PDA

View Full Version : துடிப்பு



sudakar88
20-03-2010, 05:13 PM
சிரிக்கின்ற மெல்லிசையே !
உன்
சிம்போனி சிரிப்பால்
இசைக்காமல் போகிறது என்
இதயத் துடிப்பு.

விரல்கள்கூட வேண்டாம்
உன் துப்பட்டாவையாவது
என் மீது
தடவிச்செல்.
மறுபடியும் இதயம்
இயல்பாக துடிப்பதற்கு.

பா.ராஜேஷ்
20-03-2010, 05:45 PM
மிக நன்று சுதாகர். புன்முறுவல் பூக்க செய்யும் அழகிய கவிதை. பாராட்டுக்கள்

சிவா.ஜி
21-03-2010, 09:50 AM
துப்பட்டா உரசலில் திக்கென்று பற்றிக்கொள்ளும் இதயம்...துப்...டப்...எனத் துடிக்கத் தொடங்கும்....

பகிவுக்கு நன்றி சுதாகர்.

(எழுதியவர் யாரெனச் சொல்லி நன்றி சொல்லியிருக்கலாமே)