PDA

View Full Version : இரு முறை ஊமை ஆனதுண்டுRavee
19-03-2010, 07:20 PM
http://farm4.static.flickr.com/3238/3000118486_de07392e30.jpg


வாழ்வில் நான் இரு முறை ஊமை ஆனதுண்டு
இரண்டும் இரண்டு விதம் ... சாட்சியாய் நான்

முதல் முறை என் பெண் என்னை
அப்பா என்று மழலையாய் அழைத்த போது

ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் புரண்டிட
அவளின் அடுத்த வார்த்தைக்கு காத்திருந்தேன்

இறுகப் பற்றிய அவளின் கைகளை பிரித்திட மனமின்றி
பேசிட எனக்குள் வார்த்தைகள் இல்லை.

இரண்டாம் முறை மரணத்தின் கோரப் பிடியில்
என் தந்தை என்னை அப்பா என்று அழைத்தபின்

அடுத்த வார்த்தை அவரிடம் வராமல்
ஆவி பிரிந்தது அனைத்தும் முடிந்தது

இறுகப் பற்றிய அவரின் கைகளை பிரித்திட மனமின்றி
பேசிட எனக்குள் வார்த்தைகள் இல்லை.

ஜனகன்
19-03-2010, 07:36 PM
ஊமை ஆனதுக்கு இப்படி இரு எடுத்துக்காட்டுக்கள்.
ஒன்று சுகமான ஊமை.மற்றது சுமையான ஊமை.
நல்ல கவிதை வரிகள். இன்னும் எழுதுங்கள் ரவி.

Ravee
19-03-2010, 07:43 PM
ஊமை ஆனதுக்கு இப்படி இரு எடுத்துக்காட்டுக்கள்.
ஒன்று சுகமான ஊமை.மற்றது சுமையான ஊமை.
நல்ல கவிதை வரிகள். இன்னும் எழுதுங்கள் ரவி.

இரண்டும் கண்களை கண்ணீர் மறைக்க வைத்த நினைவுகள் ஜனகன்....:huh::huh::huh:

கீதம்
19-03-2010, 09:29 PM
சில சமயம் மனம் எவ்வளவோ பேசத்துடிக்கும். வாய் ஊமையாய் நிற்கும். அதிலும் இருவேறு எதிரெதிர் நிகழ்வுகள். ஒன்று துவக்கம்; மற்றொன்று முடிவு!

மனதைத் தொட்டுவிட்டன உங்கள் வரிகள். பாராட்டுகள் ரவீ அவர்களே.

Ravee
19-03-2010, 09:43 PM
கீதம், எனக்கு வார்த்தைகளில் அதிகமாக வண்ணம் பூச தெரியாது . இது என்னுள் உறங்கி கிடந்த நினைவு. உங்கள் வாழ்த்து என்னை வடிவமைக்கட்டும்

govindh
19-03-2010, 10:15 PM
அடுத்த வார்த்தை அவரிடம் வராமல்
ஆவி பிரிந்தது அனைத்தும் முடிந்தது
ஊமையானது இரு முறை...
கவிதை முடிந்த போது...மூன்றாம் முறை...
நிறைய எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்..

அமரன்
19-03-2010, 10:25 PM
புலன்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் உயிர் பெற்று வந்து கதை பேசும்போது இது போன்ற ஊமையான தருணங்கள் உருவாகின்றன.

இத்தருணங்களின் அடர்த்தி அதிகமானது. எளிதில் நெஞ்சை விட்டு அகலாதது.

நன்று ரவீ.

Ravee
20-03-2010, 02:35 AM
ஒவ்வொருமுறையும் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் இடும் போது என் தந்தை என் கண்களுக்கு முன் . பல கனவுகளோடு வாழ்ந்த மனிதர் பாதியிலேயே கலைந்து விட்டார். கண்கள் மீண்டும் திரை இடுகிறது .... நன்றி கோவிந்த் , நன்றி அமரன்.

குணமதி
20-03-2010, 03:13 AM
இரண்டும் உயிரை உலுக்கும் உணர்வு நிலைகள்.

பாராட்டு.

Ravee
20-03-2010, 03:24 AM
இன்னும் வேண்டும் என்றும் இனி வேண்டாம் என்றும் மனம் தவிக்கும் இரு சூழல். வாழ்த்துக்கு நன்றி குணமதி

சிவா.ஜி
20-03-2010, 05:35 AM
இன்பம், துன்பம்....இரண்டிலும் வார்த்தைகள் ஊமையாகிவிடும். உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்.

வாழ்த்துக்கள் ரவி.

rajarajacholan
20-03-2010, 06:48 AM
நன்றாக இருக்கிறது.

Ravee
20-03-2010, 06:50 AM
இன்பம், துன்பம்....இரண்டிலும் வார்த்தைகள் ஊமையாகிவிடும். உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்.

வாழ்த்துக்கள் ரவி.

உண்மைதான் சிவா நன்றி

Ravee
20-03-2010, 06:51 AM
நன்றாக இருக்கிறது.

நன்றி ராஜராஜன்

அக்னி
30-03-2010, 11:47 AM
விளிம்புநிலையில்
வந்த வார்த்தைகள்
மனம்புகுந்து அடைத்துக்கொள்ள,
வராத வார்த்தைகள்
இதழ்களிற் துடிதுடித்து
விழிகளில் மடையுடைக்கக்,
கலங்கி மறைந்திடும் தருணப்பதிவு
என்றும் மறைந்திடாது மனதைவிட்டு...

ஒரே வார்த்தை. ஒரே பிரதிபலிப்பு.
உச்சநிலை உணர்வில்,
சுகமும் சோகமும் ஒருங்கே...

ரவீ அவர்களோடு,
சுகத்திலும் சோகத்திலும் பங்கு கொள்கின்றேன்...

கலையரசி
30-03-2010, 02:17 PM
ஆனந்தமோ, சோகமோ உச்சநிலையில் இருக்கும் போது இப்படித்தான் வாய் மூடி ஊமையாகி விடுகிறோம். வார்த்தைகளில் உங்களுக்கு வண்ணம் பூசத் தெரியாவிட்டாலும் உங்களது உணர்வுகளை வார்த்தைகள் அப்படியே பிரதிபலித்து படிப்பவரைப் பாதிப்புக்குள்ளாக்குவது என்னமோ நிஜம். தந்தையின் மீது நீங்கள் கொண்டுள்ள பாசம் என்னை நெகிழ வைக்கிறது. அக்னி அவர்கள் சொன்னது போல் உங்கள் சுகத்திலும் சோகத்திலும் பங்கு கொள்ள மன்ற உறவுகளாகிய நாங்கள் தயாராயிருக்கிறோம். உணர்வுகளை இவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது மனசு லேசாகிவிடும்.

Ravee
02-04-2010, 01:09 AM
உண்மைதான் கலையரசி , நாம் வாழ்வில் உணர்வுப்பூர்வமாக உணராத ஒன்றை பற்றி எழுதும் போது இதயத்தை தொடுவதில்லை .ஒரு முறை காதல் கவிதை எழுதப் போய் சிவாவிடம் சூடு பட்டேன். அதிகமாக கற்பனை செய்ய நேரம் இருப்பதில்லை . எனவே என் உள் இருக்கும் அனுபவங்களை கவிதையாக்கும் முயற்சி செய்தேன். உங்கள் அனைவரின் உள்ளம் தொட்டதில் மகிழ்ச்சி .