PDA

View Full Version : பேஸிக் எடிட்டரில் கூடுதல் வசதிகள்...!!சிவா.ஜி
09-03-2010, 03:04 PM
பேஸிக் எடிட்டரிலும், போல்ட் செய்வது, அண்டர்லைன், எழுத்து வண்ணம் போன்ற சில வசதிகளை இணைக்க முடியுமா? தமிழ் எழுத்துருமாற்றியை நிறுவ இயலாத எங்களைப் போன்றோருக்கு உபயோகமாக இருக்குமே.


தயவு செய்து,மன்ற நிர்வாகிகள் உதவ முடியுமா?

அமரன்
09-03-2010, 05:07 PM
முதலில் அந்த வசதிகள் இருந்தன சிவா. சில குறைபாடுகள் இருந்ததால் அவை நீக்கப்பட்டன. குறைகள் நீக்கிய வசதிகள் சேர்க்க முடியுமெனில் நீங்கள் கேட்டதும் கிடைக்கும். எனது விருப்பும் நிறைவேறும்.

கவனம் திருப்புகிறேன்.

இப்போதைக்கு தடிக்க வைக்க Ctrl+B, சாயவைக்க Ctrl+I , கீழ்க்கோடிட Ctrl+U போன்றவற்றைப் பயன்படுத்துங்கள் சிவா.

பாரதி
09-03-2010, 05:26 PM
அன்பு சிவா,

உங்கள் கண்ட்ரோல் பேனலில் இருந்து செய்யலாம் என்று எண்ணுகிறேன்.
User Control Panel ---- Edit options --- Miscellaneous options --- Message editor interface
அதில் இருப்பதை --- ENHANCED INTERFACE - FULL WYSIWYG EDITING என்ற தேர்விற்கு மாற்றவும்.

பின்னர் SAVE CHANGES என்ற பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும்.

இப்போது உங்கள் வினாவிற்கு விடை கிடைத்திருக்குமென்றெண்ணுகிறேன்.

அமரன்
09-03-2010, 05:34 PM
பாரதிண்ணா...

சிவா கேட்பது நேரடித் தமிழ் தட்டச்சு உள்ள பேசிக் எடிட்டரைப் பற்றி என்று நினைக்கிறேன்.

அக்னி
09-03-2010, 05:41 PM
ஆமாம். அதைத்தான் ஆப்பிரிக்கா சிவா.ஜி தற்போது பாவிப்பதாகச் சொல்லியிருந்தார்.

அலுவலகத்தில் தரவிறக்கும் தரவேற்றும் உட்புகுத்தும் அநேக வழிகள் அடைக்கப்பட்டுள்ளனவாம்... :redface:

பாரதி
09-03-2010, 05:48 PM
சிவா கேட்பது நேரடித் தமிழ் தட்டச்சு உள்ள பேசிக் எடிட்டரைப் பற்றி என்று நினைக்கிறேன்.

அவர் கேட்பது இது என்றால்...

தட்டச்சியதை நகல் எடுத்து, செய்திப்பலகையில் ஒட்டும் போது அவர் விரும்பிய வண்ணம் செய்ய இயலுமே..?

Advanced options - ஐ தேர்வு செய்தால் இன்னும் கூடுதல் வசதிகள் கிடைக்குமே..?

ஒரு வேளை நான் விளங்கிக்கொண்டது சரியில்லை என்றாலும் கூறுங்கள்.

அமரன்
09-03-2010, 05:54 PM
User Control Panel ---- Edit options --- Miscellaneous options --- Message editor interface
அதில் இருப்பதை --- ENHANCED INTERFACE - FULL WYSIWYG EDITING என்ற தேர்விற்கு மாற்றவும்.

அண்ணா...
அவருடைய அலுவலகத்தில் எ..கலப்பையோ வேறெந்தச் செயலிகளோ தரவிறக்கு நிறுவ இயலாது. அதனால் அவர் நமது மன்றத்தின் பேசிக் எடிட்டரைப் பயன்படுத்துகிறார். அதில் எந்தவிதமான வசதிகளும் இல்லை. தட்டச்சு மட்டுமே.. அலங்கரிப்பது இயலாது.

பாரதி
09-03-2010, 06:24 PM
இந்தத்திரிகளில் அடங்கிய விதயங்கள் உதவுமா என்று பாருங்கள்.

எந்த மென்பொருளையும் நிறுவாமலேயே கணினியில் தமிழ் தட்டச்ச..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15520

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20421

http://www.tamil.sg/type/ - இது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் மட்டும் வேலை செய்யும். நீங்கள் இதில் தட்டச்சி பின்னர் மன்றப்பலகையில் இருக்கும் வசதிகளை பயன்படுத்தி உங்கள் விருப்பங்களை நிறைவேற்றலாம்.

இதையும் ஒரு முறை பாருங்கள் : http://www.quillpad.in/editor.html

அறிஞர்
09-03-2010, 09:20 PM
கவனிக்கிறோம் அன்பரே..

சிவா.ஜி
10-03-2010, 04:20 AM
நன்றி அமரன், அக்னி, பாரதி. அமரனும், அக்னியும் சரியாகப் புரிந்துகொண்டதைப்போல, நேரடி தமிழ் தட்டச்சு முறையில்தான் இப்போது பதிகிறேன்.

control B, control U பற்றித் தெரியாதிருந்தது. ஆலோசனைக்கு நன்றி பாஸ்.

பாரதி நீங்கள் கொடுத்த சுட்டிகளையும் பார்வையிடுகிறேன். நன்றி.

சிவா.ஜி
10-03-2010, 04:21 AM
மிக்க நன்றி அறிஞரே.

jayashankar
10-03-2010, 02:27 PM
சிவா! பேஸிக் எடிட்டரே போதுமுங்கோ.

அத்த இத்த மாத்தப் போயி இருக்கறதும் போயிடுச்சின்னா....

யார் பேச்சையும் கேட்காதீங்க. என் பேச்ச மட்டும் கேளுங்க..

இது நைஜீரியா. யாருடைய ஒத்துழைப்பும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது அலுசலகத்தில் அதுவும் இந்த நாட்டவர் என்றால் கேட்கவே வேண்டாம்.

சரிங்களா.....

அக்னி
10-03-2010, 03:47 PM
சிவா.ஜி மேல பார்த்தீங்களா...
ஜெயஷங்கர் ‘டேஞ்சரா’ பதிவிட்டிருக்காரே...

சிவா.ஜி
11-03-2010, 04:04 AM
ஆமா அக்னி, சிகப்புல எச்சரிக்குறாரு....அப்பக் கேக்க வேண்டியதுதான். அப்படியே ஆகட்டும் ஜெய்.