PDA

View Full Version : மௌனம்



கீதம்
15-03-2010, 10:59 PM
மௌனம் எனக்குப் பிடிக்கும்,
அது என்னைக் காயப்படுத்தாதவரை!
மௌனம் அழகு!
ஆனால்,
உன் மௌனமோ,
என்னை அழச்செய்யும்!

மௌனத்திற்கு மொழி தேவையில்லை;
உன் மௌனம் பேசாத பேச்சில்லை!
என்னை நோகடிக்க,
நீ கையிலெடுக்கும் ஆயுதம்,
மௌனம்!

உன்னெதிரில் நிராயுதபாணியாக நான்!
உனக்கெதிராய் ஆயுதம் பிரயோகிக்க
எனக்கு ஆசையில்லை;
அமைதியை விரும்புகிறேன்!
அதற்காக,
உன் மௌனத்தையே
எனக்குப் பரிசாய் அளிக்காதே!

மௌனம் எனக்குப் பிடிக்கும்,
அதை,
நீ கையாளாதவரை!

குணமதி
17-03-2010, 03:15 AM
***உன் மௌனம் பேசாத பேச்சில்லை!***

அருமை.

பாராட்டு.

கீதம்
17-03-2010, 03:24 AM
***உன் மௌனம் பேசாத பேச்சில்லை!***

அருமை.

பாராட்டு.

மிக்க நன்றி குணமதி அவர்களே.

சிவா.ஜி
17-03-2010, 05:18 AM
மௌனம் கொல்லும்....ஓரிரு வார்த்தைக்காக ஏங்கும் மனதை இரக்கமேயில்லாமல் கொல்லும்.

மிக வலிமையான ஆயுதம். எதிராளியின் சக்தியைக் குறைத்து சரணடைய வைக்கும்....ஆனால்....பிரயோகப்படுத்தக் கூடாத சந்தர்ப்பத்தில் பிரயோகப்படுத்தினால்....விளைவுகள் விபரீதமாகும்.

("ரெண்டு திட்டாவது திட்டிடு...இப்படி பேசாம இருந்து சாவடிக்காத...."
இந்த டயலாக் அடிக்கடி இல்லறத்தில் ஒலிக்கும்)

நல்ல கவிதைக்கும், கையாண்ட வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கள் கீதம் அவர்களே.

கீதம்
17-03-2010, 06:18 AM
உண்மைதான்.மெளனம் போல் மனம் குடையும் ஆயுதம் எதுவுமே இல்லை.கருத்தூட்டத்திற்கு நன்றி சிவா.ஜி அவர்களே.

கலையரசி
18-03-2010, 12:56 PM
என்ன கோபம்? எதற்காக எதிராளி மெளனம்? என்பது தெரியாத வரை மண்டைக் குடைச்சல் தான். சிவா.ஜி அவர்கள் சொன்னது போல் இந்த மெளனத்தை வாயைத் திறந்து இரண்டு வார்த்தை திட்டிவிடுவது கூட நல்லது தான். நன்று கீதம்.

govindh
18-03-2010, 01:15 PM
மௌனம் எனக்குப் பிடிக்கும்,
அதை,
நீ கையாளாதவரை!
அருமை...பாராட்டுக்கள்...

சரோசா
18-03-2010, 01:34 PM
என்னை நோகடிக்க,
நீ கையிலெடுக்கும் ஆயுதம்,
மௌனம்!
சுப்பர் அருமை

ஜனகன்
18-03-2010, 06:45 PM
என்னை நோகடிக்க,
நீ கையிலெடுக்கும் ஆயுதம்,
மௌனம்!
வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
எத்தனையோ பிரச்சனைகள் தொலைந்து போகும்.
வாழ்த்துக்கள் கீதம்.

அக்னி
19-03-2010, 08:03 AM
மௌனம்...
மனம் கொண்ட சிறப்புமொழி...

காதலில்,
மனம் வெல்லும்
அற்புத ஆயுதம்...
மனம் கொல்லும்
அழிவு ஆயுதம்...
இரண்டுமாக மௌனம்...

இந்தக் கவிதை அழகாய்ச் சொல்கின்றது...

படைப்புக்கள் யாவுமே,
மௌனத்தின் எதிரிகள்தான்...

