PDA

View Full Version : வெள்ளிக்கிழமை



Ravee
09-03-2010, 11:00 PM
வெள்ளிக்கிழமை






என்னங்க கொடுமை .... நம்ம வீட்டில மட்டும் பவர் இல்லைங்க ...
இங்க ஒரு வேலையும் ஆகல ...
போட்டது போட்டபடி கிடக்கு ...
இவனுங்களுக்கு நாள் கிழமை கிடையாது
தினப்படி ரெண்டு மணி நேரம் அறிவிச்சு பவர் கட் பண்ணுறாங்க, அப்புறம் உதிரியா ஒரு அரைமணி நேரம் ... இது போக நம்ம வீட்டுக்கு மட்டும் இப்படி போஸ்டல்ல வேற புடுங்கிட்டு இழவு கொட்டுது .
வெள்ளிக்கிழமையும் அதுவுமாக மங்களம் மங்களமாக பேசிக்கொண்டு இருந்தாள் அவள் கணவனிடம் .

நாளைக்கு வேற இரண்டாவது சனிகிழமை
வேலைக்கு வருவாங்களா வரமாட்டாங்களான்னு தெரியாது
பார்த்து வயர் மேனை கூட்டியாங்க....
வரும் போது சாதம் பார்சலா வாங்கியாங்க
நான் ஏதும் செய்யலா ...
மறுமுனையில் முனங்கலுடன் அவள் கணவன் போனை துண்டித்தான் .

மங்களத்துக்கு முப்பத்தி ஐந்து வயசு இருக்கும். ரொம்பவும் இளகிய மனம் படைத்தவள் . குழந்தைகள் கிடையாது . அவள் கணவன் பெயர் பார்த்தசாரதி . தேசிய வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்க்கிறார் . .

பொழுது போகாமல் வாசலுக்கு வந்த மங்களம், பங்கஜம் மாமி வீட்டில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு வேகமாக அங்கே போனாள். அங்கே பத்மா மாமியாருடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள். பங்கஜம் மாமி சோபாக்கு அருகில் உட்கார்ந்து விசும்பிக்கொண்டு இருந்தாள்.

இந்தா பாரு உன் ஆட்டத்தை எல்லாம் வேற எங்கயாவது வச்சுக்கோ , என் பிள்ளை வரட்டும் என்ன செய்யுறேன் பாரு.

உங்களால என்ன செய்ய முடியுமோ செய்யுங்க ,இன்னிக்கு நானா இல்லை நீங்களான்னு ஒரு முடிவு பார்த்துடுறேன்.

ஓடுகாலி கழுதை என் அண்ணன் பொண்ணுதானே, பாவம்ன்னு உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் பாரு என் புத்திய செருப்பாலே அடிக்கணும் .

இந்தா பாருங்க என் பழைய வாழ்க்கைய எல்லாம் பேசி என்னை கேவலப்படுத்தாதிங்க. நான் அவன் கூட போய் இருந்தா கூட நல்லாதான் இருந்துருப்பேன். எங்க அப்பா காசுக்கு ஆசை பட்டு நாடகம் ஆடி என்னை உங்க பிள்ளை தலைல கட்டி வச்சுடிங்க. நல்ல வேளை எனக்கு இன்னும் பிள்ளை இல்லை. பொறந்திருந்தா இது யாருக்கு பொறந்ததொன்னு சொல்லி இருப்பிங்க .

ஏண்டி நீ செய்த காரியத்தை நியாயப்படுத்தி பேசுறியா ...XXXXXX... என் குடும்பத்தை ஒழிக்க வந்த XXXXX.....XXXXXX மகளே ...XXXXX..

இத்தனை வார்த்தை பேசுறீங்களே நீங்க உங்க புருஷன் இல்லாம பதினெட்டு வருஷம் எப்படி இருந்தீங்க .
நானும் பேசுவேன்.........XXXXXXX..... நடுரோட்டுல நின்னு பேசுவேன்.

பங்கஜம் மாமி மங்களத்தை அழுதபடியே பார்த்தா ... வாடி கொழந்த இந்த பாவி எப்படி எல்லாம் பேசுறா ...
என்னாலே முடியலடி கொழந்தே ... நான் புருஷன் இல்லாதவாதான் . அதுக்காக இப்படி எல்லாம் இல்லை
இதை கேட்கிறவா என்னையும் தப்பாத்தானே பார்ப்பா ....

மாமி விசும்பல் அடங்க சிறிது நேரம் ஆனது .

விடுங்க மாமி இது எல்லாம் கதைதானே , இதை எதுக்கு சீரியஸா எடுத்து கொள்றீங்க என்றாள் மங்களம்.

இப்படி எல்லாம் எழுதி என்னை போல வயசான ஆத்மாக்களை எதுக்கு அழவிடுறாங்க தெரியலையே ... பகவானே காப்பாத்து ... மாமி பேசி கொண்டு இருக்கும் போதே குடும்ப விளக்கு சீரியல் முடிந்தது.

மங்களம் டிவியை அணைக்கும் போது அவள் வீட்டுக்காரரின் குரல் வாசலில் கேட்டது .

மங்களம் கதவைத்திறந்து போட்டு எங்க போய் தொலஞ்ச ... ஒரு நாள் சீரியல் பார்க்காட்டி குடியா முழுகி போகும். வாய்ல நல்லா வருது. வந்து சாதத்தை வாங்கிக்கோ என்று .

வரேன் மாமி , திங்கள் கிழமை பாருங்க மாமியாக்காரி அவள் பிள்ளைட்ட சொல்லி அந்த பிடாரியை ஒருவழி பண்ணிடுவா ... கவலை படாம இருங்க என்று போனாள்.

ம்ம் இன்னும் ரெண்டு நாள் இருக்குடி அதுக்கு . அதுவரை என் ஜீவன் இருக்குமோ என்னவோ ... பங்கஜம் மாமி புலம்பியவாறே ஒருக்களித்து படுத்தாள்.

aren
10-03-2010, 12:54 AM
நானும் ஏதோ என்னவோ என்று படித்துக்கொண்டிருந்தேன். வடிவேலு பட்ட அவஸ்தையை என்னையும் பட வைத்துவிட்டீர்கள்.

கதை நறுக்கென்று வந்திருக்கிறது, பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள்.

Ravee
10-03-2010, 12:59 AM
நானும் ஏதோ என்னவோ என்று படித்துக்கொண்டிருந்தேன். வடிவேலு பட்ட அவஸ்தையை என்னையும் பட வைத்துவிட்டீர்கள்.

கதை நறுக்கென்று வந்திருக்கிறது, பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்கள்.

இந்த பாராட்டை எப்படி எடுத்துகொள்வது என்று தெரியவில்லை , பயமாய் இருக்கிறது ஆரேன்....:lachen001: :lachen001: :lachen001:

கீதம்
10-03-2010, 05:38 AM
அத்தனையும் உண்மைதான். சில பெண்களுக்கு சனி ஞாயிறு வருவதே வெறுப்பாய் உள்ளது. அந்த அளவுக்கு மெகா தொடர்கள் அவர்களை ஆக்கிரமித்துள்ளன. நாம் சொல்லித்திருத்த முடியாது. தானாய் மாறினால்தான் உண்டு.

நச்சென்ற கதைக்கு பாராட்டுகள் ரவீ அவர்களே.

govindh
10-03-2010, 07:37 AM
சீரியல்...மெகா தொடர்கள்..சிந்தையினை சிதைய வைக்கும் மகா தொல்லைகள்..
பாராட்டுக்கள் ரவி.

சிவா.ஜி
10-03-2010, 07:51 AM
உண்மையைத்தான் சொல்லியிருக்கீங்க....ஆனா, ஒரு முழுமை இல்லியே ரவி. ஒரு வங்கி அதிகாரியோட மனைவியாகட்டும், அந்த வங்கி மேலாளர் ஆகட்டும், பேசுறதுல அந்த வர்க்கத்துக்கான டச் இல்லியே...

டி.வி.சீரியல்ன்னு நினைக்க வெக்காம, கொஞ்சம் சஸ்பென்ஸைக் காட்டியிருக்கிறது நல்லாருக்கு.

பாத்திர அமைப்புல மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க. இன்னும் நிறைய எழுதுங்க. வாழ்த்துக்கள்.

Ravee
10-03-2010, 08:05 AM
ஒ அதுவா சிவாஜி என் நண்பர் ஒருத்தர் இருக்கார் , அவர் ஆபிஸ் கோவத்தை எல்லாம் வீட்டில்தான் காண்பிப்பார். ஆனால் அதை பெருசா யாரும் கண்டுக்க மாட்டாங்க.

உங்கள் அறிவுறுத்தலை நினைவில் கொள்கிறேன்.

Ravee
10-03-2010, 08:07 AM
சீரியல்...மெகா தொடர்கள்..சிந்தையினை சிதைய வைக்கும் மகா தொல்லைகள்..
பாராட்டுக்கள் ரவி.

கோவிந்த் சத்தமா சொல்லாதிங்க, இப்பத்தான் ரெண்டு கொலை மிரட்டல் வந்து இருக்கு....:lachen001: :lachen001: :lachen001: