PDA

View Full Version : மாற்றம்



பா.ராஜேஷ்
20-03-2010, 04:13 PM
நானாகவே நானிருக்க
நாளும் விழைவதுண்டு
நான் நானாகவிருக்க
நான் மட்டுமே காரணி அல்ல

காரணியின் கார(ண)ங்கள்
காயம் செய்ததால்
கால்தடம் மாற்ற
காத்திருக்கிறேன் !

மாற விருப்பம் இல்லாத போதும்
மாற வேண்டிய நிர்பந்தம்
மாறுவதா இல்லை மாற்றுவதா?
மறுபடியும் யோசிக்கிறேன்!

குணமதி
20-03-2010, 04:27 PM
மாற்றம் விரும்பியும் விரும்பாமலும் ஏற்படுகிறது.

அது, சரியானதாக, ஆக்கமானதாக அமையும்போது வெற்றி கிடைக்கிறது.

எண்ணித்துணிக.

சிந்திக்க வைக்கும் எழுத்து.

பா.ராஜேஷ்
20-03-2010, 04:32 PM
சரியாக சொன்னீர்கள் குணமதி. நன்றி.

govindh
22-03-2010, 12:21 PM
மாற விருப்பம் இல்லாத போதும்
மாற வேண்டிய நிர்பந்தம்
மாறுவதா இல்லை மாற்றுவதா?
மறுபடியும் யோசிக்கிறேன்!

தீர்க்கமாக சிந்திக்கச் சொல்கிறீர்கள்..
சிந்திக்க வைக்கிறீர்கள்...

இனியவள்
22-03-2010, 05:36 PM
மாற்றம் ஒன்றே மாற்றமில்லாது
நன்மை விளையுமிடத்தில்
மாற்றத்தில் தப்பேதுமில்லை நண்பரே

கவி அழகு அழகிய கவி படைத்த உமக்கு எமது வாழ்த்துக்கள்...!

பா.ராஜேஷ்
22-03-2010, 06:59 PM
நன்றி கோவிந்த் !

பா.ராஜேஷ்
22-03-2010, 07:00 PM
நன்றி இனியவள் அவர்களே !

சரோசா
22-03-2010, 09:07 PM
யோசிக்க, வியக்க,வைக்கும் கவிதை.
அசத்துங்கள்

அமரன்
22-03-2010, 09:28 PM
உண்மைதான்.

எமது விருப்பம் இன்றியே கால்கள் மாற்றத்தின் வழியே நகர்த்தப்படுகின்றன.

மாற்றங்களை ஏற்றுக்கொள்பவனே மாற்றங்களை ஏற்படுத்தவும் வல்லமை பெறுகிறான்.

எப்படியாயினும் மாற்றங்களை நோக்கியே கால்கள் நகர்கின்றன.

பாராட்டு பா.ராஜேஷ்.

பா.ராஜேஷ்
23-03-2010, 01:08 PM
யோசிக்க, வியக்க,வைக்கும் கவிதை.
அசத்துங்கள்

நன்றிகள் சரோசா

பா.ராஜேஷ்
23-03-2010, 01:09 PM
உண்மைதான்.

எமது விருப்பம் இன்றியே கால்கள் மாற்றத்தின் வழியே நகர்த்தப்படுகின்றன.

மாற்றங்களை ஏற்றுக்கொள்பவனே மாற்றங்களை ஏற்படுத்தவும் வல்லமை பெறுகிறான்.

எப்படியாயினும் மாற்றங்களை நோக்கியே கால்கள் நகர்கின்றன.

பாராட்டு பா.ராஜேஷ்.

சில தடுமாற்றம் ஏற்படுவது உண்மைதான். நன்றி அமரன்.

பா.சங்கீதா
24-03-2010, 06:14 AM
:icon_b:

சிவா.ஜி
24-03-2010, 06:52 AM
நாமாகவே நம்மை இருக்கவிடாமல் செய்யும் கார(ங்)ணிகள்....எங்கும் விரவிக் கிடக்கின்றன. அவை எவற்றிலும் இடறாமலிருக்க....இமாலயப் பிரயத்தனம் வேண்டும்.

உறுதியாய் இருந்தால்....உறுத்தாத பயணம்....உள்ளம் தடுமாறினால்....பயணப்பாதையில் மாற்றம்....

சிந்திக்க வைத்தக் கவிதை அன்பான வாழ்த்துக்கள் ராஜேஷ்.

jayashankar
24-03-2010, 12:22 PM
மிகவும் அருமையான கவிதை.

மாற்றங்கள் என்பது நம் வாழ்வியலில் ஒன்றிய ஒன்று.

இருந்தாலும், சில சமயம் மகிழ்ச்சியையும், சில சமயம் குழப்பத்தையும், சில சமயம் துக்கத்தையும் கொடுக்க கூடியது.

இருப்பினும், இந்த மாற்றம் என்பது 90/10 விதிப்படிதான் செயல்படுகின்றது.

மாற்றங்களுக்கு 90% பங்களிப்பு நம் கையில் இருப்பதால், அதற்கு பொறுப்பும் நாமாகின்றோம். எனவேதான், இந்த மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.

இதனை மிக அருமையாக எளிய வரிகளில் கார(ண)சாரமாக முன்வைத்திருக்கின்றீர்கள்.

பாராட்டுகள் ராஜேஷ்.

