PDA

View Full Version : இன்று தமிழகம்



muthuvel
20-03-2010, 05:02 AM
சலுகையில் அரசு ஊழியன் ,
பதற்றத்தில் கணிபொறி பொறியாளன் ,
ஏக்கத்தில் ஏழை ,
தயக்கத்தில் நடுத்தர குடும்பம் ,
தொலைக்காட்சி தொடரில் இல்லத்தரசி,
மன அழுத்தத்தில் பட்டதாரி,
சேமிப்பில் பணக்காரன் ,
அறிக்கைகளில் அரசியல்வாதிகள் ,
இலவசத்தில் அனைவரும் ..

சிவா.ஜி
20-03-2010, 06:56 AM
எல்லாம் சரிதான்.

குழப்பத்தில் குழந்தைகள்....! இதையும் சேர்த்துக்குங்க.

நல்லாருக்கு. வாழ்த்துக்கள் முத்துவேல்.

muthuvel
20-03-2010, 11:50 AM
நீங்க சொன்னது சரி

govindh
20-03-2010, 12:52 PM
எங்கே இருக்கிறது..இன்று தமிழகம்...
நல்லாருக்கு. வாழ்த்துக்கள் முத்துவேல்.

ஆதி
20-03-2010, 01:48 PM
இலவசத்தில் அனைவரும்..

இது சரினா..

மன அழுத்தத்தில் பட்டதாரி,
பதற்றத்தில் கணிபொறி பொறியாளன் ,
ஏக்கத்தில் ஏழை ,
தயக்கத்தில் நடுத்தர குடும்பம்

இது எல்லாம் தப்பு..

சரி அதை விடுங்க, இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வும் சொல்லிருக்கலாமே..

புதுசா ஏதாவது எழுதுங்க...

muthuvel
20-03-2010, 03:35 PM
இலவசத்தில் அனைவரும்..

இது சரினா..

மன அழுத்தத்தில் பட்டதாரி,
பதற்றத்தில் கணிபொறி பொறியாளன் ,
ஏக்கத்தில் ஏழை ,
தயக்கத்தில் நடுத்தர குடும்பம்

இது எல்லாம் தப்பு..

சரி அதை விடுங்க, இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வும் சொல்லிருக்கலாமே..

புதுசா ஏதாவது எழுதுங்க...

நீங்க சொல்லுங்க

ஆதி
21-03-2010, 10:01 AM
நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லல முத்துவேல், பரவாயில்லை, நீங்க கேட்டத நான் அதற்காக சொல்லாம இருக்க மாட்டேன்..

புதுசா எழுத தலைப்பு தர்ரேன் எழுதுங்க..

1) தென்னை மரங்களுக்கு பின்னால் அறுந்த தலை.. (இதற்குள் ஒரு படிமம் ஒளிந்திருக்கு, கண்டு பிடித்தல் நவீனத்துவ கவிதை எழுதலாம்)

2) சில காய்கறிகளும் இரத்த தோய்ந்த மூளையும்.. ( இதில் மிக சுலபமாய் ஒரு புதுக்கவிதை எழுதலாம்)

3) அர்செனிக் உலகம்.. ( புதுக்கவிதை, நவீனம், பின்னவீனம், இசங்கள் எதுவும் எழுதலாம் ஹைக்கூ கூட )

4) சீழ் வடியும் நிலா ( சர்ரியலிச தலைப்பு, சர்ரியலிச கவிதை எழுதலாம்)

குணமதி
25-03-2010, 03:10 AM
ஒருசேரத் தொகுக்கும் முயற்சி பாராட்டுக்குரியதே.

ஆதி
25-03-2010, 03:21 AM
ஒருசேரத் தொகுக்கும் முயற்சி பாராட்டுக்குரியதே.

புரியவில்லை குணமதி..

muthuvel
28-03-2010, 03:01 PM
எனக்கும்தான்