PDA

View Full Version : இணையா இரு உள்ளங்கள்sofi
10-03-2010, 09:58 PM
http://lh4.ggpht.com/_E7uVT_yYgTs/Sy5iOMd5X6I/AAAAAAAABWU/k5IeB_vXv_w/s400/2136410242_e08720b6c4.jpg
ஈராறு வருடங்கள் கடந்த
போதும் வாழ்ந்தது பாதி
வாழாத மீதி நாட்களோடு
காலங்கள் கரைகின்றன..!!
வாழ்ந்த நாட்களை விட
வாழ்ந்தும் வாழாத நாட்களே அதிகம் ..!!

பல ஆண்டுகளின் நினைவுகளை
இந்நாள் எனக்கு நினைவு படுத்துகையில்
அந்த நினைவுகளை மீட்டி பார்க்கையில்
மாறாத வேதனை மட்டுமே ..!!உன்னோடு பேசி திரிந்த நாட்கள் ..
உன் கை பிடித்து திரிந்த நாட்கள் ..
ஏன் உன் மடியில் எனை மறந்து துங்கிய நேரங்கள் ..
இப்படியான என் பல சந்தோசங்களை ..
காரமான .......
சந்தேகமான ...வார்த்தையால் கரைத்து விட்டாய் ..!!

இருள் படிந்த தனிமைகளையும்
நினைவுகளின் வலிகளையும்
இன்றைய நாட்காட்டி காட்டிய போது
இன்று என் விடிந்தது என்று
நினைக்க தோன்றுகின்றது ..
நேற்றோடு என் வாழ்க்கை
விடியாமல் இருந்து இருக்க கூடதா..??

http://farm4.static.flickr.com/3033/2564694531_442a7852f4.jpg

ரயில் தண்டவாளம் போல் நம் வாழ்கை
சொல்லியும் ...
சொல்லாமலும் யாரும் புரியா வாழ்கை இது .

விழியின் ஒளி பாய்ச்சி
பாழான வாழ்க்கை
பழுது பார்க்கப் பட்டுக் கொண்டு
இருக்கிறது உன்னால்!!

நான் நினைப்பது ஒரு கரையை..
அது இரு கரையாய் செல்ல ..
நடுவில் நுரையாய் நரைத்து ஓடுகிறது வாழ்கை..!!
ஒன்று சேரா இரு நதிகளை..
இன்றும் ஒன்று சேரா ..
இரு உள்ளங்களாய் நாம் ..!!

http://fromgrandmaskitchen.com/boilingpoint/wp-content/uploads/2009/03/broken_heart.jpg

என்னவன் விஜய்
10-03-2010, 10:49 PM
உங்கள் கவிதையின் கரு, மற்றும் அதற்க்கு பதிந்துள்ள படங்கள், அவைகளின் வசனம் என அனைத்தும் அருமை.

கவிதையின் முடிவு... கொஞ்சம் வலிக்கின்றது.

அக்னி
11-03-2010, 06:55 AM
ஒவ்வொரு நாட்களின் விடியல்களும்
கடந்துபோன நாட்களாய் விடிந்தால்,
சந்தோஷத்தோடு சண்டையிட்டுச்
சோகங்கள்தான் ஆக்கிரமிப்புச் செய்யும்...

விடியல் என்பதே,
காலம் பிரசவிக்கும்
புதுக்குழந்தை தானே...
இந்தக் குழந்தையிலும்
சோகத்தைப் பச்சைகுத்தி
நிரந்தரமாக்கவேண்டுமா...

நினைவுநாட்களை
மறந்திடக்கூடாதுதான்...
வேதனை வருவதும்
தவிர்க்க முடியாதுதான்...
தவிர்க்கவும் கூடாதுதான்...

ஆனால்,
அவை முழுமையாக
எம் வாழ்நாளில் ஒருநாளை
ஆக்கிரமித்திட அனுமதித்திடலாகாது...

நினைவோடு வாழ்வது தப்பில்லை.
நினைவோடு வாழாவெட்டியாய் வாழ்வது தப்பு.
தப்ப வழிதேடாமற்போவதும் நம் தப்பு.