பா.ராஜேஷ்
24-03-2010, 01:01 PM
:icon_b:

நன்றி சங்கீதா

பா.ராஜேஷ்
24-03-2010, 01:03 PM
நாமாகவே நம்மை இருக்கவிடாமல் செய்யும் கார(ங்)ணிகள்....எங்கும் விரவிக் கிடக்கின்றன. அவை எவற்றிலும் இடறாமலிருக்க....இமாலயப் பிரயத்தனம் வேண்டும்.

உறுதியாய் இருந்தால்....உறுத்தாத பயணம்....உள்ளம் தடுமாறினால்....பயணப்பாதையில் மாற்றம்....

சிந்திக்க வைத்தக் கதை அன்பான வாழ்த்துக்கள் ராஜேஷ்.

நன்றிகள் பல சிவா அண்ணா.

இது கவிதை.. கதை அல்ல!!! ;)

பா.சங்கீதா
24-03-2010, 01:21 PM
சகோதரரே! நீங்கள் நன்றிக்கு மாற்றம்
கட்டலாமே!

வாழ்க தமிழ்!:)

பா.ராஜேஷ்
24-03-2010, 01:31 PM
மிகவும் அருமையான கவிதை.

மாற்றங்கள் என்பது நம் வாழ்வியலில் ஒன்றிய ஒன்று.

இருந்தாலும், சில சமயம் மகிழ்ச்சியையும், சில சமயம் குழப்பத்தையும், சில சமயம் துக்கத்தையும் கொடுக்க கூடியது.

இருப்பினும், இந்த மாற்றம் என்பது 90/10 விதிப்படிதான் செயல்படுகின்றது.

மாற்றங்களுக்கு 90% பங்களிப்பு நம் கையில் இருப்பதால், அதற்கு பொறுப்பும் நாமாகின்றோம். எனவேதான், இந்த மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.

இதனை மிக அருமையாக எளிய வரிகளில் கார(ண)சாரமாக முன்வைத்திருக்கின்றீர்கள்.

பாராட்டுகள் ராஜேஷ்.

மிக்க நன்றி அண்ணா ! பல நேரம் வேண்டா வெறுப்புடன் நடந்து கொள்வதால் நம் மேலே நமக்கு வெறுப்பு வந்து விடுகிறது. அது நம்முடைய குணத்தையும், மனதையும், கூடவே உடல் நலத்தையும் பாதிக்கிறது. அதை வைத்து எழுதினேன்.

சிவா.ஜி
24-03-2010, 01:39 PM
நன்றிகள் பல சிவா அண்ணா.

இது கவிதை.. கதை அல்ல!!! ;)

தட்டச்சுப் பிழை......!!!(ஹி....ஹி...)

jayashankar
24-03-2010, 01:57 PM
”வி”த்திருக்கும் கதைதானே கவிதையாகின்றது.

சிவா.ஜி
24-03-2010, 02:52 PM
”வி”த்திருக்கும் கதைதானே கவிதையாகின்றது.

சூப்பர்....!!!

பா.ராஜேஷ்
24-03-2010, 02:57 PM
”வி”த்திருக்கும் கதைதானே கவிதையாகின்றது.

சரியான ஆபத்பாந்தவர்தான் நீங்கள்... :D

ஜனகன்
24-03-2010, 02:58 PM
அருமையான வார்த்தைகள் ராஜேஷ் .நல்ல கருத்துடன் கவிதை அமைந்துள்ளது, வாழ்த்துக்கள்.

பா.ராஜேஷ்
24-03-2010, 03:01 PM
அருமையான வார்த்தைகள் ராஜேஷ் .நல்ல கருத்துடன் கவிதை அமைந்துள்ளது, வாழ்த்துக்கள்.

நன்றிகள் பல ஜனகன். மன்றத்திற்கு வந்த பின்தான் இது போல் கிறுக்க தொடங்கினேன். மன்றத்திற்கும், மன்ற உறவுகளுக்கும்தான் இது சமர்ப்பணம்.

இளசு
24-03-2010, 08:27 PM
நானாகவே நானிருக்க...

நான் யார்?
நேற்று, இன்று, நாளை?
தனியே, சிலர் முன், பலர் முன்?
இல்லம், பணியிடம், திடல், தெரு?
உள்ளூர், இந்நாடு, வெளிதேசம்?
வெற்று முகமாய்... முகமூடியுடன்..?


முதல் வரியையே என்னால் தாண்ட முடியவில்லை இராஜேஷ்..


சிந்தனை தூண்டிய கவிதைக்குப் பாராட்டுகள்!

பா.ராஜேஷ்
24-03-2010, 09:53 PM
நானாகவே நானிருக்க...

நான் யார்?
நேற்று, இன்று, நாளை?
தனியே, சிலர் முன், பலர் முன்?
இல்லம், பணியிடம், திடல், தெரு?
உள்ளூர், இந்நாடு, வெளிதேசம்?
வெற்று முகமாய்... முகமூடியுடன்..?


முதல் வரியையே என்னால் தாண்ட முடியவில்லை இராஜேஷ்..


சிந்தனை தூண்டிய கவிதைக்குப் பாராட்டுகள்!

அசத்துறீங்க இளசு அண்ணா. ஏதோ என்னால் முடிந்ததை என்னக்கு வந்தவரை எழுதினேன். ;) தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி