PDA

View Full Version : வித்தைக்காரர்..!



govindh
08-03-2010, 09:33 AM
*இங்கு.. சந்தையில்
கயிறை பாம்பாக்கும்..
பாம்பை கயிறாக்கும்..
வித்தை தெரிந்த எங்களுக்கு..

*பங்கு சந்தையில்
காசை காகிதமாக்கும்...
காகிதத்தை காசாக்கும்
வித்தை தெரியவில்லை..!

பா.ராஜேஷ்
11-03-2010, 11:07 AM
உங்களை மாதிரி கணக்காளர் யாராவது சொல்லி கொடுத்திருந்தால் தெரிந்திருக்குமோ!?

சிவா.ஜி
11-03-2010, 11:31 AM
ஆமாம்....பெரிய பெரிய ஜாம்பவான்களெல்லாம் அறிந்துகொள்ள முடியாத வித்தை...பாவம் தெருவோர வித்தைக்காரர் எப்படி அறிவார்.

நல்ல கவிதை. வாழ்த்துக்கள் கோவிந்த்.

govindh
11-03-2010, 02:26 PM
இருவரின்.. வாழ்த்துக்கும் ...மிக்க நன்றி..

govindh
14-11-2010, 10:56 AM
[QUOTE=சிவா.ஜி;459886]ஆமாம்....பெரிய பெரிய ஜாம்பவான்களெல்லாம் அறிந்துகொள்ள முடியாத வித்தை...பாவம் தெருவோர வித்தைக்காரர் எப்படி அறிவார்.


நீங்கள் சொல்வதும் உண்மை தான்...
விந்தையான வித்தை...!

கீதம்
14-11-2010, 09:04 PM
காகிதத்தை காசாக்கும் வித்தை
கள்ளநோட்டு அடிப்பவர்க்கு
கைவந்த கலையாயிற்றே!

ஏக்கச் சிந்தையின் வெளிப்பாடு நன்று.
பாராட்டுகள் கோவிந்த்.

M.Jagadeesan
14-11-2010, 11:52 PM
பங்குச் சந்தையைப் பற்றி யாராவது தெளிவாகக் கூறினால் நன்றாக இருக்கும்.

நன்றி கோவிந்த் அவர்களே.

ஆதவா
15-11-2010, 03:56 AM
நல்ல கவிதை கோவிந்த்
தொடர்ந்து எழுதுங்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2010, 05:16 AM
வித்தைகள் கற்ற சித்தனையும் பித்தனாக்கும் பங்கு சந்தை இந்த வித்தைக்காரன் .
என்றும் அன்புடன்
த. க.ஜெய்

அனுராகவன்
17-11-2010, 05:35 AM
மிக நல்ல கவி...........
தொடருங்கள்....

பென்ஸ்
18-11-2010, 03:51 PM
அதகத்துக்கு ஆசை பட்டு காசை கரியாக்குகிறோமே கோவிந்...

எப்படியோ... பங்கு சந்தையும் ஒரு கண்கட்டு வித்தை என்பதை சொல்லாமல் சொல்லுகிறீர்கள்..

அமரன்
18-11-2010, 05:13 PM
வெயில் வெளிக்கும் ஏசி அறைக்கும் இதுதானா வித்தியாசம்.

நல்லகவி,

பாலகன்
18-11-2010, 05:26 PM
கவிதை நன்று. காசே காகிதம் தானே. காகிதத்தை காசாக்கினால் ஒருவேளை நீங்க கோவையா? (தமாசு)