PDA

View Full Version : IPL திருவிழா - 3



arun
12-03-2010, 08:54 AM
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட IPL தொடர் இன்று ஆரம்பிக்கிறது

போட்டி இந்தியாவில் நடக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் பலமாக இருக்கிறது

துவக்க விழாவில் தீபிகாவின் நடனமும் இருக்கிறது அனைவரும் கண்டு களியுங்கள்

முதல் போட்டி டெக்கானுக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே நடக்கிறது

arun
12-03-2010, 09:06 AM
போட்டிக்கான அட்டவணை

March 12 – Deccan Chargers Hyderabad vs Kolkata Knight Riders – Hyderabad
March 13 – Mumbai Indians vs Rajasthan Royals – Mumbai/Nagpur
March 13 – Kings XI Punjab vs Delhi Daredevils – Mohali
March 14 – Chennai Super Kings vs Deccan Chargers Hyderabad – Chennai
March 14 – Kolkata Knigh tRiders vs Royal Challengers Banglore – Kolkata
March 15 – Rajasthan Royals vs Delhi Daredevils – Jaipur
March 16 – Royal Challengers Banglore vs Kings XI Punjab – Bangalore
March 16 – Kolkata Knight Riders vs Chennai Super Kings – Kolkta
March 17 – Delhi Daredevils vs Mumbai Indians – Delhi
March 18 – Royal Challengers Banglore vs Rajasthan Royals – Bangalore
March 19 – Deccan Chargers Hyderabad vs Kings XI Punjab – Vizag
March 20 – Rajasthan Royals vs Kolkata Knight Riders – Ahmedabad
March 20 – Mumbai Indians vs Royal Challengers Banglore – Mumbai/Nagpur
March 21 – Delhi Daredevils vs Deccan Chargers Hyderabad – Delhi
March 22 – Mumbai Indians vs Kolkata Knight Riders – Mumbai/Nagpur
March 23 – Royal Challengers Banglore vs Chennai SuperKings – Bangalore
March 24 – Kings XI Punjab vs Rajasthan Royals – Mohali
March 25 – Kolkata Knight Riders vs Delhi Daredevils – Kolkta
March 26 – Chennai SuperKings vs Mumbai Indians – Chennai
March 26 – Rajasthan Royals vs Deccan Chargers Hyderabad – Ahmedabad
March 27 – Royal Challengers Banglore vs Delhi Daredevils – Bangalore
March 27 – Kings XI Punjab vs Kolkata Knight Riders – Mohali
March 28 – Rajasthan Royals vs Chennai SuperKings – Ahmedabad
March 28 –Deccan Chargers Hyderabad vs Mumbai Indians – Vizag
March 29 – Delhi Daredevils vs Kolkata Knight Riders – Delhi
March 30 – Mumbai Indians vs Kings XI Punjab – Mumbai/Nagpur
March 31 – Chennai Super Kings vs Royal Challengers Banglore – Chennai
March 31 – Delhi Daredevils vs Rajasthan Royals – Delhi
April 1 – Kolkata Knight Riders vs Deccan Chargers Hyderabad – Kolkata
April 2 – Kings XI Punjab vs Royal Challengers Banglore – Mohali
April 3 – Chennai Super Kings vs Rajasthan Royals – Chennai
April 3 – Mumbai Indians vs Deccan Chargers Hyderabad – Mumbai/Nagpur
April 4 – Delhi Daredevils vs Royal Challengers Banglore – Delhi
April 4 – Kolkata Knight Riders vs Kings XI Punjab – Kolkata
April 5 – Deccan Chargers Hyderabad vs Rajasthan Royals – Hyderabad
April 6 – Mumbai Indians vs Chennai SuperKings – Mumbai/Nagpur
April 7 – Rajasthan Royals vs Kings XI Punjab – Ahmedabad
April 8 – Royal Challengers Banglore vs Deccan Chargers Hyderabad– Bangalore
April 8 – Chennai Super Kings vs Delhi Daredevils – Chennai
April 9 – Kings XI Punjab vs Mumbai Indians – Mohali
April 10 – Royal Challengers Banglore vs Kolkata Knight Riders – Bangalore
April 10 – Deccan Chargers Hyderabad vs Chennai SuperKings – Hyderabad
April 11 – Rajasthan Royals vs Mumbai Indians – Jaipur
April 11 – Delhi Daredevils vs Kings XI Punjab – Delhi
April 12 – Deccan Chargers Hyderabad vs Royal Challengers Banglore – Hyderabad
April 13 – Chennai Super Kings vs Kolkata Knight Riders – Chennai
April 14 – Mumbai Indians vs Delhi Daredevils – Mumbai/Nagpur
April 15 – Rajasthan Royals vs Royal Challengers Banglore – Jaipur
April 15 – Kings XI Punjab vs Deccan Chargers Hyderabad – Dharmsala
April 16 – Delhi Daredevils vs Chennai SuperKings – Delhi
April 17 – Royal Challengers Banglore vs Mumbai Indians – Bangalore
April 17 – Kolkata Knight Riders vs Rajasthan Royals – Kolkata
April 18 – Deccan Chargers Hyderabad vs Delhi Daredevils – Hyderabad
April 18 – Kings XI Punjab vs Chennai Super Kings – Dharamsala
April 19 – Kolkata Knight Riders vs Mumbai Indians – Kolkata
April 21 – Semifinal Match 1
April 22 – Semifinal Match 2
April 24 – 3rd Place Match
April 25 – FINAL Match

rajureva
12-03-2010, 03:40 PM
மன்னிக்கவும்
நானும் கிரிக்கட் பிரியர்தான், ஆனால் IPL-வந்தபிறகு ஆட்டம் பாட்டம் கிரிக்கட்டுக்கு அப்பாற்பட்டு
நடந்து கொண்டிருக்கிறது. மேலும் மின்சாரம் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் இரவு ஆட்டம் வேண்டுமா? எவ்வளவு கோடி அன்னிய நாட்டுக்கு போகப்போகிறது? ஏலம் என்ற பெயறினால்? ஏன் எவ்வளவு மின்சக்தி வீணாகிறது.....................யாருக்கு லாபம், ? சிந்திக்க வேண்டும். நான் யாரும் கூறாத கருத்துக்களை கூறவில்லை.........

aren
12-03-2010, 03:42 PM
எப்படியே தடவித்தடவி 160 எடுத்துவிட்டது கல்கத்தா. டெக்கான் என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.

சிவா.ஜி
12-03-2010, 03:47 PM
டெக்கான் 2.3 ஓவர்ல 25 ஓட்டங்கள்.

கில்கிறிஸ்ட் 15, வி.வி.எஸ் லக்ஷ்மன் 7

அமரன்
12-03-2010, 11:08 PM
டெக்கான் டேக்காஃப் ஆயிடுத்து.

