PDA

View Full Version : பூங்கா



simariba
10-03-2010, 12:54 AM
அதிகாலை நேர
விளக்கொளியில் பூங்கா...

எடை குறைக்க
உடல் காக்க
நடை போடும்
அரை நூறு மனிதர்கள்
கூடவே நாய்க்குட்டிகள்

உடற்பயிற்சி கூடத்திலும்
கத்துக்குட்டி பயில்வான்கள்

நம்மால் இப்படி
இந்நேரத்தில் இருக்கவே
வாழ்நாளில் முடியாதோ?

அலுவலகப் பேருந்தின்
ஜன்னல் வழியே
ஏக்கத்துடன்...

பல ஆயிரம் டாலர்கள்
ஊதியம் பெரும்
உழைப்பாளி...

govindh
15-03-2010, 06:34 PM
நம்மால் இப்படி
இந்நேரத்தில் இருக்கவே
வாழ்நாளில் முடியாதோ?

உண்மையான ஏக்கம் தான்..

கீதம்
15-03-2010, 10:34 PM
பல ஆயிரம் டாலர் ஊதியம் பெறும் உழைப்பாளியைக் கண்டு அவர்களும் இப்படி ஏங்கக்கூடும்.

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

(உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது?)

குணமதி
19-03-2010, 06:24 PM
திரு வேறு, தெளிந்த மகிழ்ச்சியும் வேறு தானோ?

அமரன்
20-03-2010, 12:09 AM
சன்னாலோரத்தில்
கண்ணைப் போட்டார்கள்
பூங்காப்பாலகர்கள்.

வயிற்றுப் பேழைக்குள்
செரிக்காத பழைய நினைவுகளை
வாயிலெடுத்து அரைத்தார்கள்..

காலை வேளைப் பூசைக்கு
தப்பித்து ஓடிய ஆண்டவர்கள்
பெரு மூச்சு இரைத்தார்கள்..

ஊதிய ஊழியில்
விழிகளை அலைய விட்டவர்கள்
ஊதிய புகைகளில்
தாமும் கரைந்தார்கள்..

என்னதான் சொல்லுங்க..
அக்கரைக்கு இக்கரைப் பச்சை.

பா.ராஜேஷ்
20-03-2010, 04:20 PM
உண்மைதான், அமரன் சொல்வது போல் அக்கரைக்கு இக்கரை பச்சை. பாராட்டுக்கள் சிமரிபா

simariba
08-04-2010, 01:10 AM
மறுமொழிந்த நண்பர்களுக்கு நன்றி... கீதம் என் பெயர் அபி.

Akila.R.D
08-04-2010, 04:34 AM
//அலுவலகப் பேருந்தின்
ஜன்னல் வழியே
ஏக்கத்துடன்...

பல ஆயிரம் டாலர்கள்
ஊதியம் பெரும்
உழைப்பாளி//

சில ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்குபவர்கள் கூட அலுவலக பேருந்தில் இருந்து ஏக்க பார்வையுடன் பார்க்கும் காட்சி தான் இது...

வாழ்த்துக்கள் அபி...

simariba
08-04-2010, 06:50 AM
நன்றி அகிலா.

கலையரசி
08-04-2010, 09:27 AM
அமரன் அவர்கள் சொன்னது போல இக்கரைக்கு அக்கரைப் பச்சை.
பாராட்டுக்கள் அபி.

பா.சங்கீதா
12-04-2010, 04:48 AM
ஏக்கத்தை வெளிபடுத்தும் கவிதை.....
வாழ்த்துகள் அபி....

simariba
12-04-2010, 08:38 AM
நன்றி சங்கீதா.