவிற வேறு எதற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள்.

நித்யா ரகுவிடம் இப்படி நேரடியாகச் சொன்னாலும் ரகு அதை காதில் வாங்கிக்கொள்வது மாதிரி தெரியவில்லை. தினமும் நித்யாவிடம் வந்து தன் காதலைச் சொல்லிக்கொண்டே இருந்தான்.

இப்படியே சில வாரங்கள் சென்றன, ஆனால் ரகு தன் முடிவிலிருந்து மாறுவதாகவேத் தெரியவில்லை. ஒரு நாள் நித்யாவிடம் வந்து தனக்கு நித்யா வேண்டும் என்று நேரிடையாகவே சொன்னான் ரகு.

நித்யாவிற்கு ரகு சொன்னதின் அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. என்ன சொல்கிறாய் என்றே எனக்குப் புரியவில்லை ரகு. கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் புரிந்துகொள்வேன் என்றாள் நித்யா.

எனக்கு நீ வேண்டும் முழுசாக எனக்கு வேண்டும் என்றான் ரகு. அவன் சொன்னதின் அர்த்தம் நித்யாவுக்குப் புரிந்தாலும் அதை உடனே வெளியே காட்டிக்கொள்ளாமல், ரகு, இப்போ என் மனதில் இருப்பது என்னோட படிப்பு மட்டும் தான், அதை முடிக்கும்வரை நான் வேறு எந்த விஷயத்துகும் என் மனதில் இடம் கொடுக்க மாட்டேன் என்றாள், அந்தப் பேச்சில் ஒரு உறுதி இருந்தது தெரிந்தது.

ரகு மேலும் தொடர்ந்து, படிப்பை நிறுத்தவேண்டும் என்று நான் சொல்லவேயில்லை. அப்படி படித்துக்கொண்டிருக்கும்போது கொஞ்சம் ஜாலியாகவும் இருக்கலாம் இல்லையா என்றான்.

ஜாலியா என்றால், உன்னோட சினிமா பீச் இப்படின்னு போகனும்னு சொல்கிறாயா என்றாள் நித்யா கொஞ்சம் கோபத்துடன்.

நித்யாவின் கோபத்தை சட்டை செய்யாமல், ஆமாம், ஆனால் எனக்கு அதைவிட இன்னும் கொஞ்சம் அதிகமாக வேண்டும் என்றான் ரகு.

அதைவிட அதிகமாக வேண்டும் என்றால், எது வேண்டும் என்றாள் நித்யா கொஞ்சம் புரியாமல்.

நீ எனக்கு வேண்டும் என்றான் ரகு அவளுடைய முகத்திற்கு எதிராக தன் கையைக் காட்டி நீ எனக்கு வேண்டும், அதுவும் முழுசா வேண்டும் என்றான்.

ஓ, உனக்கு என்னோட படுக்கனும்னு ஆசை இருக்கா என்றாள் நித்யா கொஞ்சம் கோபத்துடன்.

உடனேயில்லை, கொஞ்சம் நாள் நெருக்கமா பழகிட்டு அப்புறம் நீ உன்னை எனக்கு முழுசாத் தரனும் என்றான் ரகு.

நித்யா கோபத்தின் உச்சிக்கேப் போய்விட்டாள்.

சரி ஒன்னு செய்யலாமா, நீ முதலில் என்னை கல்யாணம் செய்துகொள், பின்னர் உனக்கு வேண்டியதை நான் தருகிறேன். என்னிக்கு வச்சுக்கலாம் நம் கல்யாணத்தை என்றாள் நித்யா.

கல்யாணம் என்று சொன்னவுடன் கொஞ்சம் ஜகா வாங்கினான் ரகு. கல்யாணமா, எதுக்கு அதுக்குள்ளே என்றான்.

ஏன் உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசையில்லையா, வெறும் காதலிச்சுட்டு என்னை முழுசா அனுபவிச்சுட்டுப் போயிடனும்னு எண்ணம் இருக்கா உனக்கு என்றாள் நித்யா.

கல்யாணம் என்பதெல்லாம் நடக்காத காரியம், எங்கள் வீட்டில் அதுக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்றான்.

அது எப்படிடா கல்யாணம் மட்டும் வேண்டாம் ஆனால் மத்தது எல்லாம் வேண்டும்னு இப்படி நேராவே வந்து கேட்கிறயே உனக்கு வெட்கமா இல்லை என்றாள் நித்யா.

நிம்மியை யாராவது ஒருத்தன் வந்து இப்படி கேட்டா நீ என்னடா செய்வே என்றாள் நித்யா.

நிம்மியை இங்கே இழுக்காதே என்றான் ரகு. ஏன் இழுக்கக்கூடாது, அவளுக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா உன்னிடம் என்றாள் நித்யா மிகவும் கோபத்துடன்.

சரி மறுபடியும் கேட்கிறேன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறாயா, நாளைக்கே ரிஜித்திரார் ஆஃபீஸுக்குப் போகலாமா என்றாள் ரகுவை விடாமல்.

ரகு தள்ளாடிப் போய்விட்டான். இவள் விடாப்பிடாறி என்று தெரிந்து கொஞ்சம் பின் வாங்கினான்.

நித்யா ரகுவை விடுவதாக இல்லை. அவன் சட்டையைப் பிடித்து இழுத்து, நீ எங்கேடா போறே, என்னோட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு நீ போ என்றாள்.

நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாமா என்றாள் நித்யா. இல்லை நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கமுடியாது, எங்கப்பா அம்மா இதுக்கு சம்மதிக்க மாட்டார்கள். அவங்க யாரை கல்யாணம் பண்ணிக்கச் சொல்கிறார்களோ அவர்களையே நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொன்னான்.

அப்படின்னா என்னை என்ன ஊறுகாய் மாதிரி தொட்டுக்கலாம் என்று நினைச்சாயா என்றாள் நித்யா.

இனிமே என்கிட்டே பேச இந்தப் பக்கமா வந்தே, தொலைச்சுடுவேன் தொலைச்சு என்று கத்திவிட்டு அவன் சட்டையை விடுவித்தாள்.

ரகு விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடினான், அப்படி பத்தடி பின்னால் ஓடிவிட்டு திரும்பி நித்யாவைப் பார்த்து

நீ ஒரு பொம்பளையே இல்லை, சுடிதார் போட்டுண்டு இருக்கிற ஆம்பிளை என்று கத்திக்கொண்டே ஓடினான்.

அங்கே வந்தேன்னா தெரியும் சேதி என்று இங்கேயிருந்தபடியே கத்தினாள் நித்யா. அவன் கண்முன் தெரியாமல் தப்பித்தால் போதும் என்று நினைத்து ஓடினான்.

நித்யாவிற்கு அவன் சொன்ன வார்த்தையில் கோபம் வந்தது, ஆமாண்டா நான் ஆம்பிளைத்தான், பொட்டச்சி மாதிரி இருக்கும் ஆம்பிளைகளுக்கு நான் என்னிக்குமே ஆம்பிளைதான் என்று சொல்லிக்கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

தொடரும்…..

பா.ராஜேஷ்
25-05-2010, 09:07 PM
நீண்ட காத்திருப்பிற்கு பின் ஒருவழியாக அடுத்த பாகம் வந்து விட்டது. அருமை. நன்றாக எழுதி உள்ளீர்கள். திருப்பம் வைக்காமலே முடித்து விட்டீர்களே!!! ;)
அடுத்து என்ன... யாரோட பிளாஃஷ்பேக்!!???

aren
26-05-2010, 12:32 AM
நன்றி ராஜேஷ். ஆமாம் ரொம்பவும் நாள் எடுத்துவிட்டது இந்த பாகம் வருவதற்கு. இனிமேல் தொடர்ந்து கொடுக்கப்பார்க்கிறேன்.

இந்தப் பகுதிகளில் திருப்பம் இருக்க வாய்ப்பில்லை, காரணம் இந்தப் பகுதிகளில் ஒரு விஷயத்தைமட்டுமே சொல்லவேண்டியுள்ளது. அதனால் ஒரே பாகத்தில் முடித்துவிடலாம்.

மெயின் கதைக்கு வந்தவுடன் பல விஷயங்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அன்புரசிகன்
26-05-2010, 04:02 AM
என்ன கொடுமை இது. காதல் என்றாலே பித்தலாட்டம் என்ற நிலை வந்துவிட்டதா.......... முச்சந்தியில் வைத்து செருப்பால் சாத்தியிருக்க வேண்டும்.
சீக்கிரமாக அடுத்த பாகம் படிக்க ஆவல்.
வாழ்த்துக்கள் அண்ணா..

aren
26-05-2010, 05:15 AM
நன்றி அன்புரசிகன். இந்த காலத்தில் காதல் என்பது உடம்பை பொறுத்த விஷயமாகிவிட்டது, என்ன செய்வது.

இனிமேல் கொஞ்சம் வேகமாக எழுத முயற்சிக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

Akila.R.D
26-05-2010, 06:13 AM
அப்பாடா இப்பத்தான் எங்களையெல்லாம் உங்களுக்கு கண்ணு தெரிஞ்சுருக்கு போல...

நித்யா கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்...

சீக்கிரம் அடுத்த பாகத்தோட வாங்க...

