PDA

View Full Version : இணையத்தில் சுட்டது: மீ டூ சைந்தவி...! - சைந்தவி புருஷன்.அன்புரசிகன்
16-03-2010, 11:11 AM
இணையத்தில் படித்தது... மனதை கொள்ளைகொண்ட கதை என்பதால் இங்கு பகிர்கிறேன். சில வார்த்தை பிரயோகங்கள் மனதை வருடலாம். ஆனாலும் தணிக்கை செய்யாது பதிகிறேன்.

நன்றி: http://veliyoorkaran.blogspot.com/

முப்பது வருஷம் ஆச்சுடி முத்திகுட்டி...ஐ லவ் யு பை சைந்தவி (http://veliyoorkaran.blogspot.com/2009/11/i-love-you-by-sainthavi.html)னு போட்டு உன்கிட்டேர்ந்து இந்த லெட்டர் வந்து..!


போன வாரம் நடந்த மாதிரி இருக்கு..அப்போ நமக்கு கல்யாணம் ஆகி ஒரு ஏழு எட்டு வருஷம் இருக்கும்னு நெனைக்கறேன்.. அன்னிக்கு அந்த லெட்டெர படிச்சிட்டு சிரிச்சிகிட்டே உன்ன கட்டிபுடிச்சு உன் காதுல ஏண்டி உங்கப்பன் சிரிக்கறப்ப லூஸ் மோகன் மாதிரியே இருக்கான்னு கேட்டு அப்பவும் உன்ன சிரிக்க வெச்சேன்...அன்னிக்கு தோணல...திரும்ப உன்கிட்ட ஐ லவ் யு சொல்லனும்னு...


ஏன் தோணலைன்னு தெரியல..நான் வார்த்தைல சொல்லித்தான் என் காதல் உனக்கு தெரியனுமாங்கர கர்வமா..இல்ல என்கூடவேதான இருக்கபோறா இவங்கர திமிரான்னு தெரில...ஆனா இன்னிக்கு தோணுது...உனக்கு பதில் எழுதனும்னு. அதுவும் உன் போட்டோவ பார்த்துகிட்டே எழுதனும்னு.. ..


மீ டூ சைந்தவி...நானும் உன்ன ரொம்ப லவ் பண்ணேன்...பண்றேன்...பண்ணுவேன்...


எல்லா ட்ரெஸ்ளையும் என் தங்கக்குட்டி ராசாத்தி மாதிரிதான் இருப்பான்னு நான் உன்கிட்ட சொல்ற எல்லா பொய்க்கும், அது பொய்ன்னு தெரிஞ்சும் வெக்கப்பட்டு சிரிப்பியே ஒரு சிரிப்பு..அதுக்கே உன்ன இன்னொருதடவ கட்டிக்கலாம்டி....


ஆக்சுவலா நாம கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ உன்ன இறுக்கி கட்டிபுடிச்சு உன் உதட்ட கடிக்கனும்போலதான் இருந்துச்சு...ஆனா நீ என்ன தப்பா நெனைச்சிடுவியோன்னுதான் ஒன்னும் செய்யாம வந்துட்டேன்..இப்ப உள்ள சைந்தவியா இருந்தா எனக்கு கரெக்டா தெரிஞ்சிருக்கும்...நீ மனசுக்குள்ள என்ன நெனைக்கறேன்னு...


நாம ஹனிமூன் போனப்போ நான் உனக்கு குடுத்த அந்த கிப்ட்...பயந்துகிட்டே குடுத்தேன் தெரியுமா...உனக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு...அத பிரிச்சு பார்த்துட்டு நீ விழுந்து விழுந்து சிரிச்சப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு...அப்போ தோனுச்சு..என் மிச்ச வாழ்க்கை சொர்க்கம்னு..லைப ரசிக்க தெரிஞ்ச பொண்டாட்டி கெடைச்ச எல்லாருக்கும் வாழ்க்கை சொர்க்கம்டி..


ஒருநாள் ராத்திரி ஓவர் மூட்ல நீ என்கிட்டே உலருனத எல்லாம் உனக்கு தெரியாம ரெகார்ட் பண்ணி உன் நம்பருக்கு ரிங் டோனா வெச்சுகிட்டதுக்கு ஏண்டி அன்னிக்கு அவ்ளோ அழுத...உனக்கு புடிக்காமத்தான் அழறபோலன்னு நெனைச்சுகிட்டு அவசரம் அவசரமா நான் அத டெலிட் பண்ணப்பரம் சொன்ன...ஐ லவ் யூன்னு..


