PDA

View Full Version : அப்போது யார்?



குணமதி
18-03-2010, 01:58 AM
அப்போது யார்?


அண்ணா அழைத்தார்!

அம்மா அழைத்தார்!

அய்யா அழைத்தார்!

அழைத்த போதெல்லாம்

போய்க்கொண்டிருந்தவர்...

இல்லாமையில் இறந்தபோது

யாருமற்ற பிணம்!

பா.ராஜேஷ்
19-03-2010, 04:54 PM
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதை உங்கள் கவிதை அழகாக சொல்கிறது. பாராட்டுக்கள் குணமதி

குணமதி
19-03-2010, 04:58 PM
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதை உங்கள் கவிதை அழகாக சொல்கிறது. பாராட்டுக்கள் குணமதி

இல்லாமையோடு அரசியல்காரரிடம் எளிதில் ஏமாறிப்போகும் நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மிக்க நன்றி.

govindh
19-03-2010, 05:03 PM
கட்சித் தொண்டனின் நிலையை...இடித்து உரைக்கும் வகையில் ...அமைந்துள்ளது...பாராட்டுக்கள்...

குணமதி
19-03-2010, 05:08 PM
நன்றி கோவி.

அமரன்
20-03-2010, 12:12 AM
எதுவுமற்ற பிணமாக வாழ்வதைக் காட்டிலும்
யாருமற்ற பிணமாக மாழ்வது மேல்.

பாராட்டு குணமதி.

குணமதி
20-03-2010, 03:11 AM
நன்றி அமரன்.

சிவா.ஜி
20-03-2010, 05:41 AM
யாருமற்ற* பிணமாய் அப்பன் விழுந்துகிடந்தாலும், எரித்தக் கையோடு, அண்ணன் அழைப்புக்கும், அய்யா அழைப்புக்கும், அம்மா அழைப்புக்கும் தயாராவான் மகன்.

தலைவன் வாழ....தொண்டன் மாளும்....அசிங்க அரசியல்.

வாழ்த்துக்கள் குணமதி.

குணமதி
20-03-2010, 04:40 PM
நன்றி சிவா.