சிவா.ஜி
26-05-2010, 06:53 AM
ரகுவோடப் பேச்சு...அதிர்ச்சியா இருக்கு. இப்படியா பட்டவர்த்தனமா கேப்பாங்க. இதுக்கு காதல்ன்னு வேறப் பேரக்குடுத்து...காதலோடப் புனிதத்தையேக் கெடுக்குறாங்க.
அவனுக்கு நித்யா கொடுத்த சூடு தேவைதான்.

(ஆனா...தன் தங்கையோடத் தோழியிடமே...அதுவும் அவளுடைய தைரியத்தைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு...இப்படி வெளிப்படையாய்க் கேட்பது....இந்த இடத்துல...நித்யாவோடக் கேரக்டரை நியாய*ப்படுத்த வலிய சொன்ன மாதிரி ஒரு ஃபீலிங். இந்த அத்தியாயம்...சற்று ஏமாற்றம்தான் ஆரென்.)

ரங்கராஜன்
26-05-2010, 06:54 AM
ஆரென் அண்ணா

கொஞ்ச நாளுக்கு முன்னாடி இதை படித்தேன், இன்று திரும்பவும் வாசித்தேன்,, முழுமையாக

அருமையாக இருந்தது...... சரி சில விஷயங்களில் நீங்க அப்டெட்டா இருக்கீங்களே எப்படி ........... அதுவும் காதல் விஷயங்கள்............ அதுவும் குறிப்பாக ஊடல், கொஞ்சல் .........கடும் கோபம்... காதலர்கள் அதற்காக உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் கனக்கச்சிதம்........

வார்த்தைகளிலே கதாப்பாத்திரத்தின் மனநிலையை உணர்த்தும் வித்தை புதுசாக இருக்கு அண்ணா ..........

மேலும் தொடருங்கள்

மதி
26-05-2010, 08:22 AM
ஆனா...தன் தங்கையோடத் தோழியிடமே...அதுவும் அவளுடைய தைரியத்தைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு...இப்படி வெளிப்படையாய்க் கேட்பது....இந்த இடத்துல...நித்யாவோடக் கேரக்டரை நியாய*ப்படுத்த வலிய சொன்ன மாதிரி ஒரு ஃபீலிங்.
எனக்குத் தோணினது.. கீழ பாத்தா அண்ணா எழுதியிருக்கறாப்ல.. அதான் கோட் பண்ணிட்டேன்.. ரகு பாத்திர படைப்பு.. சின்ன ஏமாற்றம்.. எனிவே.. சீக்கிரம் தொடருங்கோ... :icon_b:

aren
26-05-2010, 10:35 AM
அப்பாடா இப்பத்தான் எங்களையெல்லாம் உங்களுக்கு கண்ணு தெரிஞ்சுருக்கு போல...

நித்யா கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்...

சீக்கிரம் அடுத்த பாகத்தோட வாங்க...

நன்றி அகிலா. கொஞ்சம் பிஸியாகிவிட்டதால் தொடரமுடியவில்லை. இனிமேல் கொஞ்சம் வேகம்பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
26-05-2010, 10:41 AM
ரகுவோடப் பேச்சு...அதிர்ச்சியா இருக்கு. இப்படியா பட்டவர்த்தனமா கேப்பாங்க. இதுக்கு காதல்ன்னு வேறப் பேரக்குடுத்து...காதலோடப் புனிதத்தையேக் கெடுக்குறாங்க.
அவனுக்கு நித்யா கொடுத்த சூடு தேவைதான்.

(ஆனா...தன் தங்கையோடத் தோழியிடமே...அதுவும் அவளுடைய தைரியத்தைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு...இப்படி வெளிப்படையாய்க் கேட்பது....இந்த இடத்துல...நித்யாவோடக் கேரக்டரை நியாய*ப்படுத்த வலிய சொன்ன மாதிரி ஒரு ஃபீலிங். இந்த அத்தியாயம்...சற்று ஏமாற்றம்தான் ஆரென்.)

நன்றி சிவாஜி. ஒரிஜினல் ப்ளான் செய்த பிரகாரம் எழுதியிருந்தால் இந்த பாகத்தை இன்னும் இரண்டாக பிரிக்கவேண்டிவரும், அதனால் இதே பாகத்தில் முடித்துவிடலாம் என்று நினைத்து எழுதியதால் வந்தவிணைதான் இது.