பூமகளின் நினைவுவெட்டிக்கு ஏங்கும் உறைந்த நிமிடம்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13339) கவிதை நினைவுக்கு வருக்கின்றது...

தண்டவாள வாழ்க்கை
கவிதைக் கருவிற்குச் சிறப்பான பொருந்துகை.
பிரியாமலும் இணையாமலும்...
என்ற கவிக்கருவுக்கு இதனைவிடப் பொருத்தமாய் வேறேதும் இல்லை என்பேன்.

முதற்பத்தியில், கரைந்துவிட்ட காலங்கள், கரைந்துகொண்டிருப்பதாக,
நான்காம்பத்தியில், ஏன் என்பது என் என
சில தடுமாறல்கள், தட்டச்சுத் தவறுகள் ஆங்காங்கே...
பாரதி அண்ணாவின் சந்தி இலக்கணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13410) ஒருமுறை வாருங்களேன்.

நீங்கள் அறிந்தோ அறியாமலோ,
கவிதை முழுவதும் வாழ்க்கை வாழ்கை செய்கின்றது.
கவிதையில் மட்டும் வாழ்கை போதுமா... வாழ்க்கையில் வேண்டாமா வாழ்கை...

இத்தனைகால விடியல்களும்
உங்களிலும் விடியல் காண வந்து ஏமாந்து மறைந்துவிட்டன.
இனிவரும் விடியல்களாவது ஏமாறாதிருக்கட்டும்.

ஆதி
11-03-2010, 07:19 AM
இன்று காலை ஜெயா டீவியில் "காத்திருந்த கண்கள்" படத்தில் கவியரசர் எழுதிய பாட்டை கேட்டேன்..

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே
ஓடம் நதியினிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியே
ஓடம் நதியினிலே..

ஆசை எனும் மேடையிலே
ஆடிவரும் வாழ்வினிலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே..
ஓடம் நதியினிலே..

கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்தபின்னே
உயிர் இருந்தும் பயனில்லே..
ஓடம் நதியினிலே..

உங்கள் கவிதையை வாசித்ததும் ஏனோ இந்த பாடல்தான் நினைவுக்கு வந்தது..

இன்னொரு விசயமும்.. இந்த பாடலை எழுதி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற பின் கண்ணதாசன் நினைத்தாராம்..

"ஓடம் நதியினிலே.. ஒருத்தி மட்டும் விதி வழியே"


என்று எழுதி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று.. உங்கள் கவிக்கும் இது பொருந்தும்..

----------------------


ஆதரவாய் ஆயிரம் பேர் அருகிருக்கும் போதும், நிராதரவாய் தான் உணர்வோம் நேசித்த ஒருவர் நம்மை நிராகரிக்கும் போது..

நிர்கதியின் நிழலில் வாழ்க்கை இருட்டாகும் முன் உங்களை திரட்டி சேகரித்துக் கொள்ளுங்கள்..

govindh
11-03-2010, 08:06 AM
கவிதைக்குப் பொருத்தமானப் படங்கள்..
சோதனையான வார்த்தைகளால்..காதலர்களின்..
வேதனைகள்...கூடும்..
இதயம்..நொறுங்கும்..
வாழ்க்கையே..வலிக்கும்.
ஏன்..விடிகிறது...? என எண்ணத் தோன்றும்...!
அருமை...பாராட்டுக்கள்..

சிவா.ஜி
11-03-2010, 08:16 AM
காதல் வலியைச் சொல்லும் பிள்ளை வரிகள், வலியைத் தாங்கிய வார்த்தைகளில்....கவிதையைக் காணவில்லை....

ஆறுதல்கள்.