சிவா.ஜி
13-03-2010, 04:09 AM
ஆச்சர்யமான வெற்றி. பந்துவீச்சாளர்களின் திறமை...செத்த பாம்பு என நினைத்த அணி நடப்பு சாம்பியனை வென்றிருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு முதல் வெற்றி.

aren
13-03-2010, 12:37 PM
யூசுப் பதானின் ஆட்டம் அருமை.

கடைசி நிமிடத்தில் நிலைகுலையாமல் அமைதியாக இருந்தது மும்பை இண்டியன்ஸின் வெற்றிக்கு வழி வகுத்தது.

மதி
14-03-2010, 02:55 PM
ஆரம்பமே சரியில்லை.. சென்னை சூப்பர்கிங்க்ஸுக்கு... கில்கிறிஸ்ட் விக்கட் பொறுத்து தான் ஆட்டம் அமையும் போல.. சீக்கரம் விக்கட் எடுங்கப்பாஆஆஆஆஆஆஆஆஆ...

"பொத்தனூர்"பிரபு
14-03-2010, 05:25 PM
ஆரம்பமே சரியில்லை..
ஆரம்பமே சரியில்லை..
முடிவும் சரியில்லை..

arun
15-03-2010, 10:09 AM
கொல்கத்தாவிற்க்கு இரண்டாவது வெற்றி கிடைத்து இருக்கிறது

கங்குலியின் வழிகாட்டுதலில் வெற்றி தொடருமா பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்

arun
16-03-2010, 08:32 AM
சேவாக்கின் அசத்தலான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியை டெல்லி எளிதாக வீழ்த்தியது

என்ன ஆயிற்று தில்ஷனுக்கு ?? இன்னமும் ரன் கணக்கை ஆரம்பிக்கவில்லையே ???? சூறாவளி எப்போது அடிக்க போகிறது என்று தெரியவில்லை

ஓவியன்
16-03-2010, 08:53 AM
என்ன ஆயிற்று தில்ஷனுக்கு ?? இன்னமும் ரன் கணக்கை ஆரம்பிக்கவில்லையே ???? சூறாவளி எப்போது அடிக்க போகிறது என்று தெரியவில்லை

ஒரு போட்டியில் கம்பீர் அடித்தார்,
இன்னோர் போட்டியில் ஷேவக் வெளுத்துக் கட்டினார்,
அடுத்தது டில்ஷானின் முறைதானென நினைக்கின்றேன்..!! :)

ஓவியன்
16-03-2010, 09:01 AM
தன் முதல் போட்டியில் தோல்வியினைத் தழுவிய சென்னை இன்று தான் சந்தித்த முதல் இரு போட்டிகளிலும் வெற்றியீட்டிய கொல்கத்தா அணியினைச் சந்திக்கின்றது...

இதுவரை கொல்கத்தா அணி பலமாக இருப்பதாகப் படுகிறது, அந்த பலத்துக்கு மேலும் பலமூட்ட இன்று `ஷேன் பாண்ட்` களமிறங்கக் கூடும்...

இந்தப் பலமான அணியினை சென்னை அணி எப்படி எதிர்கொள்ளப் போகின்றது..??

சிவா.ஜி
16-03-2010, 09:05 AM
நிச்ச்யமா ஊத்திக்கத்தான் போறாங்க. அதுவும் அந்த தியாகி ரொம்பவே தியாகம் பண்றாரு....நம்ம ஊர் மக்களாவது நின்னு விளையாடுவாங்கன்னு பாத்தா....ம்ஹீம்....என்னவோ இதோ போனதும் வந்துடறேண்டா செல்லம்ன்னு காதலிக் கிட்ட சொல்லிட்டு வந்த மாதிரி வந்த வேகத்துலேயே பெவிலியனுக்குத் திரும்பிடறாங்க.

இதெல்லாம் எங்க வெளங்கப்போகுது....

ஓவியன்
16-03-2010, 09:05 AM
தென்னாபிரிக்காவின் கிரேகம் ஸ்மித் விரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக தொடர்ந்து இந்த ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க மாட்டாராமே.......!! :eek:

பாவம் ராஜஸ்தான் அணி..!! :traurig001:

ஓவியன்
16-03-2010, 09:07 AM
இதெல்லாம் எங்க வெளங்கப்போகுது....


அதில `மங்கூஸ் பேட்` வேற...

ஒழுங்கா இருக்கிற பேட்டாலேயே அடிக்க மாட்டாங்கிறாங்க, அதுக்குள்ள இது வேறனு பக்கத்தில ஒருவர் முணு, முணுத்திட்டிருக்கார்..!! :lachen001::lachen001:

சிவா.ஜி
16-03-2010, 09:15 AM
ஆமா ஓவியன் இந்த மங்கூஸ் பேட்ல அப்படி என்ன விசேஷம்? இதுல விளையாடலாமான்னு கருத்துக் கணிப்பு வேற கேட்டிருக்காங்க...

மதி
16-03-2010, 09:19 AM
எது எப்படி இருந்தாலும்.... இன்னும் தூக்கம் கெட போகுது... தோத்தா திட்டிக்கிட்டேவும் ஜெயிச்சா சந்தோஷமாகவும் பாக்கறது மட்டும் தானே நம்ம பொழப்பு...!!!

ஓவியன்
16-03-2010, 09:23 AM
ஆமா ஓவியன் இந்த மங்கூஸ் பேட்ல அப்படி என்ன விசேஷம்? இதுல விளையாடலாமான்னு கருத்துக் கணிப்பு வேற கேட்டிருக்காங்க...

ஆமா, இந்த மங்கூஸ் பேட் துடுப்பாட்ட வலுவை 20% ஆகவும், துடுப்பின் வேகத்தினை 15% ஆகவும் அதிகரிக்கும் எங்கிறாங்க....

ஆனா, இப்படிச் சொல்வதிலும் `ஆறு`, `நான்கு` என அடித்துக் காட்டினால் தான் நாம நம்புவோமெங்கிறது அவங்களுக்கு புரியுதில்லை.

ஓவியன்
16-03-2010, 09:24 AM
தோத்தா திட்டிக்கிட்டேவும் ஜெயிச்சா சந்தோஷமாகவும் பாக்கறது மட்டும் தானே நம்ம பொழப்பு...!!!

:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

aren
16-03-2010, 09:37 AM
இன்னிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை ஜெயிக்கவேண்டும், ஜெயிப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

தியாகிக்கு பதில் கோனியை கொண்டு வருவார்கள் என்று தெரிகிறது. கெம்பை உட்கார வைத்துவிட்டு அங்கே நிட்டினியை கொண்டு வரலாம். அதே போல் பாலாஜிக்கு பதில் ஒரு நல்ல பேட்ஸ்மேனைக் கொண்டுவரலாம், ஏ.பி. கார்த்திக் அல்லது அனுரதா.

சிவா.ஜி
16-03-2010, 09:53 AM
ஆமா....தியாகி, தியாகம் செஞ்சது போதும். கோனியாவது....கோணி நிறைய விக்கெட்டுகளை நிறைப்பாரா பாக்கலாம்.

aren
16-03-2010, 12:24 PM
பெங்களூருக்கு இன்னிக்கு எள்ளுதான் போலிருக்கே. 204 ரன்கள் எடுப்பார்களா? கஷ்டம்தான் போலிருக்கு.

சிவா.ஜி
16-03-2010, 12:28 PM
தோத்துட்டா அடிக்கமாட்டேன்னு சொல்லய்யா....மல்லய்யா...அப்படீன்னு கியாரண்டி வாங்கிட்டுதான் விளையாடவே போவாங்க....பாவம்.

சிவா.ஜி
16-03-2010, 01:00 PM
ஆஹா....நம்ம ஸ்டேட்மென்ட்டை மாத்திக்கனும் போலருக்கே....

6 ஓவர்ல 61 ரன் அடிச்சுட்டாங்க....இந்த ரேஞ்சுலபோனா ஜெயிச்சுடுவாங்க போலருக்கு...

மனீஷ் பான்டே, காலிஸ் பட்டையைக் கிளப்புறாங்க...

aren
16-03-2010, 01:12 PM
இன்னும் பத்து ஓவரில் 115 அடிக்கனுமே.

aren
16-03-2010, 01:26 PM
64 ரன்கள் 41 பந்தில் அடிக்கவேண்டும்

aren
16-03-2010, 01:45 PM
15 ரன்கள் 13 பந்தில் எடுக்கவேண்டும்

aren
16-03-2010, 01:45 PM
சாரி சாரி 11 ரன்கள் 12 பந்தில் எடுக்கவேண்டும்

aren
16-03-2010, 01:49 PM
பெங்களூர் ஜெயித்துவிட்டது. அனைவரும் அருமையாக ஆடினார்கள். 204 ரன்கள் திருப்பி அடிப்பது அவ்வளவு எளிதல்ல. சங்ககராவின் தலைமை அவ்வளவு நன்றாக இல்லை.

aren
16-03-2010, 01:50 PM
யுவராஜ் தலைமை ஏற்றிருந்தால் வென்றிருக்கலாம் என்று நினைக்கிறேன். 407 ரன்கள் 38.5 ஓவர்களில் அடித்திருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய விருந்து.

சிவா.ஜி
16-03-2010, 01:54 PM
இதைத்தான் சொல்வார்கள்...யாரையும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்று.

(ஆனா நான் ஒரு அணியைபற்றி குறை சொன்னால் அது எப்படியோ அவர்கள் காதுகளில் விழுந்து ரோஷத்தோடு ஆடி ஜெயித்துவிடுகிறார்கள்....சென்னை அணிக்கும் நான் சொன்னதுக் கேட்டிருக்குமா.....பொறுத்திருந்து பார்ப்போம்.)

மதி
16-03-2010, 02:53 PM
இன்னும் கேக்கல போல.. :( ஆரம்பம் படு மோசம்..!!! :(

aren
16-03-2010, 02:57 PM
வெறும் காத்துதான் வருது

ஓவியன்
16-03-2010, 02:58 PM
சங்ககராவின் தலைமை அவ்வளவு நன்றாக இல்லை.

சங்ககாராவின் தலமையை ஒரு சில போட்டிகளில் குறைத்து மதிப்பீடு செய்வது சரியானதல்ல தான், ஆனால் சங்கவிலும் பார்க்க, யுவராஜிலும் பார்க்க ஒரு சிறந்த தலைவர் அந்த அணிக்குள்ளேயே இருக்கின்றார்...

அவர் கையில் அணியினைக் கொடுத்துப் பார்த்திருக்கலாம்..!! :)

மதி
16-03-2010, 02:58 PM
அதான்.. அதே தான்..!!!... 6 ஓவரில் 31 ரன்கள். மேத்திவ் பிசுபிசுத்தாச்சு.... அடுத்து ரெய்னா.. மட்டைய விட்டுட்டு இருக்கார். பந்து தான் படவே இல்லை.... ஏனோ தானோன்னு ஆடற மாதிரி இருக்கு...!!!!

ஓவியன்
16-03-2010, 03:04 PM
ஏனோ தானோன்னு ஆடற மாதிரி இருக்கு...!!!!

அதுதான் விக்கெட்டை எடுக்காம விட்டு வைச்சிருக்காங்க போல...!!

அவரை எடுத்து விட்டால், வேறு யாராவது (பாலாஜி (அ) முரளி :D ) வந்து அடிச்சு ஆடிடுவாங்களே..!! :D:D

மதி
16-03-2010, 03:07 PM
ஹிஹி அதே... அதே..!!!! ரம்பம் மாதிரி இழுத்துட்டு இருக்காங்க...!!!!

மதி
16-03-2010, 03:10 PM
ஹைய்யா... ஒரு விக்கட் போச்சு..... வாழ்க முரளி....விஜய்...!!! அடுத்து ரெய்னாவுக்கு காத்திட்டு இருக்கேன்..!

சிவா.ஜி
16-03-2010, 03:32 PM
ரெய்னாவும் போயாச்....ஹெய்டனும் போயாச்.....அடுத்து பத்ரிநாத்.....

மதி
16-03-2010, 04:12 PM
கடைசியா ஒரு மாதிரி ஆடி.. தோனி தயவால... 164 எடுத்துட்டாங்க... இது போதுமா??? பொறுத்திருந்து பார்ப்போம்..!

ஓவியன்
16-03-2010, 04:44 PM
மூன்று விக்கெட் போயாச்...

நம்மாளுங்க ஒரு வேளை வென்றிடுவாங்களோ...!! :icon_wink1:

சிவா.ஜி
16-03-2010, 04:55 PM
நாலு விக்கெட் போச்...

கோணிதான் நிறைய ரன் கொடுக்கிறாரு பார்ப்போம்.

ஓவியன்
16-03-2010, 05:52 PM
சிவா அண்ணே...

ஒவ்வொரு தடவை சென்னை அணி போட்டியில் நுளையும் போதும், இன்று போல குறை கூறிடுங்க...

நம்ம ஆளுங்க ரோஷத்தில ஜெயித்திடுவாங்க..!!

இன்றைய வெற்றி சென்னை அணிக்கு இந்த தொடர் முழுக்க தொடரட்டும்.

