PDA

View Full Version : மின்னஞ்சலில் வந்ததுசரோசா
11-03-2010, 07:18 PM
சர்வதேச துணிச்சல் பெண் விருதை இலங்கையின் ஜன்சிலா, ஹிலாரியிடம் பெற்றார்

உலகில் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதுக்காக தெரிவான இலங்கையை சேர்ந்த ஜன்சிலா மஜீத் நேற்று தமக்கான விருதை பெற்றுக் கொண்டார்.
இந்த விருதை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன். ஜன்சிலா மஜீத்துக்கு வழங்கினார்.

இது தொடர்பாக நிகழ்வு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நடைபெற்றது. நிகழ்வின் போது அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் பங்கேற்று விசேட உரையாற்றினார்.

ஜன்சிலா மஜீத், புத்தளத்தை தளமாகக்கொண்ட, சமூக நிதியம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம், இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அவர் உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.

அத்துடன் நிலக்கண்ணி உட்பட்ட அறிவூட்டும் செயற்திட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார். முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த இவர் கடந்த 20 வருடங்களாக இந்த சேவையை மேற்கொண்டு வருகிறார்.

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீரூற்றை பிறப்பிடமாகக் கொண்ட சகோதரி ஜன்சிலா மஜீத் அவர்கள் யாழ் . ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி தொடர்ந்திருந்த வேளையில், 90 களில் யாழ் மண்ணை விட்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து புத்தளத்தில் கடந்த 20 வருடங்களாக அகதியாக வாழ்ந்து வரும் வேளையில், இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களிக்கிடையில் சமூக நம்பிக்கை நிதியம் (Community Trust Fund) என்ற அரச சார்பற்ற அமைப்பு மூலம் நிருவாக நம்பிக்கையாளராக (managing trustee) சேவை புரிந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

விருது வழங்கும் பொது வாழ்த்து தெரிவித்த இராஜாங்கச் செயலாளர் கிலரி கிளின்டன் கூறினார், " கடந்த 20 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் சகோதரி ஜன்சிலா மஜீத் அவர்கள், புத்தளம் மாவட்டத்தில் வாழும் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையேயான ஓர் குறிப்பிடத்தக்க பெண் என்றும். புத்தளம் பிராந்திய சக நம்பிக்கை நிதியத்தின் நிருவாக நம்பிக்கையாளராக திகழ்கின்றார் என்றும். அவருக்கு இன்று கொடுக்கப்படும் விருது, அவரின் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மையிரையிடயான தலைமைத்துவம், புனர்வாழ்வு, இடம்பெயர்ந்தவர்க்கான மீள் குடியேற்றம், மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும், அந்த சமூகங்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்கும், முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளதற்கும் ஆகும்" எனத் தெரிவித்தார்.

எனக்கு மெயில் வந்தது.

ஜனகன்
11-03-2010, 08:59 PM
நல்ல தகவல், எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

சரோசா
12-03-2010, 02:11 PM
நன்றி ஜனக உங்கள் ஊக்கம் எனக்கு உத்சாகமாக உள்ளது.

ஜனகன்
12-03-2010, 02:38 PM
ஓ..........அப்படியா .சந்தோசம்.
எங்கே என் பெயரில் உள்ள "ன்" காணவில்லை

சரோசா
12-03-2010, 07:48 PM
சும்மா செல்லமாக சின்ன பையன் .......ஜனக என்றால் என்ன கோபம் ?????

ஜனகன்
12-03-2010, 09:23 PM
சும்மா செல்லமாக சின்ன பையன் .......ஜனக என்றால் என்ன கோபம் ?????

ஆ..............அப்படியா? அப்படிஎன்றால் சந்தோசம்.

சரோசா
15-03-2010, 03:44 PM
பொதுவான ஒரேயொருஅபூர்வ (இரட்டை பெண் குழந்தைகள்)
இருதயத்துடன் ஒட்டிப் பிறந்து உயிர் வாழும் அபூர்வ இரட்டை பெண் குழந்தைகளை படத்தில் காணலாம்.
அமெரிக்க அரிஸோனா மாநிலத்திலுள்ள குயீன் கிறீக் நகரைச் சேர்ந்த எம்மா மற்றும் டெய்லர் பெய்லி ஆகிய மேற்படி இரட்டைக் குழந்தைகள், தனியொரு இருதயம் மற்றும் ஈரலுடன் மார்பு எலும்பிலிருந்து தொப்புள் வரை இணைப்பைக் கொண்டுள்ளன.

இக் குழந்தைகள் வளர்ந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் இரு வருட காலப் பகுதியில் அவர்களை வேறு பிரிக்காவிட்டால், அவர்கள் உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு குழந்தைகளை வேறு பிரிக்கும் போது ஒரு குழந்தைக்கு இருதய மாற்று சிகிச்சையும் மற்றைய குழந்தைக்கு ஈரல் மாற்று சிகிச்சையும் செய்ய நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேற்படி குழந்தைகளின் பெற்றோரான டோர் (34 வயது) மற்றும் மான்டி (32 வயது) ஆகியோர் அக் குழந்தைகளை வேறு பிரிக்கும் முகமாக சியட்டில் சிறுவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக வேறு பிரிக்கப்படும் பட்சத்தில், ஒரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்து வேறு பிரிக்கப்பட்ட உலகின் முதலாவது இரட்டைக் குழந்தைகள் என்ற பெருமையை அவை பெறும்.

டோர், மான்டா தம்பதிக்கு ஏற்கனவே 4 பிள்ளைகள் உள்ளனர்.http://www.tamilmantram.com/vb/photogal/images/9899/large/1_iraddai.jpg