PDA

View Full Version : _/\_என் அன்னையே என் உயிரே_/\_



sofi
14-03-2010, 07:05 PM
http://lh6.ggpht.com/_E7uVT_yYgTs/S5zQBhifzNI/AAAAAAAABe8/AjQhCoztqsc/s640/People_Children_Mother_and_daughter___Children_012815_.jpg

"அம்மா என்றாலே என் உயிர்
என் தாயை போல இவ்வுலகில் எவரு '

உனக்காய் என் சிறு துளி சமர்ப்பணம் ..

என் அன்னையே ..
என் உயிரே ..
நான் எழுதாக் கவிதை நீ ..

பல தடவை எழுத நினைத்தும் ..
முற்றுப் பெறா என் கவிதையும் நீயே'...

என் காதலையும்..
என் சோகத்தையும்
சொன்ன என் பேனா முனைகள் ..

என் அன்னையை பத்தி எழுத மறந்ததும் ஏன்..?
இன்றே உனக்கு கட்டளை இடுகின்றேன்
என் தாயை பார்த்து ஒரு வரியேனும் கிறுக்கி விடு ..

என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து விடு

முதல் முறையாக இன்று சொல்கிறேன்
என் தாயை பத்தி ..

உன் எண்ணத்தில் புதைத்து கொள்
என்றும் அழியா ...
நெஞ்சை உருக்கும் ...
அனுபவம் இது ..!

"தாயில் சிறந்ததொரு கோவிலும் இல்லை என் தாயே என் மந்திரம் என்பேன்"

அவள் என் தெய்வம் ஆனவள்
என்னை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தவள்

முன்னூறு நாட்கள் என்னை சுமந்தவளே ..
பசி தூக்கம் மறந்தவளே
என் தொப்புள் கொடி உறவே ..

தரை மேல கால் பட்டாள்
கல் பதித்து வலிக்கும் என்று
இடுப்பில் தூக்கி நடந்தவளே ..

நித்தம் மாடாய் உழைத்து
ஓடாய் தேய்ந்தவளே ..

கண்விழித்து உன் தூக்கம் கலைத்தவளே
அன்போடு நிலா சோறு ஊட்டியவளே

பிரசவத்தில் பாதி உயிரையும்
பால் கொடுக்கையில் மீதி
உயிரையும் கொடுத்தவளே..!!

உன் கடனை எந்த ஜென்மத்தில் நான் அடைப்பேன்..!!

என்ன கைமாறு செய்வேனோ
மீன்டும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
அதில் நான் உன் தாயாக வேண்டும் ...!!

govindh
14-03-2010, 08:05 PM
பிரசவத்தில் பாதி உயிரையும்
பால் கொடுக்கையில் மீதி
உயிரையும் கொடுத்தவளே..!!
அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்
உணர்ச்சி...உருகல்..கவி வரிகளுக்குப் பாராட்டுக்கள்..

அமரன்
14-03-2010, 09:55 PM
கற்பனைக்குள் கட்டுப்படாதவள் தாய்.

எந்தக் கடனையும் தீர்த்து விடலாம்..
பெற்ற கடனை தீர்க்க முடியவே முடியாது.

பாராட்டு ஷோபி.

சில இடங்களில் கவிதை வலிந்து இழுக்கிறது.

sofi
16-03-2010, 07:10 PM
govindh நன்றி உங்கள் பின்னுட்டத்துக்கு ...

sofi
16-03-2010, 07:13 PM
அமரன் நன்றி உங்கள் கருத்துக்கு .பாராட்டுக்கும் ( உங்களை ஒன்று கேக்கலாமா ..? என் கவிதையில் எதை Edit (sry for asking)செய்தீர்கள் ..?)

சரோசா
16-03-2010, 07:43 PM
கண்விழித்து உன் தூக்கம் கலைத்தவளே
அன்போடு நிலா சோறு ஊட்டியவளே .........என் அம்மாவின் ஞாபகம் வந்திச்சு
பாராட்டுக்கள் ஷோபி

ஜனகன்
16-03-2010, 08:30 PM
கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது....
ஒரு தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள பாசத்தை வெளிக் காட்டியுள்ளீா்கள்.
அதே வேளை கதையில் தாயின் மீது பிள்ளையின் அளவு கடந்த புரிந்துணர்வையும் உணர்த்துகிறது.
வாழ்த்துக்கள் ஷோபி.

sofi
23-03-2010, 05:03 PM
சரோசா & ஜனகன் நன்றிகள் உங்கள் பின்னூடத்துக்கு ..
தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் வார முடியா வில்லை ... மன்னிக்க வேண்டும் தாமதமாக பதில் அளித்தமைக்கு ..!!

பா.சங்கீதா
28-03-2010, 09:18 AM
"தரை மேல கால் பட்டாள்
கல் பதித்து வலிக்கும் என்று
இடுப்பில் தூக்கி நடந்தவளே .."

தாயின் அன்பை புரிய வைக்கும் கவிதை
மிகவும் நன்றாக உள்ளது...:)

கலையரசி
28-03-2010, 09:28 AM
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை-அவள்
அடிதொழ மறப்பவர், மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை
உங்கள் கவிதையைப் படித்ததும் இந்த சினிமாப் பாடல் வரிகள் தாம் எனக்கு நினைவுக்கு வந்தன. பாராட்டு சங்கீதா!

ஆர்.ஈஸ்வரன்
28-03-2010, 09:48 AM
அன்னைக்கு ஒரு அற்புத கவிதை வடிந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்