Ravee
11-03-2010, 02:30 PM
சோபிமா , அண்ணா உனக்கு எத்தனையோ முறை சொன்னது தான் இது ,பாலச்சந்தரின் படத்தில் வரும் எனக்கு பிடித்த வரிகள் , கவலை என்னும் கூழாங்கல்லை கண்ணுக்கு அருகில் வைத்து பார்த்தால் ,பாறங்கல்லை விட பெரிதாய் தோன்றும் .அதை தூர எறிந்து விட்டு பார். உனக்காக வாய்ப்புக்களுடன் புதிய உலகம் காத்து இருக்கும். காதல் தோல்விகளும் கல்யாண ஏமாற்றங்கள் மட்டும் ஒருவரின் வாழ்க்கைக்கு முடிவாகாது . அடுத்த சந்ததி உன்னை கை தூக்கி விட காத்து இருக்கிறது. நம்பிக்கை வை வாழ்க்கையில் .வானமும் வசப்படும்.

Ravee
11-03-2010, 02:43 PM
வலியைத் தாங்கிய வார்த்தைகளில்....கவிதையைக் காணவில்லை....

என் தங்கையின் வலி ஊமை வலி , அதில் உணர்வுகள் அதிகம் . அவளின் கவிதையை நான் வரிகளாக பார்க்கவில்லை. அவளுக்கு இது ஒரு வடிகாலாய் பார்க்கிறேன் . நாங்கள் எல்லாம் ஒரு மரத்து பறவைகள் . ஒவ்வொருவர் உள்ளத்திலும் பல ஊமைகாயங்கள் . எங்களுக்கு இணையம் ஒரு வடிகால் .

மன்றம் ஒரு வாய்ப்பு .....வாழ்வை மீண்டும் வாழ்ந்து பார்க்க .

அக்னி
11-03-2010, 03:12 PM
காதல் தோல்விகளும் கல்யாண ஏமாற்றங்கள் மட்டும் ஒருவரின் வாழ்க்கைக்கு முடிவாகாது .
:icon_b: நிதர்சனம்...

இதற்கு முன்னும் இதற்குப் பின்னும் வாழ்க்கையில் எவ்வளவோ உண்டு.
முடிவு தொடக்கத்தின் ஆரம்பமன்றோ...

அமரன்
11-03-2010, 09:52 PM
சோபி..

நாளான புண்ணில் சீழ் கட்டிக் குமுறுவதை விட உடைந்து சீழ் வடிந்திடல் சுகமே. இந்தக் கவிதை அந்த சுகத்தை உங்களுக்குத் தந்திருக்கும்.

நினைவு ஒரு வீணை..
நாங்கள் மீட்டும் விரல்கள்.
சுகராகம் இசைப்போம்.

sofi
13-03-2010, 09:30 PM
நன்றி விஜய் உங்கள் கருத்துக்கு ...
கசப்பான சில அனுபவம் ஆனதினால் வலியோடு முடித்து விட்டேன் ..நன்றி

sofi
13-03-2010, 09:56 PM
.
பாரதி அண்ணாவின் சந்தி இலக்கணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13410) ஒருமுறை வாருங்களேன்.

நீங்கள் அறிந்தோ அறியாமலோ,
கவிதை முழுவதும் வாழ்க்கை வாழ்கை செய்கின்றது.
கவிதையில் மட்டும் வாழ்கை போதுமா... வாழ்க்கையில் வேண்டாமா வாழ்கை...

ரொம்ப நன்றி அக்னி என்னோட கவிதைய விட நீங்க எழுதிய வரிகள் மிகவும் அருமை .. உங்கள் கவிதை தான் என்னோட கவிதைக்கு அழகு சேர்த்து இருக்கு .... அக்னி ரொம்ப பெருமையா இருக்கு நான் தமிழ் மன்றத்தில் இணைந்ததை நினைத்து .. உண்மையிலே நான் தமிழ் தட்டச்சு செய்வது ஓர்குட் தான்
அதனால் என் எழுத்து பிழை எனக்கு தெரிய வில்லை ..நீங்க சொன்னதின் பின்பு தான் உற்று நோக்கினேன் ..மீண்டும் நன்றிகள் ...வாழ்க்கை கூட செரியா எழுதவில்லை என்று நினைக்கும் போது மிகவும் வருத்தம் தான் :(:mad:
.கண்டிப்பா .நீங்கள் சொன்ன பகுதிகளை பார்வையிடுகிறேன் :icon_b:

sofi
13-03-2010, 09:58 PM
"ஓடம் நதியினிலே.. ஒருத்தி மட்டும் விதி வழியே"
என்று எழுதி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று.. உங்கள் கவிக்கும் இது பொருந்தும்..நன்றி ஆதன் .. என் கவிதை உங்கள் நினைவில வைத்து இருந்ததுக்கு ... ஆமா அருமையான பாடல் தான் ....

