PDA

View Full Version : யாருக்காச்சும் தெரியுமா??



"பொத்தனூர்"பிரபு
16-03-2010, 01:52 AM
யாருக்காச்சும் தெரியுமா?? (http://priyamudan-prabu.blogspot.com/2010/03/blog-post.html)


http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/S5GkQIKzflI/AAAAAAAAAzg/3n2ziZSoGlo/s320/marrage.gif (http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/S5GkQIKzflI/AAAAAAAAAzg/3n2ziZSoGlo/s1600-h/marrage.gif)




அதிகாலை எழுந்து
குளித்து ,கூட்டி பெருக்கி
கோலம் போட்டு..
கன்னி பெண்னையும்
அம்மான்னு கூப்பிடும்
கறவ மாட்டுக்கு தீனி போட்டு...
அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்
அனுசரனையா இருந்து..... ம்ம்ம்
இப்படி
அழகாத்தானே இருந்துச்சு என் வாழ்க்கை!?!?

இப்ப என்னாச்சு ?!?
யாருக்காச்சும் தெரியுமா??!?

பத்து குட(ம்)முன்னாலும்
பதறாம தூக்குவேன் - இப்ப
ஒத்த காலிகுடம்
கனக்குதய்யா எனக்கு!!

நா(ன்) புள்ளி வச்சு கோலம் போட்டா..
வழியில போறவுகயெல்லாம்
வாய் பிளந்து பா(ர்)ப்பாக - ஆனா இப்ப
கோலம் ஒருபக்கம் இருக்க
புள்ளி மட்டும் நிக்குதய்யா ஒத்தையில
என்னை போல

கலியாணம் கட்டி
அஞ்சு நாளுதானே ஆச்சு ?!?!
வேல பாக்குற ஊருக்கு போக
கட்டின என்னையும்
கைபிடிச்சு கூப்புட்டீக

"புது குடிதனத்துக்கு இது
ஆகாத மாசமடா - அதனால
அம்பது நாள் போனபின்னே
அழைச்சுகிட்டு போகலாம் " - என உன்
ஆத்தா சொல்ல கேட்டு

பிடிச்ச கையை விட்டுபுட்டு
வண்டியேறி போனிகளே!!

வண்டி சக்கரத்துல மாட்டின
கோழி குஞ்சா -என் மனசு
நசுங்கி போன சேதி
யாருக்காச்சும் தெரியுமா??

இன்னும் அம்பது நாள் இருக்கே?!?!?

வாரம் ஒருக்கா
வண்டி புடிச்சு வருவீக - ஆனாலும்
ஆச ராசாவின் அழகு முகத்த
ஆச தீர பார்க்கும் முன்னே
அடுத்த நாள் வந்திடுதே !!?
இந்த கட்டைல போற
கடிகாரத்த நிறுத்திவைக்க
யாருக்காச்சும் தெரியுமா??!?!

**************************************************

நேற்று ஒரு சகோதரியிடம் தொலைபேசியில் பேசினேன் . சென்ற 19ஆம் தேதிதான் திருமணம் ஆச்சு. கணவர் கோவையில் வேலை செய்கிறார். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவர் மட்டும் கொவை சென்று விட்டார். இந்த மாதத்தில் புது குடித்தனம் வேண்டாம் என கணவர் வீட்டார் சொல்லிவிட்டதால் இன்னும் 2 மாதம் பிறகே சகோதரியும் கோவை செல்ல முடியும். அதுவரை வாரா வாரம் அவர் கோவையில் இருந்து ஞாயிறு ஒருநாள் மட்டும் வந்து செல்வார் . இந்த காலத்திலும் நல்ல மாதம் கெட்ட மாதம் என பார்த்து புது தம்பதியரை இப்படி பிரித்து வைக்கனுமா??


http://priyamudan-prabu.blogspot.com/2010/03/blog-post.html

கீதம்
16-03-2010, 07:33 AM
மருளாதேடி என் தங்கமே!
மச்சான் நானும்
உன்ன நெனச்சிதான்
மயங்கித் திரியிறேன்
பக(ல்) பொழுதிலும்,
யாருக்காச்சும் இது தெரியுமா?

கலைஞ்சி நின்ன கண்ணுமையி
கனவுலயும் வந்து
கலவரப்படுத்துதடி என்னை,
யாருக்காச்சும் இது தெரியுமா?

ஆத்தா பேச்ச ஒருவேள,
அப்பவே நான் மறுத்திருந்தா,
பாவி, சண்டாளி,
பாதம் பதிச்சவொடனே
புள்ளயப் பிரிச்சிட்டாளேன்னு
பொசபொசன்னு
பொங்கிவரும் கோவம்
அவளுக்கு உம்மேல!

அதனால அடங்கிப்போனேன்,
ஆருக்காச்சும் இது தெரியுமா?

அம்பது நாளு சொச்சத்த
அரும்பாடுபட்டுக் கடத்திபுட்டா
ஆயுசுக்கும் சொர்க்கந்தான்,
அத நெனச்சு நீயும்
அழுகைய மறந்திடு, கண்மணி!


பாராட்டுகள் பிரபு அவர்களே. மன்றத்தில் முதல் முறையாய் உங்கள் கவிதையை இப்போதுதான் படிக்கிறேன். அப்பெண்ணின் நிலையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் சரியாகச் சொல்லியிருக்கிறேனா?

என்னவன் விஜய்
16-03-2010, 10:20 AM
புதுத்தம்பதிகளின் வலியை நன்றாக பிழிந்துக் காட்டியிருக்கிறீர்கள். பிரிவு எத்தனை கொடியது!

இரண்டு கவிதைகளும் பிரமாதம்.


(இது மதி, அன்பு, அமரன், விஜய் என எதிர்கால வாலிபர்களுக்கு `எச்சரிக்கையாக` அமையலாம். :D)

"பொத்தனூர்"பிரபு
16-03-2010, 10:38 AM
மருளாதேடி என் தங்கமே!
மச்சான் நானும்
உன்ன நெனச்சிதான்
மயங்கித் திரியிறேன்
பக(ல்) பொழுதிலும்,
யாருக்காச்சும் இது தெரியுமா?

கலைஞ்சி நின்ன கண்ணுமையி
கனவுலயும் வந்து
கலவரப்படுத்துதடி என்னை,
யாருக்காச்சும் இது தெரியுமா?

ஆத்தா பேச்ச ஒருவேள,
அப்பவே நான் மறுத்திருந்தா,
பாவி, சண்டாளி,
பாதம் பதிச்சவொடனே
புள்ளயப் பிரிச்சிட்டாளேன்னு
பொசபொசன்னு
பொங்கிவரும் கோவம்
அவளுக்கு உம்மேல!

அதனால அடங்கிப்போனேன்,
ஆருக்காச்சும் இது தெரியுமா?

அம்பது நாளு சொச்சத்த
அரும்பாடுபட்டுக் கடத்திபுட்டா
ஆயுசுக்கும் சொர்க்கந்தான்,
அத நெனச்சு நீயும்
அழுகைய மறந்திடு, கண்மணி!


பாராட்டுகள் பிரபு அவர்களே. மன்றத்தில் முதல் முறையாய் உங்கள் கவிதையை இப்போதுதான் படிக்கிறேன். அப்பெண்ணின் நிலையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் சரியாகச் சொல்லியிருக்கிறேனா?


அழகா எழுத்திட்டீங்க
என் தங்கை என்னிடம் சொன்னதும் அடுத்த அடர்மணி நேரத்தில் நான் எழுதியதே அந்த கவிதை
அது அந்த பெண்ணின் நிலையில் இருந்து எழுதியது
உங்களைபோல ஆண் நிலையில் இருந்தும் எழுதியுள்ளேன் , ஆனால் இன்னும் அதில் எனக்கு திருப்தி வராததால் இங்கே வெளியிடவில்லை
நன்றி