PDA

View Full Version : இளைஞர் சிலர்!குணமதி
07-03-2010, 11:11 AM
இளைஞர் சிலர்!


கதிர்த்தடை கருப்புக் கண்ணாடி!

கருப் பழுக்கேறிய தோற்றத்தில்
கரட்டுத்துணிக் காற்சட்டை!

கழுத்திலோர் தங்கச் சங்கிலி!

மணிக்கட்டில் வெளிநாட்டு மயக்குவண்ண மணிப்பொறி!

நாளுக்கொரு திரைப்படம்!

கையிலும் வாயிலுமாய்
எப்போதும் புகையும் வெண்சுருட்டு!

மலைதோறும் மதுக்கடை!

மணக்கும் ஆம்பூர்ப் புலவு!

புத்தம் புதிதாய்ப் பளபளக்கும்
பாயந்து குதிக்கும் இருசக்கர ஊர்தி!

பின்னே ஓர் மின்னற்கொடி!

கண்ணராவிப் பாட்டுக் கேட்க காதில் ஓர் செருகல்!

கண்டதைப் படம்பிடிக்கும் கைப்பேசி!

ஒன்றுக்கு மூன்றாய் விலைதருவோர்க்கு
ஞாயமற்ற தரகன் வழி
நிலத்தை விற்றுத் தொலைத்துவிட்டு...

இப்படித்தான் வலம் வருகிறார்கள்
சிற்றூர் இளைஞர் சிலர்!

கீதம்
08-03-2010, 02:35 AM
இளைய தலைமுறையின் அவலநிலையை இதைவிட அழகாய்ப் படம்பிடித்துக் காட்ட இயலாது. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அத்தனையும் அதி அற்புதம். பாராட்டுகள் குணமதி அவர்களே.

aren
08-03-2010, 02:41 AM
இதுதான் இளைஞர்களில் இன்றைய உலகம். இதை அனுபவிக்காமல் இருந்தா எப்படி????

இதை நான் கேட்கவில்லைங்க, இன்றைய இளைஞர் பட்டாளம் கேட்கிறார்கள், என்ன சொல்வது அவர்களுக்கு.

குணமதி
08-03-2010, 04:46 AM
மிக்க நன்றி கீதம் அவர்களே.

குணமதி
08-03-2010, 04:52 AM
அவர்கள் நோக்கு அப்படித்தான் இருக்கிறது.

உழைத்து விளைத்து முறையாக 'அனுபவி'க்காமல், அடிப்படையான நிலத்தையே விற்றுத் தொலைத்து வீண் அலம்பல் தேவையா?
பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாகலாமா? - என்ற எண்ணத்திலேயே எழுதினேன்.

கருத்துரைத்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி ஆரென்.

இன்பக்கவி
08-03-2010, 01:09 PM
:lachen001::lachen001::lachen001::lachen001:

சூப்பர்:icon_b:

அக்னி
08-03-2010, 04:00 PM
கட்டிடக் காடுகளுக்குள்
உழைப்பை மறந்து
மேய்ந்து கொண்டிருந்த
காளைகளிடையே,
உழுது கொண்டிருந்தது
ஒரு கட்டிளம் காளை...

உழுத காளையின்
வியர்வையும்,
அதில் ஒட்டிக்கொண்ட
புழுதியும்
அசுத்தமாய்ப் பார்க்கப்பட்டன...

சேறுபட்டதால்,
அந்தக் காளையின்
அந்தஸ்திலும்
சேறு பூசப்பட்டது...

பசுக்கள் பரிகாசப் பார்வையுடன்
விலகிச் சென்று
மேய்ந்த காளைகளுடன்
ஒட்டிக்கொண்டன...

கட்டிடக் காட்டிடையே
விளைநிலம்
வேண்டாத நிலமாகி
முரணாக
விலைநிலம் ஆனது...

விலை பேசப்பட்டுப்
படியாதபோது
வெருட்டவும்பட்டது...

வெருட்டப்பட்ட நிலையிலும்
நிச்சயிக்கப்பட்ட விலையே
காளை ஆயுள் முழுதும்
உழைத்தாலும்
எட்ட முடியாததாயிருந்தது...

சிந்தித்தது காளை...

இருப்பதை இழப்பதிலும்
பெற்றுக்கொண்டு இருப்பது
அதற்கும் சிறப்பாய்ப்பட்டது...

இந்தக் காளையும்
மேய்ச்சலுக்கு மட்டும்
தயாராகிவிட்டது...

இது காளையின் தவறா...
சமுதாயத்தின் தவறா...

*****
குணமதியின் வார்த்தைப் பிரயோகங்கள், வியக்க வைக்கின்றன.

இளைஞர்களின் நாகரீக மாற்றத்துக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல.

தொழில்சார்ந்து அந்தஸ்திலேற்படும் ஏற்றத்தாழ்வுகள்,
உரிய அங்கீகாரங்கள் கிடைக்காமை,
புறக்கணிப்புக்கள்
போன்ற காரணிகளே, (நம் நாடுகளில்) இன்றைய இளைஞரின் உழைப்பை, விவசாயம் என்றில்லாமல் அனைத்திலும் தடுக்கின்றன என்பது என் கருத்து.

ஐரோப்பிய நாடுகளில், வேலை நேரம் முடிந்ததும் தொழிலாளியும் முதலாளியும் சரிசமமே.
ஒன்றாய் உண்டு குடித்து பாகுபாடின்றி இருப்பதைக் காணலாம்.

எத்தனை குறைகள் இந்த நாடுகளிலிருந்தாலும்
இந்தத் தன்மையே அந்த நாடுகளின் வளர்ச்சிக்குக் காரணம் எனலாம்.

தொழில்சார்ந்து சமூக அந்தஸ்து நிர்ணயிக்கப்படுதல் களையப்பெற்றாலே,
இந்தக் கவிதையின் ஏக்கம் தீரும்.

குணமதி அவர்களுக்கு எனது நிறைந்த பாராட்டு...

குணமதி
08-03-2010, 04:17 PM
இன்பக்கவிக்கு நன்றி.

குணமதி
08-03-2010, 04:22 PM
நெடிய விளக்கத்திற்கும் பாராட்டிற்கும் 'அக்னி'க்கு மிக்க நன்றி.