PDA

View Full Version : குறையுடைய ஆசிரியர்

சொ.ஞானசம்பந்தன்
08-03-2010, 06:38 AM
முற்காலத் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் சிற்சில மாணவர்களை மட்டுஞ் சேர்த்துக்கொண்டு இலக்கியங்கற்பித்தார்கள். அவர்கள் பயிற்சி (டிரெயினிங்) பெற்றவர்கள் அல்லர். ஆதலால் கால அட்டவணையோ, பாடத் திட்டமோ இன்றித் தாம் கற்றிருந்தவற்றை மட்டும் தத்தமக்குத் தோன்றியபடி போதித்தார்கள் என நாம் ஊகிக்கலாம்.

நல்லாசிரியர்களை அடையாளங் காட்டிய நன்னூல் சில ஆசிரியர்களின் போதனைக் குறைகளையும் எடுத்துரைக்கிறது. அவற்றைக் கழல்குடம், மடல் பனை, பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு என்ற நான்கு உருவகங்களால் தெரிவித்து அந்த உருவகங்களையும் விளக்குகிறது.

1.கழல்குடம்

பெய்த முறையன்றிப் பிறழ உடன்தரும்
செய்தி கழல்பெய் குடத்தின் சீரே.

கழல் - கழற்சிக்காய். முற்கால விளையாட்டு ஒன்றில் தேவையாவை கழற்சிக்காய்கள். எண்கள் இடப்பட்டவை. எண் வரிசைப்படி அவற்றை ஒரு குடத்தினுள் ஒவ்வொன்றாய்ப் போட்டுவிட்டுப் பின்பு எடுத்தால் முறைப்படி வராது. முதலில் போட்டது பின்னால், பின்பு போட்டது முன்னால் என மாறி மாறி வரும். இதுபோல ஆசிரியர் சிலர் தாம் முறையாய்க் கற்றிருந்தாலும் தாறுமாறாய்க் கற்பிப்பர். முதலில் சொல்லித் தரவேண்டியதைப் பின்பும் இடையிலோ இறுதியிலோ இடம் பெறற்கு உரியதை முதலிலுமாய்ப் போதித்து மாணவரைக் குழப்புவர்.

2. மடல் பனை

தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா இடத்தது மடல்பனை.

மடல்பனை என்பது ஒருவகைப் பனைமரம். அதில் ஏறமுடியாதபடி மடல்கள் தடுக்கும். மரத்திலிருந்து காய் விழுந்தால் நுங்கு பெறலாம். அப்படிப்பட்ட ஆசிரியர் தமக்குத் தோதான மனநிலை (மூடு) இருந்தால் போதிப்பார். மாணவர் விரும்புகிறபோது கற்க இயலாது.

3.பருத்திக் குண்டிகை

அரிதின் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு
எளிதுஈவு இல்லது பருத்திக் குண்டிகை.

குண்டிகை என்பது குடுக்கை. வாய் குறுகியும் வயிறு அகன்றும் இருக்கும். பருத்திப் பஞ்சை ஒரு குடுக்கையில் அடைத்து வைப்பார்களாம். உள்ளே சிறிது சிறிதாகச் செலுத்தவேண்டும். வெளியில் எடுப்பதும் அப்படித்தான். இத்தகைய ஆசிரியர் தாமும் பெரும்பாடு பட்டுக் கற்றிருப்பார். மாணவர்க்கும் சிறிய அளவிலேயே பாடஞ்சொல்வார்.

4.முடத்தெங்கு

பல்வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே.

முடத்தெங்கு - வளைந்த தென்னை. நம் வீட்டுத் தென்னைமரம் பாதிவரை நேராய் உயர்ந்து பின்பு அடுத்த இல்லத்தின் பக்கம் வளைந்து வளர்ந்தால் அது முடத்தெங்கு. நீரை நம்மிடம் பெற்றுக்கொண்டு காயைப் பக்கத்து வீட்டில் போடும். இந்தவகை ஆசிரியர் பொருள் வாங்குவது ஒரு மாணவனிடம், நன்றாகக் கற்பிப்பது வேறொருவனுக்கு.