பஸ்ல போகும்போது என் தோள்ள சாயிஞ்சிகரதுக்காக தூக்கம் வர்ற மாதிரி நடிக்கறது..டேய் நடிக்காதடி நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும்னு சொன்னா..அதெல்லாம் இல்ல,நான் தூங்கிக்கிட்டுதான் இருக்கேன்னு சொல்லி உங்கப்பன் முட்டாள்னு கன்பார்ம் பண்றது...


என் புருஷன் மீன் குழம்பு எப்டி வெப்பாரு தெரியுமான்னு நீ ஒரு கல்யாணத்துல உன் சொந்தகாரங்ககிட்ட பீத்திகிட்டப்போ மண்டபமே என்ன பார்த்து சிரிச்சிது...ஆனா நீ அவங்க ஏன் அப்டி சிரிக்கராங்கன்னு கூட தெரியாம பேந்த பேந்த என்ன பார்த்து பாவமா முழிச்சு என் மானத்த வாங்குனியே..ச்சே, ஆனா அன்னிக்கு நைட் உங்கப்பன கொஞ்சம் ஓவராதாண்டி உன்கிட்ட திட்டிட்டேன்..சாரி குட்டி..


எங்கப்பாவ கெட்ட வார்த்தைல திட்டாதடா ப்ளீஸ்னு இதுவரைக்கும் ஒரு முப்பதாயிரம் தடவ என்கிட்டே கெஞ்சிருப்ப..எனக்கே சில சமயம் பாவமாதான் இருக்கும் நீ கெஞ்சறத பார்த்தா...எனக்கும் அவன புடிக்கும்...நல்ல மனுஷன்...பாசமா இருப்பான் எல்லார்கிட்டயும்...ஆனா எனக்கு வேற வழி இல்ல... ஏன்னா உங்கப்பன திட்ட ஆரம்பிச்சாதான நீ என்ன பேச விடாம பண்றதுக்கு இருக்கமா கட்டிபுடிச்சு முத்தம் குடுத்துகிட்டே இருப்ப... பேசவிடாம உதட்டுலையே...


நீ நெறைய தடவ கேட்ருக்க...கல்யாணத்துக்கு முன்னாடி நீ யாரையும் நெஜமாவே லவ் பண்ணலையான்னு..பண்ணேன்..ஆனா அப்பவும் உன்னதான்டின்னு நான் சொன்ன உண்மைய நீ ஒருதடவ கூட நம்புனதே இல்ல..ப்ளீஸ் இப்பவாச்சும் நம்பு..நீ யாருன்னு தெரியறதுக்கு முன்னாடியே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்...


நமக்கு குழந்த பொறந்தப்போ நான் அழக்கூடாதுன்னுதாண்டி நின்னுட்ருந்தேன்..ஆனா எங்கம்மாவ பார்த்தோன்ன அழுகை வந்துடுச்சு..ஏன்னே தெரில..


அன்னிக்கு நீ கஷ்டப்பட்டத பார்த்தப்போ தோணுச்சு..நீ இனிமே அழுகவே கூடாதுன்னு..சிரிச்சிகிட்டு மட்டுமே இருக்கணும்னு...இப்ப கூட நீ தூக்கத்துல சிரிக்கற..கனவுல கூட நாந்தான் வர்றேன் போல....


குழந்த பொறந்து மூணு மாசத்துல நான் ரூமுக்குள்ள வரும்போதெல்லாம் டேய் வேணாம்டா..ப்ளீஸ்டா...பாப்பு பாவம்டானு நீ கெஞ்சுனாலும் உன் கண்ணு கதவ சாத்த சொன்னது...


செக்ஸ்ல நான் உனக்கு கத்துகுடுத்தது, எனக்கு நீ கத்து குடுத்தது, நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து கத்துகிட்டது. எனக்கு புடிச்ச அந்த குட்டி மச்சம்..உன் வேர்வை வாசம்..சொருகி கெடக்குற உன் அழகு கண்ணு...எத சொல்ல.....யு ஆர் செக்ஸிடி.


உனக்கு குடுக்க வேண்டிய முத்தத்த எல்லாம் சேர்த்து நான் என் பொண்ணுக்கே குடுக்கறேன்னு நீ கம்ப்ளைன்ட் பண்ணிட்ருந்தப்போ நான் மறுபடியும் பாப்புக்கே முத்தம் குடுத்தத பார்த்து கடுப்பாகி அவகிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுந்தத பார்த்து எனக்கு சிரிப்புதாண்டி வந்துது..நான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா...


நீ என்ன கொஞ்சற செல்லபேர்லாம் சொல்லி நான் பாப்புவ கொஞ்சுனப்போ டேய் சொந்தமா யோசிடா..நான் உங்கிட்ட சொன்னத காப்பி அடிக்காதடானு சத்தமா சொல்லி என் அம்மா முன்னாடி என் மானத்த வாங்கினது...மாங்காபய மவடி நீ...


பாப்புவுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது அவகிட்ட சொல்லிக்குடுத்து உனக்கு ஐ லவ் யு சொல்லசொன்னப்போ உனக்கு சந்தோசமா இருந்தாலும் ஏன் நீனே சொன்னா என்னாவாம்னு கோவமா கேக்கற மாதிரி கெஞ்சுனது...


புக்ஸ் படிக்க புடிக்குமான்னு நான் கேட்டதுக்கு , உன்ன லவ் பண்ணவே எனக்கு டைம் பத்தல..இதுல நான் எங்கேந்துடா புக்ஸ் படிக்கனு நீ சொன்னப்போ முடிவு பண்ணேன்..நான் ப்ளாக் எழுதறத உன்கிட்ட சொல்லவே கூடாதுன்னு..


என்கிட்டே நீ சொன்ன ஏ ஜோக்ஸ்..வீம்புக்கு போட்டி போட்டு பீர் அடிச்சிட்டு பச்சை பச்சையா கெட்ட வார்த்தை பேசி உளறோ உளருனு விடிய விடிய உளறி என்ன விழுந்து விழுந்து சிரிக்க வெச்சது..


ஒரு நாள் நான் நெறைய தண்ணியடிச்சிட்டு வந்ததுக்கு கன்னாபின்னான்னு திட்டிட்டு நடு ராத்திரி எந்திரிச்சு எனக்கு முத்தம் குடுத்துட்டு என்னையே பார்த்துட்டு படுத்துருந்தியே ஏண்டி..செல்லத்த திட்டிட்டமேன்னா..உனக்கு ஒன்னு தெரியுமா நான் அப்போ முழிச்சிட்டுதான் இருந்தேன்..நாங்கல்லாம் ஒரு புல் அடிச்சிட்டு அசராம ஆத்திச்சூடி சொல்றவங்கேடி..அன்னிக்கு நான் அடிச்சிருந்தது வெறும் பீரு..ஆனா அடுத்த நாள் காலைல நீ வெரைப்பாவே கோவமா காமிச்சிகிட்டப்போ எனக்கு சிரிப்புதான் வந்துச்சு...நீ உங்கப்பன மாதிரியே கூமாங்குடி ....


எண்டா சாமி கும்புடமாட்டேங்கரன்னு நீ கேட்டப்போ நான் சாமியோடதான குடும்பம் நடத்தறேன்னு நான் சொன்ன பதிலுக்கு ஆரம்பிச்சிட்டான்டா ஜொள்ளு விடன்னு சொல்லிட்டு நீ சிரிச்சிட்டே போய்ட்ட..ஆனா, எனக்கு மட்டும்தான் தெரியும்..அந்த வார்த்தை எவ்ளோ உண்மைன்னு..


உங்கப்பா இறந்தப்போ நீ உங்கம்மா உன் தங்கச்சி எல்லாரையும் விட்டுட்டு என் மடில படுத்து எங்கப்பா இறந்துட்டாருடா...இனிமே நீ யார கிண்டல் பண்ணுவேன்னு கதறுனப்போ நான் கொஞ்சம் கலங்கிதாண்டி போயிட்டேன்..


பாப்புவ நீ அடிச்சிட்டேன்னு ஒருதடவ உன்கூட நான் ரெண்டு நாள் பேசாம இருந்தப்போ அன்னிக்கு நைட் என்ன கட்டிபுடிச்சு தேம்புனது..ஏண்டி அழறேன்னு கேட்டப்போ ஒண்ணுமே சொல்லாம தேம்பிகிட்டே இருந்தது...


பாப்பு கல்யாணம் ஆகி பாரின் போனப்போ ஏர்போர்ட்ல பாப்பு புருஷன் என்ன எதோ கிண்டல் பண்ணி பாப்புகிட்ட வம்பு பண்ணி சிரிச்சிற்றுந்தப்போ, நீ குழந்தயாட்டமா பலிப்பு காமிச்சு உங்களுக்கு நல்லா வேணும்..எங்கப்பாவ எவ்ளோ கிண்டல் பண்ணீங்கன்னு சிரிச்சப்போ..ஏன்னு தெரில..எனக்கும் சிரிப்புதான் வந்துச்சு..


அப்பா அப்பான்னு என்னையே சுத்திகிட்ருப்பா..இன்னையோட என்கிட்டே போன்ல பேசி நாலு நாள் ஆகுது..நீ உங்கப்பாவ மறந்தப்போ அவருக்கும் இப்டிதான வலிச்சிருக்கும்..பாவம்டி உங்கப்பா..பொம்பள புள்ளைங்ககிட்ட மட்டும் ரொம்ப பாசமே வெக்ககூடாதுடி...


