PDA

View Full Version : விடை தேட வேண்டிய கேள்விகள்!



குணமதி
09-03-2010, 03:51 PM
விடை தேட வேண்டிய கேள்விகள்!


பிறந்ததிலிருந்து...

எத்தனை உறவுகள்!

தந்தை, தாய், அண்ணன், தம்பி, அக்கை, தங்கை!

மாமன், மாமி, அத்தை, மைத்துனன், மைத்துனி!

பெரியப்பா, பொரியம்மா, சிற்றப்பா,சித்தி!

தாத்தா, பாட்டி, சின்னத் தாத்தா, சின்னப்பாட்டி,
பெரிய தாத்தா, பெரிய பாட்டி, கொள்ளுத் தாத்தா, ....

இன்னும், இவர்களை விட நெருக்கமாக...

நட்புக் குழாம்!

இத்தனை பேரின் அன்பும் துணையும் இருந்தது உண்மை தானே!

இத்தனை பேரின் அன்பையும் துணையையும் பேணிக் காத்து...

ஆற்றிய அருஞ்செயல் - சாதனை - என்ன?

இவர்களில் பலருடன் அல்லது சிலருடன் இகல் ஏற்பட்டது ஏன்?

இதற்கு அவர்கள் மட்டுமே காரணமா?

இவ்வளவு துணையும் அன்பும் இருந்தும் வாழ்நாளை வீணாக்கு
கிறோமோ?

இந்த பிறப்பின் பயன்தான் என்ன?

உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டாவா?

விடை தேட வேண்டிய கேள்விகள்!

அக்னி
09-03-2010, 05:29 PM
பிறக்கும்வரைக்கும்
உறவுகள் தீர்மானிக்கப்படுவதில்லை.

பிறந்த கணத்திலேயே,
உறவுகளுக்குட் பொதிந்தவராகின்றோம்.

உறவு ஒரு விசித்திரச் சங்கிலி.
ஒரு கோர்வையில் பல கோர்வைகள்
இணைக்காமலே இணைந்துவிடும்.

ஒரு முறை ஏற்பட்ட இணைவு
முறித்து எறியப்பட்டாலும்
தடங்கள் தொக்கு நிற்கும்.

நம் பிறப்பில் எத்தனை உறவுகள்
மகிழ்கின்றன
என்பதிலும்,
நம் இறப்பில் எத்தனை உறவுகள்
கலங்குகின்றன
என்பதே,
நம் உறவினதும் வாழ்வினதும்
உண்மை இயம்பும் அளவுகோலாகும்...

இவை
விடை தேட வேண்டிய வினாக்களல்ல...
நாம் வாழும் வாழ்க்கையினால்,
விடை தேடி வரவேண்டிய வினாக்கள்...

நம் வாழ்க்கை அடுத்தவரை அழிக்காதவரைக்கும்,
நம் பிறப்பு பயன்மிக்கதே...

யதார்த்தக்கவி குணமதிக்குப் என் பாராட்டு...

குணமதி
11-03-2010, 03:11 PM
***நம் வாழ்க்கை அடுத்தவரை அழிக்காதவரைக்கும்,
நம் பிறப்பு பயன்மிக்கதே...**

ஆம். அடுத்தவர்க்கு ஊறு இழைக்காமல் வாழ்வதே ஓர் அருஞ்செயல் - சாதனை- தான்!

மிக்க நன்றி.

சிவா.ஜி
11-03-2010, 03:45 PM
இது கவிதையா.....கட்டுரையா...?

நல்லக் கேள்விகள்.