மௌனம்,
முழுமையாக எதிலும் இல்லை.
இல்லாமல் எதுவும் இல்லை.

கீதம்
19-03-2010, 08:28 AM
என்ன கோபம்? எதற்காக எதிராளி மெளனம்? என்பது தெரியாத வரை மண்டைக் குடைச்சல் தான். சிவா.ஜி அவர்கள் சொன்னது போல் இந்த மெளனத்தை வாயைத் திறந்து இரண்டு வார்த்தை திட்டிவிடுவது கூட நல்லது தான். நன்று கீதம்.

கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி கலையரசி அவர்களே.

கீதம்
19-03-2010, 08:29 AM
மௌனம் எனக்குப் பிடிக்கும்,
அதை,
நீ கையாளாதவரை!
அருமை...பாராட்டுக்கள்...

நன்றி கோவிந்த் அவர்களே.

Ravee
19-03-2010, 03:22 PM
எனக்கு வாழ்க்கையில் ஓரளவு வெற்றியை தந்தது இந்த மவுனம்தான் கீதம். நான்கு மணி நேரம் பேசி சாதிக்க முடியாத ஒரு விஷயத்தை , ஒரு பார்வை அரை மணி நேர மவுனம் சாதித்து விடும் .

பா.ராஜேஷ்
19-03-2010, 04:52 PM
நல்ல கவிதை கீதம். அக்னியின் பின்னூட்டமும் நன்று

அமரன்
19-03-2010, 10:58 PM
இதயமே..
உன் மௌனம் என்னைக் கொல்லுதே..

எத்துணை அர்த்த புஷ்டியான சொற்கோர்வை?

மொட்டுகள் கட்டவிழ்க்கும் ஓசை
அன்பே உந்தன் வல்லிய பரிபாசை..

விழிகளில் விழுந்தால் ஆனந்தம்.
செவிகளில் விழுந்தால் அல்லோலம்.


அழகாகச் சொன்ன கவிதை.

பாராட்டுகிறேன் கீதம்.

கீதம்
20-03-2010, 11:30 AM
என்னை நோகடிக்க,
நீ கையிலெடுக்கும் ஆயுதம்,
மௌனம்!
சுப்பர் அருமை

நன்றி சரோசா அவர்களே.

கீதம்
20-03-2010, 11:33 AM
என்னை நோகடிக்க,
நீ கையிலெடுக்கும் ஆயுதம்,
மௌனம்!
வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
எத்தனையோ பிரச்சனைகள் தொலைந்து போகும்.
வாழ்த்துக்கள் கீதம்.

உண்மைதான், ஜனகன் அவர்களே. ஆனால் நம் கேள்விகளுக்கும் மெளனமே பதிலாய்க் கிடைத்தால் என்னதான் செய்வது?

பின்னூட்டத்துக்கு நன்றி.

கீதம்
20-03-2010, 11:35 AM
மௌனம்...
மனம் கொண்ட சிறப்புமொழி...

காதலில்,
மனம் வெல்லும்
அற்புத ஆயுதம்...
மனம் கொல்லும்
அழிவு ஆயுதம்...
இரண்டுமாக மௌனம்...

இந்தக் கவிதை அழகாய்ச் சொல்கின்றது...

படைப்புக்கள் யாவுமே,
மௌனத்தின் எதிரிகள்தான்...

மௌனம்,
முழுமையாக எதிலும் இல்லை.
இல்லாமல் எதுவும் இல்லை.

அழகிய பின்னூட்டத்திற்கு நன்றி அக்னி அவர்களே.

கீதம்
20-03-2010, 11:39 AM
எனக்கு வாழ்க்கையில் ஓரளவு வெற்றியை தந்தது இந்த மவுனம்தான் கீதம். நான்கு மணி நேரம் பேசி சாதிக்க முடியாத ஒரு விஷயத்தை , ஒரு பார்வை அரை மணி நேர மவுனம் சாதித்து விடும் .

உங்களுக்குக் காரியம் கைகூடுகிறது. உங்கள் மெளனத்தின் வீரியத்தை அதை அனுபவிப்பவரிடம்தான் கேட்டறியவேண்டும்.

அடுத்தவரைக் காயப்படுத்தாதவரையில்தான் மெளனம் அழகு.