உன்ன தவிர வேற யாரு இருந்திருந்தாலும் நானும் பாப்புவும் இவ்ளோ சந்தோசமா இருந்துருக்கமாட்டோம் குட்டி..


அடுத்த ஜென்மத்துலயும் நான் நானாவே பொறக்கணும்...சைந்தவிக்கு புருஷனா...நீ என் சைந்தவியாவே பொறக்கணும்...நான் மறுபடியும் உன்ன பொண்ணு பார்க்க வரணும்...மறுபடியும் நாம சந்தோசமா வாழனும்...இதுல எதுவும் மாறிடக்கூடாது...ஏன்னா சைந்தவியா பொறந்து தான் புருஷன சந்தோசமா மட்டுமே வெச்சுக்கறது எப்டீன்னு என் சைந்தவிக்கு மட்டும்தான் தெரியும்..


உங்கிட்ட ஒரு விசயத்த மறைச்சிட்டேன்...காலைலேர்ந்து எனக்கு லேசா நெஞ்சு வலிக்கற மாதிரியே இருக்குடி குட்டி..உன்கிட்ட சொன்னா பயப்படுவேன்னு சொல்லல..நான் போய் படுக்கறேன்..காலைல இந்த லெட்டெர படிச்சு பாரு...நீ எவ்ளவோ கெஞ்சி கேட்டும் நான் உங்கிட்ட இதுவரைக்கும் சண்டை போட்டதே இல்ல..ஆனா நாளைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரியே என்கிட்டே சண்டை போடுவேன்னு தோணுது..


என்ன எழுந்திரிக்க சொல்லி...!!


ஐ லவ் யு சைந்தவி...


சைந்தவி புருஷன்..

மதி
16-03-2010, 12:04 PM
வாவ்... ! பகிர்வுக்கு நன்றி... ரசிகரே...!!!

சிவா.ஜி
16-03-2010, 12:51 PM
முதல்லேயே படிச்சேன் அன்பு. கதையில் பல இடங்களில் என் வாழ்க்கைச் ச*ம்பவங்களைப் பார்த்தேன். ஒரு நிமிடம்....என் வாழ்க்கையை யாராவது அருகிருந்துப் பார்த்து விட்டார்களா எனவும் குழம்பினேன்.

எத்தனை வயதானாலும், பாசப்பினைப்பு கொஞ்சமும் தளர்வதில்லை....அன்று கொண்ட காதல் இன்றுவரை....இறுதிவரை...என்பதை மிக அழகாக சொல்லும் கதை.

பகிர்வுக்கு நன்றி அன்பு.

கலையரசி
16-03-2010, 03:32 PM
உண்மையான அன்பு என்றால் வாழ்க்கையின் இறுதி வரை ஓடி வரும் என்பதைச் சொல்லும் கதை.
பகிர்வுக்கு நன்றி அன்புரசிகன் அவர்களே!

ஜனகன்
16-03-2010, 05:55 PM
நல்ல ஒரு சிறுகதை.
கணவன், மனைவி பாசப்பிணைப்பை அழகாக சொல்லும் கதை.
பக்குவமாய் ஒரே கருத்தை உட்கொண்டு உரைத்த கதை நன்றாக இருந்தது.
எமக்காக இங்கே பதிவு செய்த அன்புக்கு நன்றிகள்.

கீதம்
17-03-2010, 04:36 AM
கணவன் மனைவி இருவரின் அந்நியோன்னியம் மனதைத் தொட்டு, கடைசியில் கண்ணீர் வரவழைத்துவிட்டது. பகிர்வுக்கு நன்றி அன்பு அவர்களே.

trifriends
05-04-2010, 01:17 PM
பகிர்வுக்கு நன்றி

sunson
27-04-2010, 05:43 PM
இந்த கதையில் வரும் பல சம்பவங்கள் திருமணமாகி சந்தோசமாக

வாழ்க்கை நடத்தி வரும் பலருக்கும் ஏற்பட்ட அனுபவங்களின் ஒரு

தொகுப்பாகவே தெரிகின்றது. படித்து முடித்த போது லேசாக மனது கனத்த

மாதிரி உள்ளது. கதை எழுதிய ஆசிரியர் மிகவும் பாராட்டப் படவேண்டியவர்

. அதை எமக்காக இங்கு பதிப்பித்த “அன்புரசிகன் “ அவர்களும் பாராட்டுப்

பெறவேண்டியவர் .