மதி
17-03-2010, 07:10 AM
இங்க திட்டுனது அங்க கேட்டிருக்கு... பரவாயில்ல.. இனிமே வெற்றிகள் மட்டுமே உரித்தாகட்டும்.. பாராட்டுக்கள்.. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியினருக்கு.

சிவா.ஜி
17-03-2010, 07:13 AM
பாராட்டுக்கள் சென்னை அணியினருக்கு. போனமுறை சொதப்பினதுக்கு இந்தமுறை சரிக்கட்டிட்டாங்க.

(ஆமா ஓவியன், மதி....ஆட்டம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால திட்டனும் போலருக்கு...ரோஷக்கார பயபுள்ளைங்க....ஹி...ஹி...)

sudakar88
17-03-2010, 07:13 PM
வலுவான மும்பை அணி தொடருந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி. ஜெயசூர்யா குறைந்த ரன்களுக்கு ஆட்டம் இழந்தாலும் அனுபவம் மிக்க சச்சின் 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இளம் வீரர்கள் திவாரி மற்றும் ராயுடு ஆகியோரின் உதவியால் அந்த அணி 218 குவித்தது.
பின்னர் ஆட துவங்கிய delhi அணி மும்பை அணியின் சிறந்த பந்துவீச்சின் காரணமாக 120 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. காயம் காரணமாக அந்த அணியின் கம்பீர் ஆடாதது அந்த அணிக்கு பின்னடைவாக போய்விட்டது. சச்சின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மும்பை அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது. கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளன.
நாளை பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணியில் ஸ்மித் மற்றும் mascarenhas ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். அதே சமயம் பெங்களூர் அணி கடைசியாக பெற்ற வெற்றி காரணமாக புத்துணர்ச்சியோடு உள்ளது. எனவே நாளை போட்டி பரபரப்பாக இருக்கும்.

ஓவியன்
18-03-2010, 05:19 AM
இந்த தடவை இதுவரை நடந்து முடிந்த போட்டிகளை வைத்துக் கொண்டு பார்க்கும் போது மும்பை அணி, கிரிக்கட்டின் எல்லாத் துறையிலும் பலம் வாய்ந்தாகவே தெரிகிறது.

அதிலும் இளம் இந்திய வீரர்கள் நன்றாக பிரகாசிப்பது இந்த அணியின் பலம், சவுரவ் திவாரியும், அம்பாடி ராயுடுவும் அடித்தாடி ஓட்டங்களைக் குவிக்கின்றார்கள். இவர்களுக்கு அடுத்தாக வரிசையில் நிற்கும் தமிழக வீரர் சதீஸூக்கு தன் துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்த இதுவரை சரியான வாய்ப்புக் கிடைக்க வில்லை என்றே சொல்ல வேண்டும். சதீஷினைத் தொடர்ந்து அபிஷேக் நாயர் வாய்ப்புக்காக வெளியே காத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சிலே, ஹர்பஜன், ஷகீர்ஹான், மாலிங்க, பிராவோ என நான்கு சர்வதேசத் தரம் மிக்க பந்து வீச்சாளர்கள் இருப்பதும் (டில்ஹார பெர்ணாண்டோ வேற வெளியே இருக்கின்றார் :D) மும்பை அணியின் பலம்.

எல்லாவற்றுக்கும் மேலாக பொலக், ஜொண்டி ரொட்ஸ் மற்றும் ராபின்சிங் போன்றோரின் வழிகாட்டுதல் இருப்பதனால் இந்த தடவை இறுதிப் போட்டிக்கு மும்பை அணி முன்னேறுமெனவே தோன்றுகிறது.

aren
18-03-2010, 05:45 AM
இதுவரை ஓரம் கட்டப்பட்ட சவுரவ் திவாரியும், அம்பாடி ராயுடுவும் பிரகாசிப்பதுகண்டு மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதுமாதிரி மனீஷ் பாண்டே, மனோஜ் திவாரி போன்றவர்களும் நன்றாகவே ஆடுகிறார்கள்.

இந்த தொடர் முடிந்தவுடன் பல பெரிய தலைகள் சாய்ந்து புதிய தலைகள் வரும் என்றே எதிர்பார்க்கிறேன்.

இந்த மூன்றாவது தொடர் முடிந்தவுடன், அனைவருடை காண்டிராக்ட்களும் காலாவதியாகிவிடும். புதிய காண்டிராக்ட் போட வேண்டும். அதனால் டெண்டுல்கர், திராவிட், ஷேவாக், லஷ்மன், கங்குலி, இஷாந்த், யுவராஜ், தோனி போன்றவர்கள் நன்றாக விளையாடினால் தான் அவர்களுக்கு இதே மாதிரியான பணம் கிடைக்கும், அப்படியில்லையென்றால் இதில் பாதிகூட கிடைக்காது. அதனால் இந்தப் பெரிய தலைகள் அனைவரும் நன்றாக ஆடி அடுத்த காண்டிராக்ட்டுக்கு அடித்தளம் போட்டு விடுவார்கள் என்றே நம்புகிறேன்.

ஓவியன்
18-03-2010, 05:54 AM
இதுவரை ஓரம் கட்டப்பட்ட சவுரவ் திவாரியும், அம்பாடி ராயுடுவும் பிரகாசிப்பதுகண்டு மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதே, அதே..!!

அதே போல ராஜகோபால் சதீஸூம் தன் துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்த சந்தர்பம் கிடைக்குமெனக் காத்திருக்கின்றேன்.

aren
18-03-2010, 04:15 PM
இன்னிக்கு நடக்கும் மாட்சைப் பார்த்து யார் சிரித்துக்கொண்டிருக்கிறார் தெரியுமா ஜடேஜா. ராஜஸ்தான் ராயல்ஸ் அநியாயமாக அவர் காண்டிராக்ட் பற்றி பேசாமல் அவர் மற்ற டீமிடம் பேசியதை பெரிய விஷயமாக எடுத்து அவரை துரத்தியது. இப்போ, ராஜஸ்தான் டீம் ஆட ஆள் இல்லாமல் பரிதாபமான நிலையில் உள்ளது

சிவா.ஜி
18-03-2010, 04:20 PM
ராஜஸ்தான் ராயல்...92 ரன்லேயே சுருண்டுடிச்சி....யூசுப் பட்டானும் காலை வாரிவிட்டுட்டார். பெங்களூரு ஈஸியா ஜெயிச்சுடும்.

aren
18-03-2010, 04:36 PM
யூசுப் பத்தான் 100 அடித்துவிட்டு வந்தவுடன் இதுதான் அவர் கடைசியா அடிக்கும் 50கும் மேலான ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். அதே மாதிரி அடுத்த இரண்டு மாட்சிலும் சொதப்பிவிட்டார். இனிமேல் அவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துதான் வரும் ஏனெனில் அதை அவர் சரியாக ஆடுவதில்லை என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

"பொத்தனூர்"பிரபு
19-03-2010, 12:13 AM
இந்த தடவை இதுவரை நடந்து முடிந்த போட்டிகளை வைத்துக் கொண்டு பார்க்கும் போது மும்பை அணி, கிரிக்கட்டின் எல்லாத் துறையிலும் பலம் வாய்ந்தாகவே தெரிகிறது.

அதிலும் இளம் இந்திய வீரர்கள் நன்றாக பிரகாசிப்பது இந்த அணியின் பலம், சவுரவ் திவாரியும், அம்பாடி ராயுடுவும் அடித்தாடி ஓட்டங்களைக் குவிக்கின்றார்கள். இவர்களுக்கு அடுத்தாக வரிசையில் நிற்கும் தமிழக வீரர் சதீஸூக்கு தன் துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்த இதுவரை சரியான வாய்ப்புக் கிடைக்க வில்லை என்றே சொல்ல வேண்டும். சதீஷினைத் தொடர்ந்து அபிஷேக் நாயர் வாய்ப்புக்காக வெளியே காத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சிலே, ஹர்பஜன், ஷகீர்ஹான், மாலிங்க, பிராவோ என நான்கு சர்வதேசத் தரம் மிக்க பந்து வீச்சாளர்கள் இருப்பதும் (டில்ஹார பெர்ணாண்டோ வேற வெளியே இருக்கின்றார் :D) மும்பை அணியின் பலம்.

எல்லாவற்றுக்கும் மேலாக பொலக், ஜொண்டி ரொட்ஸ் மற்றும் ராபின்சிங் போன்றோரின் வழிகாட்டுதல் இருப்பதனால் இந்த தடவை இறுதிப் போட்டிக்கு மும்பை அணி முன்னேறுமெனவே தோன்றுகிறது.


அதே அதே

arun
19-03-2010, 04:14 AM
20/20 போட்டிகளில் ஒரு சில சிறிய தவறுகள் செய்தாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடும் பலம் மிகுந்த அணிகளாக முதலில் தென்பட்டாலும் அதன் பின்னர் அவர்களால் சாதிக்க முடிவதில்லை இன்னும் சில போட்டிகளை அனைவரும் ஆடி முடித்தால் தான் ஓரளவுக்கு நம்மால் கணிக்க முடியும்

ஓவியன்
20-03-2010, 06:48 AM
ஹா, ஹா..!!

வாழ்க mongoose...!! :):)

சிவா.ஜி
20-03-2010, 06:58 AM
நேற்று வெற்றிக்காக மிகவும் போராடினார்கள் பஞ்சாப் அணியினர். அதிலும் இர்ஃபான் பதான்...மிக மிக நன்றாக விளையாடி....கேவலமான தோல்வியிலிருந்து தன் அணியைக் காப்பாற்றினார்.

பார்ப்போம்...இனி வரும் ஆட்டங்களை.

ஓவியன்
20-03-2010, 10:23 AM
நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்துள்ளனர்...

நீண்ட பயணமொன்றினூடாக இந்தியா வந்துள்ள ஹெயில் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

arun
22-03-2010, 04:19 AM
ஏற்கனவே சொன்னபடி நேற்றைய போட்டியின் முடிவுகள் தலைகீழானது :icon_b:

சுலப இலக்கை அடைய முடியாமல் சென்னை அணி தோல்வியை சந்தித்து ரசிகர்களை வெறுப்பேற்றியது :eek:

மங்கூஸ் என்று தலையில் தூக்கி வைத்து ஆடியவர்கள் எல்லாம் இப்போது திட்டுகிறார்கள் :sprachlos020:

வெற்றியும் தோல்வியும் சகஜம்.... :icon_rollout:

ஓவியன்
23-03-2010, 04:50 AM
தான் சந்தித்த முதல் இரு போட்டிகளிலும் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி, தொடர்ச்சியாக மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ளது. நேற்றைய போட்டியில் போட்டியின் கடைசிப் பந்து வரை ஹெயில் ஆட்டமிழக்காமல் இருந்தும் ஓட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தமை மும்பை அணியின் வெற்றிக்குக் காரணமாகியது...

நேற்றைய போட்டியில், காயமடைந்த அம்பாடி ராயூடுவுக்குப் பதிலாக உள்ளே வந்த டவான் நல்ல ஆரம்பத்தை சச்சினுடன் இணைந்து கொடுத்திருந்தார். மறுபடி ராயுடு உள்ளே வருகையில் வெளியே போவது யார்...??, அதனையறிந்து சதிஸூம் நேற்று நன்றாக விளையாடி இருந்தார்...

aren
23-03-2010, 05:50 AM
சந்திரசேகர் கணபதியை ஏன் இதுவரை சென்னை குழு உபயோகப்படுத்தவில்லை என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவர் திறமையன ஆல்ரவுண்டர், இவருக்கு பதில் தியாகி, கோணி போன்றவர்களை உள்ளே இறக்கினார்கள்.

அதே மாதிரி விஜய்க்கு பதில் அருண் கார்த்திக்கை உள்ளே கொண்டு வரலாம்.

ஜஸ்டின் கெம்பிற்கு பதில் யார் உள்ளே வருவார்கள் என்று தெரியவில்லை.

மன்மதன்
23-03-2010, 03:12 PM
இன்றைக்கும் சூப்பர் ஓவர் வருமா?
சூப்பர் ஓவர் சூப்பர் சஸ்பென்ஸாக இருக்கிறது..!! :-)

மதி
23-03-2010, 03:20 PM
இன்றைக்கும் சூப்பர் ஓவர் வருமா?
சூப்பர் ஓவர் சூப்பர் சஸ்பென்ஸாக இருக்கிறது..!! :-)
ஆஹா நாம இரண்டாவதாக பேட் செய்ய போகிறோம் என்ற நம்பிக்கையிலா?

ஓவியன்
24-03-2010, 12:28 PM
நேற்றைய போட்டியில் பிடிகளை தவற விட்டு வெற்றியையும் தவற விட்டாச்சு, சென்னை அணிக்காக துடுப்பெடுத்தாடியவர்களில் பத்ரிநாத்தைத் தவிர வேறு யாருக்கும் வெற்றிபெற வேண்டுமென்ற ஆர்வம் இருந்தாகத் தெரியவில்லை.

சிவா.ஜி
24-03-2010, 12:50 PM
காரணம் ரொம்ப சிம்பிள் ஓவியன். போட்டி நடந்த இடம் பெங்களூரு.....வெறியர்கள் நிரம்பியிருக்கும் ஊர். தப்பித்தவறி சென்னை அணி ஜெயித்துவிட்டால்....மிகப்பெரிய கலவரம் ஏற்படும். போதாக்குறைக்கு மல்லையா வேறு முறைத்துக் கொண்டே இருக்கிறார்.

