PDA

View Full Version : சாதனை நாயகன்...!

govindh
09-03-2010, 08:34 PM
*மகாராஷ்டிரா தந்த
மகாராஜன் நீ..!

*இந்தியத் தாய்க்கு..
தங்க மகுடம் சூட்டிய
இனிய மைந்தன் நீ..!

*ஒரு நாளில்..
குதூகலமாய்..
குவாலியரில்..
இரு சதம் அடித்து-
இரும்பு கோட்டை கட்டிய
விளையாட்டு வெறி சிங்கம் நீ..!

*உலகம் உனை கண்டு வியக்கிறது..!
ஊடகம் உன் புகழ் விளம்புகிறது..!

*கால் தொட்டு வணங்க
கவாஸ்கர் ஆவல்..
பேட்டிங் கடவுள்..என
புகழ் மலர் தூவல்.... !

*சச்சின்..ஒரு
சாதனை நாயகன்..!
நிச்சயம் - அதை
சரித்திரம் சொல்லும்..!

*உன் பெயரே..
அகிலத்தை வெல்லும்..!

பா.ராஜேஷ்
11-03-2010, 11:04 AM
நன்றாக எழுதி உள்ளீர்கள் கோவிந்த் ... பாராட்டுக்கள்.. ஆமாம், அதென்ன விளையாட்டு வெறி சிங்கம்!??

govindh
11-03-2010, 02:31 PM
நன்றி..பா.ராஜேஷ் அவர்களே..

பா.ராஜேஷ்
11-03-2010, 03:25 PM
விளையாட்டு வெறி சிங்கம்!?? பற்றி சொல்லவே இல்லையே?? ;)

govindh
11-03-2010, 04:16 PM
விளையாட்டின் மீது வெறி கொண்ட சிங்கம்..என பொருள்படும்படி கொள்ளலாம் அல்லவா..? சரி தானா..?
விளையாட்டு சிங்கம் எனச் சொல்வதை விட
"விளையாட்டு வெறி சிங்கம்"....எனக் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமென எண்ணினேன்..

ஓவியன்
16-10-2010, 01:04 PM
தங்கத்தின் விலையேறுவது போல், சச்சினின் சாதனைகளும் புகழும் ஏறிக் கொண்டே போகிறதே....

வாழ்த்துகள் கோவிந்த், விளையாட்டு வெறி சிங்கம் இரசித்தேன்.

அமரன்
16-10-2010, 05:00 PM
தங்கத்தின் விலையேறுவது போல், சச்சினின் சாதனைகளும் புகழும் ஏறிக் கொண்டே போகிறதே....

வாழ்த்துகள் கோவிந்த், விளையாட்டு வெறி சிங்கம் இரசித்தேன்.

:):):)

விகடன்
16-10-2010, 08:26 PM
வெறி சிங்கம்..
வித்தியானமான பார்வையில்..

கவிதை நன்றாக இருக்கிறது. அதிலும் மேற்படியான சொற்கள் இரசிக்கும்படி இருக்கிறது.

M.Jagadeesan
17-10-2010, 07:04 AM
"வெறிகொண்ட வேங்கை"- என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும்.
சிங்கத்தின் வாழ்க்கை சில நியதிகளுக்கு உட்பட்டது.பசித்தாலன்றி வேட்டையாடாது.வேட்டையாடும்போது முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே செல்லும். இதை"சிங்கநோக்கு" என்று சொல்லுவார்கள். யானைக்கு "மதம்" பிடிக்கலாம். நாய்க்கு "வெறி' பிடிக்கலாம். காட்டுக்கு ராஜாவான சிங்கம் நிதானம் தவறுவதில்லை.

ஓவியன்
17-10-2010, 08:33 AM
:):):)

என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்குது இங்கே...??? :sauer028: :sauer028: :sauer028:

பூங்குழலி
28-10-2010, 11:33 AM
உலகில் சிலர் கூறியவைகள் கீழே:

"என் மகன் சச்சின் போல் வர வேண்டும்" - பிரையன் லாரா

"நாங்கள் இந்திய அணிக்கு எதிராக தோற்கவில்லை. சச்சின் என்ற ஒரு மனிதரிடமே தோற்று விட்டோம்" - மார்க் டெய்லர்

"சச்சின் டெண்டுல்கர் இருக்கும் பிளேனில் நாங்கள் அவருடன் இருந்தால் எங்களுக்கு ஒரு கெடுதலும் நடந்து விடாது" - ஹசிம் அம்லா

"உலகில் இரு வகையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 1. சச்சின் டெண்டுல்கர். 2. அவரில்லாத உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களும்" - ஆன்டி ப்ளவர்

"நான் கடவுளை பார்த்து விட்டேன். அவர் இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் 4 வதாக பேட் செய்கிறார்" - மெத்யூ ஹய்டன்

"சச்சினின் பேட்டிங்கில் நான் என்னை காண்கின்றேன்" - டான் பிராட்மேன்

"உங்கள் குற்ற செயல்களை நீங்கள் சச்சின் பேட்டிங் செய்யும் போது செய்யுங்கள் ஏனென்றால் அப்போது தான் கடவுள் கூட அசந்திருப்பார் சச்சினின் பேட்டிங்கை பார்த்துக் கொண்டு" - ஆஸ்த்திரேலிய கிரிகெட் ரசிகர்கள்

இவைகளின் மூலம் நான் சச்சின் டெண்டுல்கரின் பெருமைகளை உணர்கிறேன்.

அரசன்
28-10-2010, 02:00 PM

உண்மையில் படிக்கும்போது மெய்சிலிர்த்து போகிறேன்! இத்துனை பெருமைகளையும் கொண்ட சச்சினின் தன்னடக்கம்தான் என்னே! என்னே!!
சச்சின் நம் நாட்டிற்கு கிடைத்தற்கரிய வரபிரசாதம்.

நன்றி பூமகள்!

சூறாவளி
28-10-2010, 02:55 PM
கோவிந்த் அவர்களின் கவிதை சச்சினின் பெருமைகள் கூறி இத்திரிக்கு பெருமை சேர்த்துள்ளார்..

வாழ்த்துக்கள் கோவிந்த்..

உலகில் சிலர் கூறியவைகள் கீழே:

"என் மகன் சச்சின் போல் வர வேண்டும்" - பிரையன் லாரா

"நாங்கள் இந்திய அணிக்கு எதிராக தோற்கவில்லை. சச்சின் என்ற ஒரு மனிதரிடமே தோற்று விட்டோம்" - மார்க் டெய்லர்

"சச்சின் டெண்டுல்கர் இருக்கும் பிளேனில் நாங்கள் அவருடன் இருந்தால் எங்களுக்கு ஒரு கெடுதலும் நடந்து விடாது" - ஹசிம் அம்லா

"உலகில் இரு வகையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 1. சச்சின் டெண்டுல்கர். 2. அவரில்லாத உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களும்" - ஆன்டி ப்ளவர்

"நான் கடவுளை பார்த்து விட்டேன். அவர் இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் 4 வதாக பேட் செய்கிறார்" - மெத்யூ ஹய்டன்

"சச்சினின் பேட்டிங்கில் நான் என்னை காண்கின்றேன்" - டான் பிராட்மேன்

"உங்கள் குற்ற செயல்களை நீங்கள் சச்சின் பேட்டிங் செய்யும் போது செய்யுங்கள் ஏனென்றால் அப்போது தான் கடவுள் கூட அசந்திருப்பார் சச்சினின் பேட்டிங்கை பார்த்துக் கொண்டு" - ஆஸ்த்திரேலிய கிரிகெட் ரசிகர்கள்

இவைகளின் மூலம் நான் சச்சின் டெண்டுல்கரின் பெருமைகளை உணர்கிறேன்.

உலக விளையாட்டு வீரர்கள் நம் சச்சின் மீது இத்தனை மதிப்பும் பெருமையும் வைத்துள்ளார்கள் என்பதை சரியான நேரத்தில் இங்கு கொண்டு வந்து பதிந்து மேலும் இத்திரியை சிகரத்துக்கு கொண்டு போய் விட்டீர்கள்,.. வாழ்த்துக்கள்.. பூமகள்..

ஆன்டனி ஜானி
28-10-2010, 03:05 PM
:icon_b: இப்படி பட்ட கவிதைகலெல்லாம் கிரிகட்டுல ஆர்வம் உள்ள நபர்கள் மட்டும் தான் எலுத வரும்........ ரெம்ப நல்லா இருந்து நன்றிகள்

xavier_raja
29-10-2010, 10:12 AM
சச்சினை பற்றி பிறர் கூற கேட்ட அத்தனை செய்திகைளையும் படிக்கையில் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.. மெய் சிலிர்கிறது.. இந்த மனிதர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெருமை அல்லவா?

govindh
14-11-2010, 10:02 AM
சச்சினின் பெருமைகளைப்
பகிர்ந்து கொண்டு....,
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி....!