sofi
13-03-2010, 10:01 PM
கவிதைக்குப் பொருத்தமானப் படங்கள்..
சோதனையான வார்த்தைகளால்..காதலர்களின்..
வேதனைகள்...கூடும்..
இதயம்..நொறுங்கும்..
வாழ்க்கையே..வலிக்கும்.
ஏன்..விடிகிறது...? என எண்ணத் தோன்றும்...!
அருமை...பாராட்டுக்கள்..

நன்றி உங்கள் கருத்துக்கு ..காதலில் வலிகள் கசப்பானது

sofi
13-03-2010, 10:04 PM
காதல் வலியைச் சொல்லும் பிள்ளை வரிகள், வலியைத் தாங்கிய வார்த்தைகளில்....கவிதையைக் காணவில்லை....
ஆறுதல்கள்.
நன்றி சிவா ஜி ..இனி வரும் காலங்களில் தமிழ் மன்றம் மூலமாக கவிதை எழுத கற்று கொள்கிறேன் .. மீண்டும் நன்றி

sofi
13-03-2010, 10:36 PM
என் தங்கையின் வலி ஊமை வலி , அதில் உணர்வுகள் அதிகம் . அவளின் கவிதையை நான் வரிகளாக பார்க்கவில்லை. அவளுக்கு இது ஒரு வடிகாலாய் பார்க்கிறேன் . நாங்கள் எல்லாம் ஒரு மரத்து பறவைகள் . ஒவ்வொருவர் உள்ளத்திலும் பல ஊமைகாயங்கள் . எங்களுக்கு இணையம் ஒரு வடிகால் .
மன்றம் ஒரு வாய்ப்பு .....வாழ்வை மீண்டும் வாழ்ந்து பார்க்க .

அண்ணா ரொம்ப நன்றி அண்ணா .. :pஉங்களுக்கு நன்றி சொல்ல என்னோட அகராதியில் வார்த்தை இல்லை அண்ணா ..:p என்னமா பேசுறீங்க அண்ணா ..:icon_b:ஆம அண்ணா நாங்கள் பேசும் ஊமைகள் .. ம் அண்ணா பல தடவை நம்பிக்கை வைத்து தோல்வி கண்டவள் ..
எனக்கு இனியும் நம்பிக்கை இல்லை என் வாழ்கையில்

Ravee
14-03-2010, 03:17 AM
எனக்கு இனியும் நம்பிக்கை இல்லை என் வாழ்கையில்

இது பல முறை கேட்ட வார்த்தை வேறு ஏதாவது சொல் சோபி

sofi
23-03-2010, 05:04 PM
எனக்கு இனியும் நம்பிக்கை இல்லை என் வாழ்கையில்

இது பல முறை கேட்ட வார்த்தை வேறு ஏதாவது சொல் சோபி

உங்கள் ஆதரவுக்கு நன்றி ..!:)

இனியவள்
23-03-2010, 06:24 PM
சோகம் என்னும் பிணியில்
சிக்கித் தவித்திடும் வாழ்க்கைக்கு
மருந்தாய் நம்பிக்கை தெளித்திடு
உன் வாழ்வும் சிறப்புறும்

வாழ்க்கை வாழ்வதற்கே
முடிந்ததை நினைத்து
இருப்பதை முடிக்காதே
வாழ்ந்து பார் உனக்காய்
சந்தோஷ வானம்
பரந்து கிடக்கின்றது இந்த
பூமியிலே

அழகிய கவி ஆனால் சோகமயமாய் வாழ்த்துக்கள் சோபி.. கவலை கலையட்டும் இன்பம் சூழட்டும் :)