PDA

View Full Version : ரத்த விருத்திக்கு



arun
11-03-2010, 03:21 AM
மன்ற நண்பர்களுக்கு வணக்கம்

உடலில் ரத்தமே இல்லை என்று சொல்கிறார்கள் ரத்த விருத்திக்கு என்னென்ன காய்கறிகள் பழங்கள் சாப்பிடலாம்

உணவு முறைகளை சொன்னால் கூட நலமாக இருக்கும்

நன்றி

Akila.R.D
11-03-2010, 03:37 AM
ஆப்பிள் சாப்பிட்டால் உடம்பில் நன்றாக இரத்தம் ஊறும்..

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் தினமும் ஒரு சொட்டு இரத்தம் ஊறும்...

காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்திகரிக்கப்படும்

கீரை வகைகளை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்...

இரவில் பாலுடன் பேரிச்சம்பழத்தை சாப்பிட வேண்டும்...

வெற்றி
11-03-2010, 10:14 AM
என்ன ரத்தமே இல்லையா ? :)
இரத்த சோதனை முதலில் எடுக்கவும் , முடிந்தால் முழு உடல் பரிசோதனை செய்யவும் அந்த ரிப்போர்ட்டை மருத்துவரிடம் காண்பித்தால் அவர் நல்ல தீர்வு சொல்வார் ( இரும்பு சத்து மாத்திரைகள் (அ) சில விட்டமின் மாத்திரைகள் பரிந்துரைப்பார் )
என் பரிந்துரைகள்
1) உலர் பழங்கள்
2) (நீங்கள் அசைவம் எனில் ) கருவாடு
3) முருங்கைகாய் , மற்றும் முருங்கைக்கீரை
4) உணவில் நல்லெண்ணை அதிகம் சேர்த்துக்கொள்ளவும்
5)வாரம் ஒரு முறை பப்பாளி
6) தினமும் ஒரு ஆப்பிள்
மற்றும் Akila.R.D சொன்ன திர்வுகளும்....

arun
12-03-2010, 09:04 AM
தகவல்களுக்கு நன்றி மொக்கசாமி மற்றும் அகிலா

ஆப்பிள் மற்றும் பாலை ஏற்கனவே நான் சாப்பிடுகிறேன்

aren
12-03-2010, 09:56 AM
பீட்ரூட் நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பால்ராஜ்
13-03-2010, 06:18 AM
உடலில் ரத்தமே இல்லை என்று சொல்கிறார்கள்
உடலில் இரத்தமே இல்லை என்றால் ஆவிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் அர்த்தம்..

இரத்தம் இல்லாமல் வாழ்க்கை இல்லை..

இருப்பதை வைத்து எவ்வளவு சிற்ப்பாக வாழ முடியும் ..! என்ற தேடலே சிறப்பாக இருக்க முடியும்..:icon_ush::icon_ush::icon_ush:

arun
16-03-2010, 08:41 AM
உடலில் இரத்தமே இல்லை என்றால் ஆவிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் அர்த்தம்..

இரத்தம் இல்லாமல் வாழ்க்கை இல்லை..

இருப்பதை வைத்து எவ்வளவு சிற்ப்பாக வாழ முடியும் ..! என்ற தேடலே சிறப்பாக இருக்க முடியும்..:icon_ush::icon_ush::icon_ush:

ஓ திருத்தி கொள்கிறேன் உடலில் போதிய அளவு ரத்தம் இல்லை என்று சொல்கிறார்கள் !!

arun
16-03-2010, 08:42 AM
பீட்ரூட் நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நன்றி ஆரென் வேறு ஏதேனும்??

aren
16-03-2010, 09:39 AM
மன்றத்தின் மருத்துவர் இளசு அவர்கள் வந்து அழகாக எடுத்துச் சொல்வார் எது நல்லது என்று, அதுவரை காத்திருப்போம்.