PDA

View Full Version : பிரிவு



சரோசா
18-03-2010, 12:43 PM
என் தாய்நாட்டைப் பிரிந்து....
சொந்தங்கள் , சொத்துகள் இழந்தும்,பிரிந்தும்
நீ மட்டும்..
பிரிவு எனும் பெயர் சூடி
என்னை விட்டுப் பிரியாமல் இருக்கின்றாய்.
ஆகவே
பிரிவே நான்
உன்னை நேசிக்கின்றேன்

govindh
18-03-2010, 12:52 PM
நீ மட்டும்..பிரிவு எனும்
பெயர் சூடி என்னை விட்டுப் பிரியாமல்.....
நல்லா இருக்கு...!

குணமதி
18-03-2010, 01:08 PM
பிரிவு பிரியாமல் இருப்பதற்கு நன்றியாக அப்பிரிவை நேசிக்கும் உணர்வு - பிரிவாற்றாமையின் பருமையை உணர்த்துகிறது.

பாராட்டு.

சரோசா
18-03-2010, 01:12 PM
நன்றி பல கோவிந்த்

சரோசா
18-03-2010, 01:15 PM
பாராட்டுக்கு நன்றி குணமதி

கலையரசி
18-03-2010, 01:16 PM
பிரிவுத்துயரை மறக்க பிரிவையே நேசிக்கக் கற்றுக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது தான் சரோசா. வாழ்த்து. மேலும் எழுதுங்கள்.

சரோசா
18-03-2010, 01:21 PM
தக் நோர்வே மொழி .நன்றி கலைஅரசி
நன்றி-------தக்

அமரன்
19-03-2010, 11:51 PM
மெல்லிய ஊசியை குத்தும் கவிதை..

நேசத்துக்குள் ஒளிந்திருக்கும் சோகத்தை, இயலாமையை, ஆற்றாமையை இயம்பும் பலரது கதை.

வெற்றிடங்கள் வாழ்வில் இல்லவே இல்லை.
வெறுமைகளாலாவது நிரப்பப்பட்டே உண்டு.

அருமை.

பா.ராஜேஷ்
20-03-2010, 04:21 PM
சூப்பர்ங்க ... ரொம்ப நல்லா இருக்கு

சரோசா
26-03-2010, 08:46 PM
அமரன் ,ராஜேஷ் எனது மனமார்ந்த நன்றிகள்

இனியவள்
27-03-2010, 09:26 AM
பிரிவும் எம்மை விட்டும் பிரியும்
நாம் மீண்டும் இணையும் பொழுது

வா பிரிவுக்கும் விடை கொடுப்போம்

அழகிய கவி

பிரிவே உன்னை நான்
நேசிக்கின்றேன் நீயாவது
என்னைப் பிரியாமல் இருப்பதால்

வாழ்த்துக்கள் தோழியே..!

Akila.R.D
06-04-2010, 07:06 AM
கவிதை நல்லா இருக்கு சரோசா...

தொடர்ந்து எழுதுங்கள்...

வாழ்த்துக்கள்...

பா.சங்கீதா
12-04-2010, 04:53 AM
பிரிவை நேசிக்கும் பொது பிரிவும் சுகமே....

பிரிந்திருக்கும் காலத்தில் நேசம் அதிகரிக்கும்
உடன் பாசமும் அதிகரிக்கும்....

நல்ல கவிதை வாழ்த்துகள் :)