PDA

View Full Version : அழுகை நிறுத்தம்!



குணமதி
15-03-2010, 11:37 AM
அழுகை நிறுத்தம்!



வெளியே போய்விட்டு வீடு திரும்பியது

அந்தக் கோடிச்செல்வர் (கோடீசுவரர்) குடும்பம்.

மகிழ்வுந்தை விட்டு இறங்கும் போதிலிருந்தே

மனங் கலங்கும்படி

விடாது அழுதது குழந்தை.

இனிப்பு, இன்பழங்கள்,

வகைவகையான விளையாட்டுப் பொம்மைகள்

எதுவும் அழுகையை நிறுத்தவில்லை.

உயர்ந்த மருந்துகளும் உதவவில்லை.

தோட்டக்கார முனியனின் ஆயா

'தொளசியம்மா' -

துணியைக் கழற்றிவிட்டு

அழுத்தமாய் முதுகில் கடித்துக் கொண்டிருந்த

அந்த எரும்பை எடுத்து எறியும் வரை!
.

கலையரசி
15-03-2010, 02:42 PM
குழந்தையின் அழுகையை வைத்து அது எதனால் அழுகிறது என்பது தொளசியம்மா போன்ற அனுபவசாலிகளுக்கு மட்டுமே தெரியும். இது முழுக்க முழுக்க அனுபவத்தால் மட்டுமே வருவது. எந்தப் பாடசாலையிலும் இதைக் கற்றுக் கொடுக்க முடியாது.
பாராட்டு குணமதி அவர்களே!

குணமதி
15-03-2010, 05:12 PM
ஆம். அதுதான் உண்மை.

மிக்க நன்றி.

govindh
15-03-2010, 05:31 PM
அனுபவம்..அழகான விளக்கம்...
குழந்தையின் அழுகையை ...கையால்..நிறுத்த முயலாமல்..
காரணம் கண்டறிய வேண்டும்..
கனமான உண்மை..
பாராட்டுக்கள்..

கீதம்
15-03-2010, 11:03 PM
குழந்தை வளர்ப்பில் தேறியவர்களுக்கே இது சாத்தியம். அதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள், குணமதி அவர்களே.

குணமதி
16-03-2010, 11:47 AM
நன்றி கோவி.

குணமதி
16-03-2010, 11:48 AM
மிக்க நன்றி, கீதம்.

சிவா.ஜி
16-03-2010, 01:58 PM
ஒரு சின்ன சிறுகதைபோல அழகாய் சொல்லிவிட்டீர்கள். அனுபவம் சொல்லும் பாடம் அருமை.

வாழ்த்துக்கள் குணமதி.

ஜனகன்
16-03-2010, 04:22 PM
நல்லாய் இருக்கின்றது கவிதை,
கொஞ்சம் சிந்திக்கவும் வைத்த கவிதை.பாராட்டுக்கள்.

குணமதி
17-03-2010, 03:13 AM
நன்றி சிவா.

குணமதி
17-03-2010, 03:13 AM
நல்லாய் இருக்கின்றது கவிதை,
கொஞ்சம் சிந்திக்கவும் வைத்த கவிதை.பாராட்டுக்கள்.

நன்றி நண்பரே.

பா.ராஜேஷ்
19-03-2010, 04:55 PM
அன்பவம் தான் சிறந்த அறிவு. மிக நல்ல கவிதை. பாராட்டுக்கள் குணமதி

sakthim
19-03-2010, 05:04 PM
இதுமாதிரிதான் காரணத்தை கண்டுபிடிக்காமல் , பல விசயங்களில் சமாதானம் சொல்கிறோம்.

அனுபவம் எல்லாம் அறியும்.

வாழ்த்துக்கள்.

குணமதி
19-03-2010, 05:04 PM
அன்பவம் தான் சிறந்த அறிவு. மிக நல்ல கவிதை. பாராட்டுக்கள் குணமதி

மிக்க நன்றி நண்பரே.

குணமதி
19-03-2010, 05:05 PM
இதுமாதிரிதான் காரணத்தை கண்டுபிடிக்காமல் , பல விசயங்களில் சமாதானம் சொல்கிறோம்.

அனுபவம் எல்லாம் அறியும்.

வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.

அமரன்
20-03-2010, 08:18 AM
தொளசிம்மா வீசும் வாசத்திலும்
தொரை வீட்டு காட்டும் வேகத்திலும்
தெரிவதென்னவோ பாசம்தான்.

பாராட்டு குணமதி.

நிலைக்கேற்ப மாறுபடும் சிந்தனை.
அனுபவத்தை விஞ்சிய ஆசானில்லை.

குணமதி
20-03-2010, 04:37 PM
நன்றி அமரன்.