ஒரிஜினல் ப்ளான்படி, இவர்கள் இருவருக்கும் இன்னும் ஒரு சில சுவாரசியமான விஷயங்கள் நடந்ததை எழுதியிருக்கவேண்டும், அது மாதிரி இந்த ஐடியாவைக் கொடுத்தது ரகுவுடன் படிக்கும் ஒரு பையன். அந்தப் பையன் நித்யாவும் ரகுவும் பேசுவதைப்பார்த்து நித்யாவிற்கு ரகுமேல் உண்மையாக ஒரு அட்ராக்ஷ்ன் இருக்கிறது என்று அவன் சொல்லி, இவளை இப்படி மடக்கிவிட்டால் பின்னர் நித்யா ரகுவிடம் சரணாகதியாகிவிடுவாள் என்று அவன் கொடுத்த ஐடியாவை ரகு ஏற்றுக்கொண்டு செய்ததால் வந்த விணைதான் இது.

இதை இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாம். கொஞ்சம் சொதப்பிவிட்டேன். இன்னும் எத்தனை நாள் இந்த பாகத்திற்காக காத்திருப்பது என்று நினைத்த அவசரத்தினாலும் இந்த பாகம் கொஞ்சம் சொதப்பலாக ஆகிவிட்டது. நேரம் கிடைக்கும்போது இதை சரிசெய்துவிடுகிறேன்.

உண்மையில் இந்த பாகம் ஒரு ஹைலைட்டாக இருக்கவேண்டும் என்றே நினைத்திருந்தேன், என்னோட போறாதகாலம் நேரம் கிடைக்காமல் திண்டாடிவிட்டேன். சரிசெய்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
26-05-2010, 10:44 AM
ஆரென் அண்ணா

கொஞ்ச நாளுக்கு முன்னாடி இதை படித்தேன், இன்று திரும்பவும் வாசித்தேன்,, முழுமையாக

அருமையாக இருந்தது...... சரி சில விஷயங்களில் நீங்க அப்டெட்டா இருக்கீங்களே எப்படி ........... அதுவும் காதல் விஷயங்கள்............ அதுவும் குறிப்பாக ஊடல், கொஞ்சல் .........கடும் கோபம்... காதலர்கள் அதற்காக உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் கனக்கச்சிதம்........

வார்த்தைகளிலே கதாப்பாத்திரத்தின் மனநிலையை உணர்த்தும் வித்தை புதுசாக இருக்கு அண்ணா ..........

மேலும் தொடருங்கள்

நன்றி தக்ஸ். காதல் விஷயத்தில் இருந்தாகவேண்டிய கட்டாயம் நம் இளைய சமுதாயத்திற்கு. அதான் இப்படி!!!!

நன்றி வணக்கம்
ஆரென்

aren
26-05-2010, 10:45 AM
எனக்குத் தோணினது.. கீழ பாத்தா அண்ணா எழுதியிருக்கறாப்ல.. அதான் கோட் பண்ணிட்டேன்.. ரகு பாத்திர படைப்பு.. சின்ன ஏமாற்றம்.. எனிவே.. சீக்கிரம் தொடருங்கோ... :icon_b:

நன்றி மதி. நான் சிவாஜியோட பதிவுக்கு போட்ட பதிலை நீங்களும் படித்துக்கொள்ளுங்கள். சரி செய்துவிடுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

கீதம்
02-06-2010, 09:46 PM
இந்தப்பாகத்தில் ஒரு குறையெனத் தெரிவது, நீங்கள் சொன்னதுபோல் அவசர அவசரமாய் ரகு, நித்யா விவகாரத்தைக் கையாண்டதுதான். அதனால் நீங்கள் எதிர்பார்த்த அழுத்தம் இல்லாமல் போனது உண்மை. இரண்டுபாகங்களாக வந்தாலும் பரவாயில்லை, அல்லது நேரம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. பொறுமையாகவே எழுதிப் பதிவிடுங்கள்.

அலுவலகப் பணிகளுக்கிடையில் நேரம் ஒதுக்கி தொடர்கதை எழுதுவது எவ்வளவு சிரமம் என்று அறிவேன். எனவே நினைத்திருப்பதை நினைத்தபடியே கொடுக்க இன்னும் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அவசரமில்லை. நாங்கள் காத்திருக்கிறோம்.

சிவா.ஜி
03-06-2010, 07:13 AM
எப்பவும் நீங்க எங்களுக்கு சொல்றதுதான் ஆரென். கதை நன்றாக வரவேண்டுமென்ற ஆவலில் நீங்கள் எங்களுக்குக் சொல்வதைத்தான் கீதமும் இப்போது சொல்லியிருக்கிறார்கள். அவசரமில்லாமல்...நிதானமாய் கொடுங்கள். உங்களுடைய ஸ்பெஷாலிட்டியே...காட்சிகளை..தெளிவாவும், கேரக்டர்களை...அசலாகவும் அளிப்பதுதான்.

அதனால்...உங்கள் வழக்கமான அசத்தலை தொடர்ந்து கொடுங்க. நாங்க பொறுமையாக் காத்துக்கிட்டிருக்கிறோம்.