பின்னூட்டத்துக்கு நன்றி ரவீ அவர்களே.

கீதம்
20-03-2010, 11:40 AM
நல்ல கவிதை கீதம். அக்னியின் பின்னூட்டமும் நன்று

நன்றி ராஜேஷ் அவர்களே.

கீதம்
20-03-2010, 11:43 AM
இதயமே..
உன் மௌனம் என்னைக் கொல்லுதே..

எத்துணை அர்த்த புஷ்டியான சொற்கோர்வை?

மொட்டுகள் கட்டவிழ்க்கும் ஓசை
அன்பே உந்தன் வல்லிய பரிபாசை..

விழிகளில் விழுந்தால் ஆனந்தம்.
செவிகளில் விழுந்தால் அல்லோலம்.


அழகாகச் சொன்ன கவிதை.

பாராட்டுகிறேன் கீதம்.

மிக்க நன்றி அமரன் அவர்களே.

ஆதி
29-03-2010, 09:09 AM
கடுஞ்சொல்லை காட்டிலும் கொடியது மௌனம் என உணரவைத்த கவிதை..

இந்த கவிதை என்னை என்னென்னவோ செய்கிறது, என் சட்டை பிடித்து கேள்வி கேட்கிறது.. பதில் சொல்ல முடியாமல் மௌனிக்கத்தான் முடிகிறது என்னால்..

நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், இதே மௌனத்தை கருப்பொருளாக்கி ஒரு கவிதை எழுதவேன்..

வாழ்த்துக்கள் கீதம்..

அக்னி
29-03-2010, 09:14 AM
நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், இதே மௌனத்தை கருப்பொருளாக்கி ஒரு கவிதை எழுதவேன்..

தேன் உண்ணக் கசக்குமா ஆதன்...
கவித்தேன் சிந்துங்கள்... சிதறாமற் சுவைத்திடக் காத்திருக்கின்றோம்...

நான் சொல்வது சரிதானே கீதம்... :confused:

கீதம்
30-03-2010, 05:57 AM
கடுஞ்சொல்லை காட்டிலும் கொடியது மௌனம் என உணரவைத்த கவிதை..

இந்த கவிதை என்னை என்னென்னவோ செய்கிறது, என் சட்டை பிடித்து கேள்வி கேட்கிறது.. பதில் சொல்ல முடியாமல் மௌனிக்கத்தான் முடிகிறது என்னால்..

நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், இதே மௌனத்தை கருப்பொருளாக்கி ஒரு கவிதை எழுதவேன்..

வாழ்த்துக்கள் கீதம்..

அக்னி அவர்கள் சொல்வது போல் தேன் உண்ணக் கசக்குமா? கரும்பு தின்னக் கூலியா?

கவிதை பொழியுங்கள். ஒரு சிலையை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்த்து ரசிப்பதுபோல் ஒரு கருவை மையமாய் வைத்து வெவ்வேறு கவிஞர்கள் எழுதும் கவிதைகளும் அழகுதான். விரைவில் எதிர்பார்க்கிறேன் மெளனத்தை, தங்கள் கோணத்திலிருந்து.

இளசு
02-04-2010, 07:24 PM
இந்த அழகிய வாழ்வியல் வடிப்புக்கும்
செம்மையான பின்னூட்டங்களுக்கும்

மௌனத்தைப் பதிலாக்காமல் ( கையாளாமல்)
உரக்கச் சொல்கிறேன் :

நல்லாருக்குங்க!

கீதம்
05-04-2010, 10:26 PM
இந்த அழகிய வாழ்வியல் வடிப்புக்கும்
செம்மையான பின்னூட்டங்களுக்கும்

மௌனத்தைப் பதிலாக்காமல் ( கையாளாமல்)
உரக்கச் சொல்கிறேன் :

நல்லாருக்குங்க!

மனம் நிறைந்த நன்றிகள் பல இளசு அவர்களே.

செல்வா
07-04-2010, 07:47 PM
நல்ல கவிதை.... :)

வாழ்த்துக்கள் மெளனம் ... சாரி ... கீதம் :)

கீதம்
08-04-2010, 10:55 PM
நல்ல கவிதை.... :)

வாழ்த்துக்கள் மெளனம் ... சாரி ... கீதம் :)

நன்றி, நன்றி.:)