PDA

View Full Version : என்று வரும் என் வசந்த காலம் .....Ravee
16-03-2010, 12:51 AM
என்று வரும் என் வசந்த காலம் .....


http://farm3.static.flickr.com/2316/2314391406_0871cac35d.jpg


அந்த குளிர் காலத்தின் துவக்கம்
மனம் கும்மாளம் இட்டுக்கொண்டு இருந்தது

காலை விடியல் சற்று தாமதமாய்
மாலை மங்கிய வெயில் மனதுக்கு இதமாய்

வலசைக்கு புறப்பட்ட பறவைகள் சத்தம்
வாசலில் சருகாய் பறந்து விழுந்த இலைகள்

குளிர்காலத்தின் இதமாய் வீசிய பனிக்காற்று
மயக்கம் தந்த மங்கிய அந்த சாலை விளக்கு

வண்ண வண்ண வீடுகளின் கூரைகள் மேலே
எங்கிருந்தோ விழுந்த வெண் பனித்துகள்கள்

மெல்லிய பல அடுக்காய் பனிப்பொழிவு
பல வண்ணங்களின் அழகுக்கு அழகாய்

குழந்தைகள் அனைவரும் குதுகலமாய்
கூடிக்களித்தது கும்மாளம் இட்டே

நடக்கும் விபரீதத்தின் விளைவுகள் அறியாமல்
வியந்து நின்றது எங்கள் உள்ளம்

விளைவுகளை முழுதாய் கண்ட போது
இங்கே வெறுமையை தவிர வேறில்லை

வண்ண வண்ண வீடுகள் இல்லை
வாசலில் நின்ற மரத்தில் இலைகள் இல்லை

கூக்குரல் இட்ட பறவைகள் இல்லை
கும்மாளம் போட்ட குழந்தைகள் இல்லை

சலசலக்கும் நதிகள் இல்லை
சந்தித்து பேச ஒருவர் இல்லை

சாலைகள் முழுதும் வெறிச்சோடி
குவியல் குவியலாய் வெண் பனி

எங்கும் எதிலும் வெண்மை நிறமே
கற்பனைக்கு வறட்சி..... வண்ணமில்லா வறட்சி

வாருங்கள் வாருங்கள் ... கூச்சலிட்டு பார்த்தாலும்
சாலையில் நான் மட்டும் தனியாய்

பதில் குரல் இல்லை , பதில் குரலே இல்லை
வீட்டுக்குள் மனதை பூட்டிக்கொண்ட மனிதர்கள்

உறைபனிகாலத்தில் என் உள்ளம் உறைந்தது
என்று வரும் என் வசந்த காலம் .............:huh:

Ravee
19-03-2010, 07:54 PM
:weihnachten031: இந்த சூழலில் அமெரிக்காவில் ஐரோப்பாவில் வசித்தவர்கள் யாரும் இல்லையா ???

கீதம்
19-03-2010, 09:39 PM
நல்ல கவிதை ரவீ அவர்களே.

கடைசி வரியில் என்று வரும் என் வசந்தகாலம் என்றதும் இதில் உள்ளர்த்தம் ஏதும் இருக்குமோ என்று சற்றுக்குழம்பிவிட்டேன். அதற்குப் பதில் என்று வருமோ வசந்தகாலம் என்றிருந்தால் எளிதாய்ப் புரிந்திருப்பேன்.

பாராட்டுகள்.

Ravee
19-03-2010, 09:50 PM
பொதுவாக நினைவுகளை " நாங்க எல்லாம் அந்த காலத்தில" என்று சொல்லுவோமே அது போலதான் இந்த என் வந்தது வேறு ஒன்றும் இல்லை .

கீதம் நீங்க ரொம்ப உஷார்ங்கோ

govindh
19-03-2010, 10:20 PM
பதில் குரல் இல்லை , பதில் குரலே இல்லை
வீட்டுக்குள் மனதை பூட்டிக்கொண்ட மனிதர்கள்
கவிதை...அருமை...பாராட்டுக்கள்..

அமரன்
19-03-2010, 11:19 PM
பனிக்காலம் முடிந்து இலைதுளிர்க்காலம் தொடங்கும் இன்று இந்தக் கவிதையைப் படிக்கக் கிடைத்தது மகிழ்ச்சி.

நிலமெங்கும்
கட்டிக் கிடக்கிறது
வானம்
கொட்டிய முத்தம்..

தோள்களில்
தோதாய் அமர்ந்து கொண்டு
வெண்பளிங்குகளில்
காலூன்ற அழுத்துகின்றது
ஆடைச்சுமை...

நிலை குலையாதிருக்க
நிமிரத் தலைப்படவில்லை
தலை..

சற்றைக்கெல்லாம் கால்கள்
புதையத் துவங்கி
நினைவுக்குத் தருகிறது
புழுதி மிகுந்த ஊரை..


கூதல் காற்று காதிலோதி
சேலை உயர்த்துகிறது..
ஆதவக் கரங்கள்
இமைகளைக் கோதுகிறது..


தோள்களில்
தேங்கிருந்த சுமைகள்
எங்கோடுகின்றன
பனிகளைப் போலவே..

வசந்தம் வந்தது ரவீ.

Ravee
20-03-2010, 02:11 AM
வசந்த காலத்துக்கு வரவேற்பு ... எனக்கு மனோகரா படத்தில் வரும் வசந்த விழா பாடல் நினைவுக்கு வருகிறது அமரன். சோம்பல் முறித்து புத்துணர்ச்சி பெறுங்கள் .... :p

தமிழ் நாட்டில் வெயில் மண்டையை பிளக்கிறது பாஸ் ....:rolleyes:

Ravee
20-03-2010, 02:15 AM
பதில் குரல் இல்லை , பதில் குரலே இல்லை
வீட்டுக்குள் மனதை பூட்டிக்கொண்ட மனிதர்கள்
கவிதை...அருமை...பாராட்டுக்கள்..

ம்ம் மாலை ஆரம்பித்தவுடன் மறைந்து போகும் மனிதர்கள் காலை விடிந்த பிறகு வலைக்குள் பதுங்கிய எலி போலவே எட்டி பார்ப்பார்கள். இது இவ்வாறு இருக்க அக்கம் பக்கம் பற்றி அக்கறை என்ன அவர்களுக்கு கோவிந்த் . .:icon_p: