PDA

View Full Version : ஒரே ஒரு எழுத்துப்பிழை

Ravee
09-03-2010, 09:48 PM
ஒரே ஒரு எழுத்துப்பிழை

http://www.ragtag.net/sketches/wp-content/uploads/2006/11/raft_nathan_left_behind.jpg

ஒரே ஒரு எழுத்துப்பிழை
என் காதலை புரட்டி போட்டது
அந்த அழகுப் பெண் அதை உண்மை என்று
என்னை விட்டுப் போனாள்

என் வாழ்க்கையில் மன்னிக்க மாட்டேன்
அந்த ஒரு தருணத்தை
வெகுநாள் கழித்து
இன்று அவளை பார்த்தேன்

நான் அன்று சொல்லிய வார்த்தை
நிஜம் தானோ !!!
அது என்ன வார்த்தை
கேளுங்கள் அந்த கொடுமையை

அன்பே உன் அழகு முகம்
மந்தியை போல இருக்கிறது
என்னை பார்த்து ஒரு முறை சிரி
அதுவே நம் காதலின் திறவுகோல் .

மதி மந்தியாக
மறுத்தாள் மறந்தாள் அந்த மாது
பிள்ளையார் பிடிக்கப் போய்
அது குரங்காய் முடிந்தது

http://www.animationbuddy.com/Animation/Animals/Primates_and_Monkeys/Monkey_dance.gif http://www.animationbuddy.com/Animation/Animals/Primates_and_Monkeys/Monkey_dance.gif http://www.animationbuddy.com/Animation/Animals/Primates_and_Monkeys/Monkey_dance.gif

ம்ம் ... ஒரே ஒரு எழுத்துப்பிழை
என் காதலை புரட்டி போட்டது
வாழ்க்கையில் என்னை குனிய வைத்து
கும்மி அடித்தது இந்த குரங்கு

கீதம்
09-03-2010, 11:01 PM
நானொரு வானரம்; என் கண்களுக்கு நீயொரு மந்தி!
நானொரு ஆகாயம்; என் பார்வையில் நீயொரு மதி!

இப்படி மேற்கொண்டு எதையாவது பேசி பிழையைச் சரி கட்டியிருக்கலாமே நண்பரே!

Ravee
09-03-2010, 11:47 PM
நானொரு வானரம்; என் கண்களுக்கு நீயொரு மந்தி!
நானொரு ஆகாயம்; என் பார்வையில் நீயொரு மதி!

இப்படி மேற்கொண்டு எதையாவது பேசி பிழையைச் சரி கட்டியிருக்கலாமே நண்பரே!

ஆஹா இப்படி எடுத்துக்கொடுக்க ஆள் இல்லையே அப்ப. அக்கா இப்போதும் மோசம் இல்லை. அப்ப அப்ப இப்படி எடுத்துக் கொடுங்கள் .வீட்டில் அடி வாங்காமல் தப்பிச்சுக்குவேன்.

gans5001
10-03-2010, 07:45 AM
ரவி மனதில் பட்டதை எழுதி முடித்த பின் நீங்களே ஒரு முறை படித்துப் பாருங்கள். திருத்தங்கள் செய்த பின் மன்றத்தில் பதியுங்கள். அப்போது மட்டுமே கவிதைக்கான் வடிவம் வரும்.

வெறும் உரைநடை கவிதையல்ல.

கொஞ்சம் காரமான விமர்சனத்திற்கு மன்னிக்கவும்.

Ravee
10-03-2010, 08:15 AM
ரவி மனதில் பட்டதை எழுதி முடித்த பின் நீங்களே ஒரு முறை படித்துப் பாருங்கள். திருத்தங்கள் செய்த பின் மன்றத்தில் பதியுங்கள். அப்போது மட்டுமே கவிதைக்கான் வடிவம் வரும்.

வெறும் உரைநடை கவிதையல்ல.

கொஞ்சம் காரமான விமர்சனத்திற்கு மன்னிக்கவும்.

gans sir இது நகைசுவைக்காக பதிவிட்டது . குறை இருந்தால் பொறுப்பீர். வருத்தம் ஒன்றும் இல்லை . நக்கீரரை போல கட்டிக்காத்த மன்றத்தில் விதிகள் இருப்பதில் தவறிலேயே....:) :) :)