பெங்களூர் அணியினர் யாருமே விளையாட்டுவீரர்களாக விளையாடவில்லை. அவர்களது முகங்களைப் பார்த்தாலே தெரிந்தது...வெறித்தனம். மல்லையாவின் மிரட்டலுக்கு ஆளாகி...எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் இருந்தார்கள்.

மொத்தத்தில் நேற்று நடந்த போட்டி....கிரிக்கெட்டை...ஜென்டில்மேன்ஸ் கேம் என்று சொல்ல முடியாதவாறு செய்துவிட்டது.

ஓவியன்
24-03-2010, 12:59 PM
இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை சிவா, அடிக்கடி தொலைக்காட்சியில் விஜய் மல்லையாவின் முகம் தெரிந்த போது ஏன் இப்படி முறைத்துக் கொண்டிருக்கிறாரென நினைத்தது இப்போது கொஞ்சம் விடயத்தை விளங்க வைக்கின்றது.

சிவா.ஜி
24-03-2010, 01:19 PM
இடையிடையே காண்பித்த ஸ்ரீகாந்தின் முகத்திலும் தெரிந்த உணர்ச்சி...தோல்வியை எதிர்பார்த்தே அமர்ந்திருக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டியது. சென்னை அணியினரின் முகபாவங்களும் அவர்களையறியாமலேயே அந்த உண்மையை பறைசாட்டிக்கொண்டிருந்தன.

aren
26-03-2010, 10:50 AM
சென்னை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் பிரச்சனை. அதனாலே கடந்த மூன்று மேட்சும் தோற்றுவிட்டார்கள்.

இப்போ டக் போலிங்கரை சென்னை கிங்ஸ் புக் செய்திருப்பதாக நியூஸ் வந்துள்ளது. இதனால் இவர்கள் வெற்றி வாய்ப்பு பெருகும் என்றே நினைக்கிறேன்.

சிவா.ஜி
26-03-2010, 11:48 AM
இனி வெற்றி பெற்றாலும்....பிரயோசனமுண்டா ஆரென்....???

arun
26-03-2010, 12:23 PM
சென்னை இனி வரும் எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்றாக வேண்டும் அல்லது அடுத்த அணியினை நம்பி இருக்க வேண்டும்

aren
26-03-2010, 02:45 PM
இன்னும் ஆறு ஆட்டம்தான் வெல்லவேண்டும். வென்றால் எளிதில் இறுதிச் சுற்றுக்குப் போகமுடியும். இல்லையென்றால் மற்றவர்களின் காலை வாறிவிடவேண்டும்

aren
30-03-2010, 06:58 AM
இன்று மும்பை இண்டியன்ஸுக்கும் பஞ்சாப் கிங்ஸுக்கும் மேட்ச் நடக்கப்போகிறது. இன்று பஞ்சாப் ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன். யுவராஜின் அபாரமான ஆட்டத்தைப் பார்க்கமுடியும்.

அதே மாதிரி நாளை நடக்கும் பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கிடையேயான மாட்சில் சென்னை அணி வெல்லும். கணபதி சந்திரசேகருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். அனிருதாவிற்கு சான்ஸ் கிடைக்குமா

சிவா.ஜி
30-03-2010, 09:42 AM
இன்னுமா...சென்னை அணியை நம்புறீங்க ஆரென்.....!!!

ஹய்யோ....ஹய்யோ.....!!

டெஸ்ட் மேட்ச்சுல வெளையாடுற மாதிரி வெளையாடுறாங்க....இவிங்கபோய்.....!!!

போங்க ஆரென் காமெடி பண்ணாதீங்க...!!

ஓவியன்
30-03-2010, 10:15 AM
இன்னுமா...சென்னை அணியை நம்புறீங்க ஆரென்.....!!!

ஹய்யோ....ஹய்யோ.....!!

டெஸ்ட் மேட்ச்சுல வெளையாடுற மாதிரி வெளையாடுறாங்க....இவிங்கபோய்.....!!!

போங்க ஆரென் காமெடி பண்ணாதீங்க...!!

சிவா,

நீங்கள் நையாண்டி பண்ணினால் ரோசகாரப் புள்ளைங்க வென்றிடுவாங்கனு நம்பித் தானே இப்படி பேசுறீங்க...??? :icon_rollout::D:D

சிவா.ஜி
30-03-2010, 10:19 AM
இல்லை ஓவியன். போன நாலு மேட்ச்சையும் பார்த்து நொந்துபோய்த்தான் இப்படிச்சொன்னேன். இனி இவங்க எப்படியும் ஜெயிக்க மாட்டாங்க. அதுவும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக் கிட்ட...ம்ஹீம்.....முடியவே முடியாது.

ஓவியன்
30-03-2010, 11:34 AM
அது என்னவோ உண்மைதான், இப்போதெல்லாம் நான் மும்பை அணிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறனாக்கும்..!! :icon_ush:

ஆதி
30-03-2010, 11:44 AM
காசு விளையாடுவதால், காசால் விளையாடுறாங்களோ னு தோணுது..

சிவா.ஜி
30-03-2010, 12:09 PM
இடைத்தேர்தலைவிட....காசுப் புழக்கம் கொடிகட்டிப் பறக்குது.....இது விளையாட்டில்லை....வியாபாரம்...என ஒவ்வொரு அங்குலத்திலும் பறைசாற்றுகிறார்கள்.

aren
30-03-2010, 02:01 PM
நேத்து நம்ம நண்பர் ஒருவருக்கு ஃபோன் போட்டு என்னங்க இப்படி ஆடுறாங்க நான் மேட்சை பார்க்கவே முடியாமல் செய்துவிடுவாங்க போலிருக்கு, என் மனைவிக்கு நான் மேட்ச் பார்க்கவில்லை என்று தெரிந்தால் கிரிக்கெட் கனெக்ஷனை கட் செய்துவிடுவார்கள், ஒரு மேட்சாவது ஜெயிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னேன். ஏன் வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுர என்று அவர் சொல்லி ஃபோனை வைத்துவிட்டார். என்னத்த சொல்றது, அதான் நம்ம டீமுக்கு நானே வாழ்த்துச் சொன்னேன்.

ஓவியன்
31-03-2010, 12:13 PM
162 ஓட்டங்கள் இன்று எட்டும் கனியா...??, இல்லை எட்டாக் கனி தானோ...??

ஓவியன்
31-03-2010, 12:15 PM
என் மனைவிக்கு நான் மேட்ச் பார்க்கவில்லை என்று தெரிந்தால் கிரிக்கெட் கனெக்ஷனை கட் செய்துவிடுவார்கள்.

என்ன கொடுமை இது, கனெக்ஷனை காப்பாத்த எப்படியெல்லாம் கஸ்ரப்படுறார் நம்ம ஆரென் அண்ணா..!! :lachen001::lachen001::icon_rollout:

சிவா.ஜி
31-03-2010, 12:26 PM
162 ஓட்டங்கள் இன்று எட்டும் கனியா...??, இல்லை எட்டாக் கனி தானோ...??

முரளி விஜய், சுரேஷ் ரெய்னாவால கனியை எட்டிப் பறிச்சிட்டாங்க....

எல்லாத்தைவிட சந்தோஷம் அந்த அதிகப்பிரசங்கி வினைய் குமாருக்கு அடிச்சாங்க ஆப்பு....ரொம்ப சந்தோஷம்.:icon_b:

ஓவியன்
04-04-2010, 04:47 AM
நேற்றைய தினம் மும்பை அணிக்கும் டெக்கான் அணிக்கும் இடையேயான போட்டியில் ஆவேசமான ஆட்டத் திறனிலும் தலை முடி அசைவிலும் சில ஆண்டுகளுக்கு முன்னைய தோனியை ஞாபகமூட்டும் சவுரவ் திவாரியும் அமைதியாக நின்று ஆக்ரோசமாக பந்துகளை எல்லைக் கோடுகளுக்கு வெளியே செலுத்தும் அம்பாடி ராயுடுவும் மீண்டும் ஒரு முறை தம்மை நிரூபித்திருந்தார்கள்.

இளமைத் துடிப்பும் அனுபவ முதிர்ச்சியும் சரியான விகிதத்தில் சேர்கையில் வெற்றிகள் இலகுவாமென்பதை இந்த பருவத்தின் மும்பை அணி நிரூபித்து வருகிறது, இதே வேளை விஜயின் அதிவேக அதிரடியால் முன்னேறிக் கொண்டிருக்கின்றது சென்னை அணி இந்த வெற்றி தொடரட்டும் என்பதே ஒவ்வொரு ரசிகனின் கனவாகவும் இருக்கின்றது.

aren
05-04-2010, 01:32 AM
ஓவியன்,

திவாரியும், ராயுடுவும் விஜயும் என்னதான் ஆடினாலும் ரோஹித் சர்மாவைத்தான் இந்த அணியில் தேர்வு செய்வார்கள். ரோஹித்துக்கு யார் சப்போர்ட் செய்கிறார்கள் என்பது ஒரு புதிராகவே எனக்கு இருக்கிறது (நம்ம பிஜிகேவிடம்தான் இந்த புதிருக்கு பதில் கேட்கவேண்டும்)

aren
26-04-2010, 02:30 AM
மகத்தான வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸிற்கு என் வாழ்த்துக்கள்.

அபிஷேக் நய்யாரை மூன்றாவது ஆட்டக்காரராக உள்ளே கொண்டு வந்தது தவறு என்று நினைக்கிறேன். அதே மாதிரி டுமினி வந்த இடத்தில் போலார்ட் வந்திருக்கவேண்டும். டெண்டுல்கர் இந்த இரண்டு இடத்திலும் கொஞ்சம் சொதப்பிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

மற்றபடி ரெய்னாவின் இரண்டு காட்சுகளைக் கோட்டைவிட்டதாலும் மும்பை தோற்றதற்கு மற்றொரு காரணம்.

சென்னை மிகவும் சிறப்பாக விளையாடியது. அஸ்வின் ஒரு தேர்ந்த பந்துவீச்சாளர் என்று தன்னை மறுபடியும் நிரூபித்துவிட்டார். அவருக்கு இந்திய அணியில் இடம் கொடுத்து அவருடைய கெளரவத்தை குறைக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

இனிமேலாவது டயத்துக்கு தூங்க போங்கப்பா.

இன்னும் தூக்கக்கலக்கத்தில்
ஆரென்

மதி
26-04-2010, 02:44 AM
அபாரமான வெற்றி... உண்மை தான் இனியாவது நேரத்துக்கு தூங்கனும்...

அன்புரசிகன்
26-04-2010, 03:01 AM
அபிஷேக் நய்யாரை மூன்றாவது ஆட்டக்காரராக உள்ளே கொண்டு வந்தது தவறு என்று நினைக்கிறேன். அதே மாதிரி டுமினி வந்த இடத்தில் போலார்ட் வந்திருக்கவேண்டும். டெண்டுல்கர் இந்த இரண்டு இடத்திலும் கொஞ்சம் சொதப்பிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

மற்றபடி ரெய்னாவின் இரண்டு காட்சுகளைக் கோட்டைவிட்டதாலும் மும்பை தோற்றதற்கு மற்றொரு காரணம்.


அந்த தவறினை சச்சினே கூறினார். உள்ளே சில தொடர்பாடல் பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனாலும் கடசி நேரத்தில் பொலாட் எடுத்த முடிவு தவறு. இரண்டாவது ஓட்டம் எடுத்து ராயுடு ஐ அவுட்டாக்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 2 ஓவரின் பொலாட் இனால் அடிக்கக்கூடிய ஓட்ட எண்ணிக்கையே இருந்தது. அவசரப்பட்டதால் வந்த வினை...

சென்னையின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். ஹெய்டனின் ஓட்டம் சரியாகவே இல்லை... 30க்கும் மேலான பந்துகளை எதிர்கொண்டு 12 ஓட்டங்களை பெற்றது 20-20க்கு எடுத்தது ரொம்ப ஓவர்...

ஒவ்வொரு வருடமும் திறமையாக விளையாடிய அணி கோப்பையை வெல்லாமலே சென்றுவிடுகிறது. முதலாவது தடவை சென்னை. இரண்டாவது டெல்லி. இந்த தடவை மும்பை... சச்சினின் உழைப்பு வீணாணது சற்றே வருத்தம்...

இன்று இங்கு விடுமுறை என்பதால் தப்பித்தேன். படுக்கும் போது காலை 6மணி... :D

கடைசியில் ஏதோ உருக உருக மோடி பேசினாரே... ஏதாவது பிரச்சனையா??? அடுத்த முகாமையாளராக அவர் இருக்கப்போவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தார்கள் தெ.கா வில்

mania
26-04-2010, 04:28 AM
"ஜெயித்தது நாங்கதானுங்கோ......."சென்னை சூப்பர் கிங்ஸ்.....(எங்கேயோ எப்போவோ கேட்ட குரலில்.....!!!!!)....:D:D:D
வெற்றி புன்னகையுடன்
மணியா...:D:D:D
(அப்பப்போ ஃபோனில் எனக்கு உற்சாகம் அளித்து ஆலோசனைகளும் கூறிக்கொண்டிருந்த ஆரெனுக்கு என் நன்றிகள்.....)

Akila.R.D
26-04-2010, 04:48 AM
தூக்கம் கெட்டு பார்கனுமான்னு நெனச்சுக்கிட்டே பார்த்தேன்..

ஆனா ஜெயிச்சுக்காட்டிட்டாங்க...

மதி
26-04-2010, 04:55 AM
"ஜெயித்தது நாங்கதானுங்கோ......."சென்னை சூப்பர் கிங்ஸ்.....(எங்கேயோ எப்போவோ கேட்ட குரலில்.....!!!!!)....:D:D:D
வெற்றி புன்னகையுடன்
மணியா...:D:D:D
(அப்பப்போ ஃபோனில் எனக்கு உற்சாகம் அளித்து ஆலோசனைகளும் கூறிக்கொண்டிருந்த ஆரெனுக்கு என் நன்றிகள்.....)
ஆரென் ஆலோசனைப்படி தான் ஜெயித்தோமோ??? :D:D:D
ஆரெனுக்கு நன்றி பல. இனிமேல் விட்ட கதையை சீக்கிரமா தொடருவார் என நம்பலாம்.

மன்மதன்
26-04-2010, 03:32 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..!!! தலை, மும்பை ஃபைனல் மேட்சுக்கு வந்திருக்கலாம்..

rajeshkrv
26-04-2010, 10:48 PM
சென்னைக்கு வெற்றி தேடித்தந்த சுரேஷ் மற்றும் தோனிக்கு ஒரு ஓ போடுங்க*

தாமரை
30-04-2010, 04:45 AM
ஐயா, அடுத்த வருஷம் ஃபைனல் சென்னையிலயாம்..

வந்துருவமல்ல....

(மணியாவுக்கு இப்பவே கிலி பிடிக்க ஆரம்பிச்சாச்சு!!!)

தாமரை
30-04-2010, 04:48 AM
ஆரென் ஆலோசனைப்படி தான் ஜெயித்தோமோ??? :D:D:D
ஆரெனுக்கு நன்றி பல. இனிமேல் விட்ட கதையை சீக்கிரமா தொடருவார் என நம்பலாம்.


என்னது ஆரென் கதை விட்டாரா?

சொல்லவே இல்ல....:lachen001::lachen001::lachen001::lachen001:

mania
30-04-2010, 04:49 AM
]


ஐயா, அடுத்த வருஷம் ஃபைனல் சென்னையிலயாம்..

வந்துருவமல்ல....

(மணியாவுக்கு இப்பவே கிலி பிடிக்க ஆரம்பிச்சாச்சு!!!)

:D:D:D ஏன்.....???? நீங்க உங்க ஊரில பண்ணியதை நாங்க பண்ணமாட்டோமா என்ன....:rolleyes::rolleyes:
குண்டு மணியா.....:D:D:D

தாமரை
30-04-2010, 04:54 AM
]



:D:D:D ஏன்.....???? நீங்க உங்க ஊரில பண்ணியதை நாங்க பண்ணமாட்டோமா என்ன....:rolleyes::rolleyes:
குண்டு மணியா.....:D:D:D

GOOD - U மணியவா..!!! இல்லாம இருந்தா "திமிரு" வடிவேல் கணக்கா
"குட்டு" மணியா ஆயிடுவீங்க..


இப்பதான் கட்டினீங்க... இடிக்கறதுக்கு எதுக்கு கட்டணும்? ஒரு டிக்கட் எடுத்தா பத்தாது?

mania
30-04-2010, 04:57 AM
GOOD - U மணியவா..!!! இல்லாம இருந்தா "திமிரு" வடிவேல் கணக்கா
"குட்டு" மணியா ஆயிடுவீங்க..


இப்பதான் கட்டினீங்க... இடிக்கறதுக்கு எதுக்கு கட்டணும்? ஒரு டிக்கட் எடுத்தா பத்தாது?

முழுவதும் கட்டலையே.....!!!! எப்படியும் மீதியை இடிச்சாகணுமே....!!!!
அன்புடன்
ஒல்லி மணியா...:D

தாமரை
30-04-2010, 05:00 AM
முழுவதும் கட்டலையே.....!!!! எப்படியும் மீதியை இடிச்சாகணுமே....!!!!
அன்புடன்
ஒல்லி மணியா...:D

முழுசா கட்டலியா? அப்ப "கோயிங் ஸ்டெடி" அப்படின்னு சொல்லுங்க...

ஸ்டெடி தாமரை

aren
30-04-2010, 05:28 AM
என்னது ஆரென் கதை விட்டாரா?

சொல்லவே இல்ல....:lachen001::lachen001::lachen001::lachen001:

உண்மையைச் சொல்லி போரடித்துவிட்டது, அதனாலே கொஞ்சம் கதை விடுகிறேன். அவ்வளவுதான்.

மதி
30-04-2010, 05:30 AM
எனக்கு ஒன்னு... எனக்கு ஒன்னு...
குண்டா இருந்தாலும் பரவாயில்ல... ஹிஹி

aren
30-04-2010, 05:32 AM
எனக்கு ஒன்னு... எனக்கு ஒன்னு...
குண்டா இருந்தாலும் பரவாயில்ல... ஹிஹி

எப்படி இருந்தாலும் பரவாயில்லை, கிடைச்சாபோதும் என்ற நிலமைக்கு வந்துவிட்டீர்களா? நாராயணா!!!!

மதி
30-04-2010, 05:33 AM
எப்படி இருந்தாலும் பரவாயில்லை, கிடைச்சாபோது என்ற நிலமைக்கு வந்துவிட்டீர்களா? நாராயணா!!!!
:D:D:D:D
:icon_ush::icon_ush::icon_ush:
:eek::eek:
:traurig001:

mania
30-04-2010, 10:08 AM
எப்படி இருந்தாலும் பரவாயில்லை, கிடைச்சாபோதும் என்ற நிலமைக்கு வந்துவிட்டீர்களா? நாராயணா!!!!

அதான் பேரிலேயே சொல்லியிருக்காரே.....:rolleyes::D:D

அன்புடன்
மணியா:D:D

மதி
30-04-2010, 10:09 AM
அதான் பேரிலேயே சொல்லியிருக்காரே.....:rolleyes::D:D

அன்புடன்
மணியா:D:D
அதான் தலை... :D:D

அய்யா
02-05-2010, 07:19 AM
மணி மணியா பதிவு போடறதாலதான் மணியான்னு பேரோ!

:)

பால்ராஜ்
02-05-2010, 12:10 PM
எல்லாமே செட் அப் தானா என்று தோன்றுகிறது...!