PDA

View Full Version : வாழ்க ரஹ்மான்..!



govindh
06-03-2010, 10:33 AM
அன்று -
அடி மனதில்..
வெற்றி கனல் கொண்டதால்..

இன்று -
ஆஸ்கார் சிறகு கட்டி...
இசை வானில்
உலா வரும்
உன்னதப் பறவை..நீ..!

ஆஸ்திரேலிய திமிர் முறிக்க..
உன் இசை ஒரு அரு மருந்து..!
இந்திய இளைஞர்களுக்கு..
அது பெரும் விருந்து..!

உன் பெயரே..
ஒரு இசை அமுது...
உன் பெயருக்கு..
இரு கிராமி விருது..!

செருக்கில்லா..
செந்தமிழ் அங்கம் நீ..
செப்பில்லா...
மாசற்ற தங்கம் நீ..!

உன் புகழ் ஓங்குக..
இறைவன் புகழ் தாங்குக..!

rajureva
15-03-2010, 07:31 PM
ஆஸ்திரேலிய திமிர் முறிக்க..
உன் இசை ஒரு அரு மருந்து..!
இந்திய இளைஞர்களுக்கு..
அது பெரும் விருந்து..!
நல்ல வாழ்த்துக் கவிதை..
நல்வாழ்த்துக்கள்..

govindh
16-03-2010, 10:02 AM
நல்வாழ்த்துக்கு மிக்க நன்றி...

பா.சங்கீதா
27-03-2010, 09:37 AM
மிகவும் நன்றாக உள்ளது!

govindh
27-03-2010, 09:50 AM
வாழ்த்துக்கு மிக்க நன்றி...
வாழ்க தமிழ்!