இந்த மாதிரி ஆசிரியர்களிடஞ் சிக்காமல் நல்லாசிரியர்களை அடைந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

கலையரசி
08-03-2010, 01:28 PM
போதனைக் குறைகளை எவ்வளவு பொருத்தமான உருவகங்களைக் கொண்டு நன்னூல் விளக்கியுள்ளது! இந்த நான்கு உருவகங்களில் முடத்தெங்கு பற்றி மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்த உருவகங்கள் இக்கால ஆசிரியர் பலருக்கும் பொருந்துகின்றது என்பது தான் வியப்பூட்டும் செய்தி.

கீதம்
08-03-2010, 07:58 PM
எவ்வளவு பொருத்தமான உருவகங்கள்! கற்பிக்கும் ஆசிரியர்களின் குறைகளை மிக அழகாகவே படம்பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். அரிய செய்திகளை எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வண்ணம் பொருளுடன் அறியத் தந்தமைக்கு நன்றியும் பாராட்டும், சொ.ஞானசம்பந்தன் அவர்களே.

இளசு
08-03-2010, 08:08 PM
மிக அழகான உவமைகள்.
மிக அழகான விளக்கம்.

நன்றி சொ.ஞானசம்பந்தன் அவர்களே..
(தட்டச்ச ஏதுவாய் ஒரு செல்லப்பெயர் - சுருக்கப்பெயர் அவசரமாய்த் தேவைப்படுது:)).

என் துறையில் கற்பிக்கும் பணியில் ஈடுபாடுள்ளவன் நான்.

நாலு வகையிலும் உழன்ற நேரங்கள் நினைவாடலில்..

Train the trainer
Adult learning
Conscious competence

என இந்நாள் சூத்திரங்களைக் கற்கும் வேளையில்
கற்கண்டாய் நம் முன்னோர் சொன்னவை தந்தமைக்கு நன்றி.

govindh
08-03-2010, 08:12 PM
போதனை பெறுவதிலும்...இவ்வளவு சோதனைகளா...? நல்ல உருவகங்கள்..!

Akila.R.D
09-03-2010, 03:10 AM
நன்னூல் கூறிய செய்தியை எங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திய சொ.ஞானசம்பந்தன் அவர்களுக்கு நன்றிகள்...

சிவா.ஜி
09-03-2010, 05:05 AM
பழங்கால நன்னெறி நூல்களில் சொல்லப்பட்டவைகள் இக்காலத்திலும் அச்சரம் பிசகாமல் அம்சமாய் பொருந்துவதைப் பார்க்கும்போது அவர்கள் பரந்த ஞானத்தைக் குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

அருமையான உவமைகளில், கற்பிக்கும் குணங்களத் தெரிவிக்கும் நன்னூலை எம்மோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சொ.ஞா அவர்களே.

(இளசு கேட்டதைப்போல தட்டச்ச சிறிதாய் உங்கள் பெயரை சுருக்கியுள்ளேன். தவறாயிருப்பின் பொறுத்துக்கொள்ளவும்.)

ஆதி
09-03-2010, 06:47 AM
நன்னூல் விதிகளையும் விளக்கங்களையும் மிக எளிமையாய் விளக்கி மீளசைப்போட வைத்த ஞானசமந்தன் அவர்களுக்கு நன்றி + வாழ்த்து..

ஒரு ஆசிரியன் எப்படி இருக்க வேண்டும்.. ஒரு நூலை இயற்றும் முன் அவன் என்ன தகுதி பெற வேண்டும்.. ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும்.. இப்படி நன்னூலில் பற்பல விதிகள் இருக்கும்.. அவற்றையும் இந்த திரியில் நீங்கள் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..

(சிவா அண்ணா.. நன்னூல் இலக்கண நூல், நன்னெறி நூல் அல்ல )

சொ.ஞானசம்பந்தன்
11-03-2010, 02:19 AM
போதனைக் குறைகளை எவ்வளவு பொருத்தமான உருவகங்களைக் கொண்டு நன்னூல் விளக்கியுள்ளது! இந்த நான்கு உருவகங்களில் முடத்தெங்கு பற்றி மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்த உருவகங்கள் இக்கால ஆசிரியர் பலருக்கும் பொருந்துகின்றது என்பது தான் வியப்பூட்டும் செய்தி.

பின்னூட்டுக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
11-03-2010, 02:20 AM
எவ்வளவு பொருத்தமான உருவகங்கள்! கற்பிக்கும் ஆசிரியர்களின் குறைகளை மிக அழகாகவே படம்பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். அரிய செய்திகளை எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வண்ணம் பொருளுடன் அறியத் தந்தமைக்கு நன்றியும் பாராட்டும், சொ.ஞானசம்பந்தன் அவர்களே.

பாராட்டுக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
11-03-2010, 02:22 AM
மிக அழகான உவமைகள்.
மிக அழகான விளக்கம்.

நன்றி சொ.ஞானசம்பந்தன் அவர்களே..
(தட்டச்ச ஏதுவாய் ஒரு செல்லப்பெயர் - சுருக்கப்பெயர் அவசரமாய்த் தேவைப்படுது:)).

என் துறையில் கற்பிக்கும் பணியில் ஈடுபாடுள்ளவன் நான்.

நாலு வகையிலும் உழன்ற நேரங்கள் நினைவாடலில்..

Train the trainer
Adult learning
Conscious competence

என இந்நாள் சூத்திரங்களைக் கற்கும் வேளையில்
கற்கண்டாய் நம் முன்னோர் சொன்னவை தந்தமைக்கு நன்றி.

விரிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. (சுருக்கப்பெயரை சிவா.ஜி தந்துவிட்டார்.)

சொ.ஞானசம்பந்தன்
11-03-2010, 02:24 AM
போதனை பெறுவதிலும்...இவ்வளவு சோதனைகளா...? நல்ல உருவகங்கள்..!

பின்னூட்டுக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
11-03-2010, 02:27 AM
நன்னூல் கூறிய செய்தியை எங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திய சொ.ஞானசம்பந்தன் அவர்களுக்கு நன்றிகள்...

பாராட்டுக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
11-03-2010, 02:30 AM
பழங்கால நன்னெறி நூல்களில் சொல்லப்பட்டவைகள் இக்காலத்திலும் அச்சரம் பிசகாமல் அம்சமாய் பொருந்துவதைப் பார்க்கும்போது அவர்கள் பரந்த ஞானத்தைக் குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

அருமையான உவமைகளில், கற்பிக்கும் குணங்களத் தெரிவிக்கும் நன்னூலை எம்மோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சொ.ஞா அவர்களே.

(இளசு கேட்டதைப்போல தட்டச்ச சிறிதாய் உங்கள் பெயரை சுருக்கியுள்ளேன். தவறாயிருப்பின் பொறுத்துக்கொள்ளவும்.)

பெயர் சுருக்கி உதவியதற்கும் பாராட்டுக்கும் நன்றி சிவா.ஜி அவர்களே.

சொ.ஞானசம்பந்தன்
11-03-2010, 02:33 AM
நன்னூல் விதிகளையும் விளக்கங்களையும் மிக எளிமையாய் விளக்கி மீளசைப்போட வைத்த ஞானசமந்தன் அவர்களுக்கு நன்றி + வாழ்த்து..

ஒரு ஆசிரியன் எப்படி இருக்க வேண்டும்.. ஒரு நூலை இயற்றும் முன் அவன் என்ன தகுதி பெற வேண்டும்.. ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும்.. இப்படி நன்னூலில் பற்பல விதிகள் இருக்கும்.. அவற்றையும் இந்த திரியில் நீங்கள் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..

(சிவா அண்ணா.. நன்னூல் இலக்கண நூல், நன்னெறி நூல் அல்ல )

பாராட்டுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி, மாணவர் பற்றி நன்னூல் கூறியுள்ளதை விரைவில் பகிர்ந்துகொள்வேன்.