PDA

View Full Version : ஆண்டவன் பேரால்...!



குணமதி
20-03-2010, 05:10 PM
ஆண்டவன் பேரால்...!


கட்டத் துணியின்றிப் பல்லாயிரவர்

கந்தல் உடையோடு!

உண்ண உணவின்றி உலகில் உழல்வோர்

உள்ளனர் பல இலக்கம்!

வேள்வி நெருப்பில் -

பட்டுப் புடைவையும்

பல்வேறு உணவுப் பொருள்களும்

போட்டுப் பொசுக்கம்!

ஆண்டவன் பேரால்...

அறமிலாச் செயல்!

பா.ராஜேஷ்
20-03-2010, 05:37 PM
உண்மைதான். ஆண்டவன் பெயர் சொல்லி அவற்றை இல்லாதவர்களுக்கு ஏன் கொடுக்க கூடாது. நியாயமான கேள்விதான் ... பாராட்டுகள்

அமரன்
20-03-2010, 10:22 PM
விடுங்க பாஸ்.

பழசுகள் புதுசாகத் தெரியும் ஒரு குமுகம் கூட இருக்கும் போது போகி கொண்டாடுறோமே.. அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆகுதியில் சேர்பவை தம்மாத்துண்டு.

இந்த மாதிரியானவர்களால்தான்
அகராதிகளில் இடம் பிடிக்கிறது
விரயம்.

நல்லடி.

பாராட்டு.

குணமதி
21-03-2010, 01:29 AM
உண்மைதான். ஆண்டவன் பெயர் சொல்லி அவற்றை இல்லாதவர்களுக்கு ஏன் கொடுக்க கூடாது. நியாயமான கேள்விதான் ... பாராட்டுகள்

நன்றி.

குணமதி
21-03-2010, 01:29 AM
நன்றி அமரன்.

கலையரசி
21-03-2010, 05:37 AM
குடம் குடமாகப் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யும் பக்தர்கள் ஒரு டம்ளர் பாலை அழுகின்ற பச்சைக்குழந்தைக்குக் கொடுக்க மாட்டார்கள். அதனால் தான் தந்தை பெரியார் சொன்னார்:-
கடவுளை மற, மனிதனை நினை.
நல்ல கருத்துள்ள கவிதைக்குப் பாராட்டு.

சிவா.ஜி
21-03-2010, 06:29 AM
யாராலும் திருத்தமுடியாது. ஆண்டவனைக் கைக்கூலி வாங்கிக்கொண்டு, தங்கள் எல்லா செயல்களுக்கும் துணை நிற்கும் பார்ட்னராக நினைக்கும் மக்கள் இருக்கும்வரை இது நடந்துகொண்டுதானிருக்கும்.

வாழ்த்துக்கள்.

குணமதி
21-03-2010, 12:06 PM
சிறப்பான பின்னூட்ட மிட்டுள்ளீர்கள் கலையரசி!

பாராட்டும் நன்றியும்.

குணமதி
21-03-2010, 12:06 PM
நன்றி சிவா.

உமாமீனா
15-02-2011, 05:51 AM
நெத்தி பொட்டில் ஆணி அடித்தமைக்கு வாழ்த்துக்கள்