PDA

View Full Version : ஆ"சிரமம்"



இன்பக்கவி
07-03-2010, 11:10 AM
அமைதி சூழல்
அழகழகாய் குடில்கள்
தன்னை மறக்கும்
ஆனந்தத் தாண்டவம்
அரசியல் செல்வாக்கு
டாலர்கள் புரளும்
பணக் கிடங்கு...

விவாகரத்து நடிகைகளின்
அமைதி தேடல்..
தெய்வ தரிசனதுக்காய்
ஆர்பரிக்கும் கூட்டம்...

காலைக் கழுவி
சேவகம் செய்யும்
படித்த முட்டாளாய்
இளைஞர் கூட்டம்..

கட்டுப்பாடு பிறர்க்கு
கட்டவிழ்ந்த காளையாய்
களியாட்டம்...
தியானமும், வசியமும்
கற்று தேர்ந்த சாமியார்...

பல இரவுகளின் ஆட்டம்
ஒரே பகலில் வெட்ட வெளிச்சம்
காணமல் போனார் சாமியார்..
ஆ"சிரமம்":eek::eek::eek::eek:

சிவா.ஜி
07-03-2010, 11:33 AM
நச்சுன்னு சொல்லியிருக்கீங்க. இதைப்பத்தி நிறைய படிச்சு வெறுத்துப்போயிட்டீங்கன்னு நினைக்கிறேன்.

அதிலும் கடைசி வரிகள் சூப்பர். பல இரவுகளின் ஆட்டம், ஒரு பகலில் வெட்ட வெளிச்சம். அருமை.

வாழ்த்துக்கள் இன்பக்கவி.

(புது வேலையெல்லாம் நன்றாக இருக்கிறதா? அனைத்தும் நலமா?)

இன்பக்கவி
07-03-2010, 11:37 AM
நச்சுன்னு சொல்லியிருக்கீங்க. இதைப்பத்தி நிறைய படிச்சு வெறுத்துப்போயிட்டீங்கன்னு நினைக்கிறேன்.

அதிலும் கடைசி வரிகள் சூப்பர். பல இரவுகளின் ஆட்டம், ஒரு பகலில் வெட்ட வெளிச்சம். அருமை.

வாழ்த்துக்கள் இன்பக்கவி.

(புது வேலையெல்லாம் நன்றாக இருக்கிறதா? அனைத்தும் நலமா?)

ஆபீஸ் . வீடு , ரோடு எங்க பார்த்தாலும் இதே கதை தான்...
கேவலமா இருக்கு...என்ன செய்ய...எல்லாம் நம்ம விதி...:mad::mad::mad::mad:

ஆபீஸ் நல்லா இருக்கு
வேலை பளு..
மன்றம் வர ஞாயிற்று கிழமை என்று நேரம் ஒதுக்க வேண்டிய நிலை..
ஜெனரல் ஷிப்ட்..
அது தான் சிரமம்..:traurig001:

சிவா.ஜி
07-03-2010, 11:41 AM
ஆஹா....ஜெனரல் ஷிப்ட்டுக்கு அழாதீங்க....ரௌன்ட் த க்ளாக் ஷிப்ட் காரங்களைக் கேட்டுப் பாருங்க....அவங்க இன்னும் அழுவாங்க.

இன்பக்கவி
07-03-2010, 11:46 AM
ஆஹா....ஜெனரல் ஷிப்ட்டுக்கு அழாதீங்க....ரௌன்ட் த க்ளாக் ஷிப்ட் காரங்களைக் கேட்டுப் பாருங்க....அவங்க இன்னும் அழுவாங்க.

:lachen001::lachen001:

நான் பர்ஸ்ட் ஷிப்ட் கேட்க போறேன்...:traurig001:
ஒரு நாள் எல்லாம் வீணாக ஆபீஸ் ல போகுது:lachen001::lachen001:
இதை மட்டும் எங்க பாஸ் பார்த்தால் எப்படி இருக்கும்

govindh
07-03-2010, 12:09 PM
சாமியார் சிரமப்படவில்லை....ஆம்...
ஆசிரமம் தான்..அல்லல்படுகிறது...!

இன்பக்கவி
07-03-2010, 12:42 PM
சாமியார் சிரமப்படவில்லை....ஆம்...
ஆசிரமம் தான்..அல்லல்படுகிறது...!

சாமியார்கள் எந்த காலத்தில சிரம பட்டு இருக்காங்கள்????:lachen001::lachen001:
நன்றிகள் :icon_b::icon_b:

Akila.R.D
08-03-2010, 03:43 AM
உண்மையை அழகாக சொல்லும் கவிதை...
வாழ்த்துக்கள் கவிதா...

leomohan
08-03-2010, 05:55 AM
ஆ - சிரமம் சூப்பர். கலக்கிட்டீங்க.

சரோசா
08-03-2010, 06:21 AM
ஆ- சிரமம் அழகான கவிதை,

நித்தியானந்தா சாமாமியை பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை.

வாழ்த்துக்கள் இன்பக்கவி.

அக்னி
08-03-2010, 09:59 AM
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
கடவுளென்போரை நம்பினோர் கைவிடப் ‘படார்’...

சாமியார் காணாமற் போனார்.
அமைதியில் ஆச்சிரமம்...

எத்தனை கவிதைகள் இதுபோல வந்தாலும்,
தெளியுமோ நம் மனம்... என்பது சந்தேகமே...

கவிதாவுக்குப் பாராட்டு...

இன்பக்கவி
08-03-2010, 01:01 PM
உண்மையை அழகாக சொல்லும் கவிதை...
வாழ்த்துக்கள் கவிதா...


ஆ - சிரமம் சூப்பர். கலக்கிட்டீங்க.


ஆ- சிரமம் அழகான கவிதை,

நித்தியானந்தா சாமாமியை பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை.

வாழ்த்துக்கள் இன்பக்கவி.


கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
கடவுளென்போரை நம்பினோர் கைவிடப் ‘படார்’...

சாமியார் காணாமற் போனார்.
அமைதியில் ஆச்சிரமம்...

எத்தனை கவிதைகள் இதுபோல வந்தாலும்,
தெளியுமோ நம் மனம்... என்பது சந்தேகமே...

கவிதாவுக்குப் பாராட்டு...

எல்லோருக்கும் நன்றிகள்...
வெறுத்து போய் எழுதிய கவிதை...:mad:
இந்த பரபரபப்பு எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்...:icon_p:
காத்திருப்போம் அடுத்த சாமியார் பிடிபடும் வரை :icon_b::icon_b::icon_b:

நாகரா
08-03-2010, 01:41 PM
கடைசி வரிகள் "நச்"

"பல நாள் திருடன் ஒரு நாள் பிடி படுவான்" பழமொழியை நினைவூட்டியது, வாழ்த்துக்கள் இன்பக்கவி

இன்பக்கவி
10-03-2010, 02:47 PM
கடைசி வரிகள் "நச்"

"பல நாள் திருடன் ஒரு நாள் பிடி படுவான்" பழமொழியை நினைவூட்டியது, வாழ்த்துக்கள் இன்பக்கவி

நன்றிகள்:):):)

பா.ராஜேஷ்
10-03-2010, 02:55 PM
நல்ல கவிதை. ஆமாம், முதல் ஷிபிட் கிடைத்ததா? இப்பொழுது ஆன்லைனில் இருக்கிறீர்களே?

Ravee
10-03-2010, 03:07 PM
ம்ம் கவிமா எல்லோருமா சேர்ந்து குருவி(ன்) கூட்டிலே குண்டு வச்சுடாங்களே. ....:lachen001: :lachen001: :lachen001: