PDA

View Full Version : நினைவுகளுடன்....



govindh
06-03-2010, 11:31 AM
காதல் சுற்றம்..
கனவுகளின் முற்றம்..

நித்தம்..நித்தம்..
உன் நினைவு..
நீங்காத தொடர் கனவு..

நிலத்திலும்..
நீரிலும்..
நிழலாக ...நீ..
நினைவுகளுடன்..நான்..!

ஜனகன்
06-03-2010, 01:15 PM
காதல் நினைவுகளுடன்.நல்ல கவிதை.
தொடர்ந்து அசத்துங்க...........

சிவா.ஜி
06-03-2010, 01:45 PM
தொடர்ந்து வந்தாலே தொல்லையென்றுதான் அர்த்தம்....அதுவும் காதல் நினைவுகள் தொடர்ந்து தரும் தொல்லை....இம்சையான இனபம்.

வாழ்த்துக்கள் கோவிந்த்.

Ravee
07-03-2010, 02:17 AM
.தொடர்ந்து வந்தாலே தொல்லையென்றுதான் அர்த்தம்....அதுவும் காதல் நினைவுகள் தொடர்ந்து தரும் தொல்லை....இம்சையான இனபம்.

சிவா அண்ணா இது உங்கள் அனுபவமா :lachen001: :lachen001: :lachen001:

வாழ்த்துக்கள் கோவிந்த்

govindh
21-03-2010, 11:25 AM
வாழ்த்தும்...ஜனகன், சிவா.ஜி, ரவி....அனைவருக்கும் மிக்க நன்றி...

சிவா.ஜி
21-03-2010, 11:52 AM
தொடர்ந்து வந்தாலே தொல்லையென்றுதான் அர்த்தம்....அதுவும் காதல் நினைவுகள் தொடர்ந்து தரும் தொல்லை....இம்சையான இனபம்.

சிவா அண்ணா இது உங்கள் அனுபவமா :lachen001: :lachen001: :lachen001:



ஆமாம் ரவி. சொந்த அனுபவம்தான்.

இனியவள்
21-03-2010, 06:42 PM
சில கனவுகள்
நிஜமென வந்து
நிழலயாய் மாறுவதும்
தொல்லை தான் இல்லையா

அழகிய கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் கோவிந் :icon_b:

govindh
21-03-2010, 07:16 PM
சில கனவுகள்
நிஜமென வந்து
நிழலயாய் மாறுவதும்
தொல்லை தான் இல்லையா

அழகிய கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் கோவிந் :icon_b:

இனிய வாழ்த்துக்கு மிக்க நன்றி...

அமரன்
21-03-2010, 10:56 PM
சொற்சாடிக்குள் அடைக்க முடியாத அற்புதப் பூதத் தருணங்கள் பல உண்டு..

இரவும் பகலும் சந்திக்கும் பொழுது..
சிரிப்பும் அழுகையும் கைகுலுக்கும் பொழுது..
விண்ணும் மண்ணும் முத்தமிடும் பொழுது.
...
....
என நீளும் வரிசையில்
நிஜமும் நினைவும் கலக்கும் பொழுது..

**************************

இவை சுகமா சோகமா..
அது அவரவர் மனநிலையைப் பொறுத்து..

நினைவுகளுடன் நீ..
நினைவாகவே நான்..
நினைவுகளால் நாம்.

என்னைப் பொறுத்தவரை இம்மூன்றும் காதலின் நீள, அகல, உயரங்கள்..
சிலரை பொறுத்தவரை இவை நீள, அகல, ஆழங்கள்.

பாராட்டு கோவிந்

அமரன்
21-03-2010, 11:00 PM
நலமா இனியவள்.


சில கனவுகள்
நிஜமென வந்து
நிழலயாய் மாறுவதும்
தொல்லை தான் இல்லையா

அழகிய கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் கோவிந் :icon_b:

இனியவள்
22-03-2010, 01:49 PM
ம்ம் அருமை அமர்,,

நினைவு சிலருக்கு
அருமை சிலருக்கு
கொடுமை தான்

நான் நலம் அமர் நீங்கள் நலமா ?

அக்னி
22-03-2010, 02:57 PM
நினைவிற் கவிந்த நிஜம்,
பார்க்குமிடமெல்லாம் நிழலிட்டது...
நிஜம் எங்கெனத் தேடும்
பார்வையில்,
நிழல் மட்டும் தெரிகின்றது,
கருமை விலகாமலே...

கோவிந் அவர்களுக்கு எனது பாராட்டு.

*****
பின்னூட்டங்களைக் கவிமயப்படுத்திய இனியவள் நலமும் வரவும் கண்டு மகிழ்வு.
வரவு தொடரத் தடங்கல்கள் இனித் தடுக்காதிருக்கட்டும்.

கனவுகள் நிஜமானாலும்,
காட்சிகள் கனவுதானே...
கனவுகள் எல்லை மீறினாற்
தொல்லைதான்...

govindh
22-03-2010, 04:38 PM
"நினைவுகளுடன் நீ..
நினைவாகவே நான்..
நினைவுகளால் நாம்.

என்னைப் பொறுத்தவரை இம்மூன்றும் காதலின் நீள, அகல, உயரங்கள்..
சிலரை பொறுத்தவரை இவை நீள, அகல, ஆழங்கள்."

*வார்த்தைகளால் அலங்கரித்து ..அசர வைக்கிறீர்கள்..மிக்க நன்றி..அமரன் அவர்களே...

govindh
22-03-2010, 04:40 PM
[QUOTE=அக்னி;462588]நினைவிற் கவிந்த நிஜம்,
பார்க்குமிடமெல்லாம் நிழலிட்டது...
நிஜம் எங்கெனத் தேடும்
பார்வையில்,
நிழல் மட்டும் தெரிகின்றது,
கருமை விலகாமலே...

கோவிந் அவர்களுக்கு எனது பாராட்டு.

*****
பாராட்டும்...அக்னி அவர்களுக்கு..
அன்பு நன்றி...!

அமரன்
22-03-2010, 09:35 PM
ம்ம் அருமை அமர்,,

நினைவு சிலருக்கு
அருமை சிலருக்கு
கொடுமை தான்

நான் நலம் அமர் நீங்கள் நலமா ?

நலமே.. இனியவள்.
:)

வசீகரன்
24-03-2010, 01:11 PM
அழகிய கவிதை..!
காதல்... ம்... அது ஒரு இனிமையான இம்சை...!
நல்ல கவிதை..
பாராட்டுக்கள் கோவிந்த்..!

govindh
24-03-2010, 01:20 PM
அழகிய கவிதை..!
காதல்... ம்... அது ஒரு இனிமையான இம்சை...!
நல்ல கவிதை..
பாராட்டுக்கள் கோவிந்த்..!

வசீகரன் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.

இளசு
24-03-2010, 09:13 PM
நிலத்திலும் நிழலாய்....
நீரிலும் நிழலாய்?

ஈருடல் வாழி காதல் என்றிருந்தேன்
ஈருடக வாழி - (Amphibian) என இன்றறிந்தேன்.


பாராட்டுகள் கோவிந்த்.


பின்னூட்டங்களைப் பொன்னூட்டங்களாக்கிய
இனியவள், அமரன், அக்னிக்கு - என் அன்பு!

govindh
24-03-2010, 10:42 PM
நிலத்திலும் நிழலாய்....
நீரிலும் நிழலாய்?

ஈருடல் வாழி காதல் என்றிருந்தேன்
ஈருடக வாழி - (Amphibian) என இன்றறிந்தேன்.


பாராட்டுகள் கோவிந்த்.


பின்னூட்டங்களைப் பொன்னூட்டங்களாக்கிய
இனியவள், அமரன், அக்னிக்கு - என் அன்பு!

உங்கள் பின்னூட்டங்கள்...என்னை
ஊக்கப்படுத்தும்...

மிக்க நன்றி....!

ஆதி
25-03-2010, 06:16 AM
//காதல் சுற்றம்..
கனவுகளின் முற்றம்..//

காதல் கனவுகளின் முற்றம் நிறைவேறாமல் போனால், நினைவுகளின் முற்றம் நிறைவேறிணால்

//நித்தம்..நித்தம்..
உன் நினைவு..
நீங்காத தொடர் கனவு..//

நினைவு, கனவானது தோல்வியாலா ? இல்லை சந்தத்துக்காக இந்த வார்த்தையை பயன்படுத்தினீர்களா ?

//நிலத்திலும்..
நீரிலும்..
நிழலாக ...நீ..
நினைவுகளுடன்..நான்..!
//


பார்க்கும் இடத்தில் எல்லாம் உன்னைப் போல் பாவை தெரியுதடி என்று பாரதி சொல்லும் நிழல்

இந்நிழல் இன்னிழலாய் இருக்கும் வரை நினைவுகள் தொடரும்..

வாழ்த்துக்கள்...

govindh
25-03-2010, 08:20 AM
அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆதன் அவர்களே..

பா.ராஜேஷ்
27-03-2010, 12:10 PM
பாராட்டுக்கள் கோவிந்த். கவிதை மிக நன்று

govindh
27-03-2010, 01:21 PM
பாராட்டுக்கள் கோவிந்த். கவிதை மிக நன்று

பாராட்டுக்கு மிக்க நன்றி....!

Akila.R.D
29-03-2010, 09:07 AM
பாராட்டுக்கள் கோவிந்த்...

கவிதை நன்றாக உள்ளது...

govindh
30-03-2010, 07:51 PM
பாராட்டுக்கள் கோவிந்த்...

கவிதை நன்றாக உள்ளது...

பாராட்டுக்கு மிக்க நன்றி....!