PDA

View Full Version : பிரிவே பிரிந்திடாதே



Ravee
20-03-2010, 03:20 AM
பிரிவே பிரிந்திடாதே

( தாய் மண்ணை பிரிந்த சக நண்பர்களுக்காக இந்த கவிதை )

http://farm4.static.flickr.com/3329/3515276040_c176c75d8b.jpg



பிரிவு கண்ட போது தான் நான்
உன்னை பிரிந்த வலி புரிகிறது

பிரிவே நீ என்னை போராட கற்றுக்கொடுத்தாய்
பிரிவே நீ என்னை வாழ கற்றுக்கொடுத்தாய்

பிரிவே நீ வாய்ப்புக்களை தேடக் கற்றுக்கொடுத்தாய்
பிரிவே நீ என்னை நேசிக்க கற்றுக்கொடுத்தாய்

பிரிவே எனக்காக மட்டும் வாழ்ந்த என்னை
பிறர்க்காக வாழவும் கற்றுக்கொடுத்தாய் முறையாய்

பிரிவுகளை பற்றி எண்ணாத புதிய சமுதாயம்
பிரிந்தவர்கள் ஒன்று கூடி இனி உருவாக்குவோம்

பிரிந்த உறவுகள் பல கூடி பிரிவினை மறந்தாலும்
பிரிவே நீ என்னை விட்டு என்றும் பிரிந்திடாதே

மனிதம் தொலைத்த மனிதர்களை பிரிந்த எனக்கு
மனிதம் தேட தொடர்ந்து உன் வலி வேண்டும் .

குணமதி
20-03-2010, 03:24 AM
நான் முன்னொருமுறை பின்னூட்ட மிட்டதையே மீண்டும் எழுதுகிறேன் :

பிரிவே என்னைவிட்டுப் பிரியாதே! என்று கூறும் சொற்களில்தான்...

பிரிவாற்றாமையின் பருமையும் அழுத்தமும் வெளிப்படுகிறது.

பாராட்டு.

Ravee
20-03-2010, 03:27 AM
எத்தனையோ சந்தோசமாய் வாழ்க்கை மாறிப்போனாலும் எங்கோ ஒரு மூலையில் ஒரு ஊமை வலி அதுதான் பிரிவு , நன்றி குணமதி

சிவா.ஜி
20-03-2010, 05:18 AM
பிரிவும் சில நேரம் நன்மைக்கே எனச் சொல்லும் கவிதை.

பிரிவுதரும் வலி வாழ்க்கையைப் புரிய வைக்கிறது.

வாழ்த்துக்கள் ரவி.

Ravee
20-03-2010, 06:46 AM
ஆமாம் சிவா ... கூட்டு புழு தோலுரித்து வண்ணத்து பூச்சியாய் மாற அதிக வேதனைகளை தாங்கத்தான் வேண்டி இருக்கிறது. வலிகளை தாண்டிய பின் வாழ்க்கை வண்ணமயம்

அமரன்
20-03-2010, 08:14 AM
விளிம்பு நிலையில் வீரனாவதைப் போல்
விரக்தியின் முடிவில் வெற்றித் தொடக்கம்.

அசத்தினீங்க ரவீ.

அக்னி
23-03-2010, 08:08 AM
திடீரெனப் பொழியும் மழையில்,
நம் மண்ணும் வாசம் எழுப்பும்...

நாசி தொடும் அந்த அனல் வாசம்,
மாறி மாறி வரும் அனைத்துப் பருவகாலங்களின்
எந்தப் பருவத்திலும் இங்கில்லை...

படத்தின் ஒற்றை ரோஜா மிக அழகுதான்.
ஆனால், தனியே நின்றல்லவா வாடுகின்றது...
இதுதான்
மண்ணைப் பிரிந்து வாழும் வாழ்க்கை...

ரவீ அவர்களுக்குப் பாராட்டு...

govindh
23-03-2010, 08:24 AM
பிரிவுகளை பற்றி எண்ணாத புதிய சமுதாயம்
பிரிந்தவர்கள் ஒன்று கூடி இனி உருவாக்குவோம்

மிக அருமை ரவீ.
பாராட்டுக்கள்..

ஆர்.ஈஸ்வரன்
23-03-2010, 09:41 AM
நல்ல கவிதை இனிய நல்வாழ்த்துக்கள்

Ravee
25-03-2010, 02:41 PM
திடீரெனப் பொழியும் மழையில்,
நம் மண்ணும் வாசம் எழுப்பும்...



நம்பிக்கை ஊட்டும் ரசனையான வார்த்தை நன்றி அக்னி

Ravee
25-03-2010, 02:44 PM
விளிம்பு நிலையில் வீரனாவதைப் போல்
விரக்தியின் முடிவில் வெற்றித் தொடக்கம்.

அசத்தினீங்க ரவீ.

பத்து அடி தோண்டியவனுக்கு தங்கம் கிடைக்க வில்லை.
போய்விட்டான் ... அடுத்துவந்தவன் ஒரு அடி தோண்டினான்
புதையல் ..... தங்க புதையல்
எனவே விட்டு போவதில்லை வாழ்க்கை
விரட்டிப் பிடிப்பதே வாழ்க்கை

நன்றி அமரன்

Ravee
25-03-2010, 02:47 PM
பிரிவுகளை பற்றி எண்ணாத புதிய சமுதாயம்
பிரிந்தவர்கள் ஒன்று கூடி இனி உருவாக்குவோம்

மிக அருமை ரவீ.
பாராட்டுக்கள்..

ஒவ்வொரு கவிதையிலும் உங்கள் பின்னுட்டம் ... அது எப்படி எனக்கு பிடித்த வரிகளே உங்களுக்கும் பிடிகிறது கோவிந்த்

Ravee
25-03-2010, 02:48 PM
நல்ல கவிதை இனிய நல்வாழ்த்துக்கள்

ஈஸ்வர கடாச்சம் என்றும் கிட்டட்டும் ... நன